வில்வங்களில் மகாவில்வம், கொடி வில்வம், சித்த வில்வம், கற்பூர வில்வம் உள்பட 21 முக்கிய வகைகள் உள்ளன.
வில்வ இலைகளை காலையில் சூரிய உதயத்துக்கு முன்பாகவே பறித்துவிட வேண்டும்.
{திங்கள் கிழமை, சதுர்த்தி, அஷ்டமி, பிரதோஷம், சிவராத்திரி, அமாவாசை, பவுர்ணமி} ஆகிய நாட்களில் பறிக்கக் கூடாது.
வில்வ இலையைப் பறித்து சிறிது தண்ணீர் தெளித்து பிறகு அதை பூஜைக்காக பயன்படுத்தலாம்.
வில்வம் சிவபெருமானுக்கு உகந்த அட்சரம். அதைவிடச் சிறந்த அட்சரம் ஒன்றும் இல்லை.
"வில்வ இலை இரண்டு
வீசும் கை கண்டு
சிவனே வருவதுண்டு"
என்ற வரிகளே இதன் சிறப்பை உணர்த்துகிறது.
பாற்கடலில் இருந்து லட்சுமிதேவி தோன்றிய போது அவளது கரங்களில் இருந்து வில்வ மரம் தோன்றியதாக வராக புராணத்தில் கூறப்பட்டுள்ளது.
எனவே வில்வ மரத்தை அன்னை மகாலட்சுமியின் வடிவமாக கூறுகிறார்கள்.
இதனால் வில்வ மரத்தை மனதார வழிபட்டால், ஈசன் சிவபெருமானின் கருணை கிடைப்பதோடு,
லட்சுமி தேவியின் பரிபூரணமான அருளையும் பெறலாம்.
வில்வ இலை கொண்டு சிவனை அர்ச்சனை செய்வது லட்சம் எண்ணிக்கையிலான தங்க மலர்களைக் கொண்டு அர்ச்சனை செய்ததற்குச் சமம்.
மேலும் கங்கை முதலான புண்ணிய நதிகளில் நீராடிய, 108 சிவ தலங்களுக்குச் சென்று தரிசித்த பலன் கிடைக்கும்.
வில்வத்தைச் சிவனுக்கு பக்தி நிறைந்த மனதோடு எந்தவித எதிர்பார்ப்புமின்றி அர்ப்பணித்தாலே மூன்று ஜென்ம பாவங்கள் நம்மை விட்டு நீங்கும் என்கின்றன தர்மசாஸ்திரங்கள்.
வில்வ மரத்தில் மட்டுமின்றி வில்வ இலைகளிலும் மகாலட்சுமி வாசம் செய்வதால், வில்வ இலைகளுக்கு தனிச்சிறப்பு உண்டு.
மேலும், காளிகா புராணத்தில் மகாலட்சுமி வில்வமரங்கள் அடங்கிய காட்டிலேயே தவம் செய்தாள் என்று குறிப்பிடுகிறது.
வில்வ மரத்தடியில் "ரைவத மன்வந்திரத்தில் "மகாலட்சுமி தோன்றியதாக கூறப்படுகிறது.
மகாலட்சுமி தேவிக்கு உகந்த மரம் "வில்வ மரம்" என்று *"ஸ்ரீ சூக்தம்"* கூறுகிறது.
வில்வ மரத்தடியில் செல்வம் தரும் திருமகள் அலைமகள்
(ஸ்ரீ தேவி) வசிக்கிறாள்
வைணவ ஸ்தலமான ஸ்ரீ ரங்கத்தில் மகாலட்சுமியாக கருதப்படும்
ஸ்ரீ ரங்கநாயகி நாச்சியார் தாயாரின் சன்னதிக்கு அருகில் அவருக்காக வில்வ மரம் அமையப் பெற்றுள்ளது.
தாயாரின் தல விருட்சமாக கருதப்படுவது வில்வம் தான்.
சமஸ்கிருதத்தில் வில்வத்திற்கு
'ஸ்ரீ பலம்" என்று பெயர் உண்டு.
அதாவது சகலவிதமான செல்வ வளத்தை குறிப்பதாகும்.
திருமகள் தேவி மகாலட்சுமிக்கு வில்வம் இலை, மலர் கொண்டு அர்ச்சனை செய்து வழிபட்டு சகல செல்வ வளத்தையும் பெறலாம் என்பதே உண்மையாகும்.
இதை உணர்த்தும் விதமாக மார்கழி மாதத்தில் திருப்பதியில் பெருமாளுக்கு வில்வத்தால் அபிஷேக அர்ச்சனை செய்யப்படுகிறது.
ஏனென்றால் அங்கு வீற்றிருக்கும் பெருமாளின் உள்ளத்திலே லஷ்மி தேவி வசிப்பதாக கூறப்படுவதாலே ஸ்ரீ தேவிக்குரிய வில்வத்தால் செய்யப்படும் அர்ச்சனையை
பெருமாள் தனக்குரியதாக விரும்பி ஏற்றுக் கொள்வதாகவும் உணரப்படுகிறது.
திருவந்திபுரத்தில் மகாலட்சுமிக்கு வில்வத்தால் தான் அர்ச்சனை.
உண்மையில் செல்வம் என்பது பணம், நகை, நிலம், உணவு மட்டுமல்ல, நல்ல ஆரோக்கியமான உடல்நலம், நிறைவான தெளிவான உள்ளம், குற்றமற்ற நெஞ்சம், என்பனவும் அடங்கும்.
ஏழரைச் சனி, அஷ்டமச்சனி சனி தசா, புத்தி நடைமுறையில் உள்ளவர்களுக்கு மிகவும் உகந்த வழிபாடு *#வில்வபிரயோகம்* தான்.
வீடுகள் மற்றும் தொழில் அமைப்புகளில் உள்ள லஷ்மிதேவியின் உருவத்திற்கு வில்வ இலை சமர்ப்பித்து தீபம் ஏற்றி தினந்தோறும் வழிபடுவதும்
தேவையற்ற விரயங்களை குறைத்து பொருட் சேர்க்கைக்கு வழிவகுக்கும்.
ஸ்ரீ பெரியநாயகி ஸமேத ஸ்ரீ கல்யாண பசுபதீஸ்வரர் கோயில், அரசன் கழனி.
செங்கல்பட்டு மாவட்டம், சோழங்கநல்லூர் வட்டம், ஒட்டியம்பாக்கம் பஞ்சாயத்தில் அடங்கிய “அரசன் கழனி’ மிகவும் பழமையான கிராமம்.
இவ்வூரில் உள்ள குளத்தின் நடுவில் அமைந்த நிலப்பரப்பில் “சிவலிங்க திருமேனி ” மற்றும் “நந்தி தேவர்” சிதிலமடைந்து, கோயில் கட்டிடமின்றி, வழிபாடும் இன்றி பல ஆண்டு காலங்கள் இருந்தது.
இக்குளக்கரையின் மேல் மிகவும் பாழடைந்த நிலையில் ஆதி கால தூண்கள் உள்ளன.
மேலும் மிகப் பெரிய ஆதிகால மாவு ஆட்டும் கல்
சிதிலமடைந்த நிலையில் உள்ளது.
இதன் அருகில் மூலிகை நிறைந்த இயற்கை எழில் சூழ்ந்த ஔதட மலை உள்ளது.
இம் மலையில் அரசன் கழனி ஊர் மக்கள் பிரதி மாதம் கார்த்திகை திருநாளில் மாலை 6:00 மணி அளவில்,
அரியலூர் மாவட்டம் ஜெயங்கொண்டத்தை அடுத்த கோவிந்தபுத்தூர் கிராமத்தில் காவிரி நீர்ப்பாயும் கொள்ளிடம் ஆற்றின் ஓரத்தில் விவசாய நிலங்களின் நடுவே அழகுற ஓர் சிவாலயம் அமைந்துள்ளது.
தேவாரப் பாடல் பெற்ற காவிரி வடகரை தலங்களில் 47வது தலமாக கங்காஜடாதீஸ்வரர் திருக்கோயில் போற்றப்படுகிறது.
சோழர்களின் பல கல்வெட்டுகள் இத்தலமே தேவார திருத்தலம் என்பதற்குச் சான்றாகத் திகழ்கிறது. ஆலயத்தின் எதிரே அர்ஜுனன் தீர்த்த குலம் உள்ளது.
ஆலயத்தின் முகப்பில் பரமனுக்குப் பசு பால் சொறிந்து வழிபடும் கதை வடிவம் காணப்படுகிறது.
ராஜகோபுரத்தின் வழியாக உள்ளே செல்லும்போது வாசற்படிக்கட்டு நமக்குத் தென்படும்.
இந்தப் படிக்கட்டானது முற்றிலும் கடல்பாசிகளைக் கொண்டு அமைக்கப்பட்டுள்ளது.