இருபதாம் நூற்றாண்டின் இறுதியில் இலங்கையினின்று குடிபெயர்ந்த இவர்களின் வாழ்விடம் இலங்கையில் #மலையகம் மட்டுமின்றி,
இலங்கையின் மையப்பகுதியாக இருந்தாலும் தற்போது எல்லோரும் ஒன்றாகவே வாழ்ந்து வருகின்றனர்.
இருநூறு குடும்பங்களாக இலங்கையினின்று இடம்பெயர்ந்த இவர்கள், தாயகம் திரும்பியவர்களே அன்றி இலங்கையின் பூர்வீகக் குடிகள் அல்லர்.
ஆயினும் இடப்பெயர்ச்சியை ஏற்றுக் கொண்ட இவர்கள், இன்றளவும் தங்கள் குடியிருப்பிற்கு "ஏதிலிகள் குடியிருப்பு" எனப் பெயரிட்டுள்ளதே...
இவர்கள் தம் வருத்தங்களின் வார்த்தைக் கோர்வைகள்தாம்.
தங்களுடைய பண்பாட்டு அடையாளங்களை இழந்து பரிதவிக்கும் இவர்கள் ஏனோ பழங்கதை பேச மறப்பதில்லை.
பண்பாட்டுப் பழங்கதைகளில் இவர்கள் பத்திரமாக வைத்திருக்கும் பழம் பொக்கிஷங்களில், உணவுக்கு ஓர் உன்னத இடமளித்துள்ளனர்.
அடைந்த வேதனைகளை எண்ணி அழுகின்ற வேளையில், உணவுப் பெருமைகளைச் சொல்லி உள்ளம் மகிழ்கின்றனர்.
அடிக்கடி இவர்களின் உணவுப் பெருமைகளைக் கேட்டுக் கொண்டிருக்கும் மதுரை மாவட்ட விளாங்குடித் தொகுப்புக் குடியிருப்பில், அவர்கள் வீட்டுக் குசினிகள் (சமையலறை) குறைபட்டுக் கொள்கின்றன.
"விளாங்குடிக் குடியிருப்பு" குசினிகளின் குறைபாடுகள் பொய் எண்றெண்ணிக் கால்களை, புதுவை #கனகசெட்டிக்குளம் அருகில் உள்ள #புத்துப்பட்டு ஏதிலிகளின் குடியிருப்பிற்குள் இறக்கி வைத்தபோது,
விளாங்குடிக் குடியிருப்புக் குசினிகளின் குறைபாடு உண்மையென உரக்கச் சொல்லின...
புத்துப்பட்டு ஏதிலிகளின் அடுமடைகள்.
அதிலும் ஓர் அதிசயச் செய்தியாக ஏதிலிகளின் புலம்பலில் மட்டுமே இச்சமையல் இடம்பெறுவதாக இல்லாமல், அவ்வப்போது அடுமடைகளில் அரங்கேறுவதாகத் தெரிகிறது.
புலம்பல் சமையலைச் செய்முறைப் பயிற்சியாக நிகழ்த்தும் தகுதி தங்கள் குடியிருப்புக் குசினிகளுக்கு...
இருப்பதை எண்ணி இறுமாப்புக் கொண்டிருந்தன ஏதிலிகளின் குடியிருப்புக் குசினிகள்.
இவ்விரு தொகுப்புக் குடியிருப்புகளின் வீட்டுச் சமையலறைகள் சொல்லும் சாட்சிகள்தாம் இப்புலம்பல் சமையல்.
அவலை நினைத்து உரலை இடித்த கதையாய் இங்குள்ள உணவு முறைக்கு முற்றிலும் தம்மை மாற்றிக்கொண்ட...
இவர்களின் ஒவ்வொரு உணவுச் செய்முறையிலும் தங்களுடைய பழைய நினைவுகளைப் பதிய வைத்துள்ளனர்.
அதற்கான சான்றுகளை இவர்கள் ஆப்பத்திற்கான இலக்கணம் சொல்லும் முறையிலிருந்துதான் ஆரம்பிக்க வேண்டும்.
ஆப்பம் செய்வதை ஒரு திருவிழாச் சடங்காகவே இரு நாட்களில் நடத்தி முடிப்பார்களாம்.
முதல்நாள் முழுவதும் மாவுக்கான பக்குவமாம். இரண்டாம் நாள் காலையில் அதை மண் சட்டியில் இட்டு எடுத்துத் தங்களின் இணையுணவான தேங்காய்ப்பால் சேர்த்து உண்டதும், இவர்களின் பழங்கதைக் குறிப்பில் பத்திரமாக உள்ளது.
கறியென்பது இவர்களுக்குப் பொதுச் சொல்லாகத்தான் உள்ளது.
பொதுவாகச் சைவ, அசைவ உணவுகளையும் #கறி என்ற பெயரிட்டே அழைக்கும் இவர்கள், தற்போது இறைச்சியைச் சமைக்கும் நிலை வந்தால் கொத்தமல்லியிலையைக் கண்டவுடன் குமுறுகின்றனர்.
தாங்கள் இலங்கையில் வாழ்ந்த காலங்களில் இறைச்சியில் மணத்திற்காக இணைத்து, 'ரம்பையை’ மட்டும் சேர்த்துக் கொண்டதையெண்ணியதே...
இக்குமுறல். ஆம்! தங்களுடைய அசைவ உணவுகளில் கொத்தமல்லி புதினாவிற்குப் பதிலியாக இவர்கள் 'ரம்பையை' இட்டு மணமூட்டிப் புசித்துள்ளனர்.
இட்லியை இன்றைய உணவாக ஏற்றுக்கொண்ட இவர்களுக்கு, ஏனோ சட்னியைக் கண்டவுடன் சலிப்புத் தட்டுகிறது. காரணம் சம்பல் தான் இவர்களின் பிரதான உணவாம்.
கசக்கும் பாகலையும் சம்பலிட்டுச் சாப்பிடும் தங்களின் சர்வ வல்லமையைப் புலம்பலில் புலப்படுத்துவர்.
தேங்காய்ச் சம்பல், கொட்டு கொலே (வல்லாரை) சம்பல், முருங்கை இலைச் சம்பல், பாகல் சம்பல் எனப் பலவிதமான சம்பல்களையும் அறிந்துள்ள இவர்கள் மாசியென்னும் மீன் வகையைக் காயவைத்துப்...
பொடியாக்கித் தேங்காய், மிளகாய் வற்றல் சேர்த்து அரைத்துத் தேசிக்காய் (எலுமிச்சை) இட்டுப் பிசைந்து உண்டு மகிழ்ந்த காலங்களை உருப்போட்டு வைத்துள்ளனர்.
முட்டையிட்டு அடித்து எண்ணெய் ஊற்றிப் பொரித்தபின் எடுக்கக் 'கேவும்' என்னும் இனிப்புப் பலகாரம் இயல்பாகவே கிடைக்கும்.
முக்கனிகளுடன் ஒன்றான பலா இவர்களின் சமையல் அறை பழகிப்போன ஒன்றாகும்.
மனதளவில் எந்தத் தவறும் செய்யாத, செய்ய நினையா இவ்வேதிலிகள் வாழ்வில் இன்னல்களை எதிர்கொண்டாலும்..
இவர்களால் இன்னல்படுவது முக்கனி நண்பனான பலா.
ஆம்! பலாவின் முதுமைப் பருவத்தை அதற்கு இவர்கள் அறியவைப்பதே இல்லை.
ஈரப்பலாக்கா, பொலஷ்கா எனப் பெயரிட்டு அழைக்கும் இதை, அவித்துத் தேங்காய் சேர்த்து உண்டதும் கறியாகச் (குழம்பு) சமைத்து உண்டதும் தங்களின் நாக்கில் இருந்து விலகவில்லை...
என்கின்றனர்.
கிழங்கு வகைகளில் மரவள்ளிக் கிழங்குக்கு மகத்தான இடமளித்துள்ளனர். தங்களின் உணவாக எப்போதாவது இவர் கள் எடுத்துண்பது இது ஒன்றே.
இதைத் தேங்காய், சீனியிட்டு அல்லது தேங்காய்ச் சம்பலுடன் சேர்த்துச் சாப்பிடுகின்றனர்.
சிலப்பதிகாரத் துணை மாந்தர்களுள் ஒருவராக மாதிரியின்...
வம்சாவளியினர் எப்படி இலங்கைக்குச் சென்றனர் என்று இன்றுவரை தெரியவில்லை.
இவர்களின் கிரிபாத் என்னும் பால்சோற்றின் பக்குவத்தைத் தவிர்த்து, இதை உறுதிப்படுத்தும் போதிய சான்றுகள் வேறொன்றுமில்லை.
மலையகத் தமிழர்களின் மகத்தான உணவுகளில் மணிப்புட்டு ஒன்றும் உள்ளது...
மழைக் காலங்களில் ஈரமான காற்றை எதிர்கொள்ள இவர்களால் தயாரிக்கப்படும் இணையுணவு தான் இது.
பிறரின் உடமைகளைக் கவர நினையா இவர்கள் பிற உணவு முறைமைகளைக் கடன் வாங்கியுள்ளனர் என்பதற்கு 'லெவரியா' சான்றாகும்.
இதன்படி இடியாப்பப் பக்குவத்தில் பிழிந்த மாவின் நடுவே பாசிப்பயறு வறுத்து...
அவித்துத் தேங்காய் சேர்த்து மறைத்து அவிக்கும் மாந்திரீகத்தைப் பிறரிடம் கற்றனராயினும், இன்றளவும் இவர்களின் உணவுகளில் இதுவும் ஒன்றாகிறது.
ஊறுகாய் என்னும் வினைத்தொகையை அச்சாறு என்னும் சுட்டாக மாற்றிய பெருமை இவர்களுக்கு உரியது.
பீன்ஸ், கேரட், பப்பாளிக்காய், இஞ்சி இவையனைத்தும் சேர்த்து இவர்கள் செய்யும் ஊறுகாய் உருதான் ‘அச்சாறு’ என அடையாளம் மாற்றப்பட்டுள்ளது.
உண்டான சோகங்களை மறந்து உணவுகளின் செய்முறைகளை மட்டும் உள்ளத்தில் வைத்திருந்து, செய்து பார்க்க முடியாத குறிப்புகளைக் கள ஆய்வின்போது...
ஆண்களின் முகத்துக்கு அழகு சேர்ப்பதில் மீசைக்கு ஒரு பங்குண்டு.
ஆணையும் பெண்ணையும் வேறுபடுத்தும் உடற்கூறாகிய முகமயிர், ‘அத்தைக்கு மீசை முளைத்தால் சித்தப்பா' என்னும் பழமொழிக்கு அடிப்படை ஆயிற்று.
ஆண் - தன்மை - ஆண்மை எனப்படும்.
ஆண்மை வீரத்தை உள்ளடக்கியதாகும். இதுவே மானம், பெருமை, வீரம், உயர்வு முதலிய உயர் குணங்களோடு மீசையை இணைத்துப் பேசும் வழக்கத்தை ஏற்படுத்தியது.
பொதுவாகத் தமது மேலுதட்டில் வளர்ந்துள்ள முடியை ஒழுங்கு
படுத்தி வளர்த்துக் கொள்வதில் ஆண்கள் ஈடுபாடு கொள்கின்றனர்.
பெண்களிடம் காணமுடியாத பெருமை கருதியே ஆடவர்களுக்கு இதில் ஓர் ஆர்வம் துளிர்த்திருக்கலாம்.
மேலுதட்டில் இருப்பதாலும், (மேனோக்கி வளர்ப்பதாலும்) மேன்மைகளுக்கெல்லாம் அடையாளமாக விளங்குவதாலும், மிசை - மேல் என்னும் சொல்லடியாக 'மீசை' என்னும் சொல்லை இதற்குரியதாக வழங்கியுள்ளனர்.
இங்ஙனம் தீண்டிப்பார்க்கின்ற குறிக்குத் தீண்டற் குறியென்று பெயர். இந்தத் தீண்டற் குறியைத்தான் பின்னர் #பிள்ளையார்சுழி என்று கூறும் மரபாக்கிக் கொண்டுள்ளனர்.
இங்ஙனம் ஏடுதீண்டும் குறியானது பிள்ளையார் வழிபாடு தமிழ்நாட்டுக்கு வருமுன்னரே இருந்து வந்துள்ளதென்பது அறிஞர்கள் ஆய்ந்து கண்ட முடிபாகும்.
மேலும், புள்ளியிலாச் சுழி என்பது வெறும் சுழியத்தையே குறிக்கும். ஓலைச்சுவடியில் எழுதும்பொழுது புள்ளி வைப்பதில்லை.
தொடி, ஒருவட, இருவட, மூன்றுவட ஆரங்கள், வளை, மகரக்குழை (காதணி), காற்சரி எனப்படும் பாதசரம், கிண்கிணி, சிலம்பு ஆகிய அணிகலன்கள் சங்ககால சிறார்களால் அணியப்பெற்று அழகிற்கு அழகு ஊட்டின என்பதை சங்கப்பாடலடிகள்வழி நாம் அறியலாம்.
கீழ்க்காணும் #கலித்தொகை பாடல், தாய் தன் செல்வ மகனுக்கு அணிவித்து அழகு பார்த்த அணிகலன்களைப் படம் பிடித்துக்காட்டும்.
பொடிவைத்து இணைக்கப்பட்டமை அறியா வண்ணம், மீளவும் நெருப்பிலிட்டு ஒளிபெறச் செய்யப்பட்ட பொன்னாலான, இரு வடங்களில் அமைந்த #காற்சரி எனப்படும் #பாதசரம்.
'பொடி அழற்புறம் தந்த' என்ற தொடரால் அணிகலன்களின் பகுதிகள் பொடிவைத்து ஊதி ஊதி இணைக்கப்பட்டன என்பதும்,
அப்படிச் செய்தமை புலப்படா வண்ணம் மீண்டும் செந்தழலில் இடப்பட்டு ஒளியூட்டப்பட்டன என்றதுமான அன்றைய சிறந்த தொழில்நுட்பம் அறியப்படுகிறது.
சங்க காலத்தில் தமிழ்ச் சமூகத்திடையே இடையறாது நடைபெற்ற மாட்டுச் சண்டையாகும்.
ஆகோள் பூசலில் மாண்ட வீரர்களுக்கு #நடுகல் நடும் சிறப்பு முல்லைத் திணையில் பேசப்படுகிறது.
தொல்குடி நிலையில் ஆகோள் பூசல் என்பது வாழ்வியல் ஆதாரத்தை பெருக்கும் ஒரு வழியாகவும், வளமைக்காகவும்..
வீரத்திற்காகவும் நிகழ்த்தப்பட்டதாகும். தொல்லியல் சான்றுகளாக நமக்குக் கிடைக்கும் #நடுகற்கள், #நெடுங்கல், #குத்துக்கற்கள் முதலியன ஆகோள் பூசலில் மாண்ட வீரர்களுக்காக வைக்கப்பட்டவையாக பெரும்பாலும் இருக்க வாய்ப்புண்டு.
'புலிமான் கோம்பை' #நடுகல் இதற்குத் தக்க சான்றாகும்.
சங்க இலக்கியங்களில் #மழவர்கள் நிரை கவர்பவர்களாகவும், #மறவர்கள் நிரை மீட்பவர்களாகவும் காட்டப் பெறுகின்றனர்.
புகழ்மிக்க அம்பு #மழவர் கையில் உள்ளது. அது எய்யப் பெறும்போது வீல் என்ற ஒலியுடன் பாய்ந்து செல்லும். பகலிலே நிரையைக் கவர அம்பெய்துகின்றனர்.
மந்திரச் சடங்குகள் ஆதிகாலத்திலிருந்து மனிதனால் நம்பிக்கையின் காரணமாக மேற்கொள்ளப்பட்டவையாகும்.
இதைப்போன்று செய்தல் என்ற நெறியில் அது நடைபெற வேண்டும் என்ற வேண்டுகோளின் பேரில், மந்திரச் சடங்குகள் தொல்மனிதனால் பண்டு மேற்கொள்ளப்பட்டது.
தொல்குடி மாந்தர் நிறையா வாழ்க்கை நிலையிலிருந்த காரணத்தாலும், உற்பத்தி உத்திகள் அறியப்படாத நிலையில் இருந்ததாலும், உற்பத்தி நிறைவு வேண்டி மந்திரச் சடங்குகளைத் தொடங்கினர்.
வேட்டை மேற்கொள்ளும் மனிதனுக்கு வேட்டை கிட்டாவிடில் இனக்குழு மக்கள் அனைவரும் பட்டினியால் வாடுவர்.
இதனால் பழங்காலத்தில் வேட்டையில் நல்ல மிருகங்கள் கிடைக்கவும், பயிர் உற்பத்திப் பெருகவும் தொல்குடி மக்கள் நம்பிக்கையின் பேரில் மந்திரச் சடங்குகளைச் செய்தனர்.
மந்திரச்சடங்குகளைத் தொத்து மந்திரம், ஒத்த மந்திரம் என வகைப்படுத்துவர். இருப்பினும் இவ்விரண்டுமே ஒத்துணர்வு மந்திரம் எனலாம்