Nelson Xavier Profile picture
Journalist || Tweets are Personal || பிறப்பொக்கும் எல்லா உயிர்க்கும் ✨
Feb 4, 2023 5 tweets 1 min read
மெட்ராஸ் படத்திற்கான சுந்தர் ஸ்ரீனிவாஸின் மதிப்புரையிது.
“Dude இந்த திராவிடம்,communism, தமிழ்தேசியம் Nothing will help dude நம் கைகளில் இருக்கிற ஒரே ஆயுதம் நம் குழந்தைகள்தான்.என் குழந்தைக்குத் தான்என்ன ஜாதி என்றுமட்டுமல்ல,ஜாதியென்றாலே என்னவென்று தெரியாமல்தான் வளர்ப்பேன் dude.” உண்மையில் நம் பிள்ளைகளுக்கு நாம் செய்ய வேண்டியது என்ன தெரியுமா? எப்படி இங்கு சாதி உருவானது? ஏன் சாதியின் பெயரால் நம்மை பிரித்து வைத்திருக்கிறார்கள்? பிரித்து வைத்ததினால் பலன் பெற்றது யார்? யார் ? நம்முடைய சாதி என்ன ? கடவுளைப் போல் சாதியை ஏன் நம்மால் மாற்றிக் கொள்ள முடியவில்லை?
Jan 25, 2023 4 tweets 1 min read
#BBCDocumentary

தன் நாட்டு குடிமக்கள் வெளிநாடுகளில் இறந்து போனால் மரணத்திற்கான காரணத்தை ஆராய்ந்து இங்கிலாந்து அரசுக்கு அறிக்கை சமர்ப்பிக்க வேண்டியது எல்லா நாடுகளிலும் உள்ள பிரிட்டிஷ் ஹை கமிஷனின் பணி. தன்னுடைய மூதாதையர்கள் வாழ்ந்த வீட்டைப் பார்வையிட குஜராத் வந்த ஒரே குடும்பத்தை சேர்ந்த இருவர் மற்றும் அவர்களுடைய நண்பர் என மொத்தம் மூன்று இங்கிலாந்து குடிமக்கள் 2002ல் நடந்த இஸ்லாமியர்களுக்கு எதிரான வன்முறையில் அஹமதாபாத் அருகே கொல்லப்படுகிறார்கள்.
Jan 18, 2023 8 tweets 1 min read
Zee தமிழில் பெரியாராக நடித்த குழந்தைகள், வட மாநில தொழிலாளர்கள் தமிழ்நாட்டைப் பற்றி நீயா நானாவில் புகழ்ந்தது, கற்பு- காதல்- குடும்பம் என தமிழா தமிழா நிகழ்ச்சி எடுத்தாண்ட தலைப்புகள், சீரியல் ஒன்றில் பெண் கல்வி பற்றி பேசி ட்ரெண்டான பாட்டி.. … ஆட்டோவில் ஒட்டியிருந்த பெரியார் ஸ்டிக்கருக்கு சூடம் காட்டி வரவேற்ற இன்னொரு குடும்பத்தலைவி என விஜய், Zee சீரியல்களும் நிகழ்ச்சிகளும் வணிக நலனுக்கேனும் தமிழ்நாட்டின் சமூக அரசியல் பற்றி பேச ஆரம்பித்து விட்டன.
Oct 3, 2022 5 tweets 1 min read
எந்த மாமன்னனுக்கும் வானத்திலிருந்து காசு கொட்டவில்லை. மந்திரத்தில் நெல் விளையவில்லை. உழைத்து சம்பாதித்த எல்லா சாதி மக்களின் வரிப்பணத்தில்தான் கோயில்களை, கோட்டைகளை, ஏரிகளை கட்டினார்கள். காடுகளை சீரமைத்து நிலங்களை வயல்களாக்கினார்கள். உழைப்பில் விளைந்த காசும், கட்டுமானங்களைக் கட்டிய உழைப்பும், மண்ணின் எல்லா மக்களுக்கும் சொந்தம்.
Jun 30, 2022 6 tweets 1 min read
மைனாரிட்டி திமுக என ஐந்தாண்டுகள் திரும்ப திரும்ப முழங்கிக் கொண்டே இருந்தாரே தவிர, 2006 திமுக கூட்டணி அரசை கவிழ்க்க ஜெ., முயற்சிக்கவில்லை. மக்கள் தீர்ப்பை பெற எதையும் வளைப்பாரே தவிர, மக்கள் தீர்ப்பிற்கு எதிராக ஜெ., நின்றதில்லை. 2017 & 2019 லும் தமிழ்நாட்டிலும் அப்படி ஒரு நிலைமை இருந்தது. 100 எம்எல்ஏக்களுடன் தமிழக வரலாற்றில் ஒரு எதிர்க்கட்சி கூட்டணி அசுர பலத்தோடு எழுந்து நின்றது. குதிரை பேரம் நடத்தப்பட்டிருந்தால் காட்சிகள் மாறியிருக்கும். ஆட்சி கவிழ்ந்திருக்கும்.
Apr 13, 2022 6 tweets 1 min read
தமிழ்நாட்ல எப்ப கடைசியா தீவிரவாதிய பாத்தீங்க ? எந்த ஹைஜாக் நடந்துச்சு? பாகிஸ்தானுக்கும் தமிழ்நாட்டுக்கும் என்னய்யா சம்மந்தம்? விஜயகாந்தே Outdatedன்னு கிழிச்சுப் போட்ட ஸ்க்ரிப்ட்ய்யா இது. இங்க ஒரு முஸ்லீம் நிம்மதியா கடை வைச்சு நடத்த முடியல, முஸ்லீம் புள்ளைங்க ஸ்கூல் காலேஜ்ல படிக்க போக முடியலைன்னு அந்த சமூகமே கதறிட்டு இருக்கு.