நாத்திகர்கள் அனைவருமே பொதுவுடைமைவாதிகளோ இடதுசாரிகளோ அல்லர்; ஆனால் கருத்தியல் ரீதியாக, கொள்கை அடிப்படையில் தன்னை இடதுசாரி என்று அடையாளப்படுத்திக்கொள்ளும் ஒவ்வொருவரும் நாத்திகர்களாக இருந்தே ஆகவேண்டும்.
மேலோட்டமாக பார்க்கையில் இது கொஞ்சம் குழப்பமாக தோன்றக்கூடும், இல்லையா..?
அதிலும், எத்தனையோ மதநம்பிக்கை உள்ளவர்கள் தம்மை கம்யூனிஸ்ட் என்றும் இடதுசாரி என்றும் சொல்வதையும், அங்கீகரிக்கப்பட்ட கம்யூனிஸ்ட் கட்சிகளே மத பண்டிகைகளுக்கு வாழ்த்து கூறுவதையும்,
கொண்டாடுவதையும் பார்க்கையில் "அது எப்படி..? மத நம்பிக்கை வேறு, அரசியல் கருத்தியல் வேறு அல்லவா" என்று எண்ணத்தோன்றும், இல்லையா..?
தனிப்பட்ட முறையில் நான் எத்தனையோ தனியுடைமை மற்றும் வலதுசாரி கருத்தியல் பேசும் நாத்திகர்களோடு பழகியிருக்கிறேன்.
ஏன் கோல்வால்லர் போன்ற தீவிர வரதுசாரி சிந்தனையாளர்கள் எல்லாம்கூட நாத்திகர்களாக இருந்திருக்கிறார்கள்.
பகத்சிங்கும் நத்திகர், கோல்வாக்கரும் நாத்திகர். ஆனாலும் இவ்விருவரின் அரசியல் பார்வைகள் எவ்வளவு மாறுபாடானவை,
எதிரெதிர் துருவம் சார்ந்தவை என்று விளக்கத்தேவை இல்லை, இல்லையா..?
சில மதங்களே தம்மை பகுத்தறிவு சமயம் என்று கூறிக்கொள்வதை கேட்கையில் உள்ளபடியே நகைச்சுவையாக இருக்கும். பகுத்து அறிய மறுத்து சாதியம், மதம் போன்ற மடமைக்களுக்குள்ளும்
என்று அறிந்தவர்கள் அதை பொதுவுடைமை கருத்தியலால் மட்டுமே உடைத்தெறியமுடியும் என்று அறிந்து எதிர்த்து போராடுவர். போராட்டத்தின் வடிவம் காலத்துக்குக் காலம், சமூகத்துக்கு சமூகம், திணைக்கு திணை மாறலாம். ஆனால் போராட்டமென்னவோ வரலாறு நெடுக தொடரவே செய்கிறது.
அவர்களுக்கு இறைவனின் இருப்பிலோ இல்லாமையிலோ எந்த ஆர்வமும் நாட்டமும் இருக்காது. காரணம் உலகில் நடக்கும் எந்த நல்லதுக்கும் தீயதுக்கும் இறை என்ற ஒன்று காரணமோ காரியமோ இல்லை என்பதை இவர்கள் திடமாக அறிந்து வைத்திருப்பர்.
இரத்தம் சூடேறி எதிர்த்து போராடாமல், "என்னங்க செய்றது, எல்லாம் நம்ம தலைவிதி..!" என்று ஏற்றுக்கொண்டு ஆட்டுமந்தைகளாய் மக்களை மூளைச்சலவை செய்து வாழ பழக்கிவைத்திருப்பது இந்த மூடநம்பிக்கையே. அதிகார வர்க்கத்துக்கு இது பெரிதும் உதவுவதால்தான்....
கருணாநிதி நல்ல தோழர் எனக்கு
இந்தியா முழுமையும் ஊராகவும் சேரியாகவும் ஒவ்வொரு கிராமமும் இரண்டாகப் பிரிந்து கிடக்க, எல்லாச் சாதியினரையும் சேர்த்துக் குடியமர்த்தும் வகையில் அவர் கொண்டுவந்த 💪'சமத்துவபுரம்' திட்டம்💪எனக்கு ரொம்பவும் பிடித்தமானது,
*அவரது மனதில் ஆழப் பதிந்திருக்கும் சமத்துவ எண்ணத்தினுடைய வெளிப்பாடே இந்தத் திட்டம்*
👉கை ரிக்ஷாக்களை ஒழித்து சைக்கிள் ரிக்ஷாக்களை வழங்கும் திட்டத்தையும் கிட்டத்தட்ட அரை நூற்றாண்டுக்கு முன்னரே👈 அவர் சிந்தித்தவர்.
வீடற்ற அல்லது குடிசைகளில் வசித்த ஏழைகளுக்குக்
👉குடியிருப்பு வழங்கும் திட்டம்அப்புறம் சமூக நீதி விஷயத்தில் எப்போதும் அவர் உறுதியாக இருந்தார்.
பின்பு அவருடைய அரசியல் பண்பாடு மிகவும் ஈர்க்குமொன்று,
👉கூட்டணியோ எதிரணியோ எங்கிருந்தாலும் அரசியலுக்கு அப்பாற்பட்டு நட்பு பாராட்டுவார்.
பிப்-14 பசுவைக் கட்டிப்பிடியுங்கள் எனச் சொல்வதற்குக் காரணமாகச் சொன்னது தான் முக்கியமானது.
"வேதகால பழக்க வழக்கங்கள் அழிகிறது" எனவே பசுவைக் கட்டிப்பிடியுங்கள் என்கிறார்கள்.
வேதகாலத்தில் பசுவைக் கட்டிபிடித்தது தான் வழக்கமாக இருந்ததா?
வேதங்கள் என்ன சொல்கிறது?
"ஆரிய பிராமணன் பசுமாட்டை வெட்டி சமைத்து சாப்பிடுவதற்கு கூர்மையான வாள், கோடரி பயன்படுத்தினார்கள் என்று ரிக்வேதம் [10/ 72/ 6] சுலோகம் சொல்கிறது.
ரிக்வேதகால ஆரிய பார்ப்பனர்கள் உணவுக்காகப் பசுக்களை கொன்றார்கள் என்பதையும், அவற்றின் இறைச்சியை அவர்கள் விரும்பி உணடார்கள் என்பதனை ரிக்வேதம் [10/ 86/14] தெளிவுப்படுத்துகிறது.
1962ஆம் ஆண்டு விவேகானந்தரின் நூற்றாண்டை கொண்டாட அவருக்கு ஒரு நினைவு மண்டபத்தை கட்டலாம் என சிலர் முடிவு செய்து இந்தியாவின் தென் முனையான கன்னியாகுமரியில் பாறை ஒன்றை தேர்வு செய்தனர். ராமகிருஷ்ணா மடமும் இந்த திட்டத்தோடு களத்தில் இறங்கியது.
கன்னியாகுமரியில் பெரும்பான்மையாக இருந்த கத்தோலிக்க மீனவர்கள் இதற்கு எதிர்ப்பு தெரிவித்தனர். இது ஒரு மத கலவரமாக மாறும் சூழல் உருவாக, பாறைக்கு போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டது.
நினைவு மண்டபம் கட்ட விரும்பியவர்கள் தமிழ்நாடு அரசிடம் அனுமதி கேட்க, அன்றைய முதலமைச்சர் பக்தவச்சலம் மண்டபம் கட்ட அனுமதி மறுத்து, ஒரு கல்வெட்டு மட்டுமே வைக்க ஒப்புக் கொண்டார். தமிழ்நாட்டின் முதலமைச்சரை மீறி நினைவு மண்டபம் கட்ட பெரிய அளவில் லாபி செய்ய வேண்டும் என முடிவு செய்த,
*கோவிலுக்குப் போனால் பாசிட்டிவ் வைப்ரேஷன் கிடைக்கும் என்று கூறும் ஆன்மீக விஞ்ஞான மேதைகளே..*
அரை மணி நேரம் கோவிலுக்கு போய் வருபவர்களுக்கே பாஸிடிவ் வைப்ரேஷன் கிடைக்குமென்றால் கோவிலிலேயே வாழ்நாளின் பெரும்பகுதியை செலவிட்டு,
மந்திர சக்தி உருவேற்றப்பட்ட மூலவர் திருமேனியையை முப்பொழுதும் தொட்டுப் பூஜை செய்யும் அர்ச்சகர்கள் வாழும் மகான்களாக, பாசிடிவ் மின் முனைகளாக, நல்ல எண்ணங்களின் ஊற்றாக அல்லவா இருக்க வேண்டும்?
ஆனால் அவர்கள் அப்படித்தான் இருக்கிறார்களா?
காஞ்சிபுரம் கோவிலில் காம லீலைகள் புரிந்த தேவநாதனுக்கு ஏன் கர்ப்பகிரகத்திற்குள் காமம் கொப்பளித்தது?
சமீபத்தில் ஸ்ரீவில்லிபுத்தூரிலும் கோவில் கருவறையில் பத்ரி நாராயணன் என்ற பட்டாச்சாரியார் லீலை பல புரிந்து சிக்கியிருக்கிறார்.