கர்நாடக பாஜக சந்தித்த அழுத்தங்களாக அறியப்படுவது இவைதான்.எடியூரப்பா ஆதரவாளர்கள் - வாக்குறுதி கொடுத்து அழைத்து வரப்பட்ட காங்கிரஸ் தலைவர்கள் - எடியூரப்பா எதிர்ப்பாளர்கள் என இம்மூன்று தரப்பையும் திருப்திப்படுத்தும் இடத்தில் நிறைய சறுக்கல் இருந்தது.(2)
இவையில்லாமல் ஹிந்துத்துவ ஆதரவு தளத்திலும் பொம்மையின் மீதொரு அதிருப்தி வந்தது.அதாவது,தொடர்ச்சியாக ஹிந்துத்துவ தலைவர்கள் வேட்டையாடப்படுவதில் ஒரு தெளிவான முடிவெடுக்காமல் இந்த அரசு தடுமாறுகிறது என்ற பார்வையால் அது வந்தது.(3)
1977 ல் தேவ்ராஜ் அரஸ் உருவாக்கிய AHINDA கூட்டணிக்கு மீண்டும் 2018 ல் உயிர் கொடுத்தார் சித்தராமய்யா,அதுமட்டுமில்லாமல் பாஜக ஆதரவு சமூகமான வீரசைவ லிங்காயத்துகளை உடைக்கவும் காய் நகர்த்தினார்.(4)
அந்த நகர்வை சிதறடித்தது மோடி + எடியூரப்பா கூட்டணிதான்.இல்லை என்றால் சித்தராமய்யா தன் வலுவான தடத்தை பதித்திருக்கவே வாய்ப்பிருந்தது.(5)
இந்த நிலையில்,2023 தேர்தலில் எடியூரப்பா வெளியிலிருக்கிறார்.பிற கட்சியில் இருந்து வந்தவர்கள் அதிருப்தியில் உள்ளார்கள்.சொந்த கட்சியை சேர்ந்தவர்களும்,கொள்கை வாதிகளும் அதிருப்தியில் உள்ளார்கள் என்பதை மோடி + பொம்மை கூட்டணி சரி செய்ய முடியுமா? என்ற கேள்வி எல்லோருக்குள்ளும் இருந்தது.(6)
இந்த தேர்தலில் நமக்கில்லை கர்நாடகா என்ற பார்வை பாஜகவினரிடமே பரவியிருந்தது.இப்படிப்பட்ட நிலையில்தான் தேர்தல் பொறுப்பாளர்களாக அமைச்சர் தர்மேந்திர பிரதான் - பாஜக தமிழ்மாநிலத் தலைவர் அண்ணாமலை - அமைச்சர் மாண்டவியா நியமிக்கப்பட்டார்கள்.(7)
தீர்க்கமான முடிவுகளை எடுக்க வேண்டும்.அது களத்தின் குரல்களை காதுகொடுத்து வகுக்கப்படும் வியூகமாக இருக்க வேண்டும்.வெற்றிக்காக விரட்டப்பட வேண்டியது தனிமனித விருப்பு வெறுப்பாக இருக்க வேண்டும்.இவற்றை எடுக்க கறாரான தேர்தல் பொறுப்பாளர்கள் தேவை என்றே பாஜக இவர்களை களமிறக்கியது.நிற்க.(8)
கடந்த நான்கு வாரங்களில் 3 முறை பிரதமர் மோடி கர்நாடகா வளர்ச்சி பணிகளை மேற்கொள்ள அங்கே வருகைபுரிந்தார்.அதில் மிக முக்கியமான பஞ்சாரா என்றழைப்படும் லம்பாடி சமூக மக்களுக்கு 50000 பட்டா கொடுக்கும் நிகழ்வும் ஒன்று..(9)
கல்யாண கர்நாடகா எனும் ஹைதராபாத் கர்நாடகா பகுதியில் செறிந்து வாழும் பட்டியல் சமூகம் பஞ்சாராக்கள் ஆவார்கள்.இவர்கள் தென்னிந்தியா முழுக்க பரவி வாழ்ந்தாலும் தெலங்கானா கர்நாடாகாவில் அடர்த்தியாக வாழ்கிறார்கள்.(10)
ராணா பிரதாப் சிங்கிற்காக மேவாரை விட்டு வெளியேறிய ராஜபுத்திரர்களாக பார்க்கப்படுகிறார்கள்.இன்று நாடோடிகளாக உலவித் திரிகிறார்கள்.இந்த சமூகங்களுக்கு நரேந்திர மோடி மிகப்பெரிய முக்கியத்துவத்தை தருகிறார்.(11)
'உங்களின் மகன் டெல்லியில் அமர்ந்து ஆள்கிறான் என்பதை ஒவ்வொரு பஞ்சாராக்களின் தாயும் உணர வேண்டுமென்ற" உருக்கமான வேண்டுகோளை நரேந்திர மோடி அந்த கூட்டத்தில் பேசியது பெரிதும் வரவேற்கப்பட்டது.(12)
கர்நாடக பட்டியல் சமூகத்தில் வலங்கை - இடங்கை பிரிவுகள் உண்டு.சாலவாடி என்ற வலங்கை பட்டியல் சமூகமே அங்கே ஆதிக்க சமூகமாக இவற்றிற்குள் உள்ளன.தற்போதைய AIIC தலைவர் மல்லிகார்ஜுன கார்ஹே மற்றும் காங்கிரஸ் தலைவர் பரமேஸ்வரன் போன்றவர்கள் இந்த சமூகத்தை சேர்ந்தவர்களே.(13)
இதில் சாலவாடி சமூகங்கள் எங்களுடைய இடத்தை பிடிக்கின்றன என்று இடங்கை சமூகமான மடிகா(அருந்ததி) பட்டியல் பிரிவினர் கருதுகின்றனர்.காங்கிரஸ் சாலவாடி சமூகத்தால் சூழப்பட்டது எனவே,இதர வலங்கை பஞ்சாராவும்,இடங்கை மடிகாவும் பாஜகவை நோக்கி நகர்ந்தார்கள்.(14)
தற்போதைய முதல்வர் பொம்மை தலைமையிலான பாஜக அரசு 15% இருந்த பட்டியல் சமூக இடங்களை 17% சதவிகிதமாக நீட்டித்தும்,3% இருந்த ST ஒதுக்கீட்டை 7% மாக புள்ளிவிவர அடிப்படையில் மாற்றியும் மசோதாவை நிறைவேற்றியுள்ளார்கள்.அதனை 9 வது சட்டப்பிரிவின் வழியே உறுதிப்படுத்த பணிகளை துவங்கியுள்ளார்கள்.(15)
இதற்கு ஒரே காரணம் மடிகாக்கள்(SC)இவற்றை பயன்படுத்திக் கொள்ள வேண்டும் என்றே.கிட்டத்தட்ட 42 சட்டமன்ற தொகுதிகளில் இது எதிரொலிக்கும் என்கிறார்கள்.வால்மீகி நாயக்க(ST) சமூகம் இதனால் நேரிடையாக பயன்பெறும்.22 தொகுதிகளில் (ராய்ச்சூர் - சித்ரதுர்க்கா - பெல்லாரி) இதன் தாக்கம் இருக்கும்.(16)
அடுத்தது,வடகர்நாடகமான கித்தூரு கர்நாடகா என அழைக்கப்படும் மும்பை கர்நாடகாவில் உள்ள பெலகாவி மாவட்டத்தில் மராத்தி பேசும் மக்கள் வலுவாக உள்ளார்கள்.மாரத்தியர்களுக்கும் கன்னடர்களும் கடுமையான முரண்பாடு இருக்கும் பகுதி.(17)
வெறும் மொழிவாரி மக்களுக்கு இடையே மட்டுமான முரணாக இல்லாமல்,மராட்டியத்துக்கும் கர்நாடகத்துக்கும் இடையேயான யுத்தகளமாகவும் அந்தப் பகுதி உள்ளது.(18)
பெல்காவி மாவட்டத்தில் 20% மராத்தியர்கள் உள்ளார்கள்.கன்னடர்கள் லிங்காயத் - ஜெயின் மற்றும் பட்டியல் பிரிவு - பட்டியல் பழங்குடி சமூகத்தவர்கள் உள்ளார்கள்.ஜாதிய அணிசேர்ப்பை விட மொழிவழி உணர்ச்சியும்,மத உணர்ச்சியும் அதிகம் கொண்ட பகுதி.(19)
பெல்காவி மாவட்டத்தில் அதன் தலைமை பீடமான பெல்காம் மாநகராட்சிக்கு தற்போது மராத்தா மேயர் - துணை மேயர்களை கொண்டு வந்துள்ளது பாஜக.இதை மிக மிக துணிகரமான,நுணுக்கமான நகர்வாக பார்க்கிறார்கள்.(20)
பெல்காலி மாவட்டத்தை தன் முழு கட்டுப்பாட்டில் எடுக்கவும்,அங்கே சித்தராமய்யாவின் செயல்பாடுகளை தேக்குவதையும் ஒரு அங்கமாக கொண்டே அண்ணாமலையை களமிறக்கியுள்ளது பாஜக.(21)
காங்கிரஸிலிருந்து பாஜக வந்த வொக்கலிகா தலைவர்களுக்கும் மிக முக்கியமான தேர்தல் பணியை வழங்கியுள்ளார்கள்.டாக்டர் சுதாகர் கவுடாவிற்கு தேர்தல் அறிக்கை தயாரிக்கும் தலைமை பதவியை வழங்கியுள்ளார்கள்.ST சோமசேகருக்கு பாஜக திட்டங்களை மக்களிடம் கொண்டு செல்லும் பதவியை கொடுத்துள்ளனர்.(22)
காங்கிரஸில் இருந்து பாஜக வந்த, தன் சமூகத்தில் சொந்த செல்வாக்குள்ள வொக்கலிக கவுடா தலைவர்களை பெரிதுபடுத்தி காட்டுவதில் பாஜக சிறப்பாக செயல்பட்டுள்ளது.(23)
தீவிர RSS காரரும்,இந்துத்துவ அடையாளமாகவும் உள்ள ஹலப்பா பசப்பா ஆச்சார் அவர்களுக்கும் பாஜகவின் திட்டங்களை கொண்டு போகும் மாநில அளவிலான பொறுப்பினை வழங்கியுள்ளார்கள்.லிங்காயத் ரெட்டி சமூகத்தை சேர்ந்த ஆச்சார் அவர்களுக்கு வழங்கப்பட்ட பதவி ஹிந்துத்துவ தரப்பை திருப்தி செய்வதாக உள்ளது.(24)
பாஜகவின் மொத்த தேர்தல் பயணத்தையும் கவனிப்பது சி.சி.பாட்டீலுக்கு வழங்கியுள்ளார்கள்.ஆச்சார் மற்றும் சி.சி.பாட்டீல் இருவருமே எடியூரப்பாவின் ஆதரவாளர்கள் என்பது கவனிக்கத்தக்கது.(25)
இறுதியாக,இத்தனை காலம் கட்டி வைக்கப்பட்டிருந்த பூதத்திற்கு வேலை கொடுத்துள்ளார்கள் என்று சொல்லும் விதம் ஒரு செயலை பாஜக செய்துள்ளது.அதுதான் எடியூரப்பாவின் மகன் விஜயேந்திராவிற்கு மாநில அளவில் வழங்கப்பட்ட தேர்தல் பணி.அனைத்து அணிகளையும் ஒருங்கு திரட்டும் பொறுப்பை கொடுத்துள்ளார்கள்.(26)
இந்த நிகழ்வு கர்நாடக பாஜகவை அதிர வைத்துள்ளது என்று சொல்லலாம்.ஒரு யானையை அடித்து ஓரங்கட்டிவிட்டோம் என்று நினைத்த நேரத்தில் மாநில அளவில் விஜயேந்திராவுக்கு வழங்கப்பட்ட பதவி பல தலைவர்களை குழப்பத்தில் ஆழ்த்தியுள்ளது.(27)
ஆனால்,லிங்காயத் மடங்களை திரட்டி,அந்த மக்களை பாஜகவின் மிகப்பெரிய வாக்காளர்களாக மாற்றியவர் எடியூரப்பா.இன்றும் வீரசைவ லிங்காயத் மடங்களின் செல்வாக்கே வாக்குகளாக மாறுகிறது என்கிற போது,அதை ஒருங்கு திரட்டக் கூடிய வல்லமை கொண்டவராக எடியூரப்பாவின் மகன் விஜயேந்திரா உள்ளார்.(28)
60 - 80 தொகுதிகளில் முடிவுகளை இறுதி செய்யும் சமூகமாக லிங்காயத்துகள் உள்ளார்கள்.மத்திய கர்நாடகாவை பாஜகவின் கோட்டையாக மாற்றியது எடியூரப்பாதான்.இன்றும் அதை தக்கவைக்க வேண்டுமானால் விஜயேந்திராவை உள்ளே கொண்டு வர வேண்டும் என்று செய்துள்ளார்கள்.(29)
இது கட்சிக்குள் உண்டாக்கும் அதிருப்தியை போல பொதுவெளியில் உண்டாக்கவில்லை.சோர்ந்து போயிருந்த பாஜக தொண்டர்கள் நாம் வெற்றியை நோக்கி நடைபோடுகிறோம் என்ற நிலைக்கு நகர்ந்துள்ளார்கள் இந்த முடிவால்.(30)
அமைச்சர் தர்மேந்திர பிரதான் எடியூரப்பா தனிக்கட்சி துவங்கிய நேரத்தில் கர்நாடக மேலிடப் பொறுப்பாளராக கட்சியை கீழ்மட்ட அளவு கவனித்தவர்.திரு.அண்ணாமலை காங்கிரஸ் - ஜேடிஎஸ் ஆட்சி காலத்தில் தீவிரமாக பணியாற்றியவர்.(31)
கர்நாடக பாஜகவில் விஜயேந்திரா எழுச்சியும் தர்மேந்திர பிரதான் கண்காணிப்பும்,காங்கிரஸ் - ஜேடிஎஸ் தலைவர்களை எதிர்கொள்வதில் அண்ணாமலையின் அவதானிப்பும் ஒரு நேர்கோட்டு எழுச்சியை கொண்டதாக உள்ளது.இது பாஜகவின் பல தொகுதிகளை வழிநடத்தும் சக்தியாக மாறும்.(32)
இந்த இரண்டு வாரத்திற்கும் எடுக்கப்பட்ட முடிவுகள் எல்லாம் கத்திமேல் நடப்பது போன்ற செயல்களே.ஆனால்,அதை துணிகரமாக எடுத்துவிட்டார்கள்.இதற்கு பின்னால் திரு.அண்ணாமலையின் தெளிவான நகர்த்தல்களும் உள்ளன.(33)
அடுத்தடுத்து நடக்கவிருக்கும் மாற்றங்களை பார்க்கவும் ஆர்வமாக உள்ளது.அரசியலை அறிந்துகொள்ள விரும்புபவர்கள் கர்நாடக களத்தை கூர்மையாக கவனிக்கலாம்.(34)
• • •
Missing some Tweet in this thread? You can try to
force a refresh
கர்நாடக சட்டமன்ற தேர்தல் இணை பொறுப்பாளராக தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை நியமிக்கப்பட்டுள்ளார்.இந்த நியமனம் வெறும் கௌரவப்பதவி இல்லை.கிட்டத்தட்ட போர்படைத் தளபதியை போல பணி செய்ய வேண்டிய நிர்பந்தமிருக்கும் பொறுப்பாகும்..(1)
கர்நாடகாவில் பாஜக ஆட்சியை இழந்துவிடும் என்ற கடும் பிரச்சாரத்தை முறியடித்து,மிக மிக நுணுக்கமான செயல்பாடுகள் வழியே மீண்டும் அதிகாரத்தை தக்க வைக்க பாஜக எடுத்துக் கொண்ட முக்கியமான ஆயுதம் அண்ணாமலை..(2)
கல்யாண(hydrabad) கர்நாடகா - கித்தூரு(mumbai) கர்நாடகா - மத்திய கர்நாடகா - காரவளி(Coastal) கர்நாடகா - தென் கர்நாடகா - பெங்களூர் என ஆறு பிரிவுகளாகவும் 31 மாவட்டங்களாகவும் கர்நாடக மாநிலம் உள்ளது.(3)
நரேந்திர மோடி - பிரவீன் தொக்காடியா - சுனில் ஓசா இவர்கள் மூவரும் குஜராத் இந்துத்துவ அரசியலில் பலமான படைத் தளபதிகளாக இருந்தவர்கள்.போராட்டங்கள்,ஆள்திரட்டல் என கட்சியின் தார்மீக பலமாக இவர்களுடைய உழைப்பு இருந்தது..களத்திலிருந்து எழுந்து வந்த தலைவர்கள்..(1)
இதில் ஓசா இதழியல்,கருத்தியல்களை உருவாக்குபவர்.தேர்தல் அரசியலில் மிகச்சிறந்த வியூகங்களை வகுப்பவர்.இரண்டுமுறை குஜராத் MLA வாக இருந்தவர்.ஆனால் நரேந்திர மோடி குஜராத் முதல்வரான பிறகு மிகப்பெரிய ஈகோ யுத்தம் அமைப்பில் உருவானது..(2)
தங்களுக்கு இல்லாத தகுதி மோடிக்கு இருந்தது என்ன என்ற ஆற்றாமை கடுமையாக எழுந்தது.மோடியை எங்களால் முதுகில் குத்தி வெளியே தள்ள முடியும் என்ற ஆணவமும்,வெறுப்பும் சூழ்ந்தது.
அது தொக்காடியாவையும்,ஓசாவையும் நரேந்திர மோடியை விட்டு தள்ளிப்போக வைத்தது.அவருக்கு எதிராக செயல்பட வைத்தது.(3)
அன்றைய நிலையில் மூன்றாவது அணியை காங்கிரஸ் என்ன செய்யும்,அதன் வியூகம் என்ன என்று மோடி பேசுவதை கவனிக்கும் காங்கிரஸ் ஜெய்ராம் ரமேஷ்,"திரு.மோடி நீங்கள் என்றாவது பாஜகவை விட்டு வெளியேறினால் காங்கிரஸில் உங்களுக்கான இடம் உள்ளது என்பதை மறக்காதீர்கள்" என்று சொல்கிறார்..(1)
அதற்கு மோடி,"உங்களுக்கு ஏற்கனவே பல பிரச்சனை உள்ளது..நான் சங்கப்பரிவாரத்தை சேர்ந்தவன் என்னை அழைத்து உனக்கு ஏன் புதிய பிரச்சனைகளை தேடிக் கொள்கிறாய்" என்று நக்கலடிக்கிறார்..(2)
1998 - 2001 வரை குஜராத்தின் பொது செயலாளராக நரேந்திர மோடி இருந்தார்.அவரளவிற்கு விவாதங்களில் பங்கெடுத்தவர்கள்,கட்சி கொள்கைகளை விளக்கி பேசியவர்கள்,மாற்று சித்தாந்தம் கொண்டவர்களையும் தனது பேச்சாற்றலால் தன் பக்கம் கவர்ந்திழுத்தவர்கள் யாருமில்லை.(3)
ஸ்ரீ குமரகுருபர சுவாமிகளையும்,தர்மபுர ஆதீனத்தையும்,காவிரி முதல் கங்கை வரை உள்ள செழும் ஞானத் தொடர்பையும் உணர்த்தும் விதம் பிரதமர் நரேந்திரமோடி எடுத்துரைத்துள்ளார்..
பிரிவினை பேசும் திராவிட நாத்திக கூட்டத்தார்களின் போலித்தனத்தை,கங்கைக்கரையில் வைத்து சம்ஹாரம் செய்தார் நமோ..🔥(1)
பொயு 1625 ம் வருடம் சுவாமி குமரகுருபரர்,ஸ்ரீவைகுண்டத்தில் உள்ள கைலாசபுரத்தில் சண்முக சிகாமணி கவிராயருக்கும்,சிவகாம சுந்தரி அம்மையாருக்கும் நன்மகனாய்த் தோன்றினார்
தன் 5 வயது வரை வாய்பேச முடியாத குழந்தையாய் இருந்தவர் திருச்செந்தூர் செந்திலாண்டவர் கருணையால் நாவன்மை வரப்பெற்றார்.(2)
முருகப்பெருமானை போற்றி 'கந்தர் கலிவெண்பா' பாடி முடித்தார்.பிறவிப் பெருங்கடலை கடந்து இறைவனை அடைய ஞானசாரியனைத் தேடி தன் பயணத்தை துவங்கினார் முருகப்பெருமானின் திருக்கருணையுடன்..(3)
உத்தரகாசி தொடங்கி தென்காசி வரை,உத்தர மதுரை தொடங்கி தென் மதுரை வரை,அயோத்தி தொடங்கி ராமேஸ்வரம் வரை கலாச்சாரத்தாலும் ஆன்மீக வழிபாட்டாலும் இது ஒரே நிலம்..
இந்தியாவை ஒருங்கிணைப்பது பண்பாட்டு தேசியமும்,ஆன்மீகமுமே.(1)
சமயம் அழிந்தால் இந்த நாடு சிதறும் என்பது பாலபாடம்.இந்த உண்மை உணராத,ஆன்ம விழிப்பற்ற அசட்டர்களால் இந்த தேசம் ஆளப்பட்டதே எல்லா தீமைக்கும் காரணம்..
இந்த நாடு பல பிரதமர்களை கண்டது ஆனால் பாரத தர்மத்தின் பாதுகாவலனை இப்போதுதான் ஆட்சி பீடத்தில் காண்கிறது.(2)
இன்று 'காசி தமிழ் சங்கமம்' விழாவில் பிரதமர் நரேந்திர மோடியின் உரை அற்புதமானது.பாலில் கலந்த கற்கண்டு போன்றது.காசிக்கும் - தமிழகத்துக்கும் உள்ள நெருக்கத்தைப் பற்றி அவர் பேசியது வரலாற்றில் நவரத்னங்களால் பொறிக்கப்பட வேண்டிய வார்த்தைகள்.(3)
நரிக்குறவர்கள் - குருவிக்காரர்களை பழங்குடி பட்டியலில் சேர்க்க வேண்டுமென பல பத்தாண்டுகளாக,எந்த வித பிரதிபலனும் பாராமல் உழைப்பவர்களை நேரிடையாக அறிவேன்..(1)
2011 ல் செல்வி.ஜெயலலிதா அதிகாரத்துக்கு வந்த பிறகு இந்த விவகாரத்தில் சீரிய முக்கியத்துவத்தை கொடுத்தார்.அன்றைய மன்மோகன்சிங் அரசிற்கு தொடர் அழுத்தத்தை கொடுத்தார்.இறுதியாக 2013 சமயத்தில் மத்திய அரசு அதை ஏற்றுக் கொண்டது.ஆனால்,அதை மசோதாவா தாக்கல் செய்யாமல் ஏமாற்றியது..(2)
2014 ல் நரேந்திர மோடி அரசு அமைந்தது.2016 லேயே அமைச்சரவை ஒப்புதல் கொடுத்து மசோதாவாக தாக்கல் செய்தார்கள்.ஆனால் அது சட்டமாக முடியாமல் தோற்றது..ஆனாலும்,பாஜக அமைச்சரவை கொடுத்த ஒப்புதலுக்கு அன்றைய முதல்வர்.செல்வி ஜெயலிதா பிரதமர் மோடி அவர்களுக்கு நன்றி தெரிவித்து அறிக்கைவிட்டார்.(3)