தன் நாட்டு குடிமக்கள் வெளிநாடுகளில் இறந்து போனால் மரணத்திற்கான காரணத்தை ஆராய்ந்து இங்கிலாந்து அரசுக்கு அறிக்கை சமர்ப்பிக்க வேண்டியது எல்லா நாடுகளிலும் உள்ள பிரிட்டிஷ் ஹை கமிஷனின் பணி.
தன்னுடைய மூதாதையர்கள் வாழ்ந்த வீட்டைப் பார்வையிட குஜராத் வந்த ஒரே குடும்பத்தை சேர்ந்த இருவர் மற்றும் அவர்களுடைய நண்பர் என மொத்தம் மூன்று இங்கிலாந்து குடிமக்கள் 2002ல் நடந்த இஸ்லாமியர்களுக்கு எதிரான வன்முறையில் அஹமதாபாத் அருகே கொல்லப்படுகிறார்கள்.
இவர்கள் மரணம் கலவரத்தால் தற்செயலாக நிகழ்ந்தல்ல. குஜராத் மாநில அரசு நிர்வாகத்தின் ஆதரவுடன் நடத்தப்பட்ட திட்டமிட்ட வன்முறையால் நிகழ்ந்தது என்பதை ஆதாரங்களுடன் நிரூபித்திருக்கிறது இங்கிலாந்து அரசு தொலைக்காட்சியான பிபிசி.
தன் நாட்டு மக்கள் எங்கையோ கலவரத்தில் செத்துப்போனதை அப்படியே விட்டுவிட முடியாது என இங்கிலாந்து அரசு மேற்கொண்ட தொடர் நடவடிக்கைகளும், அதையடுத்து குஜராத் வன்முறையில் நடந்தது என்னவென்று பிபிசி வெளிக்கொணர்ந்த படைப்புதான் தடைசெய்யப்பட்ட அந்த ஆவணப்படம்.
Rest is History.
• • •
Missing some Tweet in this thread? You can try to
force a refresh
Zee தமிழில் பெரியாராக நடித்த குழந்தைகள், வட மாநில தொழிலாளர்கள் தமிழ்நாட்டைப் பற்றி நீயா நானாவில் புகழ்ந்தது, கற்பு- காதல்- குடும்பம் என தமிழா தமிழா நிகழ்ச்சி எடுத்தாண்ட தலைப்புகள், சீரியல் ஒன்றில் பெண் கல்வி பற்றி பேசி ட்ரெண்டான பாட்டி.. …
ஆட்டோவில் ஒட்டியிருந்த பெரியார் ஸ்டிக்கருக்கு சூடம் காட்டி வரவேற்ற இன்னொரு குடும்பத்தலைவி என விஜய், Zee சீரியல்களும் நிகழ்ச்சிகளும் வணிக நலனுக்கேனும் தமிழ்நாட்டின் சமூக அரசியல் பற்றி பேச ஆரம்பித்து விட்டன.
இதுவரை மஹா கணபதிம் பாடிக்கொண்டிருந்த சூப்பர் சிங்கர்கள் கருப்பண்ண சாமிக்கு வந்து சேர்ந்திருக்கிறார்கள். தமிழ்நாட்டின் தொலைக்காட்சி வணிக தளம் எப்போதோ சமூக அரசியலை தொடத் தொடங்கிவிட்டது. நீங்கள் விரும்பினாலும் விரும்பாவிட்டாலும் இனியும் இது தொடர்ந்தே தீரும்.
எந்த மாமன்னனுக்கும் வானத்திலிருந்து காசு கொட்டவில்லை. மந்திரத்தில் நெல் விளையவில்லை. உழைத்து சம்பாதித்த எல்லா சாதி மக்களின் வரிப்பணத்தில்தான் கோயில்களை, கோட்டைகளை, ஏரிகளை கட்டினார்கள். காடுகளை சீரமைத்து நிலங்களை வயல்களாக்கினார்கள்.
உழைப்பில் விளைந்த காசும், கட்டுமானங்களைக் கட்டிய உழைப்பும், மண்ணின் எல்லா மக்களுக்கும் சொந்தம்.
உழைக்காமலேயே பிறப்பின் அடிப்படையிலேயே அதெப்படி சில சாதிகள் மட்டும் கோயிலை-கோட்டையை -நிலத்தை-அதிகாரத்தை சொந்தம் கொண்டாடிவிட முடியும் என்று கேள்வி கேட்பதும், அதையொட்டிய கதையாடல்களுமே ஈராயிரம் ஆண்டுகால வரலாறு கொண்ட தமிழ்த் தலைமுறைக்கு அறிமுகம் செய்ய வேண்டிய அரசியல் பார்வை.
மைனாரிட்டி திமுக என ஐந்தாண்டுகள் திரும்ப திரும்ப முழங்கிக் கொண்டே இருந்தாரே தவிர, 2006 திமுக கூட்டணி அரசை கவிழ்க்க ஜெ., முயற்சிக்கவில்லை. மக்கள் தீர்ப்பை பெற எதையும் வளைப்பாரே தவிர, மக்கள் தீர்ப்பிற்கு எதிராக ஜெ., நின்றதில்லை.
2017 & 2019 லும் தமிழ்நாட்டிலும் அப்படி ஒரு நிலைமை இருந்தது. 100 எம்எல்ஏக்களுடன் தமிழக வரலாற்றில் ஒரு எதிர்க்கட்சி கூட்டணி அசுர பலத்தோடு எழுந்து நின்றது. குதிரை பேரம் நடத்தப்பட்டிருந்தால் காட்சிகள் மாறியிருக்கும். ஆட்சி கவிழ்ந்திருக்கும்.
ஆனால் பின்வாசல் வழியாக வருவது ஜனநாயகத்திற்கு இழுக்கு என பொதுத் தேர்தலுக்காக நான்கு ஆண்டுகள் காத்திருந்தார் மு க ஸ்டாலின்.
தமிழ்நாட்ல எப்ப கடைசியா தீவிரவாதிய பாத்தீங்க ? எந்த ஹைஜாக் நடந்துச்சு? பாகிஸ்தானுக்கும் தமிழ்நாட்டுக்கும் என்னய்யா சம்மந்தம்? விஜயகாந்தே Outdatedன்னு கிழிச்சுப் போட்ட ஸ்க்ரிப்ட்ய்யா இது.
இங்க ஒரு முஸ்லீம் நிம்மதியா கடை வைச்சு நடத்த முடியல, முஸ்லீம் புள்ளைங்க ஸ்கூல் காலேஜ்ல படிக்க போக முடியலைன்னு அந்த சமூகமே கதறிட்டு இருக்கு.
சமூகத்துல சுத்தி என்ன நடக்குதுன்னே தெரியாம எதுக்குய்யா படம் எடுக்குறீங்க ? முஸ்லீம்ன்னா தீவிரவாதின்னு பொது புத்திய திரும்ப திரும்ப சொல்றதுக்கு எதுக்கு இவ்ளோ செலவு? பேப்பர், டிவில நியூஸ்லாம் பாப்பீங்களா இல்லையா?