அரியலூர் மாவட்டம் ஜெயங்கொண்டத்தை அடுத்த கோவிந்தபுத்தூர் கிராமத்தில் காவிரி நீர்ப்பாயும் கொள்ளிடம் ஆற்றின் ஓரத்தில் விவசாய நிலங்களின் நடுவே அழகுற ஓர் சிவாலயம் அமைந்துள்ளது.
தேவாரப் பாடல் பெற்ற காவிரி வடகரை தலங்களில் 47வது தலமாக கங்காஜடாதீஸ்வரர் திருக்கோயில் போற்றப்படுகிறது.
சோழர்களின் பல கல்வெட்டுகள் இத்தலமே தேவார திருத்தலம் என்பதற்குச் சான்றாகத் திகழ்கிறது. ஆலயத்தின் எதிரே அர்ஜுனன் தீர்த்த குலம் உள்ளது.
ஆலயத்தின் முகப்பில் பரமனுக்குப் பசு பால் சொறிந்து வழிபடும் கதை வடிவம் காணப்படுகிறது.
ராஜகோபுரத்தின் வழியாக உள்ளே செல்லும்போது வாசற்படிக்கட்டு நமக்குத் தென்படும்.
இந்தப் படிக்கட்டானது முற்றிலும் கடல்பாசிகளைக் கொண்டு அமைக்கப்பட்டுள்ளது.
கோயிலுக்குள் செல்லும்போது முன் மண்டபம், மகா மண்டபம், அர்த்தம் மண்டபம், கருவறை என அமையப்பெற்றுள்ள சங்க முகத்தைக் கொண்டுள்ள முன் மண்டப தூண்கள் பல்லவர் கலைத்திறனைப் பறைசாற்றுகின்றன.
வலப்பக்கம் தனி விமானத்துடன் கூடிய அம்பாள் சன்னதி, தெற்குப்பக்கம் நோக்கியவாறு அமைந்துள்ளது.
மகா மண்டபத்தை அடுத்துள்ள கருவறையில் உள்ள கங்காஜடாதீஸ்வரர் காட்சி தருகிறார்.
ஈசனை விஜயன் வழிபட்டதால் விஜய நாதேஸ்வரர் என்றும் அழைக்கப்படுகிறார்.
கணபதி, கந்தன், கஜலட்சுமி சன்னதிகளும் உள்ளன.
சிவலிங்கத்தின் மீது பசு பாலை பொழிந்து வழிபடும் காட்சி,
அர்ஜுனன் தவம் புரிதல் என அநேக சிற்பங்கள் கருவறையின் வெளியே மேற்கு சுவரில் செதுக்கப்பட்டுள்ளன.
நின்ற கோலத்தில் விஷ்ணு, வள்ளி தெய்வானையுடன் சுப்பிரமணியர், அப்பர் சுவாமிகள் அருளிய தேவார கல்வெட்டுகளும் காணப்படுகின்றன.
பிரதோஷம், சிவராத்திரி போன்ற அனைத்து விசேஷங்களுக்கும் சிறப்புறப் பூஜைகள் நடத்தப்படுகின்றன.
திருமணம், கல்வி, தொழில் ஆரம்பிக்கும் போது இக்கோயிலுக்கு வந்து வழிபட்டால் சுபிட்சம் கிடைக்கும் என்பது பக்தர்களின் நம்பிக்கையாக உள்ளது.
ஸ்ரீ பெரியநாயகி ஸமேத ஸ்ரீ கல்யாண பசுபதீஸ்வரர் கோயில், அரசன் கழனி.
செங்கல்பட்டு மாவட்டம், சோழங்கநல்லூர் வட்டம், ஒட்டியம்பாக்கம் பஞ்சாயத்தில் அடங்கிய “அரசன் கழனி’ மிகவும் பழமையான கிராமம்.
இவ்வூரில் உள்ள குளத்தின் நடுவில் அமைந்த நிலப்பரப்பில் “சிவலிங்க திருமேனி ” மற்றும் “நந்தி தேவர்” சிதிலமடைந்து, கோயில் கட்டிடமின்றி, வழிபாடும் இன்றி பல ஆண்டு காலங்கள் இருந்தது.
இக்குளக்கரையின் மேல் மிகவும் பாழடைந்த நிலையில் ஆதி கால தூண்கள் உள்ளன.
மேலும் மிகப் பெரிய ஆதிகால மாவு ஆட்டும் கல்
சிதிலமடைந்த நிலையில் உள்ளது.
இதன் அருகில் மூலிகை நிறைந்த இயற்கை எழில் சூழ்ந்த ஔதட மலை உள்ளது.
இம் மலையில் அரசன் கழனி ஊர் மக்கள் பிரதி மாதம் கார்த்திகை திருநாளில் மாலை 6:00 மணி அளவில்,