முரட்டு அடி மகேஷ் Profile picture
LEARN THE UNKNOWN ✨ Movies :https://t.co/26LvJrMw0r Books : https://t.co/Lh1QyLNn5W…
Aug 23 33 tweets 7 min read
உலகெங்கும் பல விருதுகள் மற்றும் அங்கீகாரங்கள் பெற்று ஆஸ்கார் விருது பட்டியலில் இடம் பிடித்து மிகப்பெரிய உச்சத்தை அடைந்த கூழாங்கல் என்னும் காவியத்தை இங்கு பலர் புரியவில்லை பிடிக்கவில்லை என்று கூறவதை காண முடிகிறது எனவே அந்த திரைப்படம் பற்றி இயக்குனர் விவரிப்பும் படத்தின் காட்சிகள் பற்றி த்ரெட் உங்களுக்காக.👇👇👇Image
Dec 21, 2023 12 tweets 4 min read
#koosemunisamyveerappan
சமீபத்தில் Zee 5 லவ் வெளியான கூசே முனுசாமி வீரப்பன் என்னும் வலைதொடர் பார்க்க நேர்ந்தது. இதற்கு முன்பு நெட்ஃப்லிக்ஸில் வெளியான the Hunt for veerappan தொடர் முழுக்க முழுக்க காவல்துறை பார்வையிலே நகரும் ஆனால் இந்த தொடர் Image முழுக்க முழுக்க வீரப்பன் மற்றும் பாதிக்கப்பட்ட மக்களின் வீடியோ வாக்குமூலத்தை கொண்டு திரைக்கதை பயணிக்கும்.
பல மாதங்களுக்கு முன்பு சோளகர் தொட்டி என்னும் புத்தகத்தை படித்த பிறகு சில நாட்கள் அதன் தாக்கத்தில் இருந்து என்னால் மீள முடியவில்லை Image
Aug 2, 2023 21 tweets 3 min read
#NenjameNenjamey

ஒரு பாட்டு என்ன செய்யணும்? பரிதவிக்கிறப்போ ஒரு ஆறுதல்; தூக்கம் வராத ராத்திரியில ஒரு தாலாட்டு; பேச்சுத்துணைக்கு ஆளில்லாதப்போ கையப்பிடிச்சுட்டு பக்கத்துல உக்காந்து 'சொல்லு கேக்குறேன்'ங்கிற ஒரு வார்த்தை; சரி விடு பாத்துக்கலாம்ங்கிற நம்பிக்கை; Image இது எதுமே இல்லன்னாலும் ஒரு அஞ்சு நிமிஷம் அமைதி. இதெல்லாம் ஒரு பாட்டால ஆகணும்னா அந்தப் பாட்டு வரிகள்ல குறைந்தபட்ச பரிவு இருக்கணும். வெறுமனே அலங்காரங்களும் எதார்த்தம் மீறிய கவித்துவமும் மட்டுமே இல்லாம கைக்கு எட்ற வானம் மாதிரி அந்தப் பாட்டு இருக்கணும்.
Feb 25, 2023 5 tweets 1 min read
உயிரும் உணர்வுமுள்ள இரண்டு நபர்களின் காதல் குறித்து உங்களுக்கு முதலில் எழும் கேள்வி அவர்களின் படுக்கை அறை சார்ந்து தான் என்றால் அது Curiosity அல்ல Insensitivity. ஒரு வகையான verbal abuse அது. காதலை வெறும் படுக்கையறையோடு அல்லது Sexual intercourse உடன் மட்டுமே சேர்த்து யோசித்து பழகி போன உங்களை எல்லாம் பார்க்க பரிதாபமாகத் தான் இருக்கிறது...பொதுச்சமூகம் எதைப் பின்பற்றுகிறதோ அதுவே சரி என்று மனதில் பதிந்துவிடுவதால்
Feb 11, 2023 16 tweets 3 min read
போராடடா..💪💥

பெரியபுராணத்தில் 'திருநாளைப் போவர் நாயனார் கதை' ஒன்று இருக்கிறது. இப்படிப் பெயர் சொல்லித் சொன்னால் சிலருக்குத் தெரியாமல் இருக்க வாய்ப்புகள் உள்ளன. அதையே 'நந்தன் கதை' என்று சொன்னால் அது யாவரும் அறிந்ததாகவே இருக்கும். தீண்டத்தகாதவன் என ஒதுக்கி வைக்கப்பட்டிருந்த நந்தன் தனது ஊரில் உள்ள சிவாலயத்தில் சிவனை தரிசிக்க முயல நந்தன் வெளியிலிருந்தே தரிசிக்கும் வண்ணம் குறுக்கே இருந்த நந்தியை நகரச்சொல்லி நந்தனுக்கு சிவபெருமான் காட்சியளித்ததாக புராணம் சொல்கிறது. தீவிர சிவபக்தனான நந்தன் தில்லை நடரசானையும்
Jan 8, 2023 5 tweets 1 min read
கடவுள் என்ற ஒன்று இருக்கவே முடியாது. அப்படி இருந்தாலும் அதுவும் இயற்பியல் விதிகளுக்கு கட்டுப்பட்டே ஆக வேண்டும்.

கடவுள் உங்கள் முன்னால் வந்தால் என்ன செய்வீர்கள் ?

அந்த கடவுள் எந்த துகள்களால் ஆனது அதன் மூலக்கூறுகள் என்ன என்று ஆராய்வேன்.

#HBD_Stephen_Hawking எல்லாம் முன்னரே எழுதப்பட்டுவிட்டது நம்மால் ஒன்றையும் மாற்ற முடியாது என்பவர்கள் கூட சாலையை கடக்க இருபக்கமும் கவனிப்பதை நான் பார்த்திருக்கிறேன்.

ஒரு மிகச்சிறிய நட்சத்திர குடும்பத்தின் ஒரு மிக சாதாரணமான ஒரு கிரகத்தில் வாழும் சற்றே மேம்பட்ட குரங்கினம் தான் நாம்.
Sep 18, 2022 8 tweets 2 min read
Happy Street Day 🤩
Sep 17, 2022 9 tweets 2 min read
இந்த கேள்வி கேக்குற நிறைய பேருக்காக ஒரு த்ரெட் 👇

பெரியார் அவர்கள், மணியம்மை அவர்களை, தனது வளர்ப்பு மகள் என்று கூறி எப்போதாவது முறைப்படி தத்து எடுத்தாரா?
குறைந்தபட்சம் என்றைக்காவது அந்த காலத்து பத்திரிகைகளில் "பெரியாரின் மகள் மணியம்மை", என்று நீங்கள் எங்காவது கண்டதுண்டா? முதலில் தெரிஞ்சிக்க வேண்டிய விசயம் அன்றைய இந்துத் திருமணச் சட்டப்படி ஒருவரைத் தத்தெடுக்க, தத்து எடுப்பவரும், எடுக்கப்படுபவரும் ஒரே சாதியாய் இருக்க வேண்டும். இல்லையெனில் சட்டப்படித் தத்தெடுக்க முடியாது.