வள்ளியுடைய கையில் பூலோகத்தில் காணப்படும் தாமரை மலரும். தெய்வானை கையில் தேவலோகத்தில் காணப்படும் நீலோத்பல மலரும் இருக்கும்.
முருகனின் வலது கண்ணை சூரியனாகவும், இடது கண்ணை சந்திரனாகவும் சொல்வார்கள். அவனுக்கு தந்தையைப் போன்ற அக்கினிக் கண்ணும் உண்டு.
வலது புறம் இருக்கும் வள்ளியின் கையில் இருக்கும் தாமரை மலர், குமரனின் வலது கண் பார்வை (சூரியன்) பட்டு எப்போதும் மலர்ந்தே இருக்குமாம். அதே போல, இடது புறம் இருக்கும் தெய்வானையின் கையில் இருக்கும் நீலோத்பல மலரும்,
முருகனின் இடக் கண் பார்வையினால் (சந்திரன்) எப்போதும் மலர்ந்தே இருக்குமாம்.
அதனால் முருகப் பெருமானை இடைவிடாது அன்புடன் வணங்குபவர்களுக்கு எந்நேரமும் அகலாத துணையாய் அவன் இருப்பான்.
கார் ஓட்டிக் கொண்டிருந்தேன்.
பயணிகள் யாருமில்லை.
செல்போன் சிணுங்கியது.
யார் என்று திரை பார்த்தேன்.
மனைவியிடமிருந்து அழைப்பு.
காரை ஓரம்கட்டி விட்டு
"என்னப்பா " என்றேன்.
'உங்க மகள் ஏதோ
உங்ககிட்ட பேசணுமாம் " !
"மகளா " என ஆச்சரியப்பட்டு
"கொடு கொடு " என்றேன்.
போனை வாங்கிய மகள்
படபடவெனப் பொரிந்தாள்.
"அப்பா 28 - ம் தேதியோடு
பப்ளிக் எக்ஸாம் முடிகிறது.
அதற்கு முதல் நாள்
எனக்கு ஜனன நாள்.
புதிய உடை வேண்டும் " என்றாள்.
"பிறந்தநாள் வருவதற்கு
இன்னும் பத்துப் பதினைந்து
நாட்கள் இருக்கிறது ,
மேலும்
இப்போது பணமும் இல்லை.
பத்து நாளில் வருகிறேன் " என்றேன்.
"அதெல்லாம் எனக்குத் தெரியாது
நாளை ஒரு நாள்தான்
எனக்கு பள்ளி விடுமுறை.
நாளை நீங்கள் வந்தே ஆகவேண்டும்
இல்லை என்றால் இனிமேல்
பேசவே மாட்டேன் " என்றபடி
அலைபேசியை அணைக்கிறாள்.