ஏன் இந்தப் புத்தகம் என்று கேட்டால், பெண்களுக்கு எதிரான வன்கொடுமைகள் குறித்த செய்திகள் இல்லாத நாளே இப்போது இல்லை. 90 ஆண்டுகளுக்கு முன்பே பாலின சமத்துவத்தைப் பேசிய புத்தகம் இது. உலகிலேயே முதல்முறையாக பெண் விடுதலை பற்றிப் பேசியது #பெரியார் தான்.(1/2)
இந்தப் புத்தகத்திற்கு பின்பு 20 ஆண்டுகள் கழித்துதான் 'The Second Sex' என்ற புத்தகம் வருகிறது. இந்தப் புத்தகத்தை பதின்பருவத்தில் உள்ள மாணவர் ஒருவர் தன் தாய்க்குப் பரிசாக அளித்துள்ளார். கணவனை இழந்த அவரது தாயார், "இந்தப் புத்தகத்தை காலம் கடந்து படித்திருக்கிறேன்.(1/2)
முன்பே படித்திருக்க வேண்டும்" என்றார். "அவர் முன்பே படித்திருந்தால், ஒருவேளை அவர் மறுமணம் செய்திருக்கக்கூடும்" என்கிறார் தம்பி. கணவனை இழந்த பெண்கள், மறுமணம் செய்யக்கூடாது என்று சொல்வது, உடன்கட்டை ஏறுதலைவிட கொடுமையானது என, நூற்றாண்டுக்கு முன்பே சொல்லிய பெரியார்,(1/3)
சொல்வதோடு மட்டுமல்லாமல், கணவனை இழந்த தன் சகோதரியின் மகளுக்கு மறுமணம் செய்து காட்டுகிறார். 1920-களில் ஒரு வயதான பெண் குழந்தைகள் கூட 'கணவனை' இழந்ததாக பெரியார் இப்புத்தகத்தில் பதிவிட்டிருப்பதை இப்போது படித்தால் அதிர்ச்சியாக இருக்கும்.
(1/4)
இந்தப் புத்தகத்தை படிக்கும்போது அது எழுதப்பட்ட காலத்தை மனதில் வைக்க வேண்டும். புராணங்களும், பிராமணிய ஆணாதிக்கமும், எப்படி பெண்ணை அடிமைப் படுத்தியிருக்கிறது என்பதை பெரியார் பல சொல்லாடல்களுடன் புரிய வைத்திருப்பார். படிக்கும்போது பல கேள்விகளும் சந்தேகங்களும் தோன்றும்.(1/5)
சொல்லியிருப்பதில் பலவும் இன்றும் பொருத்தமாகவும், பெரும்பாலானோரால் ஏற்றுக்கொள்ள முடியாதவையாகவே இருக்கும்.(1/6)
• • •
Missing some Tweet in this thread? You can try to
force a refresh
பெண் ஏன் அடிமையானாள்?' நூலுக்கு அரசுப் பள்ளி மாணவர்களின் விமர்சனம்!
திருவண்ணாமலை, ஜவ்வாதுமலை உண்டு உறைவிடப் பள்ளியில் பெண் ஏன் அடிமையானாள் நூல் 200 பிரதிகள், சிலரின் நன்கொடையில் வாங்கப்பட்டிருக்கின்றன. இதுகுறித்து, அப்பள்ளியின் ஆசிரியை மகாலட்சுமியின் கருத்தைக் கேட்டபோது, (1/1)
என்னை விட, இந்தப் புத்தகத்தைப் படித்த மாணவர்கள் சிலர் பேசுவதைக் கேளுங்க" என்றார். ஆர்வத்துடன் பேசிய மாணவர்களிலிருந்து ஒரு சிலரின் கருத்துகள்:
(1/2)
7ம் வகுப்புப் படிக்கும் சிநேகா: ``பெரியார் எழுதின பெண் ஏன் அடிமையானாள்னு ஒரு புத்தகம் இருக்கு. அதை நீங்கல்லாம் படிக்கணும்னு டீச்சர் சொல்லிட்டே இருப்பாங்க. இப்போ, கரிகாலன் மற்றும் சிவகுருநாதன் ஆகியோரின் உதவியால் எங்களுக்கு இந்தப் புத்தகம் கிடைச்சுது. அதுக்காக, 2 பேருக்கும் நன்றி.
1921 ஆம் ஆண்டு கள்ளுக்கடைகளை மூட வலியுறுத்தி போராட்டத்தில் ஈடுபட்ட அவர், தன்னுடைய தோட்டத்திலிருந்த 500 தென்னை மரங்களை வெட்டிச் சாய்த்தார். இப்போராட்டத்தில், கைது செய்யப்பட்டு சிறைத் தண்டனையும் பெற்றார். 1921-1922-ல் (1/1)
ஒத்துழையாமை மற்றும் மிதமாக மது குடித்தல் சட்டங்களை எதிர்த்து மறியலில் ஈடுபட்ட அவர், மீண்டும் கைது செய்யப்பட்டார்.
1922-ல் சென்னை மாகாண காங்கிரஸ் கட்சி தலைவராக தேர்தெடுக்கப்பட்டார். துவக்கத்தில் இருந்தே வகுப்பு வாரிப் பிரதிநிதித்துவக் கொள்கையை ஆதரித்து வந்த தந்தை பெரியார் அவர்கள்
காங்கிரஸின் பல்வேறு மாநாடுகளில் கட்சிக்குள் வகுப்புவாரி பிரதிநிதித்துவத்தை கொண்டு வர வேண்டும் என்பதற்காக பல்வேறு மாநாடுகளில் “வகுப்பு வாரித் தீர்மானம்” கொண்டு வந்து நிறைவேற்ற முயற்சித்தார். இறுதி கட்ட முயற்சியாக 1925 காஞ்சிபுரம் மாநில மாநாட்டிலும்(1/3)
அறிஞர் அண்ணாவை அரசியல் களத்தில் முழுக்க முழுக்க இழுத்துவிட்ட பெருமை இராஜாஜி அவர்களையே சாரும். சென்னை மாகாண முதலமைச்சராக பதவியேற்றிருந்த இராஜாஜி, 1937-ம் ஆண்டு தமிழ்நாட்டில் கட்டாய இந்தித் திணிப்பை நடைமுறைப்படுத்தியதுதான் இதற்குக் காரணம்.(1/1)
இந்தித் திணிப்பை எதிர்த்து, பெரியாரின் சுயமரியாதை இயக்கம் சார்பில் காஞ்சி மாநகரில் மாநாடு கூட்டப்பட்டது. பெரியார் பெரும்படையின் தளபதியாய் விளங்கிய அண்ணா தலைமையில், எண்ணற்ற இளைஞர்கள் பொழிப்போரில் இறங்கினர்.(1/2)
பெரியாருடன் பிணக்குற்று சிறிது காலம் விலகியிருந்த நீதிக்கட்சியும் மொழிப் போரில் ஈடுபட்டது. பெரியாரை, தங்கள் கட்சியின் தலைவராகவும் நியமித்தது. இப்போராட்டத்தில், பெரியார், அண்ணா உட்பட 1,200 பேர் கைது செய்யப்பட்டனர்.சிறைக்குச் செல்வது குறித்து,(1/3)
இவ்வளவு ஆணவத்துடன் நடந்துகொள்ளும் பார்ப்பனர்களின் உயர்சாதி எண்ணத்தை அழிக்க வேண்டும் என்று முடிவு செய்தார்.
~பெரியார் (1/1)
சேரன்மாதேவியில், வ.வே.சு ஐயர் என்கிற தேச பக்தர், காந்திய நெறிமுறைப்படி குருகுலம் ஒன்றை நடத்தி வந்தார். இதற்குத் தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி ரூ.10,000 நிதி அளித்திருந்தது. பொதுமக்கள் சார்பிலும் நிதியுதவி அளிக்கப்பட்டது. பல்வேறு காங்கிரஸ் தலைவர்களின் பிள்ளைகள்,(1/2)
இந்தக் குருகுலத்தில் தங்கிப் படித்து வந்தனர். அவர்களில், முன்னாள் முதலமைச்சர் ஓமந்தூர் ராமசாமி ரெட்டியாரின் மகனும் ஒருவர்.இந்த குருகுலத்தில் பிராமண மாணவர்களுக்கு அறுசுவை உணவும், பிரமணரல்லாத மாணவர்களுக்கு சாதாரண உணவும் வழங்கப்பட்டது.(1/3)
ஆண்டாளின் பக்தியை சிலாகித்து, ஜெ.பார்த்தசாரதி என்பவர் ‘திரிவேணி’ ஜூன் இதழில், ‘ஆண்டாளின் காதல் கதை’ (The Romance of(The Romance ofAndal) என்ற தலைப்பில் எழுதிய ஒரு கட்டுரைக்கு மறுப்பாக, இராஜ கோபாலாச்சாரியார் அதே பத்திரிகைக்கு இந்த மறுப்பை எழுதியிருக் கிறார்.(1/1)
இராஜகோபாலாச்சாரியார் அனுமதியோடு இது வெளியிடப்படு கிறது என்கின்ற முன்னுரையுடன் ‘திருவேணி’ இதழ் அந்தக் கட்டுரையை வெளியிட்டிருக்கிறது. இராஜ கோபாலாச்சாரியின் ஆங்கிலக் கட்டுரையையும் அதன் தமிழாக்கத்தையும் ‘நிமிர்வோம்’ பதிவு செய்கிறது.
(1/2)
“ஆண்டாள் உண்மையான பெண் அல்ல; அவள், பெரியாழ்வாரின் வளர்ப்பு மகளும் அல்ல. அது பெரியாழ்வாரின் கவித்துவ சிந்தனையில் உருவாக்கப்பட்ட கற்பனைப் பாத்திரம். தனது கற்பனையில் உருவான கவிதைகளை ஆண்டாளே பேசுகிறாள் என்று கற்பனையில் எழுதியிருக்கிறார்.(1/3)
ஶ்ரீ இராஜகோபாலாச்சாரியார் என்கிற ஓர் அய்யங்கார் பார்ப்பனர், தமிழ்நாடு முழுவதும் பெரிய சீர்திருத்தக்காரர் என்று பெயர் வாங்கியவர். தமிழ் மக்களையெல்லாம் அடியோடு ஏய்த்தவர். தனக்கு சாதி வித்தியாசம் இல்லை என்பதாகச் சொல்லிக் கொண்டும், 1/1
தன்னிடம் பார்ப்பனத்தன்மை இல்லை என்று சொல்லிக் கொண்டும், பார்ப்பனீயத்தை விட்டு வெகுகாலமாகிற்று என்று சொல்லிக் கொண்டும், சில பார்ப்பனரல்லாத வாலிபர்களை ஏமாற்றிக் கொண்டும், பார்ப்பனரல்லாதார் இயக்கத்தை ஒழித்து, பார்ப்பன ஆதிக்கத்தை நிலைநாட்ட வேண்டும் என்பதில்
1/2
இந்தியாவில் உள்ள பார்ப்பனரெல்லோரையும் விட அதிகமான கவலையும், அதற்கேற்ற சூழ்ச்சியும் கொண்டவர்." (குடியரசு 25.3.1928)