மருந்துவாழ் மலை பரமார்த்தலிங்கேஸ்வரர் திருக்கோயில் :
தாமரையை கவிழ்த்து வைத்தது போல் இருக்கும் மலை "மருந்து வாழ் மலை". இது கன்னியாகுமரி நாகர்கோயில் சாலையில் சுசிந்திரம் அருகில் உள்ளது.
லெட்சுமணனைக் காப்பாற்ற அனுமன் சஞ்சீவி மலையைப் பெயர்த்து எடுத்துக் கொண்டு சென்ற போது தமிழ்நாட்டில்
விழுந்த பல்வேறு துண்டுகளில் இம்மலையும் ஒன்று.
அகத்திய முனிவர், அத்திரி
முனிவர், தேவேந்திரன் வரை புனிதத் தவம் மேற்கொண்ட பெருமையினை உடையதாகும்.
இன்றும் இங்கு பல சித்தர்கள் மலையின் குகைகளில்
வசிப்பதை காணலாம்.
மலைப்பாதையில் பரமார்த்தலிங்கேஸ்வரர் சிவன் கோயில் உள்ளது.
திருவிதாங்கூர் மன்னர் மலை கோயிலுக்கு வந்தபோது மலையில் ஏறிச்
செல்வதற்கு வசதியாக படிகள் அமைக்கப்பட்டன.
இம்மலையில் பிரணவ சஞ்சீவி, அமிர்த சஞ்சீவி, ஜீவசஞ்சீவி உள்ளிட்ட ஏராளமான உயிர் காக்கும் மூலிகைகள் உள்ளன.
மேலும் எந்த மலையிலும் கிடைக்காத பல அபூர்வ மூலிகைகளும் உள்ளன.
இந்த மூலிகைகள் பலவிதமான நோய்களை தீர்க்கும் ஆற்றல் கொண்டவையாகத் திகழ்கின்றன.
இம்மலையில் இருந்து வீசும் காற்றைச் சுவாசிக்கும் போது
உடலில் புது சக்தி தோன்றுகிறது.
ஆஸ்துமா நோய் வராமலும் தடுக்கின்றது.
இதனால் ஏராளமான பொதுமக்கள் இங்கு வந்து சமைத்து சாப்பிட்டு, மூலிகைக் காற்றைச் சுவாசித்து, உடல் ஆரோக்கியத்துடன் திரும்பிச் செல்வதை தினமும் காணமுடிகிறது.
இம்மலையில் உள்ள மூலிகை இலைகளை பறித்து மலையிலே வைத்து சாப்பிடும் போது கசப்புத் தன்மை இல்லாமலும்,
மலைக்கு வெளியே கொண்டு வந்து சாப்பிடும் போது கசப்புத் தன்மையுடன் இருப்பது இம்மலையில் உள்ள
மூலிகைகளின் தனிச்சிறப்பாகும்.
மருந்து வாழ் மலையில் கொடிய நோய்களையும் தீர்க்கும் மூலிகைகள்
இன்றும் வளர்வதால் தான் இம்மலை மருந்து வாழ் மலை ஆனது.
மருந்துவாழ் மலையினை சென்றடைய நாகர்கோயில் - கன்னியாகுமரி வழிப்பாதையில் சுசீந்திரம் திருத்தலம் அடுத்து வரும் பொத்தையடி எனும் இடத்தில இறங்கிட வேண்டும்.
கன்னியாகுமரியில் இருந்து 8கிலோமீட்டர் தூரத்தில் மருந்துவாழ் மலை அமைந்து உள்ளது.
உள்ளம் சம்பந்தமான நோய்களும், நம் உடம்பில் உள்ள நோய்களும் அகல சிவபுராணம், தேவாரம், திருப்புகழ் பாடி மருந்துவாழ் மலையினை பௌர்ணமி நாளில் அந்திப்பொழுதிலும், இரவிலும் வலம் வருதல் சிறப்பாம்.
ராமன் செலுத்திய அம்பில் காயம்பட்டு குற்றுயிராய்க் கிடந்த இராவணனிடம் உயிர் பிரியாமல் இருந்தது.
அப்போது இராமர் இலட்சுமணனை பார்த்து இலட்சுமணா இராவணன் அனைத்துக் கலைகளையும் அறிந்தவன் ராஜதந்திரம் மிக்கவன்.
நமக்கு அவனுடைய அரசியல் அனுபவம் மிகவும் பயனுள்ளதாயிருக்கும். நீ அவனிடம் போய் நான் கேட்டதாகக் கூறி அவனுடைய சிறந்த அறிவுரைகளைப் பெற்று வா என்று கூறி அனுப்பினார்.
இலட்சுமணன் பவ்யமாக இராவணனின் காலடியில் நின்று இலங்கேஸ்வரா உன்னுடைய ஞானம் உன்னோடு அழிந்துவிடக்கூடாது.
நீ எனக்கு உபதேசிப்பதன் மூலம் அதை இந்த உலகம் அறிந்து பயன் பெறும் எனவே எனக்கு உபதேசியுங்கள் என்று வேண்டி நின்றான்.
வெட்டியான் ஒருவன் பிணத்துக்காகக் குழி தோண்டும் போது சிவலிங்கம் ஒன்றைக் கண்டெடுத்தான்.
அதை அரசனிடம் எடுத்துச் சென்ற போது
”சுடுகாட்டில் கிடைத்ததை நீயே வைத்துக் கொள்..
சுடுகாட்டுச் சாம்பலை வைத்து அபிஷேகம் செய்”
என்று ஏளனமாக அரசன் கூறி விட்டான்.
இறை வழிபாடு என்றால் என்ன என்று தெரியாத வெட்டியானும் அரசனது வார்த்தைகள் ஏளனமானவை என்பதை அறியாமல், பிணம் எரித்த சாம்பலைக் கொண்டு சிவலிங்கத்துக்கு அபிஷேகம் செய்து தான் உண்ணும் பழைய உணவை படைத்து வழிபட்டான்.
ஒரு நாள் திடீரெனப் பெய்த மழையினால், சுடுகாட்டில் இருந்த சாம்பல் முழுவதும் கரைந்து விட்டது.
" சிவலிங்கத்துக்கு அபிஷேகம் செய்யச் சாம்பல் இல்லையே " என வருந்திய அவனும் வறட்டிகளை அடுக்கித் தீயை மூட்டி விட்டுத் தனது மனைவியிடம் ” நான் இந்தத் தீயில் விழுகிறேன்.