*1, சராசரியாக 80% சதவிகித அர்ச்சகர்கள் காலை ஆகாரம் சாப்பிடுவதில்லை*
*2, வருடத்தில் தொடர்ச்சியாக ஒருமாதம் (மார்கழி) முழுவதுமாக அதிகாலை 3-மணிக்கு கண் விழிக்கின்றனர்.*
*3, விடுமுறை கிடையாது மாற்று அர்ச்சகர் இருந்தால் மட்டுமே விடுமுறை சாத்தியம்.*
*4, பெரும்பாலான ஆலயங்களில் குறைந்தபட்சம் 3-நபர் செய்ய வேண்டிய வேலைப் பளுவை ஒரே அர்ச்சகர் செய்கிறார் காரணம்*
*1-நபருக்கும் குறைந்த வருமானம்தான் வரும் மற்ற இருவருக்கு அவரால் தர இயலாது நிர்வாகமும் எங்களுக்கு வேலை நடந்தா போதும் என்று இருந்துவிடும்
ஆனால் விழா நாட்களில் ஆலய நிர்வாகத்திற்கு கூடுதல் வருமானம் கிடைக்கும் அந்த வருமானம் ஆலய அர்ச்சகருக்கு என்று ஒரு சதவிகிதம் கூட செலவு செய்வதில்லை
உண்டியல் வருமானமும் நிர்வாகத்திற்கு கூடுதல் வரவாக கிடைக்கும் ஆனால் அர்ச்சகர் தட்டுவருமானம் மட்டுமே இங்கு பக்தர்கள் மனதில் மிகைப் படுத்தப் பட்டுள்ளது.*
*5, அதிகமாக தண்ணீரில் நிற்பதால் கால் வலி,*
*6, காலை உணவு உண்ணாததால் சர்க்கரை வியாதி.*
*7, கற்பூர புகை ஊதுபத்தி புகை இவைகளால் மூச்சுத் திணறல்*
*8, தரமற்ற பூஜைப் பொருட்கள் கலப்படத்தால் சருமம் பாதிப்பு*
*9,தீபாவளி, பொங்கல் இதுபோன்ற எந்த விசேஷமாக இருந்தாலும் பக்தர்களுக்காக அதை கொண்டாட முடியாத சமூகம்.*
*இதுபோன்ற பல சிரமங்களை கடந்து எந்தவித அரசு ஆதரவோ, மத்தியில் ஆதரவோ,சாதி ஆதரவோ இல்லாமலும் ஆலய சொத்துக்கள் எவ்வளவோ இருந்தும் அதில் இருந்து ஒருபிடி மண்ணிற்கு கூட ஆசைப்படாமலும் தோன்றிய காலம் தொட்டு இன்றுவரை*
*என்கடன் உன் பணி செய்து கிடப்பதே*
*என்ற வாசகத்திற்கு இணங்கி Symptoms அரசியலிலோ, சினிமாவிலோ, தொழில் துறைகளிலோ, மற்ற மத்திய மாநில அரசு துறைகளிலோ கால் பதிக்காமல் வாழ்ந்து வரும் பழங்குடி இனமே அர்ச்சகர் குடும்பம்*
*விளிம்பு நிலை சமூகமாய் நம் சமூகம்*
*உலகில் எந்த ஒரு இனத்திற்கும் குருவோ, தலைவரோ அல்லது தோற்று வித்தவரோ இருப்பார் ஆனால் அர்ச்சகர்களுக்கு கடவுளே குரு கடவுளே அனைத்தும் இதை மமதையில் சொல்லவில்லை பெருமையில் சொல்கிறேன்.*
*எங்களுக்கு எந்தவித சலுகையோ இட ஒதுக்கீடோ கேட்கவில்லை.*
*எங்களை அப்படியே விட்டு விடுங்கள் வாழ்ந்து விட்டுப் போகிறோம்.*
*இந்த பதிவைப் பார்த்த ஒரு பக்தர் மனதில் உள்ள அர்ச்சகர் பற்றிய தவறான எண்ணம் மாறினாலும் அது இந்த பதிவின் வெற்றியே.* 🙏🏻🙏🏻🙏🏻*
மனிதன் 1 : இறைவன் எல்லாரையும் வசதியாக எல்லாம் செல்வங்களோடு வைத்திருக்கிறான்.
ஆனால் நான் மட்டும் பிறந்ததில் இருந்து இன்று வரை ஏழையாக இருக்கிறேன். இதுவரை எதுவும் எனக்கு தந்ததில்லை" என்று சலித்துக் கொண்டான்.
மனிதன் 2 : நான் உனக்கு 1 லட்சம் தருகிறேன் , உன்னுடைய ஒரு கையை வெட்டி எனக்கு தந்து விடு".
மனிதன் 1 : இல்லை முடியாது .
மனிதன் 2 : 10 லட்சம் தருகிறேன். உன்னுடைய ஒரு காலை வெட்டி எனக்கு தந்து விடு.
மனிதன் 1 : இல்லை முடியாது .
மனிதன் 2 : நீ எவ்வளவு பணம் கேட்கின்றாயோ அதற்கு மேலும் தருகிறேன் உனது இரு கண்களையும் எனக்கு தந்துவிடு .
மனிதன் 1 : நீங்கள் இந்த உலகத்தில் உள்ள எல்லா செல்வங்களை கொடுத்தாலும் என் கண்களை குடுக்க முடியவே முடியாது .
திருச்செங்கோடு எனும் இந்த திருத்தலம் ஏறத்தாழ 350-ஏக்கர் நிலப்பரப்பில், கடல் மட்டத்திற்கு மேல் இரண்டாயிரம் அடி உயரத்தில் அமைந்துள்ள அற்புதத் திருத்தலம்.
1
அர்த்தநாரீஸ்வரர் பழைமை
ஆணும் பெண்ணும் சரி சமம் என்பதை, காலக்கணக்கையும் தாண்டி நிரூபித்த திருக்கோலம், அர்த்த நாரீஸ்வரத் திருக்கோலம். ஆண் பாதியாகவும், பெண் பாதியாகவும் கொண்டது அர்த்த நாரீஸ்வரத் திருக்கோலம்.
2
இந்தத் திருக்கோலத்தைத் தான் மாணிக்கவாசகர் ‘தொன்மைக் கோலம்’ எனக்கூறித் துதிக்கிறார்.
பிறருக்கு நன்மை செய்பவன் தனக்கும் நன்மை தேடிக் கொள்கிறான். பிறருக்குத் தீமை செய்பவன் தனக்கும் தீமையை தேடிக் கொள்கிறான். பிறரை சந்தோஷப் படுத்துகிறவன் அதில் தனக்கும் சந்தோஷத்தைப் பெற்றுக் கொள்கிறான். பிறரை சங்கடப் படுத்துகிறவன் தானே சங்கடத்தைத் தேடிக் கொள்கிறான்.
எது நமக்கு சந்தோஷம் தரும் செயல்? எது நம்மால் பிறர்க்கு சங்கடம் தரும் செயல்? இதை குழப்பமில்லாமல் புரிந்துகொண்டாலே, வாழ்வும் எளிதாகும். மற்றவரும் நம் வசமாவார்கள்.
ஒரு மனிதர் ஒருமுறை ஒரு ஞானியினிடம் சென்று, தன் வாழ்க்கைக்கு வழிகாட்ட வேண்டுமென்று மன்றாடினார். அந்த ஞானியோ எப்போதும் மௌனத்திலேயே இருப்பவர். எனவே பல நாட்கள், பல வாரங்கள் அவரை சென்று பார்த்தும், அவரிடமிருந்து எந்த நல்ல வாக்கும் பெற முடியாமல் தவித்து,