பள்ளி காலங்களிலும் சரி, கல்லூரியின் ஆரம்ப நாட்களிலும் சரி இயல்பாகவே சமூகத்தின் பெரும்பான்மை மக்களால் காரணமின்றி திணிக்கப்படும் கலைஞர் எதிர்ப்பு மனநிலைக்கு நடுவிலேயே வளர்ந்தேன். அரசியல் பற்றிய விழிப்புணர்வு சுத்தமாக இருந்ததில்லை,
எந்த புத்தகத்தையும் படித்தது இல்லை, எந்த அரசியல் விவரங்களும் தெரியாது, ஆனால் கலைஞரை பிடிக்காது. ஜெயலலிதாவை இரும்பு பெண் என்பேன். எம்ஜிஆரை பொன்மனச்செம்மல் என்பேன். கலைஞரை திருட்டு ரயில் ஏறி வந்தவர் என்பேன். திமுகவை திருடர் முன்னேற்ற கழகம் என்பேன், இப்படித்தான் இருந்தேன்.
ஈழத்தை பற்றிய புரிதலும் இருக்கவில்லை, ஒரு மாநில முதல்வரின் அதிகாரங்கள் என்ன என்பதும் தெரிந்ததில்லை. ஏதோ அவரே முன்னின்று சென்று லட்சக்கணக்கான தமிழ் மக்களை கொன்றதை போல பேசிவந்தேன். அவரின் அரைநாள் உண்ணாவிரதத்திற்கான காரணம் என்ன என்பதை கூட அறிந்திருக்காமல் கிண்டல் செய்து வந்தேன்.
2ஜி என்றாலும் என்னவென்று தெரியாது. ஒரு லட்சத்து எழுபத்து ஆறாயிரம் கோடிக்கு எத்தனை பூஜ்ஜியம் என்றும் தெரியாது. ஆனால் அவர் கொள்ளை அடித்த பணத்தை எல்லாம் பத்து ரூபாய் காசுகளாக மாற்றி அடுக்கி வைத்தால் நிலாவிற்கே செல்லும் என்பது போன்ற கதைகளை எல்லாம் நம்பினேன்.
தேசிய அரசியல் எது, திராவிட அரசியல் எது என்பதை அறிந்திராமல் காமராசரை எதிர்த்தார் , எம்ஜியாரை எதிர்த்தார், நல்லவர்களை எதிர்க்கும் இவரா நல்லவர் என்று கேலி செய்திருக்கிறேன். ஒருவர் ஊழல் செய்ததால் ஆட்சியை கலைக்க முடியுமா என்ற அடிப்படை புரிதல் கூட இல்லாமல்,
விஞ்ஞான ரீதியான ஊழல் செய்தவர் என்ற போலி பிரச்சாத்தை நம்பி பகடி (கிண்டல்) செய்தேன்.
இலவச திட்டங்களை எல்லாம் கொள்ளையடிக்க செய்யும் ஒரு புதிய முயற்சியாகவே பார்த்து பழகியிருந்தேன்.
இட ஒதுக்கீடு பற்றிய புரிதல் வரும்முன் 69 சதவீத இட ஒதுக்கீட்டால்தான் திறமையானவர்களுக்கு வேலை கிடைப்பதில்லை என முட்டாள்த்தனமாக வாதாடி இருக்கின்றேன். ஆம் இவையெல்லாம் திராவிட அரசியலை பற்றி கொஞ்சம் கூட புரிதல் இல்லாத காலத்தில் பேசியவைதான்..
தமிழக எல்லைகளை கடந்து கொஞ்சம் வெளியே, சமூக வலைத்தளங்களில் கால்பதிக்க ஆரம்பித்த காலங்களில் கூட பெரிய அளவிளான மாற்றம் எல்லாம் இருந்ததில்லை. போகப்போக இங்கு முகநூலில் கிடைத்த நண்பர்களினால்தான் திராவிட அரசியலை படிக்க ஆரம்பித்தேன்.
பார்ப்பனியத்தை புரிந்து கொள்ளவும், பெரியாரியத்தின் முக்கியத்துவத்தை உணரவும் பல நாட்கள் தேவைப்பட்டன. தயக்கமின்றி நண்பர்களிடம் விவாதித்து தெரிந்து கொண்டேன். நிறைய படிக்க வேண்டிய தேவையில்லை,கொஞ்சம் சமூக நீதி பற்றியும் இந்தியாவில் மற்ற மாநிலங்களுடன் ஒப்பிட்டு தமிழ்நாட்டின் வளர்ச்சி,
பற்றியும் படித்திருந்தால் போதும், முதல்வராக கலைஞர் செய்த சாதனைகளுக்கு நிகர் வேறு யாரும் இல்லை என்பதை புரிந்து கொள்ளலாம்.
ஒரு ரூபாய் சம்பளம் வாங்கி, பல கோடி மதிப்புள்ள பங்களா, எஸ்டேட், ஆடம்பர வாழ்க்கை வாழ்ந்த - ஊழல் குற்றவாளியான ஏ ஒன்
ஜெயலலிதாவையும், எம்ஜியாரையும்,
வீரமானவர்களாக பார்த்துவிட்டு அனைவரையும் அரவணைத்து செல்லும் கலைஞரை ஏதோ பதிவிக்காக இப்படி செய்கிறார் என்று பேசுபவர்களுக்கு தெரியப்போவதில்லை. நெருக்கடி காலத்தில் தனித்தீவாக தமிழகம் இருந்ததையும், சர்வாதிகாரியாக இருந்த இந்திய ஒன்றியத்தின் பிரதமரயே மிசாவை காட்டி மிரட்டினால்,
தமிழகத்திற்கு வர விசா வாங்க வேண்டியிருக்கும் என்றதும், மாநில கட்சிகளை தடை செய்வேன் என்ற இந்திராவின் அறிக்கைக்கு அஞ்சாமல் தைரியம் இருந்தால் திமுகவை தடை செய்யட்டும் என முழங்கியதும், கல்லக்குடி ரயில் மறியல் போராட்டமும், மாநில முதல்வர்களுக்கு கொடி ஏற்றும் உரிமை வாங்கி கொடுத்ததும்,
ஒன்றிய மாநில உறவிற்க்காக ராஜமன்னார் குழு அமைத்து மத்திய அரசுக்கு ஆலோசனை வழங்கிய தைரியமும் கலைஞரை தவிர யாருக்கும் இருந்தது இல்லை. இருக்க போவதும் இல்லை
பேருந்துகளை நாட்டுடைமை ஆக்கியது, கை ரிக்ஷாக்களை ஒழித்தது, பிச்சக்காரர்களுக்கு நலவாரியம், எல்லா நகரங்களிலும் அரசு மருத்துவமனைகள்,
அனைத்து கிராமங்களுக்கும் பேருந்து வசதி, தமிழகம் முழுவதும் தரமான சாலை வசதி , எல்லா மாவட்டங்களிலும் ஒரு மருத்துவக்கல்லூரி, 69 சதவீத இட ஒதுக்கீட்டை திருத்தி அமைத்தது, விவசாயிகளுக்கு இலவச மின்சாரம், பள்ளி செல்லும் குழந்தைகளுக்கு இலவச பஸ்பாஸ், தமிழகத்திலேயே அதிக அணைகள் கட்டியது,
மகளிர் சுய உதவிக் குழுக்கள் அமைத்தது, வேலை வாய்ப்பில் பெண்களுக்கு 30 சதவீத இட ஒதுக்கீடு, விதவைகளுக்கு மறுமண உதவித்திட்டம், சாதி மறுப்பு திருமண திட்டம், அறிவியல் துறையின் வளர்ச்சிக்கு இந்தியாவிலேயே முதன்முதலில் டைடல் பார்க் அமைத்தது,
சிப்காட் எல்காட் என தமிழகம் முழுவதும் தொழிற் பூங்காக்கள், சத்துணவில் முட்டை வழங்கும் திட்டம், கலைஞர் காப்பீட்டு திட்டம், இந்து சமய அறநிலையத்துறை, அனைத்து சாதியினரும் அர்ச்சகர் ஆகலாம் திட்டம், என பட்டியல் நீண்டு கொண்டே செல்லும்
விமர்சனங்கள் இல்லாத தலைவர் என்று யாரையும் கூறிவிட முடியாது. தன்னை தனிப்பட்ட முறையில் தாக்கியவர்களையும் நலன் விசாரிக்கும் பழக்கம் கொண்டவர். இலக்கியவாதிகளை கெளரவிப்பது தமிழ் செம்மொழி மாநாடு , திருவள்ளுவர் சிலை, நாடக ஆசிரியர், இலக்கியவாதி, எழுத்தாளர், பேச்சாளர் என
இவர் தடம் பதிக்காத துறைகளே இல்லை என கூறலாம்.
ஆனால் தமிழக மக்கள் இந்த ஓய்வறியா சூரியனுக்கு கொடுத்த அங்கீகாரம் மிகக்குறைவே. அதைப்பற்றி எல்லாம் அவர் கவலைப்பட்டாதவும் தெரியவில்லை அடிமைப்பட்டு கிடந்த தமிழகத்தில் பெரியார் ஊன்றிய சுயமரியாதை, பகுத்தறிவை தண்ணீர் விட்டு வளர்த்தார் அண்ணா.
அதை ஆளென வளர செய்ததில் அவருடைய சமூக நீதி திட்டங்களின் பங்களிப்பு அளப்பரியது. இந்திய துணைக்கண்ட வரலாற்றில் பகுத்தறிவு , சுயமரியாதை , சமூக நீதி பாதையில் தமிழகத்தை அழைத்து சென்றதில் கலைஞரின் பங்கை யாராலும் நிரப்ப முடியாது. ஓய்வறியா சூரியன் அவர்.❤️🖤
ஆம் கலைஞரை எனக்கு பிடிக்காது. இவரை பற்றிய அடிப்படை எதுவும் தெரியாத வரை- இது ஏறக்குறைய வாட்ஸ் ஆப் அரசியல் படிக்கும் அனைவருக்கும் ஏற்ற பதிவு.
சமஸ்கிருதத்தை ஆதரிக்கும் பார்ப்பனர்கள், தமிழ் மொழியை வெறுப்பது இல்லை
-தினமலம்!
தமிழை நீச பாசை என்று சொன்னது யாருடா?
பூஜை வேளையில் தமிழில் பேசமாட்டேன் என்ற 🐕யாருடா குடுமி கூட்டமே! 👶கைபர் - போலன் பிச்சைக்கார கூட்டமே! 👶
டிசம்பர் 29, 2022 oneindia
👇👇👇👇👇
சமஸ்கிருதத்தை பிரபலப்படுத்த 3 ஆண்டுகளில் ரூ.643 கோடி செலவு!
2017-18ம் ஆண்டில் ரூ.198.31 கோடி.
2018-19ம் ஆண்டில் ரூ.214.38 கோடி.
2019-20ம் ஆண்டில் ரூ.231.15 கோடி செலவிடப்பட்டுள்ளது. அதேவேளையில் மனிதவள மேம்பாட்டு அமைச்சகத்தின் கீழ் சென்னையைச் சேர்ந்த,
தன்னாட்சி அமைப்பான சென்ட்ரல் இன்ஸ்டிடியூட் ஆப் கிளாசிக்கல்தமிழ் (சி.ஐ.சி.டி) மூலம் வழங்கப்படும் தமிழுக்கான மையத்தின் செலவு கணிசமாகக் குறைந்துள்ளது.
*குஜராத் கலவரம் - ஏராளமானோர் படுகொலைகளுக்கு மோடிதான் காரணம் என ஆதாரப்பூர்வமாக நிரூபித்த BBC நிறுவனம்!*
*இரண்டாவது ஆவணப்படம் வெளியாகாமல் தடுக்க முயற்சிக்கும் RSS + BJP +மோடி!*
பிரதமர் பதவியையும், ஒன்றிய அரசு அதிகாரத்தையும் பயன்படுத்தி, குஜராத் கலவரம் குறித்த எல்லா வழக்குகளையும் மொத்தமாக காலி செய்து விட்டோம் என்ற நிம்மதியில் இருந்த மோடிக்கு மிகப்பெரிய ஆப்பாக அமைந்து விட்டது BBC நிறுவனம் வெளியிட்டுள்ள ஆவணப்படத்தின்
முதல் பகுதி.
தன்னுடைய முகத்திரை கிழிந்து விட்ட அச்சத்தில் உள்ள மோடி, அந்த ஆவணப் படத்தின் இரண்டாவது பகுதி வெளியாகி விடக்கூடாது என நாட்டின் அனைத்து அதிகார அமைப்புகளையும் முடுக்கிவிட்டுள்ளார்.
கடந்த 2002ஆம் ஆண்டு பிப்ரவரி 27 அன்று கோத்ரா ரயில் எரிப்பு சம்பவத்தில் 59 பேர் உயிரிழந்ததை தொடர்ந்து,
முதல்வராக இருந்த காலத்தில்...
பெட்ரோல் போட காசில்லாமல் கஷ்டப்பட்டார் என அவரோடு இருந்த அதிகாரி சுவாமிநாதன் எழுதி இருக்கிறார்!
அண்ணா இறந்த பொழுது,
நுங்கம்பாக்கம் இந்தியன் வங்கியில் ரூபாய் 5000 மட்டும் கையிருப்பு இருந்ததாக தகவல்!
எழுத்தாளர் ஜெயகாந்தன் அண்ணா நீங்கள் எழுதுவது சிறுகதையே அல்ல என்று விமர்சித்தது கூட,ஆம் என்று ஒப்புக் கொண்ட பெருந்தகை மனிதர்!
நேரு ஒரு முறை நான்சென்ஸ் என்று சொன்னபோது,
"அவர் கட்டிமுடிக்கப்பட்ட கோபுரம்,நாங்கள் கொட்டிக்கிடக்கிற செங்கல்!
என நாகரிக வார்த்தை மட்டுமே பயன்படுத்தினார்.
19 வருட பிரிவில், பெரியாரை விமர்சித்தது கிடையாது!
இவர்களின் விரல்களை நருக்குவேன் என்று சொன்ன காமராஜரை கூட, குணாளா குலக்கொழுந்தே என்றுதான் கூறியிருக்கிறார்!
ஈவிகே சம்பத், தோழர் அண்ணாதுரை என்ற போது கூட, "வைரக் கடுக்கன்" காது புண்ணாகி விடும் என்று கழட்டி வைத்திருக்கிறேன் என்றவர்!