M.SivaRajan Profile picture
Dec 24 20 tweets 3 min read
#தீட்டு

🌻 தீட்டு என்றால் என்ன.?

"தீட்டு" என்கிற சொல் புரிந்துகொள்ளப்படாமலேயே காலங்காலமாக பெரும்பாலானோரால் கையாளப்பட்டு வருகிறது.

இது குறித்த உண்மையான அர்த்தமுள்ள பார்வை அனைவருக்கும் தேவை. Image
இறைவழிபாட்டில் விலக்க வேண்டிய தீட்டுக்கள் குறித்து இந்தப் பதிவு தெளிவுபடுத்தும் என நம்பலாம்.

🌻 தீட்டு என்பது என்ன.?

இறைவன் இருக்கும் இடத்தில் இந்தத் தீட்டுகள் ஆகாது!

தீட்டு என்பது, தீண்டத் தகாததைத் தீண்டுவது.

தீட்டுடன் இறைவனைக் கும்பிட்டால், இறைவன் ஏற்கமாட்டான் என்பார்கள்.
தீட்டுப் பட்டால் துடைத்து விடும், தீட்டுக் கூடாது என்பார்கள்.

🔻 ஆண், பெண் கலந்தாலும் தீட்டு,

🔻 குழந்தைகள் பிறந்தாலும் தீட்டு,

🔻 பெண்கள் மாதவிடாயும் தீட்டு,

🔻 இறந்தாலும் தீட்டு!

இப்படிப் பார்த்தால், தீட்டில் உருவான நமது உடலே ஒரு தீட்டு தானே!
அதனால் தான் இறந்த பிறகு உடலைப் பிணம் என்று பெயர் வைத்துப் பிணத்தைத் தொட்டால் தீட்டு என்பார்கள்.

🔘 தீட்டுடைய இந்த உடலை வைத்து, எப்படிக் கடவுளை வழிபட முடியும்.?

சிந்தித்துப் பாருங்கள்.
இதுவல்ல உண்மையான தீட்டு.
இவை நாம் சுகாதாரமாய் இருப்பதற்கு, இறைவனை பெயரைச் சொல்லி ஏற்படுத்திய ஒழுக்கங்கள்.

அப்பொழுது தான் பயபக்தியோடு சுத்தமாக இருப்போம் என்பதற்காகத் தான் இவற்றைச் சொன்னார்கள்.
தீட்டு என்பது வேறு.

அவை.,

✴ காமம்,
✴ குரோதம்,
✴ லோபம்,
✴ மதம்,
✴ மாற்சரியம்

என்னும் பஞ்சமா பாதங்கள்!
🔺 காமத் தீட்டு:

காமம் என்பது ஆசை.

நாம் எந்தப்பொருள் மீதாகிலும் ஆசை வைத்தால், அந்தப் பொருளின் நினைவாகவே ஆகிவிடுகின்றோம்.

நம் உள்ளத்தில் எந்த நேரமும், அந்தப் பொருள் மீதே ஞாபகமாக இருப்போம்.
அதற்காகவே முயற்சிச் செய்வதும், அலைவதுமாக இருப்போம்.

அந்தப் பொருள் கிடைத்து விட்டால், மனத்தில் சந்தோசம் உண்டாகும்.

இல்லையென்றால் மனத்தில் சதா வேதனை ஏற்படும்.

இப்படிப்பட்ட நேரங்களில் இறைவனைப் பற்றிச் சிந்தனை செய்ய முடியாது.
இதனால் தான், ஆசைக்கு அடிமை ஆகாதே, அதை தீண்டாதே என்றார்கள்.

🔺 குரோதத் தீட்டு:

குரோதம் என்பது கோபம்.

யாராக இருந்தாலும் கோபம் வந்துவிட்டால் முன்னே பின்னே பாராமல், தாய், தந்தையர், சகோதரர்கள், உறவினர்கள் என்றும் சிந்திக்காமல், கொடூரமாகப் பேசுவதும்,
கேவலமான நிலைக்கு ஆளாவதும் நேர்கின்றன.

சிலர் கொலை செய்துவிட்டு ஆயுள் பூராகவும் துன்பம் அனுபவிப்பார்கள்.

சிலர் தூக்கில் இடப்படுவார்கள்.

கோபத்தைப் போல் கொடியது உலகத்தில் வேறு எதுவும் இல்லை.
கோபத்தால் அழிந்தவர்கள் கோடான கோடிப்பேர், கோபம் எழும் பொழுது நம் உடலில் உள்ள எத்தனையோ ஜீவ அணுக்கள் செத்து மடிகின்றன.

ஆயுளும் குறைந்து விடுகிறது.

கோபத்தால் உணர்ச்சி வசப்பட்டவர்கள் எதையுமே செய்யத் துணிவார்கள்.
இவர்களால் இறைவனைப் பற்றிச் சிந்தனை செய்ய முடியாது.

இதனால் தான் கோபத்திற்கு அடிமை ஆகாதே, அதைத் தீண்டாதே என்பர்.

குரோதம் என்னும் கோபமே இரண்டாவது தீட்டு.
🔺️ லோபத் தீட்டு:

லோபம் என்பது சுயநலம்.

பிறரைப் பற்றிச் சிந்திக்காமலும்,இரக்கம் என்பதே இல்லாமலும், சுயநலத்துடன் பொருள்களைச் சேர்த்து வைத்து அழகு பார்ப்பதும், கஞ்சத்தனமும், எல்லாவற்றையும் தானே அனுபவிக்க வேண்டும் என்ற எண்ணமும்,
பிறர் பொருளை அபகரித்துத் தானே வாழ நினைக்கும் குணமும், எப்பொழுதும் தன் பொருள்களைப் பற்றுடன் பாதுகாப்பது ஆகிய எல்லாம் சுயநல வேகமே.

இப்படிப் பட்ட நேரங்களில் இறைவனைப் பற்றிச் சிந்தனை செய்ய முடியாது.
அதனால் தான் சுயநலத்திற்கு அடிமை ஆகாதே, அதைத் தீண்டாதே என்பார்கள்.

இது லோபம் என்னும் மூன்றாவது தீட்டு.

🔺️ மதத் தீட்டு:

மதம் என்பது கர்வம் (ஆணவம்).

ஒருவரையும் மதிக்காது மனதையோடு இருப்பது இது.

எதையும் தானே சாதிக்க முடியும் என்ற கர்வமும் இது.
தான் என்னும் அகந்தையால் திமிர் பிடித்து அலைவதும் இது. ஆணவ நெறியால் யாவரையும் துன்பப் படுத்தித் தான் மகிழ்ச்சி அடைவதும் இது.

இப்படிப்பட்ட நேரங்களில் இறைவனைப் பற்றிச் சிந்தனை செய்ய முடியுமா?

இதனால் தான் கர்வத்திற்கு அடிமை ஆகாதே என்பர்.
அதைத் தீண்டாதே என்பர். கர்வமாகிய மதமே நான்காவது தீட்டு.

🔺️ மாற்சரியத் தீட்டு:

மாற்சரியம் என்பது பொறாமை.

பிறர் வாழ்வதைக் கண்டு பொறுக்க முடியாமல் வேதனைப்படுவது இது.

எந்த நேரமும் நாம் நல்லபடியில்லையே என்று தன்னையே நொந்து கொள்வதும் இது.
எல்லாரும் சுகமாக இருக்கின்றார்களே, இவர்கள் எப்பொழுது கஷ்டப் படுவார்கள், எப்பொழுது செத்துப் போவார்கள் என்பதும் இது. தான் மட்டும் சுகமாக இருக்கவேண்டும் சாகக் கூடாது என்பதே இவர்கள் எண்ணம்.
பிறரைப் பார்க்கும் பொழுது தீய எண்ணங்களுடன் பெருமூச்சு விடுவார்கள்.

தாழ்வு மனப்பான்மையோடு, யாரைப் பார்த்தாலும் சகிக்க முடியாமல் எரிச்சலோடு இருப்பார்கள்.

இப்படிப்பட்ட நேரங்களில் இறைவனைப் பற்றிச் சிந்தனை செய்ய முடியுமா?
இதனால் தான் பொறாமைக்கு அடிமை ஆகாதே, அதைத் தீண்டாதே என்றனர்.

இது தான் ஐந்தாவது தீட்டு.

இவை ஐந்தும் மாபெரும் தீட்டுகள்.

இந்தத் தீட்டுக்களை உடைவர்கள் இறைவனை வழிபட முடியாது.

இறைவன் இருக்கும் இடத்தில் இந்தத் தீட்டுகள் ஆகாது.

#தீட்டு_விளக்கம்

• • •

Missing some Tweet in this thread? You can try to force a refresh
 

Keep Current with M.SivaRajan

M.SivaRajan Profile picture

Stay in touch and get notified when new unrolls are available from this author!

Read all threads

This Thread may be Removed Anytime!

PDF

Twitter may remove this content at anytime! Save it as PDF for later use!

Try unrolling a thread yourself!

how to unroll video
  1. Follow @ThreadReaderApp to mention us!

  2. From a Twitter thread mention us with a keyword "unroll"
@threadreaderapp unroll

Practice here first or read more on our help page!

More from @MSivaRajan7

Dec 26
#சிவ_பூஜை

*சிவாகமங்களில் சொல்லப்பட்ட சிவலிங்கத்தை பூஜை செய்வதால் ஏற்படும் பலன்கள் !*

1. சிவலிங்கத்தை பூஜை செய்பவன் சித்தம் சுத்தமாகும் .

சித்த ரிஷிகளாகவே மாறுகிறான்

2. சிவலிங்க பூஜை செய்பவன் முடிவில் சிவமாகவே ஆகிவிடுகிறான்.
3. சிவலிங்கத்தின் பிம்ப தரிசனம் கொலை செய்தவனின் பாபத்தையும் கூட போக்கும்.

4. சிவலிங்கத்தை நினைத்தாலும், தரிசித்தாலும், பூஜை செய்தாலும், சிங்கத்தை கண்டு மற்ற மிருகங்கள் தெறித்து ஓடுவதுபோல பாபங்கள் கழன்று ஓடும் .
5. இதனை பக்தியுடனோ அல்லது பக்தியே இல்லாது அல்லது எதிர்பாராமல் திடீரென பூஜை செய்ய நேர்ந்தாலும் முக்தி உண்டு.

6.சிவபூஜை செய்பவனுக்கு
எமபயமில்லை.

7. சந்தனம், புஷ்பம், தீபம், தூபம், நைவேத்தியம் , வேள்விகள் செய்து இப்பூஜையினை செய்பவர்கள்
சிவலோகத்தில் அனந்தகாலம் வாழ்வார்கள்.
Read 10 tweets
Dec 26
#திருவோண_விரதம்

இன்று சந்தோஷ வாழ்வு தரும் திருவோண நக்ஷத்திரம் !

இன்று திருவோண விரதம் மேற்கொள்ளுங்கள்.

வீட்டின் தரித்திரம் விலகும்.

ஐஸ்வர்யம் பெருகும் !

இன்று டிசம்பர் 26-12-2022, சுபகிருது வருடம், மார்கழி 11, திங்கட்கிழமை. Image
இன்று சந்தோஷ வாழ்வு தரும் திருவோண நக்ஷத்திரம் மாலை 04.41 வரை.

இன்றைய சிறப்பு : திருவோண விரதம்.

இன்றைய வழிபாடு :

பெருமாளுக்கு துளசிமாலை சாத்துதல்.

திருவோணம் நோன்பு என்பது, திருவோண நட்சத்திரத்தோடு கூடிய நன்னாளில் நோற்கும் விரதம்.

இந்த விரதம் பெருமாளுக்கு உகந்த அற்புதமான நாள்.
பெருமாளுக்கு உகந்த திருநட்சத்திரமான திருவோண நட்சத்திரமான இன்று.

திருவோண விரதம் மேற்கொள்ளுங்கள்.

திருமாலை மாலையில் ஆலயம் சென்று தரிசியுங்கள். வாழ்வில் எல்லா சந்தோஷங்களையும் தந்தருள்வார் பெருமாள்!

திருவோணம் நோன்பு என்பது, திருவோண நட்சத்திரத் தோடு கூடிய நன்னாளில் நோற்கும் விரதம்.
Read 13 tweets
Dec 26
#திதி_தேவதைகள்

நாம் எல்லோருமே பிறந்த நேரம், தேதி, நட்சத்திரம் மற்றும் இராசி என்று கேட்டால் யோசிக்காமல் சொல்லி விடுவோம்.

ஆனால் உங்கள் பிறந்த திதி என்ன என்று கேட்டால் அது இறந்தவர்களுக்கு தானே என்று கேள்வி கேட்போம். Image
கை தேர்ந்த ஜோதிடர்களுக்கு மட்டும் தெரிந்த இந்த பிறந்த திதி சூட்சுமத்தை நீங்கள் அனைவரும் தெரிந்து கொள்ள வேண்டும்.

அந்த வகையில் சாக்த வழிபாட்டு முறையின் படி உங்கள் திதியை வைத்து அதற்குண்டான திதி தேவதைகளை வழிபாடு செய்து வந்தால் நாம் நம் வாழ்நாள் முழுவதும் சந்தோஷமாக இருக்க முடியும்.
இதைதான் விதி படி சிறப்பாக வாழ திதி தேவதை வழிபாடு அவசியம் என் நம் முன்னோர்கள் கூறி உள்ளார்கள்

உங்களுக்குண்டான பிறந்த திதியை வைத்து நீங்கள் செய்யும் முயற்சிகள் எல்லாவற்றிலும் நிச்சயம் பிரமாண்ட வெற்றிகள் கிடைக்கும்.
Read 9 tweets
Dec 25
#ஆண்டாளின்_செல்லக்_கிளி

ஆண்டாளின் செல்லக் கிளி!

கொஞ்சம் ஆண்டாளின் கிளிக்குப் பெயர் கல்யாணக் கிளி … அரங்கனுக்கு கிளியைக் கொண்டு தூது அனுப்பினாள் ஆண்டாள் …

தூது சென்று வந்தக் கிளியிடம் , உனக்கு என்ன வரம் வேண்டும் கேள் என்று ஆண்டாள் கேட்க , Image
கிளியும் … உங்கள் கையில் நான் என்றும் இருக்க அருள் புரிய வேண்டும் என்று கேட்டுக் கொண்டமைக்கு இணங்க …. ஆண்டாள் கையில் கிளி எப்பொழுதும் இருப்பது ஐதீகம்...

அரங்கனிடம் காதல் தூது சென்றதால் , இந்தக் கிளிக்கு , கல்யாணக் கிளி என்று பெயர் வந்தது .
இதை ஸ்ரீவில்லிபுத்தூர் ஆண்டாள் கோவிலில் பிரத்யேகமாக தினமும் செய்கிறார்கள்.

அதற்கென்றே ஒரு குடும்பத்தினர் கோவிலுக்கு அருகில் வசிக்கிறார்கள் .

சுத்தமான வாழை நார் மற்றும் மரவள்ளிக் கிழங்கின் இலைகளைக் கொண்டு இந்தக் கிளியின் உடலும் முகமும் வடிவமைக்கிறார்கள் .
Read 9 tweets
Dec 25
#ஹனுமன்_வழிபாடு_செய்த_சிவன்

*ஹனுமன் வழிபட்ட காரணீஸ்வரர் கோயில்!*

ஸ்ரீ செண்பகவல்லி ஸமேத ஸ்ரீ காரணீஸ்வரர் கோயில்

சென்னையிலிருந்து திருவள்ளூர் நோக்கிச் செல்லும் வழியில் காக்களூர் கிராமத்தில் அமைந்துள்ளது அருள்மிகு செண்பகவல்லி உடனுறை காரணீஸ்வரர் ஆலயம். Image
பழங்காலத்தில் காக்கா சூரண பட்டணம் என அழைக்கப்பட்ட இப்பகுதியைக் காக்கா சூரன் என்ற அசுரன் ஆட்சி புரிந்து வந்ததாகவும்,

ராமாயண காலத்தில் லட்சுமணனைக் காக்க அனுமன் சஞ்சீவி மலையைக் கொண்டு சென்ற போது அவரை தடுப்பதற்காகவே இராவணனின் நண்பரான காக்கா சூரன்
108 சிவலிங்கங்களை ஆங்காங்கே பிரதிஷ்டை செய்து அனுமனை வழிபட முயற்சி மேற்கொண்டதாகவும்,

இருப்பினும் காக்கலூரில் உள்ள காரணீஸ்வரரை மட்டுமே அனுமன் வழிபட்டுச் சென்று லக்ஷ்மணனைக் காப்பாற்றியதாகக் கூறப்படுகின்றது.
Read 6 tweets
Dec 24
#மயூர_வாகன_சேவன_திருவிழா

இன்று மயூர வாகன சேவன விழா.

பாம்பன் சுவாமிகள் சென்னையில் தங்கியிருந்த காலத்தில்,

1923, டிசம்பர் 27ஆம் நாள், தம்புச் செட்டித் தெருவில், குதிரை வண்டி ஒன்றினால் கீழே தள்ளப்பட்டார். Image
இடது கணுக்காலில் கடுமையான காயம்.

வண்டிச் சக்கரம் காலில் ஏறிவிட்டது.

சென்னை அரசு பொது மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.

ரணம் சரியாக ஆறாத நிலையில், எலும்புகளிலும் உடைப்பு ஏற்பட்டிருந்ததால்,

73 வயதான இந்த நோயாளிக்கு எலும்புகள் கூடுவதற்கு வாய்ப்பில்லை,
ஆகவே இடது கணுக்கால் அளவில் வெட்டி எடுத்து விட வேண்டும் என்று மருத்துவர்கள் கூறினர்.

இவருடைய சீடராகவும் நண்பராகவும் விளங்கிய சின்னசுவாமி என்பவர்,

பிறருக்கு உதவிய சண்முகக் கவசம் இவருக்கே உதவலாகாதா என்னும் ஆதங்கத்துடன் அதனை ஓதத் தொடங்கினார்.
Read 10 tweets

Did Thread Reader help you today?

Support us! We are indie developers!


This site is made by just two indie developers on a laptop doing marketing, support and development! Read more about the story.

Become a Premium Member ($3/month or $30/year) and get exclusive features!

Become Premium

Don't want to be a Premium member but still want to support us?

Make a small donation by buying us coffee ($5) or help with server cost ($10)

Donate via Paypal

Or Donate anonymously using crypto!

Ethereum

0xfe58350B80634f60Fa6Dc149a72b4DFbc17D341E copy

Bitcoin

3ATGMxNzCUFzxpMCHL5sWSt4DVtS8UqXpi copy

Thank you for your support!

Follow Us on Twitter!

:(