துளசியை கொண்டு வீட்டில் பூஜை செய்தல், சாளக்கிராம பூஜை செய்தல், ஏகாதசி விரதமிருத்தல்,
பகவான் நாமத்தை உச்சரித்தல் இவைகளை கடைபிடித்தால் நிச்சயம் முக்தி என்கிறது நாரயணீயம்.
புராணத்தில் ஏகாதசி :
விஷ்ணு பகவான் மனிதர்கள் வாழும் காலத்தில் அறிந்தும் அறியாமலும் செய்யக்கூடிய பாவங்களுக்கு தண்டனைகளை ஏற்படுத்தி, அதற்காக எமலோகத்தை சிருஷ்டித்து
எமராஜனையும் அந்த லோகத்திற்கு நியமித்தார்.
எமலோகத்திற்கு ஒருநாள் விஷ்ணு விஜயம் செய்தபோது, அங்கு ஜீவாத்மாக்கள் படும் அவஸ்தையை கண்டு மனமிறங்கி ஏகாதசி விரதம் பற்றி அவர்களுக்கு கருணையுடன் எடுத்துரைத்தார்.
யார் இந்த விரதம் இருக்கிறார்களோ அவர்கள் பிறவிப்பயன் நீங்கி வைகுண்டம் சேர்வார்கள் என உறுதியளித்தார்.
ஏகாதசி விரத முறை :
ஏகாதசி விரதத்தை மேற்கொள்ள நினைப்பவர்கள்,
ஏகாதசிக்கு முதல் நாளான தசமியன்று பகலில் ஒருவேளை மட்டுமே உணவு எடுத்துக்கொள்ள வேண்டும்.
ஏகாதசி அன்று அதிகாலையிலேயே குளித்து விட்டு, விரதத்தை தொடங்க வேண்டும்.
ஏகாதசி விரதத்தை மூன்று நாட்கள் என்னும் முறையில் அனுசரித்தால் பலன் நிச்சயம்.
தசமி அன்று ஒரு வேளை உணவு உண்டு மறுநாள் ஏகாதசி அன்று முழு பட்டினி இருந்து, அதற்கு மறுநாள் துவாதசி அன்று
காலையிலேயே உணவு உண்டு விரதத்தை முடிக்க வேண்டும்.
ஏகாதசி திதி முழுவதும் முடிந்தவர்கள் பூரண உபவாசம் இருத்தல் பலன் தரும்.
ஏழு முறை துளசி இலையை பகவான் நாமம் சொல்லி சாப்பிடலாம்.
உடல் நிலை மற்றும் வயோதிகம் காரணமாக பூரண உபவாசம் இருக்க முடியாதவர்கள்
பழங்கள், பால், தயிர் போன்றவற்றை பூஜையில் வைத்து இறைவனுக்கு படைத்து பின் பிரசாதமாக உண்ணலாம்.
ஏகாதசிக்கு அடுத்த நாளான துவாதசி அன்று அதிகாலையில் உணவு அருந்துவதை தான் நாம் பாரணை என அழைக்கிறோம்
தை மாத ஏகாதசி மிகவும் சிறப்பு வாய்ந்தது.
ஏகாதசி நாளில், பெருமாளை ஆராதனை செய்யலாம்.
விஷ்ணு சகஸ்ர நாமம் பாராயணம் செய்யலாம்.
முடிந்தவர்கள் விரதம் இருக்கலாம்.
நாராயண நாமம் சொல்லி, துளசி தீர்த்தம் பருகலாம்.
அருகில் உள்ள கோயிலுக்குச் சென்று,
பெருமாளை வழிபடலாம். துளசி மாலை சார்த்தி பிரார்த்தனை செய்யுங்கள்.
ஏகாதசி விரத மகிமை :
சிவபெருமான், ஒருமுறை பார்வதிதேவிக்கு ஏகாதசி விரத மகிமையை எடுத்துச் சொன்னார்.
ஏகாதசி விரதத்திற்கு பாவத்தைப் போக்கும் சக்தி உண்டு.
அஸ்வமேதயாகம் செய்த பலனை ஏகாதசி விரதத்தால் பெற முடியும்.
முப்பத்து முக்கோடி தேவர்களும் அனுசரிக்கும் விரதம் இது என்று விளக்கினார்.
உள்ளத்தின் பக்தி உணர்வுகளையும், உடலின் ஆரோக்கியத்தையும் இணைப்பது விரதம்.
இதனால் உள்ளத்தூய்மை, உடலின் தூய்மை முதலான பலன்கள் கிடைக்கின்றன.
எனவே, ஏகாதசி விரதம் இருப்பவர்கள் சகலவிதமான சௌபாக்கியங்களையும் பெறுவார்கள்.
அரியலூர் மாவட்டம் ஜெயங்கொண்டத்தை அடுத்த கோவிந்தபுத்தூர் கிராமத்தில் காவிரி நீர்ப்பாயும் கொள்ளிடம் ஆற்றின் ஓரத்தில் விவசாய நிலங்களின் நடுவே அழகுற ஓர் சிவாலயம் அமைந்துள்ளது.
தேவாரப் பாடல் பெற்ற காவிரி வடகரை தலங்களில் 47வது தலமாக கங்காஜடாதீஸ்வரர் திருக்கோயில் போற்றப்படுகிறது.
சோழர்களின் பல கல்வெட்டுகள் இத்தலமே தேவார திருத்தலம் என்பதற்குச் சான்றாகத் திகழ்கிறது. ஆலயத்தின் எதிரே அர்ஜுனன் தீர்த்த குலம் உள்ளது.
ஆலயத்தின் முகப்பில் பரமனுக்குப் பசு பால் சொறிந்து வழிபடும் கதை வடிவம் காணப்படுகிறது.
ராஜகோபுரத்தின் வழியாக உள்ளே செல்லும்போது வாசற்படிக்கட்டு நமக்குத் தென்படும்.
இந்தப் படிக்கட்டானது முற்றிலும் கடல்பாசிகளைக் கொண்டு அமைக்கப்பட்டுள்ளது.