#பிரதோஷம் அவசியம் சிவபெருமான் வழிபாடு அம்பிகை வழிபாடு  நந்திதேவர் வழிபாடு செய்ய வேண்டிய புனிதமான நாள்!ஓம் நமசிவாய* 

*பிரதோஷம்*

*20 வகை பிரதோஷங்களும் அதன் வழிபாடு பலன்களும்*

1.தினசரி பிரதோஷம்

2.பட்சப் பிரதோஷம்

3. மாசப் பிரதோஷம்

4. நட்சத்திரப் பிரதோஷம்
5. பூரண பிரதோஷம்

6. திவ்யப் பிரதோஷம்

7.தீபப் பிரதோஷம்

8.அபயப் பிரதோஷம் என்னும் சப்தரிஷி பிரதோஷம்

9. மகா பிரதோஷம்

10. உத்தம மகா பிரதோஷம்

11. ஏகாட்சர பிரதோஷம்

12. அர்த்தநாரி பிரதோஷம்

13. திரிகரண பிரதோஷம்

14. பிரம்மப் பிரதோஷம்

15. அட்சரப் பிரதோஷம்

16. கந்தப் பிரதோஷம்
17. சட்ஜ பிரபா பிரதோஷம்

18. அஷ்ட திக் பிரதோஷம்

19. நவக்கிரகப் பிரதோஷம்

20. துத்தப் பிரதோஷம்
20 வகை பிரதோஷங்கள்  அவற்றின் பலன்களையும் பார்ப்போம்.

*🍀1.தினசரி பிரதோஷம் :*

தினமும் பகலும், இரவும் சந்திக்கின்ற சந்தியா காலமாகிய மாலை 4.30 மணி முதல் 6.30 மணி வரை உள்ள காலமாகும். இந்த நேரத்தில் ஈசனைத் தரிசனம் செய்வது உத்தமம் ஆகும்.
நித்தியப்பிரதோஷத்தை யார் ஒருவர் ஐந்து வருடங்கள் முறையாகச் செய்கிறார்களோ அவர்களுக்கு “முக்தி” நிச்சயம் ஆகும் என்கிறது நமது சாஸ்திரம்.
*2. 🍀பட்சப் பிரதோஷம் :*

அமாவாசைக்குப் பிறகான, சுக்லபட்சம் என்ற வளர் பிறை காலத்தில் 13-வது திதியாக வரும் “திரயோதசி” திதியே பட்சப் பிரதோஷம் ஆகும்.
இந்தத்திதியின் மாலை நேரத்தில் பட்சிலிங்க வழிபாடு [பறவையோடு உள்ள அது சம்பந்தப்பட்ட லிங்கம் மைலாப்பூர், மயிலாடு துறை போல்] செய்வது உத்தமம் ஆகும்.
*3.🍀 மாசப் பிரதோஷம் :*

பவுர்ணமிக்குப் பிறகு வரும் கிருஷ்ணபட்சம் என்ற தேய்பிறை காலத்தில், 13-வது திதியாக வரும் “திரயோதசி” திதியே மாதப் பிரதோஷம் ஆகும். இந்த திதியின் மாலை நேரத்தில் “பாணலிங்க” வழிபாடு [பல்வேறு லிங்க வகைகளில் பான லிங்கம் ஒரு வகை] செய்வது உத்தம பலனைத் தரும்.
*4.🍀 நட்சத்திரப் பிரதோஷம் :*

பிரதோஷ திதியாகிய “திரயோதசி திதி”யில் வரும் நட்சத்திரத்திற்கு உரிய ஈசனை பிரதோஷ நேரத்தில் வழிபடுவது நட்சத்திர பிரதோஷம் ஆகும்.
*5. 🍀பூரண பிரதோஷம் :*

திரயோதசி திதியும், சதுர்த்தசி திதியும் சேராத திரயோதசி திதி மட்டும் உள்ள பிரதோஷம் பூரண பிரதோஷம் ஆகும். இந்தப் பிரதோஷத்தின் போது “சுயம்பு லிங்கத்தை”த் தரிசனம் செய்வது உத்தம பலனை தரும். பூரண பிரதோஷ வழிபாடு செய்பவர்கள் இரட்டைப் பலனை அடைவார்கள்.
*6. 🍀திவ்யப் பிரதோஷம் :*

பிரதோஷ தினத்தன்று துவாதசியும், திரயோதசியும் சேர்ந்து வந்தாலோ அல்லது திரயோதசியும், சதுர்த்தசியும் சேர்ந்து வந்தாலோ அது “திவ்யப் பிரதோஷம்” ஆகும். இந்த நாளன்று மரகத லிங்கேஸ்வரருக்கு அபிஷேக ஆராதனை செய்தால் பூர்வஜென்ம வினை முழுவதும் நீங்கும்.
*7🍀.தீபப் பிரதோஷம் :*

பிரதோஷ தினமான திரயோதசி திதியில் தீப தானங்கள் செய்வது, ஈசனுடைய ஆலயங்களைத் தீபங்களால் அலங்கரித்து ஈசனை வழிபட சொந்த வீடு அமையும்.
*8.🍀அபயப் பிரதோஷம் என்னும்* *சப்தரிஷி பிரதோஷம் :*

வானத்தில் “வ” வடிவில் தெரியும் நட்சத்திர கூட்டங்களே, “சப்தரிஷி மண்டலம்” ஆகும். இது ஐப்பசி, கார்த்திகை, மார்கழி, தை, மாசி, பங்குனி மாதங்களில் வானில் தெளிவாகத் தெரியும்.
இந்த மாதங்களில் திரயோதசி திதியில் முறையாக பிரதோஷ வழிபாடு செய்து, சப்தரிஷி மண்டலத்தைத் தரிசித்து வழிபடுவதே அபயப் பிரதோஷம் என்னும் சப்தரிஷி பிரதோஷம் ஆகும். இந்த வழிபாட்டை செய்பவர்களுக்கும் ஈசன் தரம் பார்க்காது அருள் புரிவான்.
*9 🍀மகா பிரதோஷம் :*

ஈசன் விஷம் உண்ட நாள் கார்த்திகை மாதம், சனிக்கிழமை, திரயோதசி திதி ஆகும். எனவே சனிக்கிழமையும், திரயோதசி திதியும் சேர்ந்து வருகின்ற பிரதோஷம் “மகா பிரதோஷம்” ஆகும். இந்த மகா பிரதோஷத்து அன்று எமன் வழிபட்ட சுயம்பு லிங்க தரிசனம் செய்வது மிகவும் உத்தமம் ஆகும்.
குறிப்பாக திருக்கடையூர், சென்னை வேளச்சேரியில் உள்ள, “தண்டீசுவர ஆலயம்”. திருச்சி, மண்ணச்சநல்லூர் அருகே உள்ள “திருப்பைஞ்ஞீலி” சிவ ஆலயம், குடவாசலில் இருந்து நன்னிலம் செல்லும் பாதையில் உள்ள “ஸ்ரீவாஞ்சியம்” சிவ ஆலயம்,
கும்ப கோணம் முதல் கதிராமங்கலம் சாலையில் உள்ள “திருக்கோடி காவல்” சிவ ஆலயம் ஆகியவை குறிப்பிடத்தக்கனவாகும். மாசி மாதம் வரும் மகா சிவராத்திரிக்கு முன்னால் வரும் பிரதோஷமும், “மகா பிரதோஷம்” எனப்படும்.
*10.🍀 உத்தம மகா பிரதோஷம் :*

சிவபெருமான் விஷம் அருந்திய தினம் சனிக்கிழமையாகும். அந்தக் கிழமையில் வரும் பிரதோஷம் மிகவும் சிறப்பானதாகும்.
சித்திரை, வைகாசி, ஐப்பசி, கார்த்திகை ஆகிய மாதங்களில் வளர்பிறையில், சனிக்கிழமையில் திரயோதசி திதியன்று வரும் பிரதோஷம் உத்தம மகா பிரதோஷம் ஆகும். இது மிகவும் சிறப்பும் கீர்த்தியும் பெற்ற தினமாகும்.
*11. 🍀ஏகாட்சர பிரதோஷம் :*

வருடத்தில் ஒரு முறை மட்டுமே வரும் மகா பிரதோஷத்தை `ஏகாட்சர பிரதோஷம்’ என்பர். அன்றைக்கு சிவாலயம் சென்று, `ஓம்’ என்ற பிரணவ மந்திரத்தை எத்தனை முறை ஓத முடியுமோ, அத்தனை முறை ஓதுங்கள்.
பின், விநாயகரையும் வழிபட்டு, ஏழை எளியவர்களுக்கு அன்னதானம் வழங்கினால் பல விதமான நன்மைகள் ஏற்படும்.
*12.🍀 அர்த்தநாரி பிரதோஷம் :*

வருடத்தில் இரண்டு முறை மகாபிரதோஷம் வந்தால் அதற்கு அர்த்தநாரி பிரதோஷம் என்று பெயர். அந்த நாளில் சிவாலயம் சென்று வழிபட்டால், தடைப்பட்ட திருமணம் நடைபெறும். பிரிந்து வாழும் தம்பதி ஒன்று சேர்வார்கள்.
*13.🍀 திரிகரண பிரதோஷம் :*

வருடத்துக்கு மூன்று முறை மகாபிரதோஷம் வந்தால் அது திரிகரண பிரதோஷம். இதை முறையாகக் கடைப்பிடித்தால் அஷ்ட லட்சுமிகளின் ஆசியும் அருளும் கிடைக்கும். பிரதோஷ வழிபாடு முடிந்ததும் அஷ்ட லட்சுமிகளுக்கும் பூஜை வழிபாடு செய்வது மிகவும் நல்லது.
*14. 🍀பிரம்மப் பிரதோஷம் :*

ஒரு வருடத்தில் நான்கு மகா பிரதோஷம் வந்தால், அது பிரம்மப் பிரதோஷம். இந்தப் பிரதோஷ வழிபாட்டை முறையாகச் செய்தால் முன்ஜென்மப் பாவம் நீங்கி, தோஷம் நீங்கி நன்மைகளை அடையலாம்.
*15. 🍀அட்சரப் பிரதோஷம் :*

வருடத்துக்கு ஐந்து முறை மகா பிரதோஷம் வந்தால் அது அட்சரப் பிரதோஷம். தாருகா வனத்து ரிஷிகள். `நான்’ என்ற அகந்தையில் ஈசனை எதிர்த்தனர்.
ஈசன், பிட்சாடனர் வேடத்தில் வந்து தாருகா வன ரிஷிகளுக்குப் பாடம் புகட்டினார். தவறை உணர்ந்த ரிஷிகள், இந்தப் பிரதோஷ விரதத்தை அனுஷ்டித்து பாவ விமோசனம் பெற்றனர்.
*16. 🍀கந்தப் பிரதோஷம் :*

சனிக்கிழமையும், திரயோதசி திதியும், கிருத்திகை நட்சத்திரமும் சேர்ந்து வரும் பிரதோஷம் கந்தப் பிரதோஷம். இது முருகப் பெருமான் சூரசம்ஹாரத்துக்கு முன் வழிபட்ட பிரதோஷ வழிபாடு. இந்தப் பிரதோஷத்தில் முறையாக விரதம் இருந்தால் முருகன் அருள் கிட்டும்.
*17.🍀 சட்ஜ பிரபா பிரதோஷம் :*

ஒரு வருடத்தில் ஏழு மகா பிரதோஷம் வந்தால் அது, `சட்ஜ பிரபா பிரதோஷம்’. தேவகியும் வசு தேவரும் கம்சனால் சிறையிடப்பட்டனர். ஏழு குழந்தைகளைக் கம்சன் கொன்றான்.
எனவே, எட்டாவது குழந்தை பிறப்பதற்கு முன்பு ஒரு வருடத்தில் வரும் ஏழு மகா பிரதோஷத்தை முறையாக அவர்கள் அனுஷ்டித்ததால், கிருஷ்ணர் பிறந்தார். நாம் இந்த விரதத்தைக் கடைப்பிடித்தால் முற்பிறவி வினை நீங்கி பிறவிப் பெருங்கடலை எளிதில் கடக்கலாம்.
*18. 🍀அஷ்ட திக் பிரதோஷம் :*

ஒரு வருடத்தில் எட்டு மகா பிரதோஷ வழிபாட்டை முறையாகக் கடைப்பிடித்தால், அஷ்ட திக்குப் பாலகர்களும் மகிழ்ந்து நீடித்த செல்வம், புகழ், கீர்த்தி ஆகியவற்றைத் தருவார்கள்.
*19. 🍀நவக்கிரகப் பிரதோஷம் :*

ஒரு வருடத்தில் ஒன்பது மகா பிரதோஷம் வந்தால், அது நவக்கிரகப் பிரதோஷம். இது மிகவும் அரிது. இந்தப் பிரதோஷத்தில் முறையாக விரதம் இருந்தால் சிவனின் அருளோடு நவக் கிரகங்களின் அருளும் கிடைக்கும்.
*20. 🍀துத்தப் பிரதோஷம் :*

அரிதிலும் அரிது பத்து மகாபிரதோஷம் ஒரு வருடத்தில் வருவது. அந்தப் பிரதோஷ வழிபாட்டைச் செய்தால் பிறவி குறைபாடுகள் கூட சரியாகும்.

ஓம் நமச்சிவாய...

• • •

Missing some Tweet in this thread? You can try to force a refresh
 

Keep Current with Raamraaj 🇮🇳🇮🇳🇮🇳

Raamraaj 🇮🇳🇮🇳🇮🇳 Profile picture

Stay in touch and get notified when new unrolls are available from this author!

Read all threads

This Thread may be Removed Anytime!

PDF

Twitter may remove this content at anytime! Save it as PDF for later use!

Try unrolling a thread yourself!

how to unroll video
  1. Follow @ThreadReaderApp to mention us!

  2. From a Twitter thread mention us with a keyword "unroll"
@threadreaderapp unroll

Practice here first or read more on our help page!

More from @Raamraaj3

Dec 23
*ஸ்ரீகாஞ்சி மகாசுவாமிகள் ஆஞ்சநேய ஸ்வரூப லட்சணங்களைப்பற்றி வெகு அழகாகக் குறிப்பிடுகிறார்*.

அதாவது ''ஞானத்தின் உச்ச நிலை; பக்தியில் உச்ச நிலை; பலத்தில் உச்ச நிலை; வீரத்தில் உச்ச நிலை; கீர்த்தியில் உச்ச நிலை; சேவையில் உச்ச நிலை;

1 Image
வினயத்தில் உச்ச நிலை'' இவையெல்லாம் சேர்ந்த ஒரே ஸ்வரூபம் ஆஞ்சநேயனே! என்கிறார்.

வாயுவின் அம்சத்தினால் அஞ்சனாதேவியிடம் அவதரித்தவர் ஆஞ்சநேயர். நித்திய பிரம்மச்சாரியான இவர் ஏழு சிரஞ்சீவிகளுள் ஒருவர்.

2
நற்குணங்களுக்கெல்லாம் இருப்பிடமான தன்னகரில்லா ராம பக்த அனுமானை வழிபடுவோருக்கு அனைத்து நலங்களும் கிட்டும்.

பாரத நாடெங்கும் உள்ள பல்லாயிரக்கணக்கான திருத்தலங்களில், எண்ணற்ற திருநாமங்களுடன், எண்ணற்ற திருக்கோலங்களில் கோயில் கொண்டு அனுக்கிரகம் புரிந்து வருகிறார் ஆஞ்சநேயர்.

3
Read 100 tweets
Dec 22
மஹாபெரியவாவை பற்றிய அருமையான பதிவு:

எளிமையாக வாழ்ந்து காட்டியும், நியாய, தர்மத்தை எடுத்துச் சொல்லியும் மக்களை தன்பால் ஈர்த்த துறவி காஞ்சி மகாபெரியவர். எதிர்பார்ப்பு இல்லாத பக்தி, மனத்துாய்மை, எளிமை, ஒழுக்கம், நேர்மை இவையே ஆன்மிக வாழ்வின் அடிப்படை என்பது இவரது கோட்பாடு. Image
எளிய மனிதரான இவர் பெரும்பாலும் தென்னங்கீற்று வேய்ந்த குடிசையில் தங்கினார். நாடு முழுவதும் பாதயாத்திரை சென்று மக்களை சந்தித்தார். சமகாலத்தில் வாழ்ந்த துறவியர் மீது மதிப்பு கொண்டிருந்தார் என்பதற்கு பல சம்பவம் உண்டு.
பால்பிரண்டன் என்னும் வெளிநாட்டவர், தனக்கு உபதேசம் அளிக்கும்படி பெரியவரை வேண்டினார். வெளிநாட்டவருக்கு உபதேசிக்க மடத்துவிதிகள் அனுமதிக்காது என்பதால் திருவண்ணாமலை ரமணரிடம் செல்லும்படி வழிகாட்டினார்.
Read 19 tweets
Dec 22
*‘கணிதமேதை’ இராமானுஜர் பிறந்த தினம் இன்று*

*‘கணிதமேதை’ இராமானுஜன் பிறப்பு*

‘கணிதமேதை’ இராமானுஜன் வறுமையே சொத்தாயிருந்த ஒரு குடும்பத்தில் பிறந்தவர் இராமானுஜன். Image
தந்தை பெயர் ஸ்ரீநிவாஸ ஐயங்கார். தாய் கோமளம். பிறந்தது ஈரோட்டில் தாய்வழிப் பாட்டி வீட்டில் (1887 டிசம்பர் 22) என்றாலும் ஒரு வயதிலிருந்தே வளர்ந்து வாழத் தொடங்கியது சொந்த ஊரான கும்பகோணத்தில் தான்.

இராமானுஜன் படிப்பில் படுசுட்டி. அபார நினைவாற்றல் உடையவர்.
படிக்கிற காலத்தில் ஒரு புத்தகத்தை அப்படியே மனப்பாடம் செய்து ஒப்புவித்து விடுவார்.

ஐந்தாம் வகுப்பு படிக்கிறபோது பள்ளியில் மட்டுமல்ல ஊரிலேயே முதல் மாணவன் அவர்தான்.

கணக்கில் புலி. அப்பாவுக்கு துணிக்கடையில் கணக்குப் பிள்ளை உத்யோகம். மாத சம்பளம் இருபது ரூபாய்.
Read 21 tweets
Dec 22
🌹🌺" *நித்திய பிரம்மச்சாரியான ஏழு சிரஞ்சீவிகளுள் ஒருவராக திகழும் ஆஞ்சநேயன் ...* 🌹🌺 Image
🌹🌺 ''ஞானத்தின் உச்ச நிலை; பக்தியில் உச்ச நிலை; பலத்தில் உச்ச நிலை; வீரத்தில் உச்ச நிலை; கீர்த்தியில் உச்ச நிலை; சேவையில் உச்ச நிலை; வினயத்தில் உச்ச நிலை'' இவையெல்லாம் சேர்ந்த ஒரே ஸ்வரூபம் ஆஞ்சநேயனே! என்கிறார். காஞ்சி மகாபெரியவர்
🌺வாயுவின் அம்சத்தினால் அஞ்சனாதேவியிடம் அவதரித்தவர் ஆஞ்சநேயர். நித்திய பிரம்மச்சாரியான இவர் ஏழு சிரஞ்சீவிகளுள் ஒருவர்.

🌺நற்குணங்களுக்கெல்லாம் இருப்பிடமான தன்னகரில்லா ராம பக்த அனுமானை வழிபடுவோருக்கு அனைத்து நலங்களும் கிட்டும்.
Read 12 tweets
Dec 22
*அருள்மிகு ஆஞ்சநேயர் திருக்கோயில்* - *ஆலத்தியூர் - மலப்புரம்,கேரளா*

மூலவர் :-ராமர், ஆஞ்சநேயர்  

1 Image
தல சிறப்பு:

சீதையைத்தேடி கடல் கடந்து இலங்கைக்கு தாண்டி குதித்ததை நினைவு படுத்தும் வகையில், கல்லில் கட்டிய திடல் ஒன்று இங்குள்ளது.

பொது தகவல்:

விநாயகர், அய்யப்பன், துர்காபகவதி, விஷ்ணு, பத்ரகாளி ஆகிய தெய்வங்கள் தனி தனி சன்னதிகளில் அருள்பாலிக்கிறார்கள்.

2
தலபெருமை:

ராமநாமத்தை தவிர வேறு எதுவும் அறியாத அனுமன் தன்னலமில்லாத வீரனாக, ராம பக்தனாக திகழ்ந்தார். சீதாப்பிராட்டியை மீட்டு வருவதற்காக அவர் ராமரிடம் எந்தவித பிரதிபலனும் எதிர் பார்க்கவில்லை. ராமனுக்கு பணிவிடை செய்வதற்காகவே வாழ்ந்தார்.

3
Read 17 tweets
Dec 21
*மரத்தின் பெயர் சூடிய மகாதேவன்*

சிவபெருமான் பூக்களின் பெயரால் செவ்வந்தீஸ்வரர், திருமலர் உடையார், ஷெண்பகேஸ்வரர், எனப் பொலிவதைப் போலவே, மருதவாணன், ஏகாம்பரன், மாமூலன், ஆலமர் செல்வன், வேணுவனநாதன், வாக்சிசர், ஜம்புநாதர் என்று மரங்களின் பெயரால் அழைக்கப்படுகிறார். Image
தலபுராணங்கள் அவருக்கு மரப்பெயர்கள் அமைந்திருப்பதன் காரணத்தை விளக்கமாகக் கூறுகின்றன. இந்த பகுதியில் மரப்பெயர்களால் மகிமையுடன் விளங்கும் சிவபெருமானின் திருப்பெயர்கள் சிலவற்றின் விளக்கத்தைக் கண்டு மகிழலாம்.
மருதம் - மருதவாணன்

மருதமரம், தமிழர்வாழ்வோடு இணைந்ததாகும். தமிழ் இலக்கியங்களில் ``மருதக்கலி’’ என்றொரு நூல் உள்ளது. பல தமிழ்ப் புலவர்கள் மருதன் என்ற பெயரைச் சூடியிருந்தனர்.
Read 11 tweets

Did Thread Reader help you today?

Support us! We are indie developers!


This site is made by just two indie developers on a laptop doing marketing, support and development! Read more about the story.

Become a Premium Member ($3/month or $30/year) and get exclusive features!

Become Premium

Don't want to be a Premium member but still want to support us?

Make a small donation by buying us coffee ($5) or help with server cost ($10)

Donate via Paypal

Or Donate anonymously using crypto!

Ethereum

0xfe58350B80634f60Fa6Dc149a72b4DFbc17D341E copy

Bitcoin

3ATGMxNzCUFzxpMCHL5sWSt4DVtS8UqXpi copy

Thank you for your support!

Follow Us on Twitter!

:(