இந்தியா எனும் ஞான பூமியில் தமிழகமும் அந்த புண்ணியத்தை பெற்றது, எண்ணற்ற அவதாரமும் பக்தர்களும் வாழ்ந்த பெரும் ஞான பூமி அது
அவர்கள் தங்கள் கர்மத்தால் தவமிருந்தார்கள், தங்களுக்கு தெரிந்த வகையில் ஆத்மரீதியாக இறைவனை வணங்கினார்கள், இறைவனும் ஓடி ஓடிவந்து அவர்களுக்கு தன்னை வெளிபடுத்தினான்
இது திருவிளையாடலில் நடந்தது, நாயன்மார்கள், அடியார்கள் வாழ்வில் நடந்தது இன்னும் எத்தனையோ யோகிகள் சுவாமிகள் தவ வாழ்வில் நடந்தது
அடிக்கடி நடக்கும் இந்த பிரபஞ்ச விளையாட்டு 17ம் நூற்றாண்டிலும் நடந்தது
அந்த 17ம் நூற்றாண்டில் தஞ்சாவூர் மாவீரன் சிவாஜியின் தம்பி வம்சத்திடம் இந்து நாடாய் இருந்தது, இந்துக்களுக்கு தேவையான எல்லா அடைக்கலமும் கொடுக்கும் பூமியாக இருந்தது
இந்தியாவில் மொகலாயமும் மராட்டிய இந்து அரசும் மோதிகொண்டே இருந்த காலங்களில் தென்னக இந்துக்களுக்கு அடைக்கலம் கொடுத்து மடம் அமைத்து, பக்தி வளர்த்த பெரும் தொண்டை தஞ்சை மராட்டிய அரசு செய்தது
சிவாஜி காலத்தில் அவரின் குரு ராமதாசரே தஞ்சாவூர் வந்து மடம் ஏற்படுத்தும் அளவு அது இந்து மதத்துக்கு முக்கியத்துவம் கொடுத்தது
இதனால்தான் 17ம் நூற்றாண்டில் பிரம்மானந்தர், ராகவேந்திரர் என பல அழியா அவதாரமெலலம் தஞ்சாவூர் பக்கம் இருந்து உருவானார்கள்
அப்படி வந்த தெலுங்கு குடும்பம் ஒன்றில் உருவான ஒருவர்தான் அந்த தியாகராஜர்
ராமதாசர் எனும் மாபெரும் ராமன் அடியார் வந்து ஸ்தாபித்த மடம் என்பதால் என்னவோ ராம பக்தி தஞ்சாவூர் பக்கம் செழித்து வளர்ந்தது, திருவாரூரில் ஒரு குடும்பத்தில் மூன்றாவதாய் வந்து பிறந்தார் தியாகராஜர்
திருவாரூர் கோவிலின் பெரும் தெய்வம் தியாகராய சுவாமி பெயரில் இடபட்ட பெயர் அது
பின் அக்குடும்பம் திருவையாறு பக்கம் வந்தது, ராமன் மேல் மாபெரும் பக்தி இயல்பாகவே தியாகராஜருக்கு வந்தது, எப்பொழுதும் ராமன் சீதை சிலைகளுடனே இருப்பார்
ஒருமுறை அவர் அக்கா அந்த சிலைகளை ஆற்றில் எறிந்துவிட அவை ஆச்சரியமாக அவர் கைகளுக்கு திரும்பிற்று, அதிலிருந்து தன் சிந்தையில் ராமனை நிறுத்தினார்
தியாகராஜரின் மிகபெரிய பலம் அவரின் இசை, கர்நாடக இசையில் அவரின் ஐந்தாம் அகவையில் இருந்தே பெரும் ஞானம் வெளிபட்டது
அந்த இசைஞானத்தை பகவானை தவிர யாருக்கும் பாடமாட்டேன் என்பதில் உறுதியாய் இருந்தார், தஞ்சை மன்னனுக்கே பாடுவதில்லை எனும் வைராக்கியத்தில் இருந்தார் அந்த அளவு அவரின் பக்தி இருந்தது
தஞ்சை மன்னனே நேரில் வந்தபொழுதும் அவர் முன் நிதிசால சுகமா என்ற கல்யாணி இராகத்தை பாடி பகவானை பணிந்தார், மன்னனும் அவ்விடத்தில் பகவானை பணிந்து தியாகராஜரையும் பணிந்துவிட்டு திரும்பினான்
அதன்பின் அவரின் புகழ் வளர்ந்தது, பல ஆலயங்களுக்கு பாட சென்றார்
ஒரு இடத்திலும் அவர் காசுக்கு பாடவில்லை, பொருளுக்கும் பாடவில்லை, சொத்து சுகத்துக்கும் பாடவில்லை, பாட சென்ற இடங்களிலும் யாசகம் பெற்றுத்தான் வாழ்ந்தார்
ராமனை மனமார நேசித்த அவருக்கு ராமன் தன்னை வெளிகாட்ட இறங்கி வந்தான், காஞ்சியில் அவர் பாடும்பொழுது ஒரு குருநாதர் அவருக்கு கிடைத்தார் அவருக்கு இராமகிருஷ்ண யதீந்திரர் எனும் குரு கிடைத்தார்
இந்த குருதான் ராமனை தரிசிக்கும் ரகசியத்தை சொன்னார், வாழ்வில் ராம நாமத்தை பல கோடி முறை செபித்தால் ராமனை தரிசிக்கலாம் என்றார்
இவ்வழக்கம் எக்காலமும் இந்துக்களிடம் இருந்தது ஶ்ரீராமஜெயம் என இந்துக்கள் எழுதும் அடிப்படை இதுதான் கோடிமுறை எழுதி ராமன் தரிசனத்தை பெறும் வழி அது
தியாகராயரும் ஒவ்வொரு நாளும் பல ஆயிரம் முறை ராமன் பெயரை சொன்னார், இந்த நீண்ட பக்தி ஒவ்வொரு நாளும் தொடர்ந்தது
கடைசியில் இந்த எண்ணிக்கை மொத்தம் பல கோடிமுறையினை தொட்டபொழுது ராமபிரான் அவருக்கு தரிசனமானார்
அந்த உற்சாக மகிழ்ச்சியில் அவர் இசைத்துதான் மங்கா புகழை அவருக்கு கொடுத்த ஏலநீதயராது (அடாணா இராகம்) கனுகொண்டினி (பிலகரி இராகம்) ஆகிய கீர்த்திகளைகள் அதுதான் அவரை சங்கீத சக்கரவர்த்தி ஆக்கிற்று
ஆம் அவரின் இந்த சங்கீத சக்கரவர்த்தி பட்டம் அழியா தவத்தில் வந்தது, ராமனை நோக்கி இருந்த பெரும் யோகதவத்தில் வந்தது
ராமருக்கும் அவருக்கும் இருந்த பந்தம் அலாதியானது, அவரும் ராமரும் உரையாடுவார்கள் ராமர் வந்து இவர் பாடலை கேட்பார் என்றளவு சினேக பக்தி கூடியது
ஒருமுறை காட்டில் கள்வர்களிடம் இவர் அகபட்டபொழுது ராமபிரானும் லட்சுமணனும் வந்து காத்த சம்பவமெல்லாம் நடந்தது
வாழ்வில் 24 ஆயிரம் கீர்த்தனைகளை இயற்றினார் தியாகராஜர்
அது போக பிரகலாத பக்தி விஜயம், நவுகா சரித்திரம்முதலிய இசை நாடகங்களை இயற்றியுள்ளார்.
கனராக பஞ்சரத்தினம், நாரத பஞ்சரத்தினம், திருவொற்றியூர் பஞ்சரத்தினம், கோவூர் பஞ்சரத்தினம், சிறீரங்க பஞ்சரத்தினம், லால்குடி பஞ்சரத்தினம் ஆகிய கீர்த்தனைக்ளையும் அனைத்தும் பக்தி பாடல் மட்டுமே
அவரின் மிகபெரிய சாதனை 2400 ஸ்லோகங்களில் ராமாயணத்தை பாடியது, இதில் ஆச்சரியம் என்னவென்றால் வால்மீகி ராமாயணமும் சமஸ்கிருதத்தில் 2400 ஸ்லோகங்களை கொண்டது என்பது
ஒருவகையில் வால்மிகியின் அவதாரமாகவே தியாகராசர் அறியபடுகின்றார், இல்லையென்றால் அப்படி ஒரு பக்தியும் ராமனுடன் ஒரு ஐக்கியமும் வாய்ப்பே இல்லை
கிரிபை நெல எனும் சகானா இராக இசையினை 1846ம் ஆண்டு டிசம்பர் 26ல் பாடினார், அவரின் கடைசி பாடல் அதுதான் , இன்னும் 10 நாட்களில் ராமபிரானுடன் கலப்பேன் என்றார்
அப்படி 1847 ஜனவரியில் அவர் முக்திபேறு அடைந்தார்
தியாகராஜர் வாழ்வின் மிகபெரிய சாதனை அக்காலங்களில் தஞ்சை பக்கம் நிகழ்ந்த மதமாற்றங்கள் அதாவது வெள்ளையன் கால மதமாற்றங்கள் அவரால் தடுக்கபட்டன,
அவரின் பாடல்களும் கீர்த்தனைகளும் மனம் உருக்கும் நிலையில் அவரின் பாடல்களும் அதன் ஆழமும் கண்ணீரை வரவைக்கும் நிலையில் இன்னொரு மதத்தை அவரை அறிந்த இந்துக்கள் ஏற்கவில்லை
இன்றும் அவர் இசையால் இந்துமதம் காக்கபடுகின்றது
தியாகராஜர் என்பவர் இசை வளர்த்தார், சங்கீத மும்மூர்த்தியில் ஒருவர் என இங்கு வரலாறு திரிக்கபட்டுள்ளது,
அவர் வாழ்வும் இசையும் தவமும் இசை வளர்க்க அல்ல
மாறாக இசைவடிவில் ராமபக்தியினை வளர்க்க, ராமபிரானின் புகழை உலகெல்லாம் பரப்பத்தான் அவர் அந்த சங்கீதங்களை இயற்றினார்
உண்மையில் தமிழ் இசை உலகம் அவருக்கு துரோகம் செய்தது, அவர் ராமனுக்காக பாடிய இசை எல்லாம் திருடபட்டு பலரின் சினிமாவுக்கும் பொருளுக்கும் இதர மதங்களுக்கும் பயன்படுத்தபட்டது
ஒரு இந்து அரசன் இருந்து தியாகராசரின் இசை குறிப்பெல்லாம் இந்துமதத்துக்கே சொந்தம் என அறிவித்திருந்தால் இந்நிலை வந்திருக்காது
1847ல் அதாவது அவர் இறந்தபின் தஞ்சை மன்னர்கள் அவருக்கு நினைவாலயம் எழுப்ப முயன்றார்கள் ஆனால் வெள்ளையன் ஆட்சி வலுத்தது, இந்தியா முழுக்க பிரிட்டிஷார் கைக்கு சென்றது
திருவையாற்றில் இருந்த தியாகராஜரின் சமாதியினை கண்டுகொள்ள யாருமில்லை, அவரின் புகழும் பக்தியும் திட்டமிட்டு மறைக்கபட்டது
ஆனால் அவரின் கீர்த்தனையால் மனமுருகி அழுத பாடகி ஒருத்தி பெங்களூரில் இருந்தாள், அவள் பெயர் ரத்தினம்மாள்
தியாகராஜரின் கீர்த்தனைகளை அழகுற பாடியதில் அவளுக்கு செல்வம் குவிந்தது, ஆனால் அவளுக்கு மனசாட்சி இருந்தது
அந்த அம்மையார்தான் திருவையாறு வந்து இந்த செல்வமெல்லாம் தியாகராஜருக்கே என சொல்லி நினைவிடம் கட்டி திருவையாறு கச்சேரி ஏற்பட வழிசெய்தாள்
அவள் பிராமணத்தி அல்ல, அவள் சமூகத்தில் பெரும் இடத்தில் இருந்தவளும் அல்ல
ஆனால் தியாகராஜரின் அருமையும் பெருமையும் அவள் ஒருத்திக்குத்தான் தெரிந்தது, தியாகராஜரின் பாடலுக்கான செல்வம் அவருக்கே சொந்தம் என்பதை அவள்தான் உணர்ந்தாள்
அவள் தன் சொத்துக்களை எல்லாம் கொடுத்து உருவானதுதான் இன்றைய திருவையாறு சமாதியின் அடையாளம்
அந்த உன்னதமான ராமபக்தனுக்கு இன்று ஆராதனை
அவர் வெறும் சங்கீத மும்மூர்த்தியில் ஒருவர் அல்ல, அவர் சங்கீதம் என்பது அவர் பிழைக்கவோ வாழவோ தொட்டதும் அல்ல
அவர் ராமனுக்காக இசைத்தார், ராமனை பாடினார், ராமனை அடைந்தார், பிறவி கடலை கடக்க ராமன் எனும் படலில் சங்கீத துடுப்பை வீசினார்
அந்த ஒலியினைத்தான் இன்று நாமெல்லாம் கொண்டாடி
கொண்டிருக்கின்றோம்
ஆத்மாவினை உருக்கும் ராகங்களை அவர் கொடுத்ததெல்லாம் சங்கீதத்தில் இறைவனை காண, அது ஒரு யோகநிலை, உன்னதமான பக்தி நிலை, ஆத்மாவில் இருந்து இறைவனை தேடும் இசை வழி யோகம் இக்காலம் ராமர் கோவில்
துலங்கும் நேரம்
அந்த ஆலயத்தின் மூலையில் ராமதாசரை போல நிறுத்தபட வேண்டியவர் இந்த தியாகராஜர், அது செய்யபட வேண்டும்
ராமர் புகழ்பாடும் பாஜக திருவையாற்றில் இந்த அற்புதமான ராமபக்தனுக்கு பெரும் அடையாளம் ஒன்றை ஏற்படுத்துதல் வேண்டும், அது நடக்கும் என நம்புகின்றோம்
இசையால் ராமனை இழுத்த அந்த இசை குகனுக்கு, இசையால் விஸ்வரூபமெடுத்த அந்த இசை ஆஞ்சநேயனுக்கு, இசையால் ராமனை தொழுது நின்ற பக்தனுக்கு ராம பக்தர்களும் இந்துக்களும் ஆத்மார்த்தமான அஞ்சலியினை தேசம் முழுக்க செலுத்தி கொண்டிருக்கும் நேரமிது
🙏
• • •
Missing some Tweet in this thread? You can try to
force a refresh
வரகூர் வெங்கடேசப் பெருமாள் திருக்கோயில்
வரகூர், தஞ்சாவூர்
மூலவர் : லட்சுமி நாராயணப் பெருமாள்
உற்சவர் : வெங்கடேசப் பெருமாள்
தாயார் : ஸ்ரீதேவி, பூதேவி
பூஜை : வைகானசம்
பழமை : 500 வருடங்களுக்குள்
உற்சவம்: கிருஷ்ண ஜெயந்தி
1
தல_சிறப்பு:
லட்சுமி நாராயணர், வராகமூர்த்தி, கண்ணன் என மூன்று கோலங்களில் பெருமாள் இத்தலத்தில் அருள்புரிகிறார்.
2
பொது_தகவல்:
இவ்வூரில் வசித்த ஆனைபாகவதர், சுவாமி மீது பல கீர்த்தனங்கள் இயற்றியுள்ளார். நாராயணகவி என்ற பக்தர் இங்கு நடக்கும் உறியடித் திருவிழாவை "கிருஷ்ண சிக்யோத்ஸவம்' என்ற பிரபந்தம் பாடியுள்ளார்.
இராமகிருஷ்ண மடத்தைச் சேர்ந்த ஒரு துறவியிடம் நியூயார்க் பத்திரிக்கையாளர் ஒருவா் பேட்டி எடுப்பதாக இருந்தது.
திட்டமிட்டபடி பத்திரிக்கை நிரூபர்
பேட்டியை ஆரம்பித்தார்.
நிருபர் :
ஐயா உங்களுடைய முந்தய சொற்பொழிவில் "தொடர்பு"
மற்றும் "இணைப்பு" என்பது பற்றி பேசினீர்கள், அது உண்மையிலேயே மிகவும் குழப்பமாக இருந்தது. சற்று விளக்கி சொல்ல முடியுமா? என்றார்.
துறவி முன்முறுவலோடு நிருபர்
கேட்ட கேள்வியிலிருந்து விஷயத்தை திசைதிருப்புகின்ற விதமாக, அந்த நிருபரிடம் கேள்வி கேட்டார்,
கும்பகோணத்திற்கு அருகே, சுமார் 8 கிலோ மீட்டர் தொலைவில் உள்ள தலம் தேப்பெருமா நல்லூர். இறைவன் திருநாமம் விசுவநாத சுவாமி. இறைவியின் திருநாமம் வேதாந்த நாயகி.
1
யாருக்கு மறுபிறவி இல்லையோ அவர்கள்தான் இக் கோவிலுக்கு வரமுடியும்; சுவாமியைத் தரிசிக்க முடியும் என்பது நம்பிக்கை.
2
இக் கோவிலின் தெற்குப் பகுதியில் உள்ள சந்நிதியில் தட்சிணா மூர்த்தி காட்சி தருகிறார். இவர் காலடியில் முனிவர்கள் இல்லை. அதற்கு பதில் நாகம் ஒன்று படம் எடுத்திருக்கும் காட்சியை தரிசிக்கலாம். இவரை அன்னதான தட்சிணா மூர்த்தி என்பர்.
அஸ்தினாபுரத்தில் மன்னர் திருதராஷ்டிரன் பிள்ளைகள் நூற்றுவரும், கவுரவர்கள் என்று அழைக்கப்பட்டனர். திருதராஷ்டிரனின் தம்பி பாண்டுவின் ஐந்து புதல்வர்களும், பாண்டவர்கள் என்று குறிப்பிடப்பட்டனர். இவர்கள் அனைவருக்கும் ஆசிரியர் துரோணர்.
எல்லோருக்கும் ஒரே மாதிரி கல்வி கற்பித்தும், தங்களுக்கு ஓரவஞ்சமாகக் குறைவாகக் கல்வி கற்பித்ததாகக் குற்றம்சாட்டினான் கவுரவர்களில் மூத்தவனான துரியோதன். திருதராஷ்டிரர் துரோணரைக் கூப்பிட்டு விசாரித்தார். முடிவில் இருவருக்குமிடையே அறிவுத் தேர்வு நடத்துவதென்று தீர்மானிக்கப்பட்டது.
இருபாலருக்கும் ஒரே அளவு பணத்தைக் கொடுத்து, அதைக் கொண்டு ஒரு அறை நிறைய பொருட்களை நிரப்பி வைக்க வேண்டுமென்று கூறினார்.