கல்யாண வரம் தரும் திருச்சேறை ஸ்ரீ சார நாதப் பெருமாள்.
கும்பகோணத்திலிருந்து குடவாசல் அருகே உள்ளது திருச்சேறை ஸ்ரீசாரநாதப் பெருமாள் கோயில்.
பிரளய காலம். இந்தத் தலத்தில் இருந்து மண்ணை எடுத்த பிரம்மா, ஒரு கடம் செய்தார்.
அந்தக் கடத்தில் நான்கு வேதங்களையும் வைத்துக் காப்பாற்றி, அடுத்த பிரஜோற்பத்தியின்போது அளித்தாராம்.
அத்தகைய பெருமை பெற்ற தலமாக விளங்குகிறது திருச்சேறை.
ஒரு முறை கங்கை, காவிரி மற்றுமுள்ள ஆற்று நங்கையர் விந்திய மலையின் ஓர் இடத்தில் விளையாடிக் கொண்டிருந்தனர்.
அப்போது, கந்தர்வன் ஒருவன் அவ்வழியாகப் போனான்.
சில நிமிட நேரம் அங்கே நின்ற அவன், அவர்களை வணங்கிச் சென்றான்.
அப்போது நதி நங்கையர் அனைவரும் கந்தர்வனிடம், அவன் யாரை வணங்கினான் என்று கேட்டனர்.
அதற்கு கங்கை மற்றும் காவிரியைக் கண்ணால் பார்த்து விட்டு அவன் சென்று விட்டான்.
இப்போது, கங்கையும் காவிரியும் யார் புனிதமானவர் என்று போட்டியிட்டனர்.
இந்த விவகாரம் பிரம்மாவிடம் சென்றது.
அவர், “நான் நித்திய பூஜைக்கு ஸ்ரீவிஷ்ணுவின் பாதத்தைத் தொட்டு வரும் கங்கை நீரையே பயன்படுத்துகிறேன்.
எனவே, கங்கையே புனிதமானவள், உயர்ந்தவள்” என்றார்.
இதனால், வருத்தமுற்ற காவிரி அன்னை.
திருச்சேறைத் தலத்தில், சார புஷ்கரிணியில் ஓர் அரச மரத்தடியில் தவம் மேற்கொண்டாள்.
இவளது தவத்தைக் கண்டு மனம் இரங்கிய ஸ்ரீமந் நாராயணர், ஒரு குழந்தையின் வடிவில் காவிரித் தாயின் மடியில் தவழ்ந்தார்.
ஆயிரம் வருட தவத்துக்குப் பிறகு, விந்திய மலைக்குத் தெற்கே கங்கைக்கு சமமான அந்தஸ்து காவிரிக்கும் கிடைத்தது.
மேலும், காவிரி அன்னைக்குக் காட்சி தந்த பெருமாள் திருச்சேறையில் அவ்வண்ணமே எழுந்தருளினார்.
கருவறையில் சாரநாதப் பெருமாளுக்கு இடப்புறத்தில் காவிரித்தாய் அமர்ந்து கொண்டார்.
பெருமாளுக்கு பக்தர்கள் தங்கள் ஆன்மாவை அர்ப்பணிப்பதால் பெருமாளுக்கு ஆன்மாக்களின் நாதனாக, சாரநாதனாகப் பெயர் ஏற்பட்டது.
இது சார க்ஷேத்ரம். சாரநாதன் என்ற திருப்பெயருடன் திகழும் பெருமாள், சாரநாயகி என்ற திருப்பெயருடன் திகழும் தாயார்,
சார விமானம் என்ற பெயருடன் விமானம், சார புஷ்கரிணி என்ற பெயருடன் தீர்த்தம்..
எல்லாம் சாரம் தான்.
இங்குள்ள சிவபெருமானையும் சார பரமேஸ்வரர் என்ற திருநாமத்துடன் பக்தர்கள் அழைக்கின்றனர்.
சாரநாதப் பெருமாள் ஆலயத்தின் சிறப்பம்சம், இத்தலத்தில் பெருமாள் ஸ்ரீதேவி, பூதேவி, மகாலட்சுமி, சாரநாயகி, நீளாதேவி என லட்சுமியின் அம்சமாய் ஐந்து தேவியருடன் அருள் வழங்குகிறார் என்பது.
கோயிலுக்கு எதிரே உள்ள சாரபுஷ்கரிணி மேற்குக் கரையில், அகத்தியர், பிரம்மா, காவிரி ஆகியோர்
தனி சந்நிதியில் அருள்பாலிக்கின்றனர்.
கருவறையில் காவிரி மட்டுமல்லாது, மார்க்கண்டே மகரிஷியும் காட்சி தருகிறார்.
இந்தத் தலத்தில் சிறப்புத் திருவிழா தைப்பூச விழாதான்.
இது, பத்து நாள்களுக்குக் கொண்டாடப்படுகிறது.
பத்தாவது நாள் தேர்த் திருவிழா.
இங்கே காவிரித் தாய்க்கு பெருமாள் காட்சியளித்தது, ஓர் தை மாத, பூச நட்சத்திரத்தில்தானாம்.
இது, வியாழன் சஞ்சரித்த காலம் என்பதால், 12 ஆண்டுகளுக்கு ஒரு முறை தை மாத பூச நட்சத்திரத்தில் வியாழன் வரும் போது இங்குள்ள சார புஷ்கரணியில் நீராடினால், மகாமாகத்தில் நீராடியதற்கு ஒப்பாகும் என்பர்.
திருமணத் தலம்:
இங்கே பெருமாள் கல்யாண வரம் தரும் பெருமாளாக, ஐந்து லட்சுமியருடன் திகழ்கிறார்.
எனவே, புதன் அல்லது வெள்ளிக் கிழமைகளில் கோயிலில் கல்யாண உற்ஸவம் செய்வதாகவும் பக்தர்கள் வேண்டிக் கொள்கின்றனர்.
திருமணம் முடிந்த பின்னர், தம்பதியாக கோயிலுக்கு வந்து, பெருமாள், தாயாருக்கு வஸ்திரம் சாத்துகின்றனர்.
குரங்கு, அணில், காகம் என மூன்றும் வழிபட்டு பேறு பெற்றதால் குரங்கணில்முட்டம் என இந்த தலம் வழங்கப்படுகின்றது.
வாலி, இந்திரன், எமன் இம்மூவரும் தங்களது முன்வினைப் பயனால்
வாலி குரங்காகவும்,
இந்திரன் அணிலாகவும்,
எமன் காகமாகவும் உருவம் பெற்று வருந்தி வாழ்ந்து வந்தனர்.
தங்களுடைய வினைப்பயன் நீங்க கயிலை நாதனை வேண்டி நின்றனர்.
சிவபெருமானின் அறிவுரைப்படி காஞ்சிபுரத்திற்கு தெற்கேயுள்ள சிவாலயம் சென்று வழிபட்டால் அவர்களுடைய வினைப்பயன் நீங்கி பழைய நிலைக்கு திரும்புவார்கள் என இறைவன் வழிகாட்டினான்.
அதன்படியே இம்மூவரும் வழிபட்டு தங்கள் இயல்பு நிலையை அடைந்தார்கள் என்பது தலபுராணம்.
திருப்பங்கள் தரும் திருவோணம் வாழ்வில் மாற்றங்களும் ஏற்றங்களும் நிகழ, வழிபாடுகள் மிக அவசியம்.
வரும் இடர்கள், கவலைகள் அனைத்துமே கர்ம வினைகள் தான்.
ஆனால் அவற்றை கடந்து தான் செல்ல வேண்டும்.
ஆனால் கர்ம வினைகளை குறைத்து, வளமான வாழ்வளிப்பது வழிபாடுகள் என்றால் அது மிகையாகாது.
அவரவர் நட்சத்திரங்களுக்குரிய தெய்வங்களை வழிபடுவதும், நட்சத்திர நாளில் மேற்கொள்ளும் வழிபாடுகளும் விரதங்களும் கைமேல் பலனளிப்பவை.
27 நட்சத்திரங்கள் இருந்தாலும் சிவனுக்குரிய திருவாதிரை மற்றும் பெருமாளுக்குரிய திருவோணம் இவ்விரண்டு நட்சத்திரங்கள் தான் “திரு” என்ற அடைமொழியுடன் சிறப்பித்துக் கூறப்படுகிறது.
திருவோணம் நட்சத்திரத்தில் பிறந்தவர்கள்
சந்திரனின் இரண்டாவது பெரிய நட்சத்திரம் திருவோணம்.
21.01.2023 சனிக்கிழமை அன்று தஞ்சாவூர் மாவட்டம், கும்பகோணம் வட்டம், திருச்சேறை அருகே மேலநாகம்பாடி கிராமத்தில் முருகையன் என்ற விவசாயின் வாழைத்தோட்டத்தில் சிவலிங்கத்தின் தலைப்பகுதி மட்டும்
பல நாட்களாக மண்ணுக்கு வெளியே தெரிந்து வந்துள்ளது.
இந்நிலையில் ஊர்ப் பொதுமக்கள் மற்றும் சிவனடியார்களால் சிவலிங்கம் தோண்டி எடுக்கப்பட்டது.
தோண்டி எடுக்கப்பட்ட சிவலிங்கம் 3½ அடி உயரத்தில் 4 மற்றும் 8 பட்டைகளுடன் இருந்தது.
பிரம்ம சூத்திர குறியீடு மற்றும் பாம்பின் உருவத்தை பின்பக்கத்தில் அமைத்திருப்பது சிறப்பான ஒன்று.
சிவலிங்கத்தின் அமைப்பு மற்றும் அவ்வாழைத் தோட்டத்தில் கிடைத்த செங்கற்களை வைத்துப் பார்க்கும்போது சுமார் 400 ஆண்டுகளுக்கும் முற்பட்ட சிவலிங்கம் என கருதலாம்.