நாகலிங்கப்பூ. இதுவே கடவுள். இந்தப் பூவுக்குள்ளே தானே இறங்கி வந்து குடியிருக்கிறான். அத்தகைய ஒரு பெருமைக்குரிய மலர்தான் நாகலிங்கப்பூ.
நாகமுமிருக்கிறது …………..உள்ளே #லிங்கமும் இருக்கிறது. சுற்றிலும் தேவர்களும் இருக்கிறார்கள். தேவ கணங்களும் இருக்கின்றன. உள்ளங்கையில் வைத்துக் கொண்டு உற்று கவனித்தால் ஒரு #மினியேச்சர்#கைலாயமே கைக்குள் இருப்பது போல் இருக்கும்.
ஒரு சில நிமிடங்கள் நம் கவனத்தை ஒழுங்குபடுத்தி இந்தப் பூவின் மத்தியப் பகுதியில் இருக்கும் சிவ லிங்கத்தை உற்று நோக்கி அப்படியே நம்மை தியானத்தில் கொண்டு சென்று விட்டால் உடல் சிலிர்க்கும். உள்ளம் அமைதி பெறும்.
கயிலாயம்
கண்ணுக்குள் விரியும்
சிவபூஜைக்கு உரிய அஷ்ட மலர்களில் இது இடம் பெற வில்லை. பூமிக்கு வந்த சிவ மலர் என்பதாலோ என்னமோ விசேஷமான நாகாபரணத்துடன் கூடிய சிவலிங்க வடிவத்தைப் பெற்றுள்ளது. பாம்புகள் விரும்பி தஞ்சம் புகும் மரமாக நாகலிங்க மரம் உள்ளது .
விசேஷத்திலும் விசேஷமாக மரத்தில் பூக்கும் பூவாக வேர்ப் பகுதிக்கு சற்று மேலே கொத்துக் கொத்தாக இலைகளைக் கொண்ட கிளைகளில் பூக்காமல் தனக்கென்று ….தான் பூப்பதற்கு என்று பிரத்யேகமாக ஒரு கிளையை உருவாக்கிக் கொண்டு பூக்கும் மலராக நாகலிங்கப்பூ உள்ளது.
நாகலிங்க மரத்திற்கு ஏனைய தாவரங்களைப் போல பருவகால மாற்றங்கள் கிடையாதாம். என்றும் பசுமையான மரம் என்று போற்றப்படுகிறது. ஒரு நாகலிங்க மரத்தில் ஒரே நாளில் ஆயிரம் மலர்கள் வரை பூக்குமாம்.
நாகலிங்கப் பழம் மகா விசேஷம் ஒவ்வொரு பழமும் ஒரு கால்பந்து அளவுக்கு இருக்கும். அதில் 65 முதல் 550 விதைகள் வரை இருக்கும். இவைகள் முதிர்ச்சி அடைய சுமார் 12 லிருந்து 18 மாதங்கள் வரை ஆகுமாம்.
அமேசான் காட்டுப் பகுதிகளில் இந்த மரம்
துர்தேவதைகளிலிருந்து
காக்கும் மரமாகவும் ஆசிய கண்டத்தில் செல்வத்தின் அடையாளமாகவும் கருதப்படுகிறது. மேலும் இந்த மரம் மாசுக் கட்டுப்பாட்டின் தன்மையைக் காட்டும் குறியீட்டுக் கருவியாகவும் கருதப்படுகிறது.
காற்றில் அதிகமான #சல்பர் இருந்தால் இதன் இலைகளை உதிர்த்து வெளிப்படுத்துமாம்.
கடன் நீக்கி வல்லமை தரும் இந்த மரத்தின் இலைகளை அரைத்து தோல் நோய்களுக்கு மருந்தாகவும் இலைகளை மென்று தின்பதால் பல்வலிக்கு மருந்தாகவும் பட்டைகளையும் காய்களையும் பக்குவப்படுத்தி விஷ #ஜுரத்துக்குமருந்தாகவும் பயன்படுத்தலாம் என்கிறது சித்த மருத்துவம்.
ஓம் நமச்சிவாய 🙏
• • •
Missing some Tweet in this thread? You can try to
force a refresh
🕉உலகின் உள்ள அனைத்து ரிஷிகள், முனிவர்கள், சித்தர்கள் வந்து வழிபாடு செய்த கோவில் மற்றும் நவகிரகங்கள் தோன்றுவதற்கு முன்னரே உருவான கோயில். நான்கு யுகங்கள் தோன்றுவதற்கு முன்னரே உருவான ஆலயம் இது தான்!
🕉ஆயிரம் சிவ அடியார்கள் ஒரே சமயத்தில் மோட்சம் பெற்று சகஸ்கர லிங்கம் உருவாக்கிய ஆலயம் இது.
🕉3000 ஆண்டுகளாய் பூத்து குலுங்கும் இலந்தை மரம் உள்ள ஆலயம் இது.
🕉தென்னாடுடைய சிவனே போற்றி எந்நாட்டவர்க்கும் இறைவா போற்றி என்ற வாக்கியம் உருவான இடம் இது.
🕉மரகத நடராஜர் சிலை உள்ள ஆலயம் இது....
🕉இப்படி பலப்பல அதிசயங்களையும், ஆச்சயர்களையும் தன்னகத்தே கொண்டு, சாந்தமாய் இருக்கும் ஆலயம் - அதுதான் - இராமநாதபுரம் மாவட்டத்தில் அமைந்துள்ள திருஉத்ரகோசமங்கை மங்களநாதர் மங்களநாயகி திருக்கோவில்.
*மார்கழி திருவாதிரை:*
*கணவருக்காக திருமாங்கல்ய விரதம் இருக்கும் பெண்கள்*🙏🌹
சிவபெருமானுக்கு உகந்த நட்சத்திரம் திருவாதிரை. திருவாதிரை நட்சத்திரத்தோடு கூடிய நிறைமதி நாளில், உபவாசம் இருந்து நோக்கும் விரதத்திற்கு மகிமை உண்டு.
அது மட்டுமல்ல மாதங்களில் சிறப்பு மிக்க மாதம் மார்கழி. அந்த மார்கழி மாதம் வரும் திருவாதிரை நாளில் மாங்கல்ய நோன்பு இருந்தால் தீர்க்க சுமங்கலி வரம் கிடைக்கும் என்பது காலம் காலமாக கடைபிடித்து வரும் ஐதீகம்.
திருவாதிரை விரதம் தீர்க்க சுமங்கலி வரம் தரும் விரதமாக கடைபிடிக்கப்படுகிறது. இந்த நாளில் விரதம் இருந்து தாலி சரடு மாற்றி சிவபெருமானை வழிபடுவதன் மூலம் கணவருக்கு நீண்ட ஆயுள் கிடைக்கும் என்பது நம்பிக்கை.
மேற்கு நோக்கிய சிவனை தரிசித்தால் ஆயிரம் கிழக்கு நோக்கிய சிவனை தரிசித்த புண்ணியம் கிடைக்கும் என்று வாமதேவர் என்ற மகான் தனது நூல் ஒன்றில் சொல்லியுள்ளார்.
கிழக்கு, மேற்கு நோக்கிய சிவலிங்கங்களின் ஆவுடையார் (கோமுகை) வடக்கு நோக்கி இருக்கும் என்பது பொதுவான விதி.
ஆனால், மேற்கு நோக்கிய லிங்கத்தின் ஆவுடையாருக்கு சக்தி அதிகம்.
இங்கு செய்யப்படும் பரிகாரங்கள் வெகு விரைவில் பலன் தந்து கொண்டு இருக்கின்றன.
மேற்குப் பார்த்த லிங்கம் உள்ள ஆலயங்கள் தோஷ நிவர்த்தி தலங்களாக விளங்குகிறது.
மேற்கு நோக்கிய சிவ திருத்தல விவரங்கள்
1) அருள்மிகு கபாலீஸ்வரர், திருமயிலை, சென்னை
2) அருள்மிகு மருந்தீஸ்வரர், திருவான்மியூர், சென்னை
நீங்கள் ஆரோக்கியமாக இருக்கிறீர்களா? என உங்கள் நகம் சொல்லும்!
நம் உடலில் இரத்த ஓட்டம் இல்லாத பகுதிகளில் ஒன்று நகம். ' ஆல்ஃபா கெரட்டின்' (Alpha-keratin) என்னும் புரதப் பொருளால் ஆனது.
√ டென்ஷனாக இருக்கும்போது நகத்தைக் கடித்துத் துப்புவதும், மகிழ்ச்சியாக இருக்கும்போது நகப்பூச்சுக்களை பூசுவதும் என அனைத்து மனநிலைக்கும் பலிகடா ஆவது நகங்கள்தான்.
√ அழகை மட்டுமல்ல, ஆரோக்கியத்தையும் சொல்வதோடு எந்த நகத்தில் எந்த அடையாளம் இருந்தால், அது எந்த நோயின் அறிகுறி என்பதையும் அறியலாம்.