உங்களில் நிறைய பேர் யோசனை செய்ததுண்டா?
ஏன் "கோவிலில் மணி" அடிக்கிறார்கள் என்று?
இதோ அதற்கான பதில்...
கோவிலுக்குச் செல்லும் போதும், இறைவனை வழிபடும் போதும் மணி அடித்துக் இறைவனை வழிபடுவதன் விளக்கம்.
பல ஆன்மிக செயல்களுக்கு காரண காரியங்கள் தெரியாமலேயே, நாமும் அதைப் பின்பற்றுகிறோம்.
நமது முன்னோர்கள் வழிவழியாகச் செய்து வந்தார்கள், என்று நடைமுறையில் செய்து வருகிறோம்.
அப்படி நாம் பின்பற்றும் விஷயங்களில் ஒன்று கோவிலில் மணி அடித்து வழிபடுவது. இன்னும் சிலர், நாம் மணி அடித்து வழிபட்டால் தான் நமது வேண்டுதலுக்கு இறைவன் செவிசாய்ப்பார் என்று அவர்களுக்குத் தெரிந்த விளக்கத்தை சொல்வார்கள்.
பொதுவாக மணி அடிக்கும் போது எழுகின்ற ஓசைக்கும், நமது மூளைக்கும் இடையே தொடர்புகள் உள்ளது என்று சாஸ்திரத்தில் நமது முன்னோர்கள் சொல்லியிருக்கிறார்கள்.
இப்படி மணியிலிருந்து எழும் ஓசைக்குப் பின்னால் ஒரு அறிவியல் நுண்ணறிவும் இருக்கிறது. ஆகம விதிகளின் படி, வெண்கல மணியில் இருந்து எழுப்பப்படுகின்ற ஓசைக்கு எதிர்மறை சக்திகளை விரட்டி, மனதிற்கும், உடலுக்கும் நேர்மறை சக்தியை அதிகரிக்க செய்கின்ற வல்லமை உண்டு.
உண்மையில் கோயிலில், செல்ஃபி எடுத்துக் கொண்டும், பிறர் கண்ணீர் கதைகளையும் பிரகாரங்களில் அமர்ந்து பேசுபவர்களின் காதுகளில் மணியின் சப்தம் கேட்டு, அவர்களின் கவனத்தை கடவுளை நோக்கித் திரும்புகிறது கோயில் மணி ஓசை.
மணியில் இருந்து வெளிவரும் ஒலியானது, மூளையின் வலது மற்றும் இடது பக்கங்களை ஒரு சமநிலைக்கு கொண்டு வர உதவுகின்றது.
கோவில் மணியில் இருந்து வெளிப்படும் சத்தம் உடலில் நேர்மறை ஆற்றல் மற்றும் மூளையில் செயல்திறனை அதிகரிக்கச் செய்து, விழிப்புணர்வை மேம்படுத்தி, மனதிற்கு நிறைவான அமைதி மற்றும் நிம்மதியை அளிக்கிறது.
பூஜைகள் நடைப்பெறும் நேரங்களில், மணியடித்து, சப்தம் எழுப்பி, "இப்பொழுதாவது இறைவனை நோக்கி மனதை செலுத்தி நற்கதியைப் பெறுங்கள்" என்று பக்தர்களை மனதை ஒருமுகப்படுத்த கோயில் மணி உதவுகிறது.
கோவிலில் உள்ள மணி பொதுவாக (zync, nickel, lead, chromium, copper, manganese) உள்ளிட்ட ஆறு உலோகங்களால் ஆனது. கோவில் மணியை அடிக்கும்போது ஏற்படும் ஓசை நமது மனதை ஒரு நிலைப்படுத்தி நமது உடலில் உள்ள ஏழு சக்கரங்களை
மணி அடித்த ஏழு வினாடிகளும் அந்த அதிர்வலைகள் நமது காதுகளில் ஒழிக்கும். அப்போது நமது மனது ஒரு நிலைப்படும். நமது வலது மற்றும் இடப்புற மூளை தெளிவடையும். இந்த நிலையை தான் டிரான் நிலை என்கிறோம்.
இனிமேல் நீங்கள் கோவிலுக்கு சென்றால் ஒருமுறையாவது மணியை அடியுங்கள். இதை அனைவரும் தெரிந்து கொள்ள முடிந்தவரை பகிருங்கள்....
🙏
• • •
Missing some Tweet in this thread? You can try to
force a refresh
கும்பகோணத்திற்கு அருகே, சுமார் 8 கிலோ மீட்டர் தொலைவில் உள்ள தலம் தேப்பெருமா நல்லூர். இறைவன் திருநாமம் விசுவநாத சுவாமி. இறைவியின் திருநாமம் வேதாந்த நாயகி.
1
யாருக்கு மறுபிறவி இல்லையோ அவர்கள்தான் இக் கோவிலுக்கு வரமுடியும்; சுவாமியைத் தரிசிக்க முடியும் என்பது நம்பிக்கை.
2
இக் கோவிலின் தெற்குப் பகுதியில் உள்ள சந்நிதியில் தட்சிணா மூர்த்தி காட்சி தருகிறார். இவர் காலடியில் முனிவர்கள் இல்லை. அதற்கு பதில் நாகம் ஒன்று படம் எடுத்திருக்கும் காட்சியை தரிசிக்கலாம். இவரை அன்னதான தட்சிணா மூர்த்தி என்பர்.
இந்தியா எனும் ஞான பூமியில் தமிழகமும் அந்த புண்ணியத்தை பெற்றது, எண்ணற்ற அவதாரமும் பக்தர்களும் வாழ்ந்த பெரும் ஞான பூமி அது
அவர்கள் தங்கள் கர்மத்தால் தவமிருந்தார்கள், தங்களுக்கு தெரிந்த வகையில் ஆத்மரீதியாக இறைவனை வணங்கினார்கள், இறைவனும் ஓடி ஓடிவந்து அவர்களுக்கு தன்னை வெளிபடுத்தினான்
இது திருவிளையாடலில் நடந்தது, நாயன்மார்கள், அடியார்கள் வாழ்வில் நடந்தது இன்னும் எத்தனையோ யோகிகள் சுவாமிகள் தவ வாழ்வில் நடந்தது
அடிக்கடி நடக்கும் இந்த பிரபஞ்ச விளையாட்டு 17ம் நூற்றாண்டிலும் நடந்தது
அஸ்தினாபுரத்தில் மன்னர் திருதராஷ்டிரன் பிள்ளைகள் நூற்றுவரும், கவுரவர்கள் என்று அழைக்கப்பட்டனர். திருதராஷ்டிரனின் தம்பி பாண்டுவின் ஐந்து புதல்வர்களும், பாண்டவர்கள் என்று குறிப்பிடப்பட்டனர். இவர்கள் அனைவருக்கும் ஆசிரியர் துரோணர்.
எல்லோருக்கும் ஒரே மாதிரி கல்வி கற்பித்தும், தங்களுக்கு ஓரவஞ்சமாகக் குறைவாகக் கல்வி கற்பித்ததாகக் குற்றம்சாட்டினான் கவுரவர்களில் மூத்தவனான துரியோதன். திருதராஷ்டிரர் துரோணரைக் கூப்பிட்டு விசாரித்தார். முடிவில் இருவருக்குமிடையே அறிவுத் தேர்வு நடத்துவதென்று தீர்மானிக்கப்பட்டது.
இருபாலருக்கும் ஒரே அளவு பணத்தைக் கொடுத்து, அதைக் கொண்டு ஒரு அறை நிறைய பொருட்களை நிரப்பி வைக்க வேண்டுமென்று கூறினார்.
திருமுருகப் பெருமானுக்குரிய திருக்கோலங்கள் 16 என்று பொதுவாகச் சொல்லப்படுகிறது. திருமுருகனின் பெருமை கூறும் ‘ஸ்ரீ தத்துவநிதி’ என்ற நூலில் முருகப் பெருமான் 16 விதமான திருக்கோலங்கள் உடையவராகக் கூறப்பட்டுள்ளது.
‘குமார தந்திரம்’ என்ற நூலை அடிப்படையாகக் கொண்டுள்ள திருத்தணிகை புராணத்திலும் 16 திருக்கோலங்கள் பற்றிய விபரங்கள் உள்ளன. முருகனின் இந்த 16 வடிவங்களும் தம்மை வழிபட்டாருக்கு மிகவும் விசேஷமான பலன்களைத் தரக்கூடியவை.
ஞான சக்திதரர்
திருமுருகன் திருக்கோலங்களில் முதலாவது திருக்கோலம் ஞான சக்திதரர் என்பதாகும். ஒரு முகம், இரண்டு திருக்கரங்களும் உடைய திருவுருவம் இது. வலது கையில் சக்தி வேல் இருக்கும். பகைவரை அழிக்கும் தன்மை படைத்த இடது கை, தொடை மேல் அமைந்திருக்கும்.
விழுப்புரம் - திருச்சி செல்லும் சாலையில், விழுப்புரத்திலிருந்து சுமார் 11 கி.மீ தொலைவில் உள்ள பேரங்கியூர் என்னும் கிராமத்தில் அமைந்துள்ளது திருமூலநாதர் கோவில்.
இக்கோவிலின் அர்த்த மண்டப தென்புறக் கோட்டத்தில், தன் திருக்கரங்களில் மான், மழு ஏந்தியபடி தலை ஒருபுறமாக திரும்பிப் பார்க்கும் கோலத்தில் விநாயகர் சிற்பம் காணப்படுகிறது. இவரின் தலைக்கு மேல் குடையும், இருபுறமும் சாமரங்களும் காட்டப்பட்டுள்ளன.
பொதுவாக மான், மழு ஏந்தியபடி சிவபெருமான்தான் காட்சி அளிப்பார். ஆனால் இங்கு மான், மழு ஏந்தியபடி விநாயகர் காட்சியளிப்பது, நாம் வேறு எந்த தலத்திலும் தரிசிக்க முடியாத காட்சியாகும்.