தனி சன்னிதியில் ஜமதக்னி முனிவர், ரேணுகாதேவி, பரசுராமர் வீற்றிருக்கின்றனர்.
இதையடுத்து அர்த்த மண்டபமும், தொடர்ந்து கருவறையும் உள்ளது.
கருவறையில் அன்னை ரேணுகாதேவி கீழ்திசை நோக்கி அருள்பாலிக்கிறாள்.
இங்கு அன்னையின் தலை பகுதி மட்டுமே கருவறை தெய்வமாய் அருள்பாலிக்க அன்னையின் பின்பறம் பல நூற்றாண்டுகளை கடந்த மண்புற்று ஒன்று அன்னையின் சிரசைவிட உயரமாக வளர்ந்து நிற்கிறது.
அன்னைக்கு நடைபெறும் சொர்ணாபிஷேகம், இங்கு வெகு பிரசித்தம்.
புதியதாக நகைகள் வாங்கும் பெண்கள் அதை அன்னைக்கு அணிவித்து, அன்னைக்கு சொர்ணாபிஷேகம் செய்து தங்கள் நகைகளை திரும்ப வாங்கிச் செல்கின்றனர்.
இதனால் தங்கள் வீட்டில் தங்கம் மேலும் தழைக்கும் என்பது அவர்களது நம்பிக்கை.
ஆலயத்தின் தலவிருட்சம் வேம்பு.
தீர்த்தம் வடக்கே உள்ள குளம்.
தவிர ஆலயத்தின் பின்புறம் காவிரி நதி தெற்கு வடக்காக ஓடிக்கொண்டிருக்கிறது.
தேவக்கோட்டத்தில் தெற்கில் ஐந்து தலை நாகத்தின் சிற்பமும், மேற்கில் விஷ்ணு துர்க்கையும் அருள்பாலிக்க,
வடக்கில் நாகம் சிவனை பூஜை செய்யும் அற்புத சிற்பம் காணப்படுகிறது.
அமைவிடம்
நாகை மாவட்டம் மயிலாடுதுறை- திருக்கடையூர் சாலையில் உள்ளது செம்பனார் கோவில்.
இதன் அருகே உள்ளது முடிகண்டநல்லூர் ஜமதக்னி ரேணுகாதேவி ஆலயம்.
*திருமாலின் திவ்ய நாமங்கள் அனைத்தும் இடம் பெற்றிருக்கும் இத்துதியை ஏகாதசி அன்று பாராயணம் செய்தால் அஸ்வமேதயாகம் செய்த பலன் கிட்டுவதோடு நாராயணனின் பேரருளும் கிட்டும்.