Launching MadeInIndia ecom B2B / B2C in Scandinavia / Nordic to Identify new markets for Tamil Nadu!
தமிழ் நாட்டில் தயாராகும் உடைகள், மற்ற பொருட்களை ஸ்கண்டிநேவியாவில் சந்தைப்படுத்த ஒரு இணைய தளத்தை கட்ட வேண்டும் என்பது என் கனவு.
இதில் முக்கியமாக நான் கொண்டுவர விரும்பியது உடைகள்.
சுவீடனில் பத்து மில்லியன் மக்கள் - மற்ற ஸ்காண்டிநேவிய நாடுகளை கணக்கில் எடுத்துக்கொண்டால் (டென்மார்க் - பின்லாந்து - நார்வே), அல்லது மொத்த நார்டிக் நாடுகளும் என்றால் ஐஸ்லாந்து கூட இதில் வரும், ஆக 25 மில்லியன் மக்கள் தொகை. இது தான் நான் டார்கெட் செய்ய நினைக்கும் சந்தை.
கடந்த ஆண்டு நான் கேள்விப்பட்ட வரை, திருப்பூர் / கோவை / கரூர் போன்ற ஊர்களில் கடந்த சில ஆண்டுகளில் டெக்ஸ்டைல் துறை கடந்த காலங்களில் இருந்ததை போல இல்லாமல் சற்று மந்தமான நிலையில் - வெளிப்படையாக சொன்னால் சோடை போய் - இருப்பது கொஞ்சம் வருத்தமாக இருக்கிறது.
இதற்கு காரணமாக நான் நினைப்பது (பலரை விசாரித்து அறிந்துகொண்டது)
1. பண மதிப்பு இழப்பு 2. நூல் விலை உயர்வு 3. ஒன்றிய அரசின் பெரிய ஆதரவு இல்லை 4. கொரோனா பேரழிவு
வங்காள தேசத்தில் இருப்பதை போல அரசு உதவி நமது நாட்டில் இல்லை என்பதால் விலையில் அவர்களோடு போட்டி போட இயலாத சூழல் இருப்பதாக சொல்கிறார்கள்.
இதனை சமாளிக்க புதிய சந்தைகளை (நார்டிக் ) கண்டறிவது தான் ஒரே வழி. ஏற்கனவே பல உற்பத்தியாளர்கள் நார்டிக் நாடுகளில் தங்களுக்கான சந்தைகளை கண்டறிந்து கொடுத்து கொண்டு தான் இருக்கிறார்கள், இது புதிது அல்ல, ஆனால் மிக சிலரே அந்த அளவுக்கு தொடர்புகளை ஏற்படுத்தி வெற்றியடைந்து இருக்கிறார்கள்.
தமிழ் நாட்டில் உற்பத்தியாகும் துணிகளின் சந்தை மதிப்பு 60,000 கோடி என்று சொல்கிறார்கள். உரிய வகையில் கவனிப்புடன், முனைப்புடன் செயல்படவில்லை என்றால் இது வரும் காலங்களில் மிக அதிக அளவில் குறைந்து விட வாய்ப்பு இருப்பதை யாரும் மறுக்க இயலாது.
இப்படியான யோசனை வந்தவுடன் நான் சில உற்பத்தியாளர்களை தொடர்பு கொண்டபோது, கொள்முதல் செய்ய கிளையண்ட் வந்தால் ஓக்கே இல்லை என்றால் முடி போட்டு விடுவது என்பது போல சிலர் இருப்பதாக சொல்கிறார்கள். இதற்கு காரணமாக நான் நினைப்பது
1. போதுமான அளவுக்கு சொத்துக்கள், முதலீடுகள் இருப்பதால் போதும் என்ற மனநிலை 2. இளைய தலைமுறை வேறு துறைகளை நாடி சென்றுவிடுதல் (உதாரணம் தகவல் தொழில் நுட்பம், உணவாக துறை)
3. பிராண்டிங், மார்க்கெட்டிங் மாற்றிய அனுபவம் இல்லை, கற்கவும் விருப்பம் இல்லை (இதனை உடைத்து சொன்னது, இங்கே சுவிடனுக்கு வந்து இருந்த எழுத்தாளர் ஜெயமோகன் அவர்கள்)
25 கோடி வருட டர்ன் ஓவர் இருக்கும் ஒரு உற்பத்தியாளரிடம் உங்கள் தயாரிப்புகளை அனுப்புங்க என்று சொன்னால் சில டி-ஷார்ட்களை தரையில் போட்டு வாட்சப் காமிரா கொண்டு போட்டோ எடுத்து அனுப்பிறார்கள்.
பீட்டர் இங்க்லண்ட் மாதிரியான பல நூரு பிராண்ட்களை உருவாக்கும் சக்தி கொண்ட திருப்பூர் ஏன் தன்னை இப்படியாக சுருக்கி கொள்கிறது என்பது ஒரு வெளி ஆள் ஆக, டெக்ஸ்டைல் துறையை சாராத ஒரு நபராக பார்க்கும்போது எனக்கு உள்ளபடியே ஆச்சர்யமாக உள்ளது.
நான் Made In India என்ற ஒரு தளத்தை சுவீடன், நார்வே, பின்லாந்து, டென்மார்க் ஆகிய நாடுகளில் கட்டுகிறேன். இந்த தளத்தில் உங்கள் தயாரிப்புகளை சந்தைப்படுத்த உங்களை அழைக்கிறேன். இந்த தளத்தை B2B ஆகவும் B2C ஆகவும் இரு தரப்பினருக்காகவும் கட்டமைக்க இருக்கிறேன்.
இந்த தளம் மொபைல் அப்ளிக்கேஷன் ஆகவும் (ஆண்ட்ராய்டு மற்றும் iOS) இங்கே மார்க்கெட் செய்யப்படும். அப்படி செய்யப்படும் போது அது வேறு ஒரு பிராண்ட் பெயரில் (இங்கே உள்ள மக்களை - குறிப்பாக இளையோரை) கவரும் வகையில் இருக்கும்.
இப்படி ஒரு யோசனை வந்தவுடன் ஒரு நண்பர் சொன்னார், ரவி உனக்கு டெக்ஸ்டைல் துறையில் பணம் சம்பாதிக்க வேண்டும் என்றால் பங்களா தேஷ் இல் இருந்து துணிகளை வாங்கு.
டாக்காவிலோ அல்லது ஏன் உத்தர பிரதேசத்தில் கூடவோ ஒரு தொழில் சாலை செய், அதில் மேட் இன் இந்தியா என்று ஒட்டி இந்தியாவிலும் விற்பனை செய்யலாம், ஐரோப்பாவிலும் விற்பனை செய்யலாம் என்கிறார்.
எனக்கு அப்படியான நோக்கம் அல்ல, பணம் சம்பாதிக்க வேண்டும் என்றால் நான் வெற்றிகரமாக இயங்கும் உணவக துறையில் (The South Indian உணவக சங்கிலி) என்னுடைய நேரத்தை செலவு செய்தாலே போதும்.
ஒரு நண்பர் சில மாதம் முன்பு சொன்னார், இப்போது எல்லாம் இரண்டு ஷிப்ட் பார்த்துக்கொண்டு இருந்த என்னுடைய பெற்றோர் ஒரு ஷிப்ட் பார்க்கிறார்கள், வேலை எல்லாம் மிகவும் குறைந்துவிட்டது என்று.
நான் கூட படித்த காலத்தில் வேடிக்கையாக இப்படி நினைத்தது உண்டு - திருப்பூர் பஸ் ஸ்டாண்டு சென்று இறங்கினால் காதலும், வேலையும் கிடைக்கும். ஆனால் இன்று அந்த நிலை இல்லை என்பதை அறிந்து மிகவும் வருந்தினேன்.
நாங்கள் இங்கே சுவீடனில் பிடிக்கும் ஒரு கிளையண்ட், அல்லது விற்பனை செய்யும் 100 டிஷர்ட் மூலம் எங்கோ திருப்பூரில் பட்டன் தைக்கும் ஒரு பெண்ணுக்கு வேலை வாய்ப்பு அதிகரிக்கிறதா ? அது தான் வேண்டும். அது தான் நோக்கம்.
நீங்கள் ஒரு உற்பத்தியாளர் ஆக இருந்தால், இந்த பதிவு உங்கள் கண்ணில் பட்டால், இந்த குறிப்பிட்ட வாட்ஸ் அப் குழுவில் இணைக, அல்லது நேரடியாகவும் என்னை தொடர்பு கொள்ளலாம். (+46769699996) chat.whatsapp.com/JgbU4dJJbG65lv…
மிக மிக முக்கியமாக இந்த Form இல் உங்களை பற்றிய தகவல்களை இட்டால் உங்களை தொடர்புகொள்ள மிக உதவியாக இருக்கும் forms.gle/BKd53nDMBXNA1k…
கொஞ்சம் லேட்டாக புத்தாண்டு வாழ்த்துக்களை சொல்லிக்கொண்டு முடிக்கிறேன், நன்றி !!! #MadeInIndia
• • •
Missing some Tweet in this thread? You can try to
force a refresh
அன்பு நண்பர்கள் அனைவருக்கும் வணக்கம். 2022 ஆண்டு நிறைவு பெற்று அடுத்த ஆண்டு தொடக்கத்தில் இருக்கிறேன். இந்த ஆண்டு முழுதும் தனி செய்தியில், மின் அஞ்சலில் தொடர்பு கொண்டு உங்கள் / உங்கள் சார்ந்தோர் கல்வி வேலை வாய்ப்பு பற்றி உரையாடிய அனைவருக்கும் நன்றி.
என்னால் முடிந்த அளவு அனைவருக்கும் மீண்டும் அஞ்சல் / செய்தி அனுப்பி இருக்கிறேன், இன்னும் இருக்கும் சில நாட்களில் அனைத்து செய்திகளையும் பார்த்து பதில் சொல்லி விட உத்தேசம்.
செய்தியின் தீவிர தன்மை அடிப்படையில் என்னுடைய பதில் சொல்லும் வேகம் இருக்கும். உங்களுக்கு உடனே பதில் சொல்ல முடியவில்லை என்றால் என் மேல் கோபம் வேண்டாம். அனைவருக்கும் விரிவான பதில் கொடுப்பேன்.
மூன்று பொதுவான நுழைவு நிலை பாதைகளின் ஒப்பீடு
(ஆசிரியர் தகுதிகள் தேவையில்லை!)
நீங்கள் உங்கள் ஜப்பானில் இருக்கும் கடலில் நனைக்க விரும்பினாலும் அல்லது ஜப்பானுக்கு ஆங்கிலம் கற்பிக்க வர வேண்டும் என்ற எண்ணத்தில் முழுமையாக ஈடுபட்டாலும் - விருப்பங்களைச் சுற்றி உங்கள் தலையைச் சுற்றிக் கொண்டு, உங்களுக்கு எது சிறந்தது என்பதைத் தீர்மானிப்பது சோர்வாக இருக்கும்.
நான் தற்போது ஷிமானேயில் உள்ள ஜப்பானிய பரிமாற்றம் மற்றும் கற்பித்தல் திட்டத்தில் (சுருக்கமாக "JET திட்டம்") ஆங்கில ஆசிரியராக பணிபுரிகிறேன். இந்த செயல்முறையை நானே கடந்து வந்திருக்கிறேன் - இது மிகப்பெரியதாக இருக்கலாம்.
திருப்பூர் பனியன் கம்பெனி எல்லாம் அவுட் ஆப் பிசினஸ் ஆகிடுச்சு வேற ஐடியா சொல்லுங்க..
நேரா பங்களா தேஷ் போ. டாக்காவுல இறங்கு. அங்க Savar அப்படீன்னு ஏரியா இருக்கு அங்க போ.. ஒரு கம்பெனி போடு. சீனாவில் இருந்து RMG ரெடி மேட் கார்மென்ட் இறக்கு.
அதுல made in Bangladesh அப்படீன்னு ஒட்டு. திருப்பூர் கொண்டு வந்து கடைய போடு. இல்லைன்னா அங்க இருந்தே வட இந்தியாவுக்கு அனுப்பு. இப்ப எல்லாம் அவனுக வங்காள தேசத்தில் இருந்து வந்தா தான் எடுக்கிரானுகளாம்.
இந்தா புடி. நேரா இலங்கை போயிரு. அங்க இருந்து சீனாவில் ஹுனான் மாகாணத்தில் இருக்கும் Liuyang போ. ரோட்டு கடையில நூடுல்ஸ் தின்னாத. பட்டாசுகளை மொத்தமா அள்ளு.
சுவிடன்லயா இருக்கீங்க. @ElliAvrRam கூட உங்க ஊர் தானே ? தனுஷ் கூட எதோ படம் பண்ணி இருக்கிறதா கேள்வி. என்றார்.
ஆமாம் சார். இங்க பாலிவுட் டான்சு என்று சுத்திட்டு இருந்தது இப்ப இந்தியாவில் நிறைய படம் நடிக்குதாம். இந்த பிசியிலும் சினிமா உலகத்தை பாலோ பண்ணிட்டு இருக்கீங்க, நல்லது. என்ன சார் விஷயம் என்றேன்.
என்ன சார் விஷயம் ? என்றேன்.
சமீபத்தில் எதோ ட்வீட் போட்டு இருந்தியாமே ? தமிழ் நாட்டில் இருந்து விளை பொருட்களுக்கான இணைய மார்க்கெட் பிளேஸ் மாதிரி ஏதாவது கொண்டு வரலாம் என்று. அதை பற்றி கேட்க தான் அழைத்தேன் என்றார்.
நூறு நாளில் நீங்களும் மென்பொருள் வல்லுநர் ஆகலாம். நிரல் இல்லா மென்பொருள் கருவிகளின் தொகுப்பு, 100 நாளைக்கு. தினமும் நான் சொல்லும் விஷயங்களை பயின்றால், 100 நாட்களின் முடிவில், உங்களால் ஒரு நிரல் எழுதும் மென்பொருள் வல்லுநர் செய்யும் அத்தனை பணிகளையும் செய்ய இயலும். என்ன தயாரா ?
இந்த பயிற்சிகளில் நிரல் எழுதுவது இல்லை என்றாலும், முதலில் நாம் நிரல்களை பார்வையிட கற்பதும், கோப்புகளை சேமிப்பதும் செய்ய வேண்டும். அதற்காய் நீங்கள் உருவாக்க வேண்டியது ஒரு கிட் கணக்கு.
கிட் என்பது ஒரு நிரல் சேமிப்பு கிடங்காக பல நிறுவனங்களில் பயன்படுத்த படுகிறது. இதில் பல கோப்புகளும் உள்ளது. மைக்ரோசாப்ட் நிறுவனம் இதனை 2018 ஆம் ஆண்டு 7.5 பில்லியன் டாலர் செலவில் தனதாக்கி கொண்டது.