கோயில் என்றால் அது சிதம்பரமே.
தில்லை என்றாலே மூர்த்தி, தலம், தீர்த்தம் ஆகிய மூன்றையும் குறிக்கும்.
தில்லை தலத்தில் இருக்கும் பத்து தீர்த்தங்கள்.
1⃣ #சிவகங்கை
(கோயிலினுள்)
1வது தீர்த்தம் சிவகங்கை எல்லா தீர்த்தத்தையும் காட்டிலும் மிகவும் சிறந்தது.
கங்கையின் புனிதத்தை போற்றும் இந்த தீர்த்தம் தொழுநோயை போக்க வல்லது.
2⃣ #குய்யதீர்த்தம்
(கிள்ளை கடற்கரை)
குஹ்யதீர்த்தம்
கிள்ளை சமுத்திரம் எல்லா தேவர்களாலும் சேவிக்கப்பட்டது சகல பாபங்களையும் போக்க வல்லது.
3⃣ #புலிமடு (சக்தி நகர் அம்மாபேட்டை)
3 வது தீர்த்தம் வியாக்ர தீர்த்தம் (புலிமேடு) பிறப்பு இறப்பு நூத்தி முதலிய சகல வல்லமை படைத்த தீர்த்தம்
4⃣ #வியாக்ரபாத_தீர்த்தம் (இளமையாக்கினார்)
4வது தீர்த்தம் யௌவனேஷ் வர தீர்த்தம் ( இளமையாக்கினார் கோயில் )
ஆத்மாவின் பாபங்களை தீர்க்கும் பக்தர்கள் இளமையான சரீரத்துடன் வாழ அருளும் தம்பதிகள் ஒற்றுமையை உண்டாக்கும்.
5⃣ #அனந்ததீர்த்தம் (அனந்தீச்வரன் கோயில் )
5வது அனந்தீஸ்வரர் தீர்த்தம் ஸ்ரீ அனந்தீஸ்வரர் கோயில் பதஞ்சலி முனிவரால் தோற்றுவிக்கப்பட்டது இங்கு ஸ்நானம் செய்தால் நாகதோஷம் விலகும்.
6⃣ #நாகசேரி_தீர்த்தம்
6 வது நாகசேரி தீர்த்தம் இது அனந்தீஸ்வரர் கோயில் பின்புறம் உள்ளது இந்த தீர்த்தம் சப்த கன்னிகளின் பாபங்களையும் நாக தோஷத்தையும் போக்க வல்லது.
1⃣0⃣ #பரமானந்த#கூபம்
(ஸ்ரீ நடராஜர் அபிஷேக தீர்த்த கிணறு)
10வது பரமானந்த கூபம் இது அனைவருக்கும் சகல துக்கங்களையும் போக்கி சகல செல்வங்களையும் கொடுக்க வல்லது.
இந்த தச தீர்த்தங்களிலும் சுவாமி எழுந்தருளி தீர்த்தவாரி உற்சவம் நடைபெறும்.
இந்த தச தீர்த்தத்தில் ஸ்நானங்கள் செய்து இகபர சௌக்கியங்களை அடைந்து எல்லாம் வல்ல அன்னை ஸ்ரீ சிவகாம சுந்தரி அம்பாள் ஸமேத ஸ்ரீமத் ஆனந்த நடராஜ ராஜ மூர்த்தி சுவாமியின் அனுக்கிரகத்தை பெறவும்.
குரங்கு, அணில், காகம் என மூன்றும் வழிபட்டு பேறு பெற்றதால் குரங்கணில்முட்டம் என இந்த தலம் வழங்கப்படுகின்றது.
வாலி, இந்திரன், எமன் இம்மூவரும் தங்களது முன்வினைப் பயனால்
வாலி குரங்காகவும்,
இந்திரன் அணிலாகவும்,
எமன் காகமாகவும் உருவம் பெற்று வருந்தி வாழ்ந்து வந்தனர்.
தங்களுடைய வினைப்பயன் நீங்க கயிலை நாதனை வேண்டி நின்றனர்.
சிவபெருமானின் அறிவுரைப்படி காஞ்சிபுரத்திற்கு தெற்கேயுள்ள சிவாலயம் சென்று வழிபட்டால் அவர்களுடைய வினைப்பயன் நீங்கி பழைய நிலைக்கு திரும்புவார்கள் என இறைவன் வழிகாட்டினான்.
அதன்படியே இம்மூவரும் வழிபட்டு தங்கள் இயல்பு நிலையை அடைந்தார்கள் என்பது தலபுராணம்.
திருப்பங்கள் தரும் திருவோணம் வாழ்வில் மாற்றங்களும் ஏற்றங்களும் நிகழ, வழிபாடுகள் மிக அவசியம்.
வரும் இடர்கள், கவலைகள் அனைத்துமே கர்ம வினைகள் தான்.
ஆனால் அவற்றை கடந்து தான் செல்ல வேண்டும்.
ஆனால் கர்ம வினைகளை குறைத்து, வளமான வாழ்வளிப்பது வழிபாடுகள் என்றால் அது மிகையாகாது.
அவரவர் நட்சத்திரங்களுக்குரிய தெய்வங்களை வழிபடுவதும், நட்சத்திர நாளில் மேற்கொள்ளும் வழிபாடுகளும் விரதங்களும் கைமேல் பலனளிப்பவை.
27 நட்சத்திரங்கள் இருந்தாலும் சிவனுக்குரிய திருவாதிரை மற்றும் பெருமாளுக்குரிய திருவோணம் இவ்விரண்டு நட்சத்திரங்கள் தான் “திரு” என்ற அடைமொழியுடன் சிறப்பித்துக் கூறப்படுகிறது.
திருவோணம் நட்சத்திரத்தில் பிறந்தவர்கள்
சந்திரனின் இரண்டாவது பெரிய நட்சத்திரம் திருவோணம்.
21.01.2023 சனிக்கிழமை அன்று தஞ்சாவூர் மாவட்டம், கும்பகோணம் வட்டம், திருச்சேறை அருகே மேலநாகம்பாடி கிராமத்தில் முருகையன் என்ற விவசாயின் வாழைத்தோட்டத்தில் சிவலிங்கத்தின் தலைப்பகுதி மட்டும்
பல நாட்களாக மண்ணுக்கு வெளியே தெரிந்து வந்துள்ளது.
இந்நிலையில் ஊர்ப் பொதுமக்கள் மற்றும் சிவனடியார்களால் சிவலிங்கம் தோண்டி எடுக்கப்பட்டது.
தோண்டி எடுக்கப்பட்ட சிவலிங்கம் 3½ அடி உயரத்தில் 4 மற்றும் 8 பட்டைகளுடன் இருந்தது.
பிரம்ம சூத்திர குறியீடு மற்றும் பாம்பின் உருவத்தை பின்பக்கத்தில் அமைத்திருப்பது சிறப்பான ஒன்று.
சிவலிங்கத்தின் அமைப்பு மற்றும் அவ்வாழைத் தோட்டத்தில் கிடைத்த செங்கற்களை வைத்துப் பார்க்கும்போது சுமார் 400 ஆண்டுகளுக்கும் முற்பட்ட சிவலிங்கம் என கருதலாம்.