மறைந்த நம் தாய் தந்தையர்க்கு, முன்னோர்க்கு, தர்ப்பணம் சிராத்தம் - பண்ணுவதால் என்ன பயன்?
யாரோ ஒருவருக்கு வாழைக்காய், அரிசி கொடுத்தால் அது முன்னோர்களைச் சேருமா?
அற்புத விளக்கமும், பதிலும் கொடுத்த மகா பெரியவா.
ஒருவர் பட்டணத்தில் பிள்ளையை படிக்க வைத்திருந்தார். பரிட்சைக்குப் பணம் கட்டவேண்டியிருக்கிறது. அதுவும் மறுநாள் கட்ட வேண்டியிருக்கிறது. உடனே அப்பாவுக்கு தந்தி மணியாடரில் பணம் அனுப்பு என்று எழுதினான்.
அப்பாவுக்குத் தந்தியும் மணியார்டரும் தனித்தனியாகத் தெரியும். பிள்ளையோ தந்தி மணியார்டர் அனுப்பும்படி எழுதியிருக்கிறான். அப்பா தபாலாபீசுக்கு போனார். ரூபாயைக் கொடுத்துவிட்டுத் தந்தி மணியார்டர் பண்ண வேண்டும் என்றார்.
அவர், தபாலாபீஸ் குமாஸ்தா ரூபாயில் ஒட்டை பண்ணித் தந்திக் கம்பியில் கட்டி அனுப்புவார் என்று எண்ணினார். ஆனால் பணம் வாங்கிக் கொண்ட குமாஸ்தா ரசீது கொடுத்துவிட்டு, சரி, உம்முடைய பணம் வந்து சேர்ந்துவிடும். அனுப்பியாகிவிட்டது என்றார்.
குமாஸ்தா பணத்தை பெட்டியில் போட்டதையும், ஒட்டை பண்ணிக் கம்பியில் கோர்க்காமலிருப்பதையும் பார்த்த அப்பாக்காரர், என் பணம் இங்கேதானே இருக்கிறது. அதில் ஒட்டை ஒன்றும் போட்டு அனுப்பவில்லையே. அது எப்படிப் போய்ச் சேரும் என்று கேட்டார்.
அது போய்ச் சேர்ந்துவிடும் என்று மறுபடியும் குமாஸ்தா சொன்னார். கட்டுக் கடகடஎன்று தந்தியும் அடித்தார். ஏதோ லொட்டு லொட்டென்று சப்தம் பண்ணுகிறான். சேர்ந்துவிடும் என்று சொல்கிறான். ரூபாய் இங்கே இருக்கிறது.
லொட் லொட்டென்று கட்டையை இங்கே அடித்தால் அங்கே எப்படிப் போய் சேரும். என்று அப்பாவுக்குச் சந்தேகம் வந்து விட்டது.
ஆனால் பணம் போய் சேர்ந்து விட்டது. தர்ப்பணம் முதலிய பண்ணுவதும் அந்த மாதிரியே ஆகும். நாம் எதைக் கொடுத்தாலும் அதற்கென சட்டப்படி கொடுக்க வேண்டும்.
சாஸ்திரம் என்கிற சட்டம் விதித்தபடி நாம் கொடுப்பதைத் தெரிந்து கொள்கிற பிதுர் தேவதைகள் அது யாருக்கு போய்ச் சேர வேண்டுமோ அவர்களுக்குச் சேர்த்து விடுவார்கள்.
பித்ருக்கள் மாடாகப் பிறந்திருந்தால் வைக்கோலாக்கிப் போட்டுவிடுவார்கள். குதிரையாகப் பிறந்திருந்தால் புல்லாக்கிப் போட்டிருப்பார்கள். பிதுர் தேவதைகளுக்கு பரமேச்வரன் இப்படி உத்தரவு பண்ணி, இதற்கான சக்தியும் தந்திருக்கிறார்.
ஆகையால் சிராத்தத்தன்று கொடுப்பதைப் பெற்றுக் கொள்ள அப்பா நேரில் வர வேண்டியதில்லை.தந்தி மணியார்டர் அனுப்பியவனுடைய பணமோ வாங்கிக் கொள்ளுகிறவனிடம் நேராகப் போவதில்லையல்லவா?
மணியார்டர் பெறுகிறவன் வேறு தேசத்தில் இருந்தால் அங்கே நம் ரூபாய் நோட்டு செல்லவே செல்லாது. இங்கே ரூபாயைக் காட்டிலும் வெளி தேசத்தில் டாலராகவோ, பவுனாகவோ மாற்றித்தரவும் ஏற்பாடு இருக்கிறது.
ஆனால், நம் ஊரில் டாலரையோ பவுனையோ மாற்ற முடியாது. இங்கே செல்லுபடியாகிற ரூபாயைத்தான் ஏற்றுக்கொள்ளுவார்கள். அப்படியே சாஸ்திரப் பிரகாரம் விதிக்கப்பட்ட எள், தண்ணீர், வாழைக்காய் இதுகளை ஏற்ற உணவாக மாற்றித் தரப்படும்.
கும்பகோணத்திற்கு அருகே, சுமார் 8 கிலோ மீட்டர் தொலைவில் உள்ள தலம் தேப்பெருமா நல்லூர். இறைவன் திருநாமம் விசுவநாத சுவாமி. இறைவியின் திருநாமம் வேதாந்த நாயகி.
1
யாருக்கு மறுபிறவி இல்லையோ அவர்கள்தான் இக் கோவிலுக்கு வரமுடியும்; சுவாமியைத் தரிசிக்க முடியும் என்பது நம்பிக்கை.
2
இக் கோவிலின் தெற்குப் பகுதியில் உள்ள சந்நிதியில் தட்சிணா மூர்த்தி காட்சி தருகிறார். இவர் காலடியில் முனிவர்கள் இல்லை. அதற்கு பதில் நாகம் ஒன்று படம் எடுத்திருக்கும் காட்சியை தரிசிக்கலாம். இவரை அன்னதான தட்சிணா மூர்த்தி என்பர்.
இந்தியா எனும் ஞான பூமியில் தமிழகமும் அந்த புண்ணியத்தை பெற்றது, எண்ணற்ற அவதாரமும் பக்தர்களும் வாழ்ந்த பெரும் ஞான பூமி அது
அவர்கள் தங்கள் கர்மத்தால் தவமிருந்தார்கள், தங்களுக்கு தெரிந்த வகையில் ஆத்மரீதியாக இறைவனை வணங்கினார்கள், இறைவனும் ஓடி ஓடிவந்து அவர்களுக்கு தன்னை வெளிபடுத்தினான்
இது திருவிளையாடலில் நடந்தது, நாயன்மார்கள், அடியார்கள் வாழ்வில் நடந்தது இன்னும் எத்தனையோ யோகிகள் சுவாமிகள் தவ வாழ்வில் நடந்தது
அடிக்கடி நடக்கும் இந்த பிரபஞ்ச விளையாட்டு 17ம் நூற்றாண்டிலும் நடந்தது
அஸ்தினாபுரத்தில் மன்னர் திருதராஷ்டிரன் பிள்ளைகள் நூற்றுவரும், கவுரவர்கள் என்று அழைக்கப்பட்டனர். திருதராஷ்டிரனின் தம்பி பாண்டுவின் ஐந்து புதல்வர்களும், பாண்டவர்கள் என்று குறிப்பிடப்பட்டனர். இவர்கள் அனைவருக்கும் ஆசிரியர் துரோணர்.
எல்லோருக்கும் ஒரே மாதிரி கல்வி கற்பித்தும், தங்களுக்கு ஓரவஞ்சமாகக் குறைவாகக் கல்வி கற்பித்ததாகக் குற்றம்சாட்டினான் கவுரவர்களில் மூத்தவனான துரியோதன். திருதராஷ்டிரர் துரோணரைக் கூப்பிட்டு விசாரித்தார். முடிவில் இருவருக்குமிடையே அறிவுத் தேர்வு நடத்துவதென்று தீர்மானிக்கப்பட்டது.
இருபாலருக்கும் ஒரே அளவு பணத்தைக் கொடுத்து, அதைக் கொண்டு ஒரு அறை நிறைய பொருட்களை நிரப்பி வைக்க வேண்டுமென்று கூறினார்.
திருமுருகப் பெருமானுக்குரிய திருக்கோலங்கள் 16 என்று பொதுவாகச் சொல்லப்படுகிறது. திருமுருகனின் பெருமை கூறும் ‘ஸ்ரீ தத்துவநிதி’ என்ற நூலில் முருகப் பெருமான் 16 விதமான திருக்கோலங்கள் உடையவராகக் கூறப்பட்டுள்ளது.
‘குமார தந்திரம்’ என்ற நூலை அடிப்படையாகக் கொண்டுள்ள திருத்தணிகை புராணத்திலும் 16 திருக்கோலங்கள் பற்றிய விபரங்கள் உள்ளன. முருகனின் இந்த 16 வடிவங்களும் தம்மை வழிபட்டாருக்கு மிகவும் விசேஷமான பலன்களைத் தரக்கூடியவை.
ஞான சக்திதரர்
திருமுருகன் திருக்கோலங்களில் முதலாவது திருக்கோலம் ஞான சக்திதரர் என்பதாகும். ஒரு முகம், இரண்டு திருக்கரங்களும் உடைய திருவுருவம் இது. வலது கையில் சக்தி வேல் இருக்கும். பகைவரை அழிக்கும் தன்மை படைத்த இடது கை, தொடை மேல் அமைந்திருக்கும்.
விழுப்புரம் - திருச்சி செல்லும் சாலையில், விழுப்புரத்திலிருந்து சுமார் 11 கி.மீ தொலைவில் உள்ள பேரங்கியூர் என்னும் கிராமத்தில் அமைந்துள்ளது திருமூலநாதர் கோவில்.
இக்கோவிலின் அர்த்த மண்டப தென்புறக் கோட்டத்தில், தன் திருக்கரங்களில் மான், மழு ஏந்தியபடி தலை ஒருபுறமாக திரும்பிப் பார்க்கும் கோலத்தில் விநாயகர் சிற்பம் காணப்படுகிறது. இவரின் தலைக்கு மேல் குடையும், இருபுறமும் சாமரங்களும் காட்டப்பட்டுள்ளன.
பொதுவாக மான், மழு ஏந்தியபடி சிவபெருமான்தான் காட்சி அளிப்பார். ஆனால் இங்கு மான், மழு ஏந்தியபடி விநாயகர் காட்சியளிப்பது, நாம் வேறு எந்த தலத்திலும் தரிசிக்க முடியாத காட்சியாகும்.