முருகப்பெருமானின் அறுபடை வீடுகளில் 3-வது படை வீடும், ஆண்டி கோலத்திலும் திகழும் பழனி அருள்மிகு தண்டாயுதபாணி திருக்கோவிலின் ஆச்சரியங்கள்......!
🌹 தண்டாயுதபாணி விக்ரகத்திற்கு நான்கு விதமான அபிஷேக பொருட்கள் (நல்லெண்ணெய், பஞ்சாமிர்தம், சந்தனம், விபூதி) மட்டும் தான் உபயோகிக்கப்படுகிறது. மார்கழி மாதத்தில் பன்னீர் மட்டுமே உபயோகப்படுத்தப்படுகிறது.
🌹 இவைகளில் சந்தனம், பன்னீர் தவிர மற்றவை எல்லாம் தண்டாயுதபாணியின் சிரசில் (தலை) வைத்து, உடனே அகற்றப்படுகிறது. அதாவது முழு அபிஷேகத்திற்கு சந்தனமும், பன்னீரும் மட்டும் தான். இதில் சிரசு விபூதி என்பது சித்தர் உத்தரவால் பக்தர்களுக்கு வழங்கபடுகிற பிரசாதம் அது கிடைப்பது மிக புண்ணியம்.
🌹 ஒரு நாளைக்கு ஆறு முறை அபிஷேக அலங்காரம் செய்யப்படுகிறது. இது ஐந்து முதல் ஏழு நிமிடத்துக்குள் முடிந்துவிடும்.
🌹 அபிஷேகம் முடிந்து அலங்காரம் செய்துவிட்டால், பின்னர் அடுத்த அபிஷேகம் வரை மாலை சாற்றுவதோ, பூக்களால் அர்ச்சனை செய்வதோ கிடையாது.
🌹 இரவில் முருகனின் மார்பில் மட்டும் வட்ட வடிவில் சந்தனக் காப்பு சார்த்தப்படுகிறது.
🌹 விக்ரகத்தின் புருவங்களுக்கிடையில் ஒரு பொட்டு அளவுக்கு சந்தனம் வைக்கப்படும். முன்பு சந்தன காப்பை முகத்திலும் சார்த்திக் கொண்டிருந்தனர். பிறகு இந்த முறை மாற்றப்பட்டது.
🌹 விக்ரகம் மிகுந்த சூடாக இருக்கும். ஆதலால் இரவு முழுவதும், அந்த விக்கிரகத்திலிருந்து நீர் வெளிப்படும். இந்த நீரை அபிஷேக தீர்த்ததுடன் கலந்து, காலை அபிஷேகம் நடக்கும் போது, அங்கு இருக்கும் பக்தர்களுக்கு பிரசாதமாக தருகிறார்கள்.
🌹 தண்டாயுதபாணி சிலையில், நெற்றியில் ருத்ராக்ஷம், கண், மூக்கு, வாய், தோள், கை, விரல்கள் போன்றவை மிக அற்புதமாக உளியால் செதுக்கபட்டது போல் தெளிவாக இருக்கும் இது போகரின் கை வண்ணம்.
🌹 அந்த சிலையை சுற்றி எப்போதும் ஒரு வித சுகந்த மணம் (இதுவரை ஒரு போதும் வெளியே உணர்ந்திராத) பரவி நிற்கும்.
🌹 இந்த சிலையை போகர் செய்து முடிக்க ஒன்பது வருடங்கள் ஆயிற்று.
🌹 அம்பாள், முருகர், அகத்தியர் இவர்களுடைய உத்தரவுக்கு பின் தான் போகர் இப்படி ஒரு சக்தி வாய்ந்த சிலையை செய்ய முயற்சி எடுத்ததாகவும், இதற்காக 4000க்கும் மேற்பட்ட மூலிகைகளை பல இடங்களிலும் சென்று தேர்வு செய்து, 81 சித்தர்கள் இந்த நவபாஷாணத்தை போகர் சொற்படி தயார் செய்தனர்.
🌹 போகர், இகபரத்தில் இருக்கும் போது தன் மனைவிக்கு கொடுத்த வாக்கை நிறைவேற்ற, முருகனை மேற்கு திசை நோக்கி பிரதிஷ்டை செய்தார். இதனால், மலை நாட்டில் உள்ளவர்களுக்கு பழனி முருகன் குல தெய்வம் ஆனார்.
🌹 கல்லில் சிலை செய்து பிரதிஷ்டை செய்து கட்டிய எத்தனையோ கோவில்கள் சேதமடைந்து போனாலும், நவபாஷாணத்தில் சிலை செய்த இந்த கோவில் இன்றளவும் பிரசித்தி பெற்றிருப்பதன் காரணம் சித்தர்களின் மகிமை தான்.
🌹 தண்டாயுதபாணி சிலைக்கு இடது பக்கத்தில் ஒரு சின்ன மரகத லிங்கம் உள்ளது. அவரை தரிசிக்க வலதுபக்கமாக சென்று, தீபம் காட்டுதல் வேண்டும். ஏனெனில் தீப ஒளி இல்லாமல் அந்த லிங்கத்தை தரிசிக்க முடியாது.
🌹 பழனியில் இரண்டு மரகத லிங்கம் உள்ளது. ஒன்று முருகர் சன்னதியில், இன்னொன்று போகர் சமாதியின் மேல் உள்ளது. இந்த இரண்டையுமே போகர் பூஜை செய்ததாக கூறப்படுகிறது . . .
வெற்றிவேல் முருகனுக்கு
அரோகரா... 🙏
• • •
Missing some Tweet in this thread? You can try to
force a refresh
உலகிலேயே பழைய சடங்கு ஒன்றைப் பினபற்றும் ஒரே இனம் பிராமணர்கள்; அவர்கள் உலகிலேயே பழைய சடங்கைச் செய்வதாக விக்கிபீடியா முதலிய என்சைக்ளோபீடியாக்கள் உரைக்கும்.
அது என்ன பழைய சடங்கு?.
சந்தியாவந்தனம் !.
அதில் அவன் ஒரு நாளைக்கு மூன்று முறை சுமார் 100 கடவுளர், ரிஷிகள் பெயரைச் சொல்லுகிறான்.
தொல்காப்பியம் உரைக்கும் தமிழ் கடவுள்கள் இந்திரன், வருணன், விஷ்ணு பெயர்களையும் சங்கத் தமிழ் நூல்கள் போற்றும் சப்த ரிஷிக்களையும் , வரலாற்றுப் புருஷர்களான ஜனமேஜயன் முதலியோர் பெயர்களையும் சொல்கிறான்.
இராமாயணத்தில் ஒரு அற்புதமான காட்சிதசரதன் அவை கூடியிருக்கிறது. விஸ்வாமித்திர முனிவர் வருகிறார்.
வந்தவர், தசரதனைப் புகழ்கிறார். ‘‘இன்று இந்திரன் பதவியில் இருப்பது உன்னால்தான்” என்கிறார். தசரதனுக்கு மகிழ்ச்சி. விஸ்வாமித்திரரைப் பார்த்து, ‘‘உமக்கு அடியேன் என்ன செய்யவேண்டும்?” என்று கேட்கிறார்.
*சிவசூரியநாராயண கோவில், சூரியனை முதன்மையாக கொண்டு நவக்கிரகங்களுக்கென தனித்து அமைந்த கோயில் என்ற சிறப்பை பெற்றுள்ளது. இக்கோவில் கி.பி 1100-ல், குலோத்துங்க சோழ மன்னன் காலத்தில் கட்டப்பட்டது.*
1
*இதன் கோபுரம் மொத்தம் மூன்று நிலைகளையும், ஐந்து கலசங்களையும் கொண்டுள்ளது. சூரிய தீர்த்தம் என்னும் புனித நீர் நிலை இங்கு அமைந்துள்ளது.*
*இக்கோவிலின் தனி சிறப்பாக குரு பகவான் சூரிய பகவானை தரிசிப்பதாக சித்தரிக்கப்பட்டுள்ளது.*
2
*முதலில் சூரியனார் கோவிலுக்கு அருகில் உள்ள திருமங்கலக்குடி சென்று அங்கு பிராணநாதரையும், மங்கள நாயகியையும் வழிபட்ட பிறகே சூரிய நாராயணனையும் மற்ற நவக்கிரகங்களையும் வழிபட வேண்டும்.
மகாபாரத்தில் கங்கை மைந்தன் பீஷ்மரை அறியாதவர்கள் யாரும் இல்லை.
அவர் தன் தந்தைக்காக செய்த தியாகத்தின் பலனாக பெறுதற்கரிய பேறு
பெற்றார். அதாவது அவரே விரும்பாமல் அவரது உடலில் இருந்து உயிர் பிரியாது.
யாரும் பெறாவரத்தை பெற்ற பீஷ்மர் இறுதியில் விதியின்
சூழ்ச்சியால் கௌரவர்கள் பக்கம் போரிட நேர்ந்தது. அவரின் கர்ம
வினைப்படி அனுபவிக்க வேண்டிய தண்டனைகளை அனுபவிக்க வைத்தது
விதி.
என்னதான் நல்லது செய்தாலும் நம்மை அறியாமல் அதர்மம் செய்து விட்டால்
அதற்குரிய பலா பலன்களை அனுபவித்தே ஆக வேண்டும்.
பிறருக்கு நடக்கும் அநீதியை வேடிக்கை பார்த்து கொண்டிருந்தாலும் பாவம்
வந்து சேரும் என்பதை மிக அழகாக சுட்டி காட்டியுள்ளனர்.