திருக்கடவூர்
அன்னை அபிராமி உடனமர் அருள்மிகு அமிர்தகடேசுவரர் திருக்கோயிலில் தை அமாவாசை அன்று மாலை....
அன்னை அபிராமி தனது பக்தர் அபிராமிப் பட்டருக்காக அமாவாசை அன்று முழுநிலவு காட்டிய ஐதீகவிழா நடைபெறும்.
திருக்கடையூர் அபிராமி அம்மன் ஆலயத்தில், தை அமாவாசை அன்று மாலை 7 மணிக்கு மேல் தருமபுரம் ஆதீனம் பங்கேற்க அபிராமி பட்டர் உற்சவம் நடைபெறும்.
அப்போது அபிராமி அந்தாதி பாடப்படும். அந்த சமயத்தில் அபிராமி அம்மன் நவரத்தின அங்கி அணிந்து வீற்றிருப்பார்
ஒவ்வொரு
பாட்டின் நிறைவிலும் அபிராமி அம்மனுக்கு தங்கக் காசு சமர்ப்பித்து, தீபாராதனை செய்யப்படும்.
79 – வது பாடலின்போது ஆலய கொடி மரத்தின் அருகில் பவுர்ணமி தோன்றும் ஐதீக நிகழ்வு நடத்திக் காட்டப்படும்.
'தாரமர் கொன்றையும்' என்று துவங்கும் விநாயகர் வணக்கப் பாடலோடு சேர்த்து மணி மணியான 101 அந்தாதித் திருப்பாடல்களால் கோர்க்கப் பெற்றிருப்பது அபிராமி பட்டர் அருளியுள்ள அபிராமி அந்தாதி.
அனுதினமும் சில திருப்பாடல்களைப் பாராயணம் புரிந்து வந்தாலே போதும், வெகுவிரைவில் 100 பாடல்களிலும் பயிற்சி கைகூடி விடும், அத்தனை எளிமையான இனிமையான திருப்பாடல்கள்.
இப்பனுவலின் பாடல்கள் யாவுமே அதீத மந்திர சக்தி பொருந்தியவை ஆதலின் இன்ன பாடலுக்கு இன்ன பலன் எனும் சிந்தனையை விடுத்து வாரம் அல்லது மாதம் ஒருமுறையேனும் 100 அந்தாதிப் பாடல்களையும் முழுமையாய்ப் பாராயணம் புரிந்து அன்னை அபிராமியின் திருவருளால் நலமெலாம் பெற்று வாழ்வோம்.
🌼 *அபிராமி அந்தாதி.*
🌺தனம் தரும் கல்வி தரும் ஒரு நாளும் தளர்வறியா
🌺மனம் தரும் தெய்வ வடிவும் தரும் நெஞ்சில் வஞ்சமில்லா
🌺இனம் தரும் நல்லன எல்லாம் தரும் அன்பர் என்பவர்க்கே
குரங்கு, அணில், காகம் என மூன்றும் வழிபட்டு பேறு பெற்றதால் குரங்கணில்முட்டம் என இந்த தலம் வழங்கப்படுகின்றது.
வாலி, இந்திரன், எமன் இம்மூவரும் தங்களது முன்வினைப் பயனால்
வாலி குரங்காகவும்,
இந்திரன் அணிலாகவும்,
எமன் காகமாகவும் உருவம் பெற்று வருந்தி வாழ்ந்து வந்தனர்.
தங்களுடைய வினைப்பயன் நீங்க கயிலை நாதனை வேண்டி நின்றனர்.
சிவபெருமானின் அறிவுரைப்படி காஞ்சிபுரத்திற்கு தெற்கேயுள்ள சிவாலயம் சென்று வழிபட்டால் அவர்களுடைய வினைப்பயன் நீங்கி பழைய நிலைக்கு திரும்புவார்கள் என இறைவன் வழிகாட்டினான்.
அதன்படியே இம்மூவரும் வழிபட்டு தங்கள் இயல்பு நிலையை அடைந்தார்கள் என்பது தலபுராணம்.
திருப்பங்கள் தரும் திருவோணம் வாழ்வில் மாற்றங்களும் ஏற்றங்களும் நிகழ, வழிபாடுகள் மிக அவசியம்.
வரும் இடர்கள், கவலைகள் அனைத்துமே கர்ம வினைகள் தான்.
ஆனால் அவற்றை கடந்து தான் செல்ல வேண்டும்.
ஆனால் கர்ம வினைகளை குறைத்து, வளமான வாழ்வளிப்பது வழிபாடுகள் என்றால் அது மிகையாகாது.
அவரவர் நட்சத்திரங்களுக்குரிய தெய்வங்களை வழிபடுவதும், நட்சத்திர நாளில் மேற்கொள்ளும் வழிபாடுகளும் விரதங்களும் கைமேல் பலனளிப்பவை.
27 நட்சத்திரங்கள் இருந்தாலும் சிவனுக்குரிய திருவாதிரை மற்றும் பெருமாளுக்குரிய திருவோணம் இவ்விரண்டு நட்சத்திரங்கள் தான் “திரு” என்ற அடைமொழியுடன் சிறப்பித்துக் கூறப்படுகிறது.
திருவோணம் நட்சத்திரத்தில் பிறந்தவர்கள்
சந்திரனின் இரண்டாவது பெரிய நட்சத்திரம் திருவோணம்.
21.01.2023 சனிக்கிழமை அன்று தஞ்சாவூர் மாவட்டம், கும்பகோணம் வட்டம், திருச்சேறை அருகே மேலநாகம்பாடி கிராமத்தில் முருகையன் என்ற விவசாயின் வாழைத்தோட்டத்தில் சிவலிங்கத்தின் தலைப்பகுதி மட்டும்
பல நாட்களாக மண்ணுக்கு வெளியே தெரிந்து வந்துள்ளது.
இந்நிலையில் ஊர்ப் பொதுமக்கள் மற்றும் சிவனடியார்களால் சிவலிங்கம் தோண்டி எடுக்கப்பட்டது.
தோண்டி எடுக்கப்பட்ட சிவலிங்கம் 3½ அடி உயரத்தில் 4 மற்றும் 8 பட்டைகளுடன் இருந்தது.
பிரம்ம சூத்திர குறியீடு மற்றும் பாம்பின் உருவத்தை பின்பக்கத்தில் அமைத்திருப்பது சிறப்பான ஒன்று.
சிவலிங்கத்தின் அமைப்பு மற்றும் அவ்வாழைத் தோட்டத்தில் கிடைத்த செங்கற்களை வைத்துப் பார்க்கும்போது சுமார் 400 ஆண்டுகளுக்கும் முற்பட்ட சிவலிங்கம் என கருதலாம்.