#நெஞ்சுக்குநீதி_பாகம்1 #9_தமிழ்மாணவர்மன்றம்
பிரிட்டிஷ் ஆட்சியில கம்யூனிஸ்டுகள் மீது பல சதி வழக்குகள் புனையப்பட்டிருந்தது
கதர் சட்டை பார்த்து காங்கிரஸ் என நம்பி கம்யூனிஸ்ட்களுடன் தொடர்பில் இருந்த கலைஞர் உண்மை அறிந்து தன் தலைமையில் உருவான மாணவர் சம்மேளனத்தை கலைக்க முடிவு செய்தார்.
இனி கலைஞர் வார்த்தைகளில்..
கதர்ச் சட்டைக்காரர் வந்து சம்மேளன நிர்வாகிகள் தேர்தல் நடத்தி, என்னையே மாணவர் கிளையின் செயலாளராகவும் ஆக்கினார்.
என் நண்பர் எஸ். பி. சிதம்பரம் பொருளாளராகவும் ஆக்கப் பட்டார்.
நிர்வாகி தேர்தல் நடந்ததிலிருந்து என் மனம் குழப்பமாகவே ஆகி விட்டது.
'இது நீடித்தால் நாம் எங்கு போய் நிற்போம்? கம்யூனிஸ்ட்டிலா? காங்கிரசிலா?' என்று என் இளம் மனம் அஞ்சியது. அதற்குள் சம்மேளனத்தில் கம்யூனிஸ்ட் ஆதிக்கம் மேலீட்டது. 'தமிழ் வாழ்க! இந்தி வளர்க' என்பதை நமது சம்மேளனக் கோஷமாக வைத்துக் கொள்ளலாமே!" என்றார் ஒரு காங்கிரஸ் நிர்வாக உறுப்பினர்.
கம்யூனிஸ்ட் அனுதாபமுள்ள மாணவர்களும் தலையசைத்தனர். நான் மறுத்து விட்டேன். ஓர் இரவு முழுதும் எனக்குத் தூக்கமே யில்லை. விடிந்தது. நேரே சம்மேளனப் பொருளாளர் நண்பர் சிதம் பரம் வீட்டுக்குப் போனேன். அவரிடம் உறுப்பினர் கட்டணம் என்ற வகையில் நூறு ரூபாய் இருந்தது. அவசரமாகக் கேட்டு வாங்கினேன்
"நமது சம்மேளனத்தைக் கலைக்கப் போகிறேன். உறுப்பினர்கள் பணத்தைத் திருப்பித் தரப்போகிறேன்." என்று கூறி, உறுப்பினர் களிடம் கட்டணத்தை பணத்தைத் திருப்பித் தந்தேன். மிச்சமுள்ள உறுப்பினர்கள், "சம்மேளனத்தைக் கலைத்து விடுவது பற்றிக் கவலையில்லை. கட்டணம் உன்னிடமே இருக்கட்டும்” என்றனர்.
அன்று மாலை 'தமிழ் மாணவர் மன்றம்' அமைப்புத் தோற்றுவிக்கப்பட்டது. கட்டணம் திருப்பி கேட்காதவற்களை மன்றத்தில் உறுப்பினராக்கிக் கொண்டேன். சேலம் வெங்கட் ராமன் துவங்கிய 'தமிழ்நாடு தமிழ் மாணவர் மன்ற தொடர்பும் ஏற்பட்டு, திருவாரூர் மன்றமம் தமிழ்நாடு தமிழ் மாணவர் மன்றம் எனப் பெயர் பெற்றது.
1941-ம் ஆண்டுத் துவக்கத்தில் தமிழ்நாடு தமிழ் மாணவர் மன்றத்தின் ஆரம்ப விழா நடைபெற்றது. தொடர்ந்து தஞ்சை மாவட்டத்திலும் பிற மாவட்டங்களிலும் தமிழ்நாடு தமிழ் மாணவர் மன்றங்களை நிறுவப் பணியாற்றினோம்
மன்றத்தின் ஆண்டு விழா 1942-ம் ஆண்டு மிகச் சிறப்பாகத் திருவாரூரில் கொண்டாடப்பட்டது.
"தண்பொழிலில் குயில் பாடும் திருவாரூரில், தமிழ்நாடு தமிழ் மாணவர் மன்றங்காண்' எனத் துவங்கி,
"கிளம்பிற்றுக் காண் தமிழச் சிங்கக் கூட்டம்!
கிழித்தெறியத் தேடுதுகாண் பகைக் கூட்டத்தை!"
என முழக்கமிடும் பாரதிதாசனின் பாட்டு அந்த விழாவுக்கென அவரால் வரையப்பட்ட துதான்! திருவாரூரில் ஆண்டு விழா
நடைபெறு கிறது. குடந்தையிலே தவமணிராசனும், கருணானந்தமும் நடத்திய நிராவிடர் மாணவர் கழக மாநாடு துவங்குகிறது! அந்த மாநாட்டில் கலந்து கொண்ட அன்பழகன், மதியழகன் ஆகியோர் திருவாரூர் வந்து எழுச்சியுரை ஆற்றினர். விழாவுக்கு அழைக்கப்பட்டிருந்தவர்கள் பெரும்பாலோர் வரவில்லை. அவர்களை வரவேற்கப்
நிலையத்திற்குப் போனபோதுதான் அவர்கள் புகை வண்டி வரவில்லையென்று தெரிந்தது.விழியிலே நீர் பெருக நின்றேன். நல்ல வேளை, அப்போது தான் அன்பழகன், மதியழகன் இருவரும் வந்து எனக்கு ஆறுதல் அளித்தனர்.
விழாவுக்கு ஒப்புக் கொண்டு, வராதவர்கள் வழிச் செலவுப் பணத்தையாவது திருப்பி அனுப்பக் கூடாதா?
அதுவுமில்லை. வந்தவர் களையும், புதிதாகத் திடீரென்று வருவிக்கப்பட்டவர்களையும் வழி யனுப்பக் கையிலே பணமில்லை! நேரமோ ஓடுகிறது. என் கவனமும், விழாவிலே இல்லை! நன்கொடைக்குக் கையெழுத்துப் போட்டவர் களிடம் ஓடினேன்; ஒரு வாரம் பத்து நாள் என்று அவர்கள் தவணை கூறி விட்டார்கள்! யோசித்தேன்!
தாயார் ஆசையாக மாட்டி விட்ட தங்கச் சங்கிலியில ஆணி கழண்டு விட்டது என்பதற்காக, கழற்றி பெட்டியில் வைத்திருந்தார்.
அதை கொண்டு போய் செட்டியார் கடையில் அடகு வைத்து வந்தவர்களுக்கு வழிச் செலவு கொடுத்து நம்பி வந்தவர்களை காப்பாற்றியவர் கலைஞர்.
அந்த சங்கிலி மீட்கப்படவே இல்லை.
• • •
Missing some Tweet in this thread? You can try to
force a refresh
"குடந்தைக்குப் பெயர் மாற்றுங்கள்
மகாபலிபுரம் என்று"
இப்படி ஒரு ஹைக்கூவை இப்போது படித்தால் யாருக்கும் புரியாது. 1992-ம் ஆண்டு பிப்ரவரி 18 அன்று நடந்த விபரீதத்துக்குப் பின் எழுதப்பட்ட ஹைக்கூ இது.
ஒவ்வொரு நாளுக்கும் ஒரு வரலாறு உண்டு. ஒரு சில நாள்கள் மகிழ்ச்சியையும் உற்சாகத்தையும்
கடந்த காலத்திலிருந்து அள்ளித் தரும். ஒரு சில நாள்கள், தீராத சோகத்தையும் ஆராத ரணத்தையும் நினைவுபடுத்தும். இன்றைய நாளுக்கு அப்படியொரு துயர வரலாறு உண்டு.31 ஆண்டுகளுக்கு முன், இதேநாளில் பெரும் மக்கள் கூட்டம் மரண ஓலத்தோடு திக்குத் தெரியாமல் முட்டி மோதி பல உயிரிழப்புகளைச் சந்தித்தது.
மகாமகம்' என்றாலே ஆன்மிக மணம் கமழும் நினைவு வராமல்,மரண நெடி நாசிக்கு ஏறக் காரணமான நாள் இன்று. ஆட்சி அதிகாரத்தில் இருந்தவர்களின் அலட்சியத்தாலும் ஆணவத்தாலும் அப்பாவி மக்களின் உயிர் அநியாயமாகப் பறிபோன தினம் இன்று.
எம்.ஜி.ஆர் மறைவுக்குப் பின், 1991-ம் ஆண்டில் ஜெயலலிதா முதல்வராகப்
பார்ப்பனீயப் பாம்பு ஆட்சியாளர்களின் கால்களை இறுகப் பிடித்து, கழுத்துவரை கவ்விவிட்டபின், நாட்டில் மதத்தின், இனத்தின் பெயரால் சக மனிதர்களையே இழிவுபடுத்தும் கொடூரங்கள் தொடர்ந்து அரங்கேறின.
கஜினி, கோரி என கொள்ளையடிக்க வந்தவர்களிடம், இராமன் ஆண்டாலும், இராவணன் ஆண்டாலும் எனக்கொரு கவலை இல்ல என்று பாடினார்கள் சாமானியர்கள்.
எளிதாக ஆட்சி அதிகாரங்களை கைப்பற்றியது அடிமை வம்சம்.
ஐநூறு ஆண்டுகளுக்குப் பின் அவனும் பழைய குருடி கதவைத் திறடி கதையாய், உல்லாச வாழ்வில் அலங்கோலமான
ஆட்சியை நடத்த ;
சக இஸ்லாமிய அரசனை வீழ்த்த முகலாயர்களை அழைத்து வந்து ஆளச் சொன்னார்கள். யார் ?
மக்கள்தான்.
இப்ராஹிம் லோடியை எளிதாக பாபர் வீழ்த்த அதுதான் பிரதானக் காரணி.
இருநூறு ஆண்டுகள் வரை அந்த வம்சமே நெடுக ஆண்டது. பார்ப்பனியமும், உல்லாசமும் அவர்களுடைய கால்களையும் பற்றியது.
#சின்னங்களின்_வரலாறு #கை
1950 ல அம்பேத்கர் இயற்றிய அரசியல் சட்டம் ஏற்கப்பட்டது. இந்தியா குடியரசு நாடாகியது. அதன்பிறகு 1951 ஆம் ஆண்டு விடுதலைபெற்ற இந்தியாவின் முதல் பொதுத்தேர்தல் அறிவிக்கப்பட்டது. அந்தத் தேர்தலில்தான் கட்சிகள் குறிப்பிட்ட சின்னங்களில் தேர்தலை சந்திக்கத் தொடங்கின.
முதல் தேர்தலில் ஜவஹர்லால் நேரு தலைமையிலான இந்திய தேசிய காங்கிரஸ் இரட்டை காளைச் சின்னத்தில் போட்டியிட்டது. மொத்தம் உள்ள 489 இடங்களில் 479 இடங்களுக்கு போட்டியிட்டு 364 இடங்களைக் கைப்பற்றியது. சுயேச்சைகள் 37 இந்திய கம்யூனிஸ்ட் கட்சி 16, சோசலிஸ்ட் கட்சி 12 இடங்களையும் வென்றன.
1957ல் நடைபெற்ற இரண்டாவது பொதுத்தேர்தலில் 371 இடங்களைப்பெற்றது.
361 இடங்களில் வெற்றிபெற்றது. 1964 ஆம் ஆண்டு மே மாதம் 27 ஆம் தேதி நேரு மறைந்தார். அதைத்தொடர்ந்து லால்பகதூர் சாஸ்திரி பிரதமராக தேர்ந்தெடுக்கப்பட்டார். அவருடைய ஆட்சிக் காலத்தில்தான் இந்தியா பாகிஸ்தான் போர் மூண்டது.
#நெஞ்சுக்குநீதி_பாகம்1 8. சுதந்திர போராட்டம்
1939ல் விடுதலை கனல் தகித்து கொண்டு இருந்தது.
காந்தி இர்வின், ஒப்பந்தம், நேதாஜியின் ஆசாத் ஹிந்து ஃபவுஸ், ஜின்னாவின் தனிநாடு கோரிக்கை இந்தியாவில் தென் மூலையில் திருவாரூரில் படித்துக் கொண்டிருந்த 15 வயது பையன் கருணாநிதியையும் பாதித்தது
இனி கலைஞர் வார்த்தைகளில்:
அப்படிப் பட்ட முயற்சிகளில் ஈடுபட்ட ஒருவர் என்னைச் சந்திக்க விரும்பினார்.
அவர் எண்ணிக் கொண்டிருந்திருக்கிறார், கருணாநிதி என்றால் கிட்டத்தட்ட அவரைப் போன்ற வயதுடையவன், உருவமுடையவன் என்றெல்லாம்;15 வயது இளைஞனாக மெலிந்த உருவினனாக நான் போய் எதிரே நின்றேன்.
அவர் சந்தேகத்துடன், "நீங்கள்தானா 'மாணவ நேசன்' நடத்துகிற கருணாநிதி" என்று கேட்டார்.
'மாணவ நேசன்' என்பது நான் நடத்திய கையெழுத்து ஏடு. இப் போது கூட மாணவர்கள் பல இடங்களில் கையெழுத்து ஏடுகள் நடத்து கிறார்கள். கவிஞர் பாரதிதாசன், ஒருமுறை ஒரு மாணவர் தந்த கையெழுத்து ஏட்டைப் படித்து
இந்திய பாசிச முகமூடிகளை வெளிப்படுத்த இன்று போல் ஒரு கெட்ட நாள் அமையாது.
தென்னாப்பிரிக்காவில் வக்கீல் தொழில் பார்த்துக் கொண்டிருந்தவரை, விதி ஒரு மத வெறி பிடித்த நூலிபானின் குண்டுக்கு பலியாக இந்தியாவிற்கு அழைத்து வந்தது
அவர் மோஹன்தாஸ் கரம்சந்த் காந்தி
காந்திக்கு முன்பே காங்கிரஸ் இயக்கம் ஆலன் ஆக்டோவியன் ஹுமால் ஆரம்பிக்கப்பட்டது
தாங்கள் அந்நியரால் ஆளப்படுகிறோம் என்பதை இந்திய மக்கள் உணராதபடி செய்ய தாதாபாய் நௌரோஜி ஃபிரோஜ் சா மேத்தா போன்ற மேல்தட்டு பார்சி தொழிலதிபர்கள் உள்ளே இழுத்துப் போடப்பட்டார்கள்
கூடவே சில நூலிபான்களும்
சென்னை ஹிந்து பத்திரிக்கை குடும்பம் வடக்கே மதன் மோகன் மாளவியா, மகாராஷ்டிராவில் கோபால கிருஷ்ண கோகலே போன்றோர்.
ஒரு கட்டத்தில் காங்கிரஸ் நூலிபான்களின் கைக்கு சென்று விட்டது.
தென்னாபிரிக்காவில் அடக்குமுறைக்கு ஆளான காந்தி வழக்கு விஷயமாக இந்தியாவுக்கு வந்திருந்த போது இங்குள்ள நிலைமை
#இந்தியபாசிசத்தின்_எழுச்சி
பாசிசம் என்ற சொல் பொதுவாக அதிகாரத்தை கைப்பற்றிய ஒரு குழு அதனை தக்க வைக்க பிற குழுக்களை அடக்கி ஒடுக்கி அதிகாரத்தை தன்னிடமே என்றென்றும் வைத்துக்கொள்ள முயல்வதை குறிக்கிறது. இந்தியாவில் நிகழ்வதை குறிக்க வேறு சொல் இல்லாததால் நாமும் பாசிசம் என்றே கூறுவோம்
பாசிசம் என்பது தனி நபர் அல்ல. அது ஒரு அமைப்பு அதன் முகமூடிகள் காலாவதி ஆனவுடன் மாற்றப்படும். சில பல வார்த்தை மாறுதலுக்கு பின் புதிய மொந்தையில் பழைய கள்ளை வழங்கி மாற்றம் நிகழ்ந்து விட்டது இனி எல்லாம் சுகமே என்ற மயக்கத்திலேயே மக்களை நம்பச் செய்து என்றும் அடிமையாக வைத்திருப்பது
சமூக பொருளாதார இன ரீதியாக இச்சொல் ஒவ்வொரு நாட்டிலும் ஒரு புதிய பெயரில் அவதாரம் எடுக்கிறது. ஜெர்மனியில் நாசிசம் இத்தாலியில் பாசிசம், ஜிங்கோஇசம், ஸ்டாலினிசம், மேற்கு நாடுகளின் கேப்பிட்டலிசம், நேற்று உருவான #தாலிபானிசம்.
இந்தியாவுக்கு என்று ஒரு தனித்த சொல் என்றால் அது #நூலிபானிசம்