இங்ஙனம் தீண்டிப்பார்க்கின்ற குறிக்குத் தீண்டற் குறியென்று பெயர். இந்தத் தீண்டற் குறியைத்தான் பின்னர் #பிள்ளையார்சுழி என்று கூறும் மரபாக்கிக் கொண்டுள்ளனர்.
இங்ஙனம் ஏடுதீண்டும் குறியானது பிள்ளையார் வழிபாடு தமிழ்நாட்டுக்கு வருமுன்னரே இருந்து வந்துள்ளதென்பது அறிஞர்கள் ஆய்ந்து கண்ட முடிபாகும்.
மேலும், புள்ளியிலாச் சுழி என்பது வெறும் சுழியத்தையே குறிக்கும். ஓலைச்சுவடியில் எழுதும்பொழுது புள்ளி வைப்பதில்லை.
புள்ளி வைத்தால் ஏடு பொத்துக் கிழிந்துவிடும். ஆகவே புள்ளியில்லாமல் வட்டமாகச் சுழியம் போடுவர்.
புள்ளியிலாச் சுழி என்னும் இச்சொல் வழக்கே பிள்ளையார் சுழி என்று மருவியிருக்க வேண்டும் என்பது தமிழறிஞர்கள் கருத்து.
- நன்று
• • •
Missing some Tweet in this thread? You can try to
force a refresh
ஆண்களின் முகத்துக்கு அழகு சேர்ப்பதில் மீசைக்கு ஒரு பங்குண்டு.
ஆணையும் பெண்ணையும் வேறுபடுத்தும் உடற்கூறாகிய முகமயிர், ‘அத்தைக்கு மீசை முளைத்தால் சித்தப்பா' என்னும் பழமொழிக்கு அடிப்படை ஆயிற்று.
ஆண் - தன்மை - ஆண்மை எனப்படும்.
ஆண்மை வீரத்தை உள்ளடக்கியதாகும். இதுவே மானம், பெருமை, வீரம், உயர்வு முதலிய உயர் குணங்களோடு மீசையை இணைத்துப் பேசும் வழக்கத்தை ஏற்படுத்தியது.
பொதுவாகத் தமது மேலுதட்டில் வளர்ந்துள்ள முடியை ஒழுங்கு
படுத்தி வளர்த்துக் கொள்வதில் ஆண்கள் ஈடுபாடு கொள்கின்றனர்.
பெண்களிடம் காணமுடியாத பெருமை கருதியே ஆடவர்களுக்கு இதில் ஓர் ஆர்வம் துளிர்த்திருக்கலாம்.
மேலுதட்டில் இருப்பதாலும், (மேனோக்கி வளர்ப்பதாலும்) மேன்மைகளுக்கெல்லாம் அடையாளமாக விளங்குவதாலும், மிசை - மேல் என்னும் சொல்லடியாக 'மீசை' என்னும் சொல்லை இதற்குரியதாக வழங்கியுள்ளனர்.
தொடி, ஒருவட, இருவட, மூன்றுவட ஆரங்கள், வளை, மகரக்குழை (காதணி), காற்சரி எனப்படும் பாதசரம், கிண்கிணி, சிலம்பு ஆகிய அணிகலன்கள் சங்ககால சிறார்களால் அணியப்பெற்று அழகிற்கு அழகு ஊட்டின என்பதை சங்கப்பாடலடிகள்வழி நாம் அறியலாம்.
கீழ்க்காணும் #கலித்தொகை பாடல், தாய் தன் செல்வ மகனுக்கு அணிவித்து அழகு பார்த்த அணிகலன்களைப் படம் பிடித்துக்காட்டும்.
பொடிவைத்து இணைக்கப்பட்டமை அறியா வண்ணம், மீளவும் நெருப்பிலிட்டு ஒளிபெறச் செய்யப்பட்ட பொன்னாலான, இரு வடங்களில் அமைந்த #காற்சரி எனப்படும் #பாதசரம்.
'பொடி அழற்புறம் தந்த' என்ற தொடரால் அணிகலன்களின் பகுதிகள் பொடிவைத்து ஊதி ஊதி இணைக்கப்பட்டன என்பதும்,
அப்படிச் செய்தமை புலப்படா வண்ணம் மீண்டும் செந்தழலில் இடப்பட்டு ஒளியூட்டப்பட்டன என்றதுமான அன்றைய சிறந்த தொழில்நுட்பம் அறியப்படுகிறது.
சங்க காலத்தில் தமிழ்ச் சமூகத்திடையே இடையறாது நடைபெற்ற மாட்டுச் சண்டையாகும்.
ஆகோள் பூசலில் மாண்ட வீரர்களுக்கு #நடுகல் நடும் சிறப்பு முல்லைத் திணையில் பேசப்படுகிறது.
தொல்குடி நிலையில் ஆகோள் பூசல் என்பது வாழ்வியல் ஆதாரத்தை பெருக்கும் ஒரு வழியாகவும், வளமைக்காகவும்..
வீரத்திற்காகவும் நிகழ்த்தப்பட்டதாகும். தொல்லியல் சான்றுகளாக நமக்குக் கிடைக்கும் #நடுகற்கள், #நெடுங்கல், #குத்துக்கற்கள் முதலியன ஆகோள் பூசலில் மாண்ட வீரர்களுக்காக வைக்கப்பட்டவையாக பெரும்பாலும் இருக்க வாய்ப்புண்டு.
'புலிமான் கோம்பை' #நடுகல் இதற்குத் தக்க சான்றாகும்.
சங்க இலக்கியங்களில் #மழவர்கள் நிரை கவர்பவர்களாகவும், #மறவர்கள் நிரை மீட்பவர்களாகவும் காட்டப் பெறுகின்றனர்.
புகழ்மிக்க அம்பு #மழவர் கையில் உள்ளது. அது எய்யப் பெறும்போது வீல் என்ற ஒலியுடன் பாய்ந்து செல்லும். பகலிலே நிரையைக் கவர அம்பெய்துகின்றனர்.
மந்திரச் சடங்குகள் ஆதிகாலத்திலிருந்து மனிதனால் நம்பிக்கையின் காரணமாக மேற்கொள்ளப்பட்டவையாகும்.
இதைப்போன்று செய்தல் என்ற நெறியில் அது நடைபெற வேண்டும் என்ற வேண்டுகோளின் பேரில், மந்திரச் சடங்குகள் தொல்மனிதனால் பண்டு மேற்கொள்ளப்பட்டது.
தொல்குடி மாந்தர் நிறையா வாழ்க்கை நிலையிலிருந்த காரணத்தாலும், உற்பத்தி உத்திகள் அறியப்படாத நிலையில் இருந்ததாலும், உற்பத்தி நிறைவு வேண்டி மந்திரச் சடங்குகளைத் தொடங்கினர்.
வேட்டை மேற்கொள்ளும் மனிதனுக்கு வேட்டை கிட்டாவிடில் இனக்குழு மக்கள் அனைவரும் பட்டினியால் வாடுவர்.
இதனால் பழங்காலத்தில் வேட்டையில் நல்ல மிருகங்கள் கிடைக்கவும், பயிர் உற்பத்திப் பெருகவும் தொல்குடி மக்கள் நம்பிக்கையின் பேரில் மந்திரச் சடங்குகளைச் செய்தனர்.
மந்திரச்சடங்குகளைத் தொத்து மந்திரம், ஒத்த மந்திரம் என வகைப்படுத்துவர். இருப்பினும் இவ்விரண்டுமே ஒத்துணர்வு மந்திரம் எனலாம்