சென்னை - பெரியபாளயம் சாலையிலுள்ள கன்னிப்புத்தூர் (கன்னிகைப்பேர்) என்ற கிராமத்திலிருந்து 4 கி.மீ. தொலைவிலுள்ள தேவாரத் தலம் திருக்கள்ளில்.
இத்தலத்தை தற்போது திருகண்டலம் என்று அழைக்கிறார்கள்.
இறைவன் திருநாமம் சிவாநந்தீஸ்வரர்.
இறைவி திருநாமம் ஆனந்தவல்லி அம்மை.
இக்கோவிலில் சிவபெருமான், சக்தி தெட்சிணாமூர்த்தியாக தனிச்சன்னதியில் இருக்கிறார்.
இவர் இடது கைகளில் ஏடு மற்றும், அமுதக் கலசத்தை ஏந்தியபடியும், அம்பாளை அணைத்தபடியும் காட்சி தருகிறார்.
அருகில் பிருகு முனிவர் அவரை வணங்கியபடி இருக்கிறார்.
பிருகு முனிவர் சிவனையே மட்டும் வணங்கும் பழக்கம் உடையவர்.
ஒரு சமயம் சிவனை பார்க்க இவர் கயிலாயம் சென்ற போது ஈசன் பார்வதியுடன் அமர்ந்திருந்தனர்.
அருகில் சென்ற பிருகு முனிவர் சிவனை மட்டும் வணங்கி அவரை சுற்றி வந்தார்.
இதைக்கண்ட பார்வதிதேவிக்கு கோபம் உண்டானது.
இவர் தன்னையும் சேர்த்து வணங்க வேண்டும் என்று கூறி ஈசனுடன் நெருங்கி அமர்ந்தார்.
பிருகு முனிவர் வண்டு உருக்கொண்டு, சிவனை மட்டும் சுற்றி வந்தார்.
அப்போது ஈசன், சிவனும் சக்தியும் ஒன்று என்பதை உணர்த்துவதற்காக, தன்னின் இடபாகத்தை சக்திக்கு அளித்தார்.
இவ்வடிவமே அர்த்தநாரீஸ்வரர் கோல வடிவம்.
இக்கோலத்தைக் கண்டும் பிருகு முனிவர்க்கு மனதில் திருப்தி ஏற்படவில்லை.
பிருகு முனிவர் பூலோகத்தில் சிவத் தல யாத்திரை மேற்க் கொண்ட போது, கள்ளி வனமாக இருந்த இங்கு அகத்தியர் பூசித்த சுவாமியை கள்ளிச்செடியிலுள்ள மலர்களைக் கொண்டு அர்ச்சனை செய்து வழிபட்டார்.
அப்போது ஈசன் அவர் முன் தோன்றி, சிவமும் சக்தியும் ஒன்றே! சக்தி இல்லாமல் சிவம் இல்லை.
சிவம் இல்லாமல் சக்தியும் இல்லை. என்று உபதேசத்தைக் கூறிவிட்டு, அம்பாளை தன் மடியில் அமரவைத்து சக்தியுடன் இணைந்த தட்சிணாமூர்த்தியாக காட்சி கொடுத்தார்.
இந்த சக்தி தட்சிணாமூர்த்தியை விசேஷ வழிபாடு செய்வதன் மூலம் இனிய இல்லறம், தம்பதிகள் ஒற்றுமை, நல்ல புத்திரப்பேறு, சிறந்த அறிவாற்றல், செல்வச் செழிப்பு ஆகிய அனைத்து நலன்களையும் அடையலாம்.
பிரிந்திருக்கும் தம்பதியர்கள் தட்சிணாமூர்த்திக்கு வியாழக்கிழமைகளில் கள்ளி மலர்களால் அர்ச்சனை செய்து வழிபட்டால் குடும்பத்தில் ஒற்றுமை உண்டாகும்.
ஸ்ரீ பெரியநாயகி ஸமேத ஸ்ரீ கல்யாண பசுபதீஸ்வரர் கோயில், அரசன் கழனி.
செங்கல்பட்டு மாவட்டம், சோழங்கநல்லூர் வட்டம், ஒட்டியம்பாக்கம் பஞ்சாயத்தில் அடங்கிய “அரசன் கழனி’ மிகவும் பழமையான கிராமம்.
இவ்வூரில் உள்ள குளத்தின் நடுவில் அமைந்த நிலப்பரப்பில் “சிவலிங்க திருமேனி ” மற்றும் “நந்தி தேவர்” சிதிலமடைந்து, கோயில் கட்டிடமின்றி, வழிபாடும் இன்றி பல ஆண்டு காலங்கள் இருந்தது.
இக்குளக்கரையின் மேல் மிகவும் பாழடைந்த நிலையில் ஆதி கால தூண்கள் உள்ளன.
மேலும் மிகப் பெரிய ஆதிகால மாவு ஆட்டும் கல்
சிதிலமடைந்த நிலையில் உள்ளது.
இதன் அருகில் மூலிகை நிறைந்த இயற்கை எழில் சூழ்ந்த ஔதட மலை உள்ளது.
இம் மலையில் அரசன் கழனி ஊர் மக்கள் பிரதி மாதம் கார்த்திகை திருநாளில் மாலை 6:00 மணி அளவில்,
அரியலூர் மாவட்டம் ஜெயங்கொண்டத்தை அடுத்த கோவிந்தபுத்தூர் கிராமத்தில் காவிரி நீர்ப்பாயும் கொள்ளிடம் ஆற்றின் ஓரத்தில் விவசாய நிலங்களின் நடுவே அழகுற ஓர் சிவாலயம் அமைந்துள்ளது.
தேவாரப் பாடல் பெற்ற காவிரி வடகரை தலங்களில் 47வது தலமாக கங்காஜடாதீஸ்வரர் திருக்கோயில் போற்றப்படுகிறது.
சோழர்களின் பல கல்வெட்டுகள் இத்தலமே தேவார திருத்தலம் என்பதற்குச் சான்றாகத் திகழ்கிறது. ஆலயத்தின் எதிரே அர்ஜுனன் தீர்த்த குலம் உள்ளது.
ஆலயத்தின் முகப்பில் பரமனுக்குப் பசு பால் சொறிந்து வழிபடும் கதை வடிவம் காணப்படுகிறது.
ராஜகோபுரத்தின் வழியாக உள்ளே செல்லும்போது வாசற்படிக்கட்டு நமக்குத் தென்படும்.
இந்தப் படிக்கட்டானது முற்றிலும் கடல்பாசிகளைக் கொண்டு அமைக்கப்பட்டுள்ளது.