M.SivaRajan Profile picture
Feb 2 11 tweets 2 min read
#வீணா_தட்சிணாமூர்த்தி

*யோகமும் ஞானமும் தரும் வீணா தட்சிணாமூர்த்தி*

திருச்சியில் இருந்து நாமக்கல் செல்லும் வழியில், சத்திரம் பேருந்து நிலையத்தில் இருந்து சுமார் 18 கி.மீ. தொலைவில் உள்ளது துடையூர்.
இங்கே உள்ள சிவனாரின் திருநாமம் விஷமங்களேஸ்வரர்.

சக்தியும் சாந்நித்தியமும் நிறைந்த திருத்தலம் இது என்று போற்றுகின்றனர் பக்தர்கள்.

ஆலயத்திற்குள் நுழையும் போதே இடது புறம் ஸ்ரீ தேவி - பூ தேவி சமேதராக அமர்ந்த நிலையில், நான்கு கரங்களுடன்,பின் வலக்கரத்தில் பிரயோகச் சக்கரத்துடன்
திருமால் காட்சி தருகிறார்.

பொதுவாக சிவாலயங்களில் கருவறையை நோக்கி இருபுறங்களில் சூரிய சந்திரர்கள் காட்சி தருவர்.

இங்கு சூரியன் இருக்க வேண்டிய இடத்தில் மகாவிஷ்ணு சூரிய நாராயணராக தேவியரோடு காட்சி தருவது அரிது என்கிறார்கள் பக்தர்கள்.
சூரிய பகவான் திருமால் அம்சமாக, சூரிய நாராயணர் என்று போற்றப்படுகிறார்.

கருவறையை வலம் வரும் போது தெற்கு கோஷ்டத்தில் வீணையை ஏந்திய படி,

நின்ற கோலத்தில் அருள்பாலிக்கும் தட்சிணாமூர்த்தியை தரிசிக்கலாம்.
பின்னிரு கரங்களில் மான்,மழு ஏந்தி, முன்னிரு கரங்களில் வீணையை மீட்டி,

அந்த நாதத்தில் மெய் மறந்த நிலையில் காட்சி தரும் தட்சிணாமூர்த்தியை வைத்த கண் எடுக்காமல் பார்த்துக் கொண்டே இருக்கலாம்.
இவர் திகசண்டளா வீணா தட்சிணாமூர்த்தி எனப்படுகிறார்.

லால்குடி சப்தரிஷீஸ்வரர் ஆலயத்திலும் இதே போன்ற வீணா தட்சிணாமூர்த்தியை தரிசிக்கலாம்.

குருப் பெயர்ச்சியையொட்டி,
இந்தத் தலத்துக்கு வந்து விஷமங்களேஸ்வரரையும் வீணா தட்சிணாமூர்த்தியையும் மனதாரப் பிரார்த்தனை செய்தால்,
"குருவருளும் திருவருளும்" கிடைத்து யோகத்துடனும் ஞானத்துடனும் திகழலாம்.

கருவறையின் பின்புற கோஷ்டத்தில் சிவபெருமானின் 64 திருமேனிகளில் ஒன்றான உமா ஆலிங்கன மூர்த்தியையும் தரிசிக்கலாம்.
சிவபெருமான்,
வலது கையால் சின் முத்திரை காட்டியும் இடது கையால் பார்வதி தேவியை அணைத்தபடி அபூர்வமாக காட்சியளிக்கிறார்.

இங்கே வந்து இந்த மூர்த்தியை வணங்கினால், கணவன் மனைவி இடையே ஒற்றுமை மேலோங்கும்.

பிரிந்த தம்பதி ஒன்று சேருவார்கள் என்பது ஐதீகம்.
ஈசன் தனது இடது பாதத்தின் சுண்டு விரலை தேவியின் வலது பாதத்தின் மீது வைத்திருப்பது போன்று நுணுக்கமாக வடிக்கப்பட்டுள்ளது இச்சிலை.

இந்த உமா ஆலிங்கன மூர்த்தியை வழிபட மணப்பேறு, மகப்பேறு கிட்டும் என்று பக்தர்கள் நம்புகின்றனர்.
தொடர்ந்து மேற்கே,தனிச் சந்நதியில் லட்சுமி நாராயணர், கருவறையின்

வட கோஷ்டத்தில் பிரம்மா, சரஸ்வதி, துர்க்கை சந்நதிகள் உள்ளன.

அனைத்துச் சிற்பங்களும் கலைநயம் ததும்ப காட்சியளிக்கின்றன.
ஆலயத்திற்கு வெளியே நாக தோஷங்களை நீக்கும் பாம்புப் புற்று காணப்படுகிறது.

#வீணா_தட்சிணாமூர்த்தி

#திகிசண்டாள_வீணா_தட்சிணாமூர்த்தி

#ஓம்_சிவாய_நமஹா

• • •

Missing some Tweet in this thread? You can try to force a refresh
 

Keep Current with M.SivaRajan

M.SivaRajan Profile picture

Stay in touch and get notified when new unrolls are available from this author!

Read all threads

This Thread may be Removed Anytime!

PDF

Twitter may remove this content at anytime! Save it as PDF for later use!

Try unrolling a thread yourself!

how to unroll video
  1. Follow @ThreadReaderApp to mention us!

  2. From a Twitter thread mention us with a keyword "unroll"
@threadreaderapp unroll

Practice here first or read more on our help page!

More from @MSivaRajan7

Feb 2
#அரிவாட்டாய_நாயனார்

அரிவாட்டாய நாயனார் கணமங்கலம் என்னும் ஊரில் பிறந்தவர்.

கணமங்கலம் தற்போது தண்டலைச்சேரி என்றழைக்கப்படுகிறது.

இது திருவாரூர் மாவட்டம் திருத்துறைப்பூண்டி வட்டத்தில் அமைந்துள்ளது.
இவருடைய இயற்பெயர் தாயனார் என்பதாகும்.

இவரும் இவர் மனைவியும் சிவபெருமானிடம் மாறாத சிவபக்தியில் திளைத்தவர்கள்.

அரிவாட்டாய நாயனார் தினசரி செந்நெல் அரிசியும், செங்கீரையும், மாவடுவும் வைத்து கணமங்கலத்தில் கோயில்கொண்டிருந்த நீள்நெறி நாதருக்கு அமுது செய்விப்பார்.
செல்வந்தரான அவருடைய பெருமையை உலகுக்குக் காட்ட எண்ணிய சிவபெருமான், அவருடைய செல்வத்தை நீக்கி வறுமையை உண்டாக்கினார்.

கூலிக்கு வேலை செய்தாலும், நெல்வயலில் கிடைத்த நெல்லைக்கொண்டு இறைவனுக்கு திருவமுது ஆக்கினார்.
Read 7 tweets
Feb 2
#தைப்பூசம் பற்றிய 40 அரிய தகவல்கள்

(தைப்பூசம் 5.2.2023 )

1. தைப்பூசம் இந்தியாவில் மட்டுமின்றி இலங்கை, சிங்கப்பூர், மலேசியா, மொரிசியஸ் நாடுகளிலும் கொண்டாடப்படுகிறது.

2. தைப்பூசம் தினத்தன்று எல்லா முருகன் தலங்களிலும் முருகப்பெருமான் வீதி உலா வருவார்.
3. பவுர்ணமி தினத்தன்று முழு நிலவு சமயத்தில் பூசம் நட்சத்திரம் வரும்போது சிறப்பு வழிபாடுகள் செய்வதே தைப்பூசத்தின் முக்கிய நிகழ்வாகும்.

4.தைப்பூசத்தன்று முருகன் நரகாசுரனை வதம் செய்த நிகழ்வு ஒரு சிறப்பு விழாவாக இன்றும் பழனியில் கொண்டாடப்படுகிறது.
5. இரணியவர்மன் எனும் மன்னன் சிதம்பரத்துக்கு வந்து நிறைய திருப்பணிகள் செய்தான்.

அவன் நடராஜ பெருமானை ஒரு தைப்பூச நாளில்தான் நேருக்கு நேர் சந்திக்கும் பேற்றைப் பெற்றான்.
Read 35 tweets
Feb 1
#கண்ணப்ப_நாயனார்_குருபூஜை

வேடர் குலத்தில் பிறந்த திண்ணன், வேட்டை ஆடுவதில் சிறந்தவர்.

ஒருமுறை வேட்டையாடச் சென்றபோது, காளத்தி மலையில் குடுமித் தேவர் என்ற சிவலிங்கத்தினை கண்டார்.

சிவன் மீது அன்பு பெருகியது.
அவரைத் தன் குணத்திற்கும் வசதிக்கும் ஏற்ப வணங்க ஆரம்பித்தார்.

தினசரி வாயில் நீர்சுமந்து வந்து அபிஷேகம் செய்தார்.

மலர்களாலும், இலைகளாலும் அர்ச்சனை செய்து, வேட்டையாடிய பன்றி இறைச்சியைப் படைத்தும் வந்தார்.
இதைக் கண்டு ஆகம விதிப்படி குடுமித்தேவரை வணங்கும் சிவாசரியார் மனம் வருந்தினார்.

இறைவனிடம் முறையிட்டார்.

கண்ணப்பரின் அன்பினை சிவாசரியாருக்கு உணர்த்த ஒரு நாடகம் நடத்தினார் ஈசன்.

திண்ணனார் வரும் வேளையில் சிவலிங்கத்தின் வலக்கண்ணில் குருதி வருமாறு செய்தார் சிவபெருமான்.
Read 8 tweets
Feb 1
ஸ்ரீ விஷ்ணு ஸதநாம ஸ்தோத்திரம் :

*திருமாலின் திவ்ய நாமங்கள் அனைத்தும் இடம் பெற்றிருக்கும் இத்துதியை ஏகாதசி அன்று பாராயணம் செய்தால் அஸ்வமேதயாகம் செய்த பலன் கிட்டுவதோடு நாராயணனின் பேரருளும் கிட்டும்.
ஓம் வாஸுதேவம் ஹ்ருஷீகேஸம் வாமனம் ஜலஸாயினம் ஜனார்தனம் ஹரிம் க்ருஷ்ணம் ஸ்ரீவக்ஷம் கருடத்வஜம்
வராஹம் புண்டரீகாக்ஷம் ந்ருஸிம்ஹம் நரகாந்தகம் அவ்யக்தம் ஸாஸ்வதம் விஷ்ணும் அனந்த மஜமவ்யயம்
நாராயணம் கதாத்யக்ஷம் கோவிந்தம் கீர்திபாஜனம் கோவர்தனோத்தரம் தேவம் பூதரம் புவனேஸ்வரம்
வேத்தாரம் யக்ஞபுருஷம் யக்ஞேஸம் யக்ஞவாஹகம் சக்ரபாணிம் கதாபாணிம் ஸங்கபாணிம் நரோத்தமம்
வைகுண்டம்
Read 9 tweets
Feb 1
#ஸ்ரீ_கணபதி_சஹஸ்ரநாம_ஸ்லோகங்களும்_பலன்களும் :

ஸ்ரீ கணபதி சஹஸ்ரநாமம் விநாயகரின் 1000 திருநாமங்களைக் கொண்டது.

அதைத் தினமும் கூற முடியாதவர்கள்,

சஹஸ்ரநாமத்தில் உள்ள சில சுலோகங்களைத் தினமும் ஜெபித்து வருவதால் பல பலன்களை அடையலாம்.

இது அனுபவத்தில் கண்டது.
1.காரிய தடை நீங்க:-

மஹாகணபதிர் புத்தி பிரிய :க்ஷிப்ர பிரசாதன :
ருத்ர ப்ரியோ கணாத்யக்ஷ உமா புத்தரோ க நாசன||

இதை தினமும் 18 தடவை ஜெபித்து வர எல்லாக் காரியங்களிலும் தடைகள் நீங்கும்.

ஏதேனும் ஒரு செயலில் இறங்கும் இந்த ஸ்லோகத்தை 18 தடவை ஜெபித்து பின்னர் துவங்க வெற்றி உண்டாகும்.
2.எதிரிகளால் துன்பம் நேராமல் இருக்க :

வஜ்ராத்யஸ்த்ர பரீவார:
கனசண்ட ஸமாஸ்ரய :
ஜயோஜய பரீவார :
விஜயோ விஜயாவஹ :||

இதைத் தினமும் 27 தடவை தெற்கு நோக்கி அமர்ந்து சங்கல்பம் செய்து ஜெபித்து வர எதிர்ப்புகள் ,எதிரிகளால் உண்டாகும் தொல்லைகள் நீங்கும்.
Read 10 tweets
Feb 1
#வாமணபுரிஷ்வரர்

*கருவறையில் பள்ளியறை கொண்டிருக்கும் ஸ்ரீ வாமணபுரிஷ்வரர்*

கடலூர் மாவட்டம் திருமாணிக்குழி கிராமத்தில் எழுந்தருளி இருப்பது ஸ்ரீ அம்புஜக்ஷி ஸமேத ஸ்ரீ வாமணபுரிஷ்வரர் கோயில்.
இத்தலமானது மகாவிஷ்ணுவிற்குப் பாவ விமோசனம் அளித்த ஸ்தலம் என்றும்,

18 சித்தர்களில் ஒருவரான அகத்திய முனிவர் இதனால் வரை இங்குக் காட்சி தருவதாகவும் கூறப்படுகின்றது.

சுயம்பு மூர்த்தியாக மூலவர் ஸ்ரீ வாமணபுரிஷ்வரர் காணப்படுகின்றார்.
இத்தலத்தில் தனியாகப் பள்ளியறை சன்னதி கிடையாது மூலக்கருவரையில் பள்ளியறையாகக் காணப்படுவதால் எம்பெருமானை எம்பெருமானை சதாக்காலமும் தரிசிக்க முடியாது.
Read 4 tweets

Did Thread Reader help you today?

Support us! We are indie developers!


This site is made by just two indie developers on a laptop doing marketing, support and development! Read more about the story.

Become a Premium Member ($3/month or $30/year) and get exclusive features!

Become Premium

Don't want to be a Premium member but still want to support us?

Make a small donation by buying us coffee ($5) or help with server cost ($10)

Donate via Paypal

Or Donate anonymously using crypto!

Ethereum

0xfe58350B80634f60Fa6Dc149a72b4DFbc17D341E copy

Bitcoin

3ATGMxNzCUFzxpMCHL5sWSt4DVtS8UqXpi copy

Thank you for your support!

Follow Us on Twitter!

:(