#பக்தனுக்காக_எதையும்_செய்யும்_பகவான்
சேனாயி ஒரு முடி திருத்துபவர், விட்டலன் பக்தர். தனது குடிசையில் அழகிய பாண்டுரங்கன் ருக்மணி சிலைகளை வைத்து இரவும் பகலும் பாண்டுரங்கன் பஜனை செய்வார். மற்ற பக்தர்களும் அவரோடு சேர்ந்து அகண்ட பஜன் செய்வதும் வழக்கம். அவர் வாழ்ந்த காலம் நமது தேசத்தை
மொகலாயர்கள் ஆண்ட நேரம்! பந்தர்பூர் மற்றும் பல ஊர்களுக்கும் அதிகாரியாக ஒரு நவாப் மொகலாய சக்கரவர்த்தியின் பிரதிநிதியாக பண்டரிபுரத்தில் இருந்தான். அவனுக்கு ஒரு பிரத்யேகமான முடி திருத்துபவன் தேவை. ஒரு நல்ல ஆள் கிடைத்தால் அவனது மாளிகை அருகிலேயே இருக்க இடம் கொடுத்து, சகல குடும்ப
செலவுகளையும் ஏற்று, ஸௌகரியமாக வைத்துக் கொள்வதாக அறிவிப்பு வந்தது. நவாபிடம் வேலை செய்பவன் மற்றெவர்க்கும் பணி புரியக்கூடாது. இதிலென்ன கஷ்டம்? வேலைக்கு வேலையும் மிச்சம், கை நிறைய காசு, இருக்க வீடு, சகல தேவைகளும் நவாப் செய்து கொடுப்பார். தினமும் ஒரு அரைமணி நேரம் நவாபிடம் வேலை,
அவ்வளவு தானே? நிறைய பேர் இந்த வேலைக்கு போட்டி போட்டார்கள். சேனாயிக்கு இது தெரியாது. தெரிந்து கொள்ள எந்த முயற்சியோ போட்டியோ போடவில்லை. ஆனால் விட்டலன் அருளால் இந்த வேலை சேனாயிக்கு மட்டும் கிடைத்தது. இதில் என்ன சந்தோஷம் அவருக்கு என்றால், காலையில் சிறிது நேரம் மட்டும் தான் வேலை. மற்ற
நேரமெல்லாம் வீட்டில் பாண்டுரங்கனோடும் மற்ற பக்தர்களோடும் விட்டலனை பாட நிறைய நேரம் கிடைக்குமல்லவா! மனிதனாக பிறந்தாலே போட்டி, பொறாமை, இல்லாமல் இருக்குமா? மற்ற முடி திருத்துபவர்களுக்கு, இந்த சேனாயிக்கு வந்த வாழ்வை பார்த்தாயா? எப்போ நமக்கு கிடைக்க வில்லையோ, இவனை எப்படியாவது இந்த
வேலையிலிருந்து வெளியேற்ற வேண்டும் என்று சொல்லி, வழி தேடிக் கொண்டு இருந்தனர். ஒருநாள் ஏகாதசி, நிறைய பாண்டுரங்க பக்தர்கள் வெளியூரிலிருந்து கூட்டமாக பஜனை ஆட்டம் பாட்டத்துடன் பண்டரிபுரம் விட்டலனை நோக்கி நடந்து கொண்டிருப்பதை சேனாய் பார்த்து விட்டார். அவர்களது விட்டலகானம் அவரை கவர்ந்தத
அவரையறியாமல் தலை, கால், கை எல்லாம் அந்த பக்திரசத்தில் ஆடி அவரை தன்னை மறக்க செய்தது, சேனாய் அப்படியே அவர்களோடு பண்டரிபுரம் கிளம்பிவிட்டார். அவருக்கு வீடு வாசல், நவாப், அன்றைய வேலை எல்லாமே சுத்தமாக மறந்துபோனது. இதை கவனித்துகொண்டிருந்த ஒருவன், நல்ல சமயத்தை நழுவவிடுவானா? நேராக
நவாபிடம் சென்றான்.
அய்யா!
யார் நீ? என்ன விஷயம்?
அய்யா, இன்னிக்கு சேனாய் வர மாட்டாங்க
ஏன்?
பண்டரிபுரம் பாண்டுரங்கன் கோவிலுக்கு போகப் போறேன் என்று சொன்னான்ங்க. அதனாலே இன்னிக்கு நவாபை போய் பாக்கமாட்டேன் வேணா நீ போய் அவன் கிட்ட சொல்லிடுன்னு சொன்னதாலே நான் சொல்ல வந்தேங்க
நவாபுக்கு
கோவம் உள்ளங்காலிலிருந்து உச்சந்தலை வரை எகிறி ஆட்களை ஏவி அந்த சேனாய் நாயை கட்டி இழுத்துவா இங்கே, நானே அவனை வெட்டறேன் என்றான். சொல்லி சில நிமிஷங்கள் கூட ஆகவில்லை. அவன் எதிரே சேனாயி வழக்கம் போல கைகட்டி சேவகத்துக்கு நின்று கொண்டு இருந்தார். நவாபுக்கு தன்னிடம் வேண்டுமென்றே யாரோ தப்பாக
தகவல் சொல்லியிருக்கிறான் என்று தோன்றியது. அவன் எதிரே அமர்ந்து வழக்கம் போல சேனாய் முடிதிருத்தும்போது இன்று என்றுமில்லாத ஒரு சந்தோஷம் நவாபுக்கு ஏற்பட்டது. ஒவ்வொரு முறை நவாபை தொட்டும், நேரே பார்த்தும் வேலை செய்யும் போது அவனுக்கு மனமெல்லாம் ஒரு அமைதி, சொல்லவொண்ணா களிப்பு தோன்றியது,
நவாப் இன்பவானில் பறந்து கொண்டு இருந்தான். “சேநாயி இன்று உன் வேலை பிரமாதம். என்ன அப்படி இன்று விசேஷம்” என்று கேட்டுக் கொண்டிருந்த போது அவன் முன் விட்டலனின் அழகிய முகம் ஒரு கணம் தோன்றி மறைந்தது. காந்த கண்கள், புன்முறுவல், செந்தாமரை முகம், கஸ்தூரி திலகம் அனைத்தும் அவனை புளகாங்கிதம்
அடையச் செய்தது. அந்தநேரம் சேவகர்கள் சேனாயியை கட்டி இழுத்து கொண்டு வந்து நிறுத்தினர். திகைத்த நவாப், எதிரே இதுவரை இருந்த சேனாயியை தேடிய போது அவன் இல்லை. இதற்குள் சேநாயி வேலைக்கு கிளம்பும் போது வழியில் பாண்டுரங்க பக்தர்களை பார்த்தது, வேலையை மறந்து அவர்களோடு பண்டரிபுரம் சென்றது பாதி
வழியில் சேவகர்கள் அவனை பிடித்து கட்டி இழுத்து வந்தது அனைத்தும் சொல்லப் பட்டாலும் நவாபின் காது தான் இதை கேட்டதே தவிர அவன் சிலையாக பாண்டுரங்கனே தன் முன் தோன்றி தனது பக்தனின் வேலையை செய்தான் என்பதை புரிந்து கொண்டான்.
சர்வம் ஸ்ரீ கிருஷ்ணார்ப்பணம்🙏
• • •
Missing some Tweet in this thread? You can try to
force a refresh
பெரியவரைத் தரிசிக்க தஞ்சாவூரில் இருந்து காஞ்சி மடத்திற்கு 65 வயது முதியவரும், அவரது மனைவியும் வந்தனர். பெரியவரிடம் மூதாட்டி "பெரியவா எங்களுக்கு இரு பிள்ளைகள். மூத்தவன் டில்லியில வேலை பாக்குறான். இளையவன் கான்பூரில நல்ல வேலையில இருக்கான்.
மருமகள்களும், குழந்தைகளும் எங்கள் மீது பாசமா இருக்காங்க. எங்களையும், அங்கே வரச் சொல்லி கூப்பிட்டாலும், இவர் பிடிவாதம் பிடிக்கிறார். கோபக்காரரான இவருக்கு முன்னால, நான் சுமங்கலியா போய்ச் சேர்ந்துடணும். இவரும் எந்த கஷ்டமும் பட்டுடக் கூடாது” என்று சொல்லி வருந்தினார்
விஷயம் கேட்ட
காஞ்சிப் பெரியவர், "நீ போயிட்டா இந்த கோபக்காரரை யார் பார்த்துப்பா” என்று கேட்டார்.
மௌனமாக நின்ற இருவரிடமும், "ஒற்றுமையா இருங்கோ” என்று சொல்லி பிரசாதமும் கொடுத்து வழியனுப்பினார். இருவரும் காமாட்சியம்மனை தரிசித்து விட்டு திரும்பினர். சிலநாட்கள் கழிந்ததும், முதியவர் பிள்ளைகளின்
#அனந்தன்#அனந்தாழ்வார்#ஶ்ரீராமானுஜர்#ஶ்ரீவைஷ்ணவம்
ஆயிரம் வருடம் முன்பு, மலை வாழ்வு கடினம். தொற்றுநோய், காட்டு விலங்குகள் பயத்தால், திருப்பதி மலையில் வசித்தவர்கள் மிகக் குறைவு. ஒரு நாள் இராமானுஜர் தமது சீடர்களை அழைத்து அவர்களில் யாரால் தினந்தோறும் திருப்பதி பெருமாளுக்கு சேவை
செய்ய அந்த ஊருக்குச் செல்ல முடியுமா எனக் கேட்டார். அப்போது அனந்தன் எழுந்து, இந்த அடியேன் திருப்பதி பெருமாளுக்கு தினந்தோறும் சேவை செய்வதற்கு அருள் புரியுங்கள். உங்கள் கருணையினால் நான் இந்த சேவையை இன்முகத்துடன் ஏற்கிறேன், எனத் தெரிவித்தார். குருவின் கட்டளையை ஏற்ற உண்மையான ஆண்பிள்ளை
என இராமானுஜர் அங்கு கூடியிருந்த வைஷ்ணவ பக்தர்களிடம் அனந்தனின் துணிச்சலை வெகுவாகப் பாராட்டினார். அனந்தாழ்வாரும் திருப்பதி மலைக்குச் சென்று, நந்தவனம், குளம் போன்றவற்றை உருவாக்கி பொது மக்களின் தரிசனத்திற்கான வசதிகளை உருவாக்கிக் கொடுத்தார். பக்தித் தொண்டின் முக்கிய கோட்பாடுகளில்
#தில்லையாடி_வள்ளியம்மை கிறிஸ்தவ முறைப்படி செய்யப்படும் திருமணம் மட்டுமே செல்லுபடியாகும் எனவும், மற்ற சம்பிரதாய முறைப்படி நடை பெறும் திருமணங்கள் செல்லுபடி ஆகாது எனவும் தென்னாப்பிரிக்காவில் உள்ள உச்ச நீதிமன்றம் 1913 ஆம் ஆண்டு, மார்ச் மாதம் 14 ஆம் தேதி, ஒரு தீர்ப்பை வழங்கியது. இதனை
எதிர்த்து, தென்னாப்பிரிக்காவில் வசித்து வந்த இந்தியர்கள், பெரும் போராட்டத்தில் ஈடுபட்டனர். சட்டத்தை எதிர்த்து, தன் தாயுடன் போராட்டத்தில் பங்கேற்றார் வள்ளியம்மை. அது நீண்ட தூர நடைப் பயணம். வள்ளியம்மை கைது செய்யப்பட்டு, சிறை தண்டனை விதிக்கப் பட்டார். உடல் நிலை மிகவும் பாதிக்கப்
பட்ட போதும், கலக்கம் அடையாமல், தான் கொண்ட கொள்கையில் விடாப்பிடியாக இருந்தார். சொந்தமாக கொடி கூட இல்லாத இந்தியர்கள் என ஏளனம் செய்த ஆங்கிலேயப் போலீசாரிடம், தன்னுடைய புடவையின் முந்தானையை காண்பித்து, இது தான் எங்கள் நாட்டின் தேசியக் கொடி என சூளுரைத்தார். 1914ல் தன் 16வது வயதில் தென்
பத்து வயதுப் பையன் தரிசனத்துக்கு வந்தான். "அவனை விஜாரி" என்று பெரியவர் ஜாடை காட்டினார்கள்.
ராயவரம் பாலு என்ற தொண்டர் அவனிடம் போய், என்ன பெயர், என்ன பண்ணுகிறாய் என்றெல்லாம் விஜாரித்து விட்டு
வந்து பெரியவாளிடம் சொன்னார்.
"ராமகிருஷ்ணானாம். அஞ்சாவது படிக்கிறானாம். அப்பா சமையல் வேலை செய்யறாராம். ரெண்டு தங்கை."
பெரியவாள் வலது கையை சற்றே உயர்த்திக் காட்டிவிட்டு பிரசாதம் கொடுக்கச் சொன்னார்கள். திருநீறு - குங்குமத் தட்டை அவனிடம் நீட்டிய பாலு, "நன்றாகப் படி" என்றார். பாலு
திரும்பி பெரியவாள் அருகில் வந்ததும், "இனிமேல் படி படி என்று சொல்லாதே" என்றார்கள். பாலுவுக்குப் புரியவில்லை. பள்ளிக் கூடத்தில் படிக்கும் பையனைப் பார்த்து, படி படி என்று அறிவுரை கூறுவது தவறில்லையே? பின் ஏன் படி..படி.. என்று சொல்ல வேண்டாம் என்கிறார்கள்?
"இனிமேல் பசங்களைப் பார்த்தால்
#Demonetization took place in India about 6 years ago. Within a few weeks, India's biggest trader of fake currency, Javed Khadani committed suicide in Karachi. According to the unconfirmed report, he had India's goods worth 40000 crores and all that became garbage. Property worth
billions ruined in Pakistan. The goods of making fake rupees worth billions of rupees were destroyed in Pakistan. Pakistan Army, running Pakistan's ISI and printing industry, has gone bankrupt. Pakistan is craving for flour and pulses just within 7 years of this demonetization in
India. You can connect some dots here too. Meaning that a large portion of Pakistan's economy was India's fake currency. Neither there was any industry then and there is none now. Sycophants in India were saying 6 years ago
“Demonetization will destroy the country.” But they did
#நற்சிந்தனை யாரையும் திட்டாமல், சாபம் விடாமல், கெடுதல் நினைக்காமல் இருப்போம். நாம் எதை செய்கிறோமோ அதுவே நம்மை வந்து சேரும். நாம் மனம் வருந்தினாலே போதும் நமக்கு பாதிப்பை தந்தவர்களுக்கு தண்டனை கிடைத்து விடும். எதை செய்தாலும் யாரையும் காயப் படுத்தாமல் வாழப் பழகுவோம். கடவுள் நாம்
கேட்டதை தரவில்லை என்று கவலைப்படாமல் கெட்டதை தரவில்லை என்று மகிழ்ச்சி கொள்வோம். இருப்பதைக் கொண்டு மகிழ்ச்சியுடன் வாழவும், இல்லாததை நினைத்து கவலைப்படாமல் இருக்கவும் பயிற்சி எடுப்போம். நம்மைப் படைத்த கடவுளுக்கு தெரியும் நமக்கு எந்த நேரத்தில் எது தேவை என்று. அவன் மேல் நம்பிக்கையுடன்
பொறுமையாக இருந்தால் நல்லதே நடக்கும்! எப்பொழுதும் மகிழ்ச்சியுடன் இருப்போம். தாங்கவே முடியாத துன்பம் வந்தால் கூட பொறுத்துக் கொள்ளும் மனப்பக்குவத்தை வளர்த்து கொள்வோம். யாரையும் பழிவாங்க வேண்டும் என்ற எண்ணத்தை அடியோடு ஒழிப்போம். அது நம் நிம்மதியை தான் தொலைக்க வைக்கும்.