எல்லாம் முன்னரே எழுதப்பட்டுவிட்டது நம்மால் ஒன்றையும் மாற்ற முடியாது என்பவர்கள் கூட சாலையை கடக்க இருபக்கமும் கவனிப்பதை நான் பார்த்திருக்கிறேன்.
ஒரு மிகச்சிறிய நட்சத்திர குடும்பத்தின் ஒரு மிக சாதாரணமான ஒரு கிரகத்தில் வாழும் சற்றே மேம்பட்ட குரங்கினம் தான் நாம்.
கடவுளின் மேல் எல்லாம் பயம் இல்லை. அவரை நம்புகிறவர்கள் மீதுதான் பயமே.
கடவுள் இந்த உலகத்தை படைப்பதற்கு முன்னர் என்ன செய்து கொண்டிருந்தார். இந்ந கேள்விகளை கேட்பவர்களுக்காக ஒரு நரகத்தை படைத்துக் கொண்டிருந்தார்.
கடவுள் சொர்க்கம் நரகம் எல்லாம் வெறும் கட்டுக்கதைகள். இருட்டை கண்டு அஞ்சும் மக்களுக்காக சொல்லப்பட்ட கட்டுக்கதைகள்.
உடலில் மூளையைத் தவிர வேறு எந்த பாகமும் செயல்படாத ஒரு விஞ்ஞானியின் கூற்றுகள் இவை. இருபது மற்றும் இருபத்தொன்றாம் நூற்றாண்டின் தலைச்சிறந்த விஞ்ஞானிகளில் ஒருவரும்
விஞ்ஞான கருத்துகள் மூலம் உலகில் மிக மோசமான மூடநம்பிக்கையான கடவுள் நம்பிக்கையை சராமாரியாக கேள்வி எழுப்பியவருமான Dr.Stephen William Hawking பிறந்தநாள்.
பெரிய அறிவியல் படிப்புகளை படித்துவிட்டும் கடவுள் நம்பிக்கை இருக்கிறது என கூறிக் கொள்பவர்கள் ஹாக்கிங்கை கட்டாயம் படிக்க வேண்டும்❤
• • •
Missing some Tweet in this thread? You can try to
force a refresh
பெரியார் அவர்கள், மணியம்மை அவர்களை, தனது வளர்ப்பு மகள் என்று கூறி எப்போதாவது முறைப்படி தத்து எடுத்தாரா?
குறைந்தபட்சம் என்றைக்காவது அந்த காலத்து பத்திரிகைகளில் "பெரியாரின் மகள் மணியம்மை", என்று நீங்கள் எங்காவது கண்டதுண்டா?
முதலில் தெரிஞ்சிக்க வேண்டிய விசயம் அன்றைய இந்துத் திருமணச் சட்டப்படி ஒருவரைத் தத்தெடுக்க, தத்து எடுப்பவரும், எடுக்கப்படுபவரும் ஒரே சாதியாய் இருக்க வேண்டும். இல்லையெனில் சட்டப்படித் தத்தெடுக்க முடியாது.
இது அம்பத்கரின் இந்து சட்டத் திருத்தங்கள் 1956ல் அமலுக்கு வந்த பின்னே இந்த விதி நீக்கப்பட்டது.
பெரியாரை விமர்சிக்க ஏதும் காரணம் கிடைக்காத போது சிலர் அவரின் தனிப்பட்ட வாழ்வை/மணியம்மையார் திருமணம் குறித்தே விமர்சிப்பர். பெரியார்-மணியம்மை திருமணம் 9.7.1949 அன்று பதிவு செய்யப்பட்டது.