நீங்க எல்லோருமே பார்த்த, கேட்ட ஒரு விசயம் தான் இது. ஆனால் இத பற்றி நீங்க பெருசா கண்டுக்காம விட்டுட்டீங்க.
அதனால இனிமேல அத கவனிக்க மறக்காதீங்க.
சரி விசயத்துக்கு வருவோம்.
ஒரு பொங்கலோ, தீபாவளியோ, கிறிஸ்துமஸோ, புத்தாண்டோ வந்துச்சு அப்படினா என்ன நடக்கும்?
எல்லோருமே அவங்கவங்க குடும்பத்தோட அந்த பண்டிகைகளை கொண்டாடனும்னு உங்க சொந்த ஊருக்கு கிளம்பி போவீங்க, சரிதானே?
உண்மைய சொல்லனும்னா, சென்னையில் இருந்து ஏராளமான பேருந்துகள் தென் மாவட்டங்களுக்கு இயக்கப்படும். சரிதானே?
இப்போதான் நீங்க கவனிக்க வேண்டிய விசயமே,
அந்த நாட்களில் சிறப்பு பேருந்துகள் அப்படினு சொல்லி கிட்டத்தட்ட 5000 முதல் 6000 பேருந்துகள் சென்னையில் இருந்து இயக்கப்படுகிறது, இப்படி ஒரு செய்தி ப்ரேக்கிங் நியூசாக வந்துக்கிட்டே இருக்கும்.
இப்போது தான் நீங்க யோசிக்கனும்,
இதுல சிறப்பு பேருந்துகள் அப்படினா என்னனு நீங்க நினைக்கிறீங்க?
கூடுதலாக பேருந்துகளை கொள்முதல் செய்து இயக்கப் போறாங்க அப்படினு நெனைக்கிறீங்களோ?
வாய்ப்பேயில்லை.
அவங்கவங்க ஊர்ல ஓடிக்கிட்டு இருக்குற பேருந்துகளை நிறுத்தி, அதுல சிறப்பு பேருந்து அப்படினு பேப்பர்ல எழுதி ஒட்டிட்டு , சென்னையை நோக்கி அந்த பண்டிகை நாட்களுக்கு இரண்டு நாட்களுக்கு முன்னாடி அனுப்பி விட்டுருவாங்க.
அதுக்கப்புறம் அந்த சிறப்பு பேருந்துகளில் சென்னையே கதின்னு கிடந்த மக்கள் அந்த ஓரிரு நாள் விடுமுறையை கொண்டாட ஏறி வருவாங்க.
இதுல என்ன கொடுமை தெரியுங்களா?
அந்த சிறப்பு பேருந்துகள் அதற்கு முன்பு வரை நம்மூரில் ஓடிக்கிட்டு இருந்தது. அப்படி இருக்கும் போது அதை சென்னையை நோக்கி அனுப்பி விட்டால், அதுநாள் வரை அந்த பேருந்தில் பயணித்த உள்ளூர் மக்களின் நிலை என்ன?
இதனால் உள்ளூரில் பேருந்துகளுக்கு தட்டுப்பாடு ஏற்பட்டு , உள்ளூர் மக்கள் படிக்கட்டுகளில் தொங்கி கொண்டு பயணிக்கும் ஆபத்தான நிலைக்கு தள்ளப்படுகின்றனர்.
மேலும் கல்லூரி முடிந்து வீடுதிரும்ப காத்திருக்கும் உள்ளூர் மாணவர்கள் பேருந்து தட்டுப்பாடால் இருசக்கர வாகனங்களில் அனுமதிக்க பட்ட நபர்களை விட கூடுதலாக பயணிக்கும் சூழல் உருவாகிறது.
மேலும் விடுதியில் தங்கியிருக்கும் மாணவர்கள் தங்களது உடைமைகளோடு தென் மாவட்ட பேருந்து நிலையங்களில் படும் பாடு மிகவும் கவலைக்குரியது.
மிகவும் முக்கியமாக, உள்ளூரில் மாற்றுத்திறனாளிகளின் நிலைமையை கொஞ்சம் சிந்தித்து பாருங்கள். படிக்கட்டு வரை நிரம்பி வழியும் கூட்டத்தில் அவர்களால் ஏறவும் முடியாது, இருக்கையில் அமரவும் முடியாது. அவர்கள் பலமணிநேரம் காத்திருப்பர் அல்லது அன்றைய தினம் விடுமுறை எடுத்து இருப்பர்.
இதுமட்டுமின்றி அவ்வாறு இயக்கப்படும் சிறப்பு பேருந்துகளின் இருக்கைகள் , சொகுசு பேருந்துகளில் இருக்கைகளை தேவைக்கேற்ப சாய்த்து கொள்ளும் வசதி இல்லாத காரணத்தால் , பண்டிகைகளை கொண்டாட ஊருக்கு வரும் இளைஞர்கள் பண்டிகை நாளன்றும் கூட உடல்வலியால் பாதிக்கப்படுகின்றனர்.
சிறப்பு பேருந்துகளை இயக்குவது வரவேற்புக்கு உரியது.
ஆனால் ஒருவரின் பசியை தீர்க்க மற்றொருவரை பட்டினியாக்குவது தான் தவறு.
விழா காலங்களுக்கு என்று பிரத்யேகமாக கூடுதல் பேருந்துகள் கொள்முதல்
செய்யபட வேண்டும்.
சென்னையில் இருப்பவர்கள் மட்டுமே பண்டிகை காலங்களில் நெருக்கடி இல்லாமல் பயணிக்க வேண்டும் என்றும், மற்ற மாவட்ட மக்கள் எப்படியோ சென்று விடுவார்கள் என்றும் நினைப்பது தவறு.
ஏனெனில் சென்னை முதல் குமரி வரை தமிழ்நாடு தான். சென்னை மட்டுமே அல்ல.
நம் மக்கள் சமீப காலமாக அதிக அளவில் ரெஸ்டாரண்ட்டுக்கு போய் சாப்பிடுதல், மால்கள் மற்றும் பொழுதுபோக்கும் இடங்களில் தேவையற்ற செலவுகளை யோசிக்காமல் செய்கிறார்கள்....
பல திரையரங்குகளில் ஒரு டப்பா பாப்கார்ன் மனசாட்சியே இல்லாமல் நூறு ரூபாய்க்கு விற்கப்பட்டாலும் பலர் க்யூவில் நின்று வாங்கி பிள்ளைகளுக்கு தருகிறார்கள்......
முன்பெல்லாம் வருடத்திற்கு ஒரு முறை பொருட்காட்சி திடலில் மட்டும் சற்று செலவு செய்யும் தமிழ் குடும்பங்கள் இப்போது மாதத்தில் பல நாட்கள் இப்படி இஷ்டத்திற்கு வீண் செலவு செய்வது சாதாரனமாகிவிட்டது.....
திருச்சியின் ஒரு பகுதியாகவே திகழ்வது உறையூர். அருள்மிகு காந்திமதி அம்மன் உடனாய அருள்மிகு ஐவண்ணநாதர் கோயில் கொண்டிருக்கும் தலம் இது. இவ்வூரை ‘உலகில் வளர் அணிக்கு எல்லாம் உள்ளுறை ஊர் ஆம் உறையூர்’ எனப் போற்றுகிறார் சேக்கிழார்.
1
வீராதித்த சோழ மன்னரின் யானையை, கோழி ஒன்று எதிர்த்து தனது மூக்கால் (அலகால்) குத்திக் காயப்படுத்த, அத்தகு வீரம் நோக்கி, ‘கோழி’ என்றும் ‘கோழியூர்’ என்றும் ‘மூக்கீச்வரம்’ (மூக்கால் குத்தியதால்) என்றும் பெயர் பெற்ற ஊர் இது என்பர்!
2
பிரம்மதேவன் வழிபட்ட ஊர் இது. அவர் இங்கு வந்து வணங் கியபோது, ஐந்து வேளைகளில், ஐந்து நிறங்களில் இறைவன் காட்சி கொடுத்தாராம் ஈசன். அதேபோல், உதங்க முனிவருக்கும் ஐந்து வண்ணங்களில் தோற்றம் தந்தாராம்.
சுமார் 1000 வருடங்களுக்கு முன்பே பெண்களை ஆலய நிர்வாகத்தில் ஈடுபடுத்தி, சமூகமே அறியும் வண்ணம் பெண்களுக்குப் பல சமயப் பொறுப்புக்களைக் கொடுத்தார்.
அத்துழாய்,
ஆண்டாள்,
பொன்னாச்சி,
தேவகி,
அம்மங்கி,
பருத்திக் கொல்லை அம்மாள்,
திருநறையூர் அம்மாள்,
எதிராச வல்லி என்று எத்தனை எத்தனை பெண்கள் அவரது அரங்கத்துக் குழாமில்!
அவர் பெண் குலம் தழைக்க வந்த பெரும்பூதூர் மாமுனிகள்.
-----
என்ன செய்தார் ராமானுஜர்?
ஒரு இஸ்லாமியப் பெண்ணுக்கு இந்துக் கோயிலில் பூஜைகள்!
அரங்கன் காலடியில் துலுக்க நாச்சியார் பிரதிஷ்டை. கனவிலும் நினைத்துப் பார்க்க முடியுமா? அதுவும் சுமார் ஆயிரம் ஆண்டுக்கு முன்பு?
அரசர் ஒருவரிடம், அந்த நாட்டின் சிற்பி நான்கு பொம்மைகளை கொண்டு வந்து கொடுத்தார். அரசர் கோபமாக நான் என்ன சின்னக் குழந்தையா? இதை வைத்து விளையாடுவதற்கு என்று கேட்டார்.
சிற்பி, இல்லை அரசே, இது நம் இளவரசருக்கு, இந்த பொம்மைகளில் சில விசேஷங்கள் உண்டு.
நான்கு பொம்மைகளின் ஒரு பக்க காதிலும் ஓட்டை இருக்கிறது பாருங்கள் என்றார்.
இதில் என்ன விசேஷம் இருக்கிறது? என்று அரசர் கேட்டார். முதல் பொம்மையை அரசரிடம் கொடுத்து, கூடவே ஒரு மெல்லிய சங்கிலியையும் கொடுத்து அதன் காதில் இருக்கும் ஓட்டையில் விடச்சொன்னார் சிற்பி.