இந்த டிவிட்டை போட்டதற்கு தமிழக பாஜக IT Wing என்னை கடித்து குதறலாம். அப்படியே கோபித்து கொண்டாலும் எனக்கு கவலையில்லை.
சரியான பாதையில் செல்லவில்லை என்றால் நாம் தான் ஏரை திருப்பி விட வேண்டும்.அதுக்கு கோவிச்சிக்கிட்டா வெள்ளாமையே வேஸ்ட்டா போயிரும்.
இனி பிரச்சனைக்கு வருவோம்..
"இலங்கை தமிழர் நலன் காத்த தங்க தலைவன் நரேந்திர மோடி"
இப்படி ஒரு நரேட்டிவ் ஓடி இருக்க வேண்டும்.
திராவிட திராபைகள் அய்யோ அம்மா என அலறி இருக்க வேண்டும்.
ஆனால் நல்லதொரு வாய்ப்பை தவற விட்டுட்டு தேவையில்லாத யாரோ முதுகை காட்டி உடற்பயிற்சி பண்ற வீடியோவை டிரென்டிங்க் பண்ணிக்கிட்டு
இருக்காங்க.
தமிழக பாஜகவுக்கு மட்டும் தான்எவ்வளவு மாறினாலும் எதுவும் மாறுவதில்லை என்பது பொருந்தும்.
சமீபத்திலே நமது வெளியுறவுதுறை அமைச்சர் இலங்கைக்கு சென்று அங்கே பல பேச்சுவார்த்தைகளை நடத்தினார். இந்த விஜயம் அமைச்சர் ஜெய்சங்கர் அவர்கள் சமீப காலத்திலே மூன்றாம் முறையாக போவது.
அதிலே முக்கியமாக 13 ஆம் சட்டதிருத்தத்தை கண்டிப்பாக கொண்டு வந்து நடைமுறைப்படுத்தப்படவேண்டும் என அழுத்தம் திருத்தமாக சொன்னார்.
இந்த 13 ஆம் சட்டதிருத்தம் தான் அங்கே தமிழர்கள் நல்லமுறையிலே வாழ வழி செய்யக்கூடியது.
இந்த 13 ஆம் சட்டதிருத்திற்கு முன்பு இலங்கையிலே மாகாணங்கள் இருந்தன
ஆனால் அதெல்லாம் வெறுமனே ஆளுநர் போன்ற பதவியால் நிர்வாகம் செய்யப்பட்டன். அவைகளுக்கு சட்டசபை போன்றவை எல்லாம் ஏதும் இல்லை.
இந்த அமைப்பை யுனிட்டரி ஸ்டேட் (unitary state) என சொல்வார்கள். இப்போது பங்களாதேஷ் போன்ற நாடுகள் இருப்பது போல. ஒரே ஒரு அரசு தான் ஒரே ஒரு நாடாளுமன்றம் தான்.
ஒற்றையரசு ஆட்சி முறை என சொல்லலாம்.
13 சட்டதிருத்தத்தின் படி இலங்கை ஒரு கூட்டரசு ஆக மாற்றப்பட்டது. அதன் படி இலங்கையிலே மைய அரசு ஒன்றும் 9 மாகாணங்களாகவும் பிரிக்கப்பட்டது.
இதிலே மாகாணங்களுக்கு சட்டசபை, தேர்தல், சட்டமியற்றும் அதிகாரம் உட்பட பலதும் உண்டு என கொண்டு வரப்பட்டது.
சட்டசபை, தேர்தல், மாகாண முதல்வர் போன்ற பதவிகள் கொண்டுவரப்பட்டன. ஆனால் முழு அதிகாரம் கொண்டவையாக இந்த
மாகாண அவைகள் மாறவில்லை.
ஆட்சியும் அதிகாரமும் மைய அரசிடமே இன்று வரை இருக்கிறது.
முன்பு போலவே மாகாண முதலமைச்சர் பதவி என்பது வெறூம் அலங்கார பதவி ஆகிவிட்டது.
மைய அரசே அதிகாரிகளை
நியமிக்கிறது, மைய அரசின் கட்டுப்பாட்டிலேயே பெரும்பாலான அதிகாரங்கள் இருக்கின்றன.
நமது பிரதமர் நரேந்திர மோடி பதவி ஏற்றதிலே இருந்தே இந்த விஷயத்திலே கவனம் செலுத்தி வருகிறார்.
பலமுறை இலங்கைக்கு விஜயம் செய்தார். தமிழர்கள் வாழும் பகுதிகளுக்கு சென்று பார்வையிட்டு நலத்திட்ட உதவிகளாக
வீடு கட்டித்தருதல், கல்விச்சாலைகள் கட்டித்தருதல், சாலை அமைத்து தருதல் போன்றவற்றின் மூலம் செய்யப்பட்ட பலன்களை மக்களுக்கு அர்ப்பணித்தார்.
இலங்கையின் முக்கிய அரசதிகார மையமான பவுத்த பிக்குகளுடனும் பவுத்த விகாரைகளுடன் நேரடியாக பேசினார்.
பாரதத்தின் உத்தர பிரதேசத்திலே குஷி நகர் என்ற
இடத்திலே தான் பவுத்தர் பரிநிர்வாணம் அதாவது முக்தி அடைந்தார்.
அந்த இடத்தை புதுப்பித்தும் குஷி நகரிலே விமானநிலைய திறப்புவிழாவிற்கும் அனைத்து பவுத்த விகாரைகளிலே இருந்தும் தேரர்களை அழைத்திருந்தார். அனைவரும் வந்திருந்தார்கள்.
பவுத்தர்களின் புனித பொருட்களூம் இலங்கையிலே இருந்து
எடுத்து வரப்பட்டு கொஞ்ச நாட்கள் குஷிநகரிலே வைக்கப்பட்டு வழிபாடுகள் செய்யப்பட்டன.
அதைபற்றி அப்போதே நண்பர் @rajasankar விலவரியாக எழுதியிருந்தார்.
இரண்டு வருடங்களுக்கு முன்பு பெருந்தொற்று அதன்பின்பான விளைவுகளான பொருளாதார வீழ்ச்சி எல்லாம் அறிந்ததே.
உனடியாக களத்திலே இறங்கிய பாரத
அரசு தேவையான உணவுப்பொருட்கள், எரிபொருள் போன்றவற்றை வழங்கியது.
இன்னமும் வழங்கிக்கொண்டிருக்கிறோம்.
அங்கே வடக்கு மற்றும் கிழக்கு மாகானங்களிலே நேரடியாகவே உதவிகளையும் பாரத அரசு வழங்குகிறது.
இதன்படியான மொத்த மதிப்பு இதுவரை 60,000 கோடிகள். ஆமாம் அறுபதாயிரம் கோடிகள். அதாவது 8
பில்லியன் டாலர்கள்.
ஒப்பீட்டளவுக்கு பக்கத்திலே ஒரு நாடு ஒரு பில்லியன் டாலர் அதாவது 8000 கோடி ரூபாய்க்கு அல்லாடுகிறது என்பதை பாருங்கள்.
நம்முடைய உறவுகள் இலங்கையிலே இருக்கும்போது இந்த அறுபதாயிரம் கோடிகள் ஒன்றும் பெரிய விஷயமில்லை தான்.
வருடத்திற்கு ஒரு டிரில்லியன் டாலருக்கு
ஏற்றுமதி இறக்குமதி செய்யும் நமக்கு
580 பில்லியன் டாலர்கள் கையிருப்பு வைத்திருக்கும் நமக்கு
போன இரண்டு வாரங்களிலே 15 பில்லியன் டாலரை கையிருப்பாக சேமித்த நமக்கு
இந்த 8 பில்லியன் டாலர் ஒன்றும் பெரிய தொகையில்லை தான். அதுவும் நம்முடைய உறவுகளுக்கு உதவுவதற்கு.
தமிழர்கள்
வாழும் பகுதிகளிலே பழங்கால கோவில்களை திரும்ப எடுத்துக்கட்டுகிறோம்.
பிரதமர் அலுவலகத்தின் நேரடி மேற்பார்வையிலே இது நடைபெறுகிறது.
நம்முடைய தருமைபுர ஆதினத்தின் தம்புரான் ஒருவர் அங்கே நிலை கொண்டு அருளாட்சி புரிகிறார். ஆதின கட்டளை மடம் ஒன்று ஸ்தாபிக்கப்பட்டுள்ளது.
தமிழர்கள் வாழும்
மாகாணங்களிலே நேரடி உதவி, மருத்துவ வசதிகள், பண்பாட்டு மையங்கள் என பலதும் பாரத அரசு தொடர்ந்து செய்து வருகிறது.
இலங்கைக்கான இந்திய தூதர் தொடர்ந்து அங்கே எல்லோரிடமும் தொடர்பிலே இருக்கிறார்.
கோவில்களுக்கு விஜயம் செய்து வழிபாடு நடத்துகிறார்.
இதை பார்த்து சீன தூதுவரும் நானும்
ஹிந்துக்கோவில்களுக்கு வருவேன் என வந்தார். இதைப்பற்றியும் அப்போதே எழுதியிருந்தேன்.
இப்படி தமிழர் நலனுக்காக அங்கே மோடி அரசு செய்யும் திட்டங்கள் ஏராளம்.
நீண்டகால திட்டங்களுக்கும் இந்தியா வழிவகை செய்திருக்கிறது.
நாம் பணம் கொடுத்த பின்பு தான் சீனாவும் இறங்கி வந்து கடனை
குறைத்துக்கொள்கிறோம் என சொல்லியிருக்கிறது.
இதையெல்லாம் இங்கே காசு வாங்கிக்கொண்டு செய்தி போடும் ஊடகங்கள் பேசமாட்டார்கள் தான்.
ஆனால் இந்த் ஐடிவிங்க் மற்றும் மற்ற அணிகள் இருக்கின்றனவே அதெல்லாம் என்ன செய்கிறது?
மோடி தமிழகம் வந்தால் மட்டும் வெல்கம் மோடி என ஹேஷ்டேக் ஓட்டுவதற்கா?
காவிரி பிரச்சினையை தீர்த்தபோதே காவிரி தந்த காவியத்தலைவன் மோடி என போற்றி பாராட்டியிருக்கவேண்டும்.
அப்போது செய்யல.
வேக்சின் கொடுத்து மக்களை காப்பாற்றிய போதே தடுப்பு மருந்து கொடுத்து தடுத்தாண்ட தங்கத்தலைவனே என பாராட்டி பேனர் வைத்திருக்கவேண்டும்
அதை கூட செய்யல.
இப்போது மூன்று
தலைமுறையாக பல லட்சம் உயிர்களை காவு வாங்கிய ஒரு பிரச்சினையை முடித்து வைக்கும் தருவாயிலே இருக்கிறார்.
அங்கே பல அதிகாரமையங்களுடம் தொடர்பிலே இருக்கிறார். பேசுகிறார்.
பவுத்த பிக்குகள், விகாரைகள், அரசியல் குடும்பங்கள், ராணுவம் என பல இடங்களிலேயும் இடியாப்ப சிக்கலாக இருப்பதை தீர்க்க
விரும்புகிறார்.
50 ஆண்டுகளாக தொடரும் பிரச்சினைக்கு ஒரு நிரந்தர தீர்வு நம் கண் முன்னே நடக்கிறது.
அதைக்கூட பாராட்டி பேசமுடியாமல்
அங்கே என்ன நடக்கிறது என பேசமுடியாமல்
ஏன் கட்சியிலே அந்த அணி இந்த நொணி என இருக்கவேண்டும்?
நீங்கள் வடக்கே நடப்பது பற்றி பேசவேண்டும் என்றோ
சர்வதேச
அரசியல் பேசவேண்டும் என்றோ கூட எதிர்பார்க்கவில்லை.
பக்கத்து நாடு, பல காலமாக ஓடிய பிரச்சினை. அதுவும் நமது தமிழர்கள் பிரச்சனை.
அது தீர்க்கப்படும் தருவாயிலே இருக்கும்போது கூட பேசமுடியாது என்றால்
இப்படியே எவ்வளவு நாளைக்கு வரும் வாய்ப்புகளை எல்லாம் தவறவிட்டுக்கொண்டு
மற்றவர்கள்
மீது குற்றம் சொல்லிக்கொண்டு இருக்கப்போகிறோம்??
நமது தலைவர் நரேந்திர மோடி அவர்களின் உழைப்பு எவ்வளவு நாளைக்கு விழலுக்கு இறைத்த நீராக போவது?
நமது தலைவர் செய்யும் செயல்களுக்கு இங்கே ஆதரவு திரட்டுவது நமது கடமையல்லவா? பொறுப்பல்லவா?
அதைக்கூட செய்யமுடியாவிடில்?
இதோ, இலங்கையில்
இருக்கும் இந்திய தூதரகத்தின் அதிகாரப்பூர்வ முகநூல் பக்கம். இதையாவது நமது தமிழக பாஜக IT Wing ஃபாலோ பண்றாங்களா'னு தெரியல.
பாகிஸ்தானின் Foriegn $ ரிசர்வ் இருவாரங்களுக்கு கூட போதுமானதாக இல்லை. அதன் ரூபாய் மதிப்பு 80லிருந்து வீழ்ந்து 229.78 ஆக வீழ்ந்துவிட்டது. பெட்ரோல், டீசல், கரண்ட் இல்லை,
பங்குகள் அடித்து நொறுக்கப்படுவதால் இழுத்து மூடப்படுகிறது. அதனால் நாட்டின் உற்பத்தி திறன் வேகமாக குறைகிறது. கரண்ட் இல்லாததால் தெரு விளக்குகள் எரிவதில்லை. அதன் தாக்கம் கேஸ்கேடிங் எஃப்க்ட் ஆக ஒன்றன் பின் ஒன்றாக மூடுகிறார்கள். அதனால் வேலை வாய்ப்புகள் இல்லை. விலைவாசிகள் உச்சத்தை
தொடுகிறது. கோதுமை, நெய், எண்ணெய் 500 தாண்டிய பின்னரும் கிடைப்பதில்லை. இந்த நிலையில் அடுத்த சில வாரங்களில் எப்போது வேண்டுமானாலும் பாகிஸ்தான் திவாலாகலாம்.
இது பாகிஸ்தானுக்கு மட்டுமா, அடுத்து வீழப்போகும் 108 நாடுகள் இந்த நிலையில்தான் உள்ளன. அதில் ஐரோப்பிய, அரபு நாடுகளும் அடக்கம்.
நான்கு லாரிகள் மாயம், 13 கொடூர கொலைகள் என்று நாட்டையே உலுக்கிய ஓங்கோல் ஹைவே கொலை வழக்கில் அதிரடி தீர்ப்பு
2007ம் ஆண்டு சென்னை - கொல்கத்தா நான்குவழிச் சாலையில் சென்ற கனரக வாகனங்கள் டிரைவர் க்ளீனர்களுடன் மாயமாகின காரணங்கள் எதுவுமின்றி லாரியுடன் காணாமல் போயின. இந்த சம்பவம் நாடு
முழுவதும் அதிர்வலைகளை ஏற்படுத்தியது.
2008 அக்டோபரில் துர்காபூரிலிருந்து கல்பாக்கத்திற்கு இரும்புப் பொருட்களை ஏற்றி வந்த லாரியும் டிரைவர் ராமசேகர் மற்றும் கிளீனர் பெருமாள், சுப்பிரமணி ஆகியோர் சென்னை - கொல்கத்தா நான்குவழி சாலையில் காணாமல் போகிறார்கள்.
இதனால் அதிர்ச்சியடைந்த
லாரி உரிமையாளர் வீரப்பன் குப்புசாமி லாரி புறப்பட்ட நேரம் டோல்கேட்டுகளை கடந்த நேரம் போன்றவற்றைக் கணக்கிட்டு, லாரிகள் காணாமல் போனது ஆந்திராவின் நெல்லூருக்கும் விஜயவாடாவிற்கும் இடைப்பட்ட ஓங்கோல் பகுதியாக இருக்கலாம் என கணித்து 17.10.2008ல் ஓங்கோல் நகர காவல் நிலையத்தில் வழங்குபதிவு
நேற்று முழுவதும் தொலைக்காட்சி சமூக வலைதளங்களில் நடிகை அமலாபால் கோவிலுக்குள் அனுமதி மறுப்பு 2023லும் இப்பிடியா என அமலாபால் வருத்தம் என்று அந்த மங்கையர்குல மாணிக்கத்திற்காக நெஞ்சுருகி செய்திகள் வெளியானதை காண முடிந்தது
ஏதோ அந்த நடிகையை ஏதோ தலைமுடியை பிடித்து தரதரவென இழுத்து வெளியே
தள்ளியது போன்ற கற்பனையை சிலருக்கு இந்த செய்திகளின் பரவலும் வீரியமும் ஏற்படுத்தகூடும்
உண்மையில் நடந்தது என்ன என்பதை சிந்திக்கவே இந்த பதிவு
யார் இந்த அமலாபால் ?
எதற்காக அனுமதி மறுக்கப்பட்டார் ?
என்பதை தலைப்பில் சொல்லாமல் ஒருசிலர் இடை செருகலாக போகிற போக்கில் ஒரு வரியில் அதன்
அடிப்படை காரணத்தை சொல்லி சிலர் மூடிமறைக்க முயல்வதாகவே தெரிகிறது
முதலில் நடிகை அமலாபால் மலபார் சிரியன் கத்தோலிக்க கிறிஸ்தவர். பணத்திற்காக அவர் நெற்றியில் விபூதி குங்குமம் பூசி நடித்த புகைப்படத்தை பார்த்து அவர் இந்து மதத்தை சேர்ந்தவர் என சிலர் நம்பக்கூடும். இந்த நிகழ்விலும் சில
எனது பென்சில் ஓவியத்துடன் மஹாபெரியவா தரிசன அனுபவ புத்தகத்திலிருந்து நான் தொகுத்த கட்டுரை.
இந்த சம்பவம் பல வருடங்களுக்கு முன் நடந்தது. ஸ்ரீ மஹாபெரியவா தரிசனம் செய்வதற்காக வயதான தம்பதிகள் வரிசையில் நின்று
கொண்டிருந்தனர். அவர்களின் முறை வந்ததும் பெரியவாளுக்கு சாஷ்டாங்க நமஸ்காரம் செய்தார்கள்.
“பெரியவா, நான் என் அலுவலக வேலையில் இருந்து ஓய்வு பெற்றேன். எனக்கு குழந்தைகள் இல்லை. அதனால் காஞ்சி மடத்தில் சேவை செய்ய மிகவும் ஆர்வமாக உள்ளேன். நீங்கள் தயவு செய்து என்னை ஆசீர்வதிக்க
வேண்டும்”, என்றார் அந்த மனிதர்.
அவர் வேண்டுதலில் மிகவும் பணிவும் நேர்மையும் இருந்தது. அவர் பக்கத்தில் அவரது வயதான மனைவி இருந்தார்.
"வாழ்க்கையில் எதிர்நோக்குவதற்கு எதுவும் இல்லையே என்று நீங்கள் கவலைப்படுவதாகவும் ஆர்வமில்லாமல் இருப்பதாகவும் தெரிகிறது, இல்லையா?" என்று பெரியவா
போபால் ரயில்வே ஸ்டேஷனில் 'துருவே' என்ற ஸ்டேஷன் மாஸ்டருக்கு இரவு நேரப் பணி. போபால் ஸ்டேஷன் வழியாக லக்னோ வில் இருந்து மும்பை செல்லும் ரயிலுக்கு சிக்னல் கிளியரன்ஸ் கொடுத்துவிட்டு வெளியே வந்தார். அவரால் காற்றில் ஏதோ வித்தியாசத்தை உணர
முடிந்தது. அவசர அவசரமாக சிக்னல் அறைக்கு ஓடினார்.
எப்படியாவது லக்னோ டு
மும்பை ரயிலைத் தடுத்து விடுவதுதான் அவரது நோக்கம். ஆனால், அந்த ரயில்
ஏற்கெனவே கிளம்பிவிட்டது. துருவேயால் ஒன்றும் செய்ய முடியவில்லை. லக்னோ-மும்பை ரயில் வந்தது. அதில் இருந்து இறங்கிய
பயணிகள் எல்லாம் விஷ
வாயுவைத் தாங்க முடியாமல் சுருண்டு விழுந்தார்கள். ஓடியவர்கள் இன்னும் சீக்கிரம் இறந்தார்கள்.
கொஞ்ச நேரத்தில் போபால் ரயில்
நிலையத்தில் 191 பிணங்கள் கிடந்தன. அந்தக் காட்சி துருவேயை நிலை குலைய வைத்தது. பதற்றத்தோடு சிக்னல் அறைக்கு ஓடினார். அங்கு அவருக்குக்
கீழ் பணிபுரியும் சிக்னல்
இந்தியாவில் புற்றீசல்களைப் போல முளைத்துக்கிடக்கும் பிரியாணிக்கடைகளுக்கு இணையாக துரித உணவகங்களும் (fast food) நிறைந்துகிடக்கின்றன. மிக மட்டமான, சுகாதாரமற்ற இடங்களில் தயாரிக்கப்படுகிற இந்த உணவுக்கடைகளின் முன்னால் கூட்டம் குவிந்து கிடக்கிறது. முக்கியமாக குழந்தைகள் இதனை விரும்பி
உண்கிறார்கள். அதில் நிறைந்து கிடக்கும் ஆபத்துகளைக் குறித்த அறிவு பெற்றோர்களுக்கு அறவே இல்லை என்பது வருத்தமானதொரு செய்தி. மேற்கத்திய நாடுகளில் தயாரிக்கப்படுகிற துரித உணவு மிகக் கடுமையான ஆய்வுகளுக்கு உட்படுத்தப்படுகிறது. அதில் சிறிதளவேனும் தரம் குறைந்தாலோ அல்லது அந்த உணவினைச்
சாப்பிட்டவர்களுக்கு உடல் நலக்குறைவு ஏற்பட்டாலோ மிகக் கடுமையான அபராதம் விதிக்கப்படுகிறது. அப்படிப் பெயர் கெட்டுப்போன பல பிரபல துரித உணவகங்கள் திவாலாகியிருக்கின்றன. இதற்கு நேரெதிராக இந்தியாவில் அம்மாதிரியான உணவகங்களுக்கு எந்தவிதமான தரக்கட்டுப்பாடோ அல்லது பரிசோதனைகளோ இல்லை.