லலிதா சகஸ்ரநாமத்தைப் பாராயணம் செய்யும்போது ஆன்மிகம் பற்றிய விழிப்புணர்வு மந்திரங்கள் தந்திரங்கள், பிரபஞ்சத்தின் படைப்பு ரகசியங்கள் என்று முழுமையான ஞானம் உருவாகும்.
சகஸ்ரநாமம் என்பது அன்னையின் ஆயிரம் பெயர்கள்.
சரஸ்வதியின் குருவான ஹயக்ரீவர் அகத்திய மகரிஷிக்கு லலிதா சகஸ்ரநாமத்தின் பெருமைகளை பின்வருமாறு கூறுகிறார்.
தேவியின் ஆயிரம் நாமங்களை உமக்குக் கூறினேன்.
இவை ரகசியங்களுள் ரகசியமானது.
இதைப் போன்ற துதி ஒன்றுமில்லை. இது நோய்களைப்போக்கும். செல்வத்தை அளிக்கும். அபமிருத்யுவைப் போக்கும். (அப மிருத்யு என்றால் அகால மரணம் ) நீண்ட ஆயுள் தரும்.
பிள்ளைப் பேறு இல்லாதவர்களுக்கு பிள்ளைச் செல்வம் தரும்.
கங்கை முதலியப் புண்ணிய நதிகளில் முறைப்படி பலதடவை நீராடுதல்,
காசியில் கோடி லிங்கப் பிரதிஷ்ட்டை செய்தல்,
க்ரஹன காலத்தில் கங்கைக் கரையில் அசுவமேத யாகம் செய்தல்,
பஞ்ச காலங்களில் நீர் வசதியற்ற இடங்களில் கிணறு வெட்டுதல்,
தொடர்ந்து அன்னதானம் செய்தல்,
இவை எல்லாவற்றையும்விட மிகுந்தப் புண்ணியமானது லலிதா சகஸ்ரனாமப் பாராயணம்.
இது பாவத்தை நீக்கும். பாவத்தை நீக்க இதனைவிட்டு வேறு உபாயம் தேடுபவன் பயனில்லாதவன்.
பௌர்ணமியன்று சந்திர பிம்பத்தில் தேவியை தியானம் செய்து வழிபட்டு இதனைப் படிக்க நோய்கள் நீங்கும்.
பூத பிசாச உபாதைகள் விலகும்.
இதனைப் பாராயணம் செய்யும் பக்தனின் நாவில் சரஸ்வதி தேவி நர்த்தனம் ஆடுவாள்.
எதிரிகளை பேச முடியாது வாக்ஸ்தம்பம் செய்து விடுவாள்.
அரசனே எதிர்த்தாலும் அன்னையின் பக்தனிடம் தோல்வி அடைவான்.
இதனைப் பாராயணம் செய்பவன் பார்வை பட்டாலே தோஷங்கள் விலகி விடும்.
ஸ்ரீ வித்யை போன்று மந்திரமோ,
ஸ்ரீ லலிதாம்பிகையைப் போன்று தேவதையோ,
லலிதா சகஸ்ரநாமம் போன்று ஸ்தோத்திரமோ உலகில் இல்லை.
பூர்வ ஜென்ம புண்யத்தால் மட்டுமே இதனைப் பாராயணம் செய்யும் வாய்ப்பு கிட்டும்.
கடைசிப் பிறவியாக இருந்தால் மட்டுமே ஸ்ரீ வித்யா ஜெபமும், சகஸ்ரநாம பாராயணமும் செய்ய முடியும்.
தேவியின் அருளின்றி யாரும் இதனைப் பெறமுடியாது “ என்றெல்லாம் பலவாறாக பலச்ருதி என்ற பகுதியில் ஹயக்ரீவர் அகத்தியருக்கு உபதேசிக்கிறார்.
லலிதா சகஸ்ரநாமத்தில் இன்னொரு சிறப்பு இதைப் பாராயணம் செய்யும் போது நமது சமயத்தின்அனைத்து கடவுளையும் வழிபட்ட புண்ணியம் நமக்கு சேரும்.
எனவே லலிதா சகஸ்ரநாமத்தின் பொருள் அறிந்து பாராயணம் செய்ய முயலுங்கள்,
எதை அடைய விரும்புகிறீர்களோ அது தானாய் வந்து சேரும்.
அகத்திய முனிவருக்கு லலிதா சகஸ்ர நாமத்தின் பெருமையைப் பற்றி எடுத்துக் கூறினார் ஹயக்கிரீவர்.
இதைக்கேட்ட அகத்தியர் பெரிதும் மகிழ்ந்து, ”லலிதா சகஸ்ரநாமத்தை எந்த தலத்திற்கு சென்று கூறினால் அன்னையின் அருள் முழுமையாக கிடைக்கும்?”என கேட்க
அதற்கு ஹயக்கிரீவர், “பூலோகத்தில் அன்னை மனோன்மணியாக வீற்றிருக்கும் திருமீயச்சூர் சென்று அங்கு சகஸ்ரநாமத்தை கூறி அன்னையை வழிபடவும்” என்றார்.
அகத்தியர் உடனே தன் மனைவி லோபமுத்திரையுடன் திருமீயச்சூர் சென்று லலிதாம்பிகையை தரிசித்து, லலிதா சகஸ்ரநாமம் சொன்னார்.
காமத்தை கை விடுங்கள் அப்போது தான் அப்போது மட்டும் தான் கடவுள் தரிசனத்தை பெற முடியும் என்று பெரியவர்கள் பல காலமாக சொல்லி வருகிறார்கள்.
கடவுள் மனிதனுக்கு கொடுத்திருக்கும் எந்த உணர்வுகளையும் தவறுதலானது என்றோ தேவையற்றது என்றோ யாரும் சொல்ல முடியாது.
அதே நேரம் அந்த உணர்வுகள் அதிகப்படியாக மனிதனை ஆட்டுவிக்கும் போது தான் சிக்கல்களே ஏற்படுகின்றன
மல ஜலம் கழிப்பது கூட ஒரு வரையறைக்குள் இருக்க வேண்டும் அதிகப்படியாகப் போனால் அது நோயாகி விடும் காமம் என்பதும் அப்படி தான் வரையறைகளை தாண்டும் போது மனிதனை குப்புற தள்ளிவிடுகிறது.
நம் புலன்களும் மனதும் உடனடியாக நிகழ்காலத்தை விட்டு விட்டு மற்ற காலங்களில் சவாரி செய்ய துவங்கி விடுவதால் தான் காமம் என்பது அளப்பரிய சந்தோசத்தை தரக்கூடியது என்று மீண்டும் மீண்டும் ஒரு விட்டில் பூச்சி போல அதையே நாடி சென்று வீழ்ந்து கிடக்கிறோம்.
தங்கள் கலைத்திறன் சிறப்படைய வேண்டும் என்று கொல்லூர் மூகாம்பிகையை தொழுது செல்கின்றனர்.
அம்மனை சீவேலி என்று ஆலயத்தைத் திருவலம் செய்விக்கும் போது
காலையில் உலா வருகின்ற தேவி காளியின் அம்சமாகவும்,
உச்சியில் உலா வருகின்ற தேவி திருமகளின் அம்சமாகவும்
இரவில் உலா வருகின்ற தேவி கலைமகள் அம்சமாகவும் பாவிக்கப்படுகிறாள்.
அம்பாள் பத்மாசனத்தில் அமர்ந்த கோலம் ஆதி சங்கரர் தன் மனக்கண்ணில் இருந்த அம்மன் திருவுருவத்தை விஷ்வகர்மாக்களிடம் விளக்கி அவ்வாறே பஞ்சலோகத்தில் செய்யச் சொன்னார்.