M.SivaRajan Profile picture
Feb 16 9 tweets 3 min read
#பச்சைவண்ணப்_பெருமாள் திருக்கோயில்.

மூன்று தாயார்களின் அம்சமாக அம்பாள்.

மரகதமேனியனாக மூலவர்.

இந்த கோயிலுக்கு எப்படி செல்வது?

காஞ்சிபுரத்தின் மையப்பகுதியில் இத்திருக்கோயில் அமைந்துள்ளது.

காஞ்சிபுரம் பேருந்து நிறுத்தத்திலிருந்து இக்கோயிலுக்கு செல்ல பேருந்து வசதி உள்ளது. Image
இந்த கோயிலின் சிறப்புகள் என்ன?

இக்கோயிலின் நுழைவு வாயில் கிழக்கு நோக்கியும்,

மூலவரின் மண்டப வாயில் தெற்கு நோக்கியும் அமைந்திருக்க,

மூலவரான பச்சைவண்ணப் பெருமாள் கிழக்கு நோக்கி அருள்பாலிக்கின்றார்.
இக்கோயிலின் மூலவரான பச்சைவண்ணப் பெருமாள், மரகதமேனியனாக பச்சை நிறத்தில் நின்ற கோலத்தில் காட்சியளிக்கிறார்.

மகாவிஷ்ணு இத்தலத்தில் ராமராக காட்சியளித்தவர் என்பதால் கருவறையில் தாயார்கள் இல்லை.

இவர் ஜோதிவடிவில் காட்சி தந்திருக்கிறார் என்பது இக்கோயிலின் நம்பிக்கை ஆகும்.
வேறென்ன சிறப்பு?

இக்கோயிலின் பிரகாரத்தில் அம்பாள் மரகதவல்லி தனிச்சன்னதியில் காட்சியளிக்கிறாள்.

இவர் யந்திர ரூபிணி, சீதை, மகாலட்சுமி ஆகிய மூன்று தாயார்களின் அம்சமாக இக்கோயிலில் அருள்பாலிக்கிறாள்.
பெரும்பாலும் தாயார் சன்னதியின் அருகில் அல்லது முன்புறம் அமைக்கப்படும் ஸ்ரீ சக்கர பீடம்,

இங்கு தாயாரின் பீடத்திலேயே பிரதிஷ்டை செய்யப்பட்டு உள்ளது மிகவும் சிறப்பம்சமாகும்.
தாயாரின் சன்னதியில் நாகதீபம் வைக்கப்பட்டுள்ளது.

இங்கு வைக்கப்பட்டுள்ள நாகதீபத்தை ஏற்றி வழிபட்டால் தோஷங்கள் நீங்கும் என்பது நம்பிக்கை.

இக்கோயிலின் பிரகாரத்தில் நாக சன்னதியும் அமைந்துள்ளது.
என்னென்ன திருவிழாக்கள் கொண்டாடப்படுகிறது?

வைகுண்ட ஏகாதசி, வைகாசி விசாகம், ஆனி திருமஞ்சனம் ஆகியவை இங்கு விமர்சையாக கொண்டாடப்படுகிறது.

எதற்கெல்லாம் பிரார்த்தனைகள் செய்யப்படுகிறது?

திருமணத்தடை, புத்திர தோஷம், நாக தோஷம், புதன் தோஷம் ஆகியவை நீங்க இங்கு பிரார்த்தனை செய்கின்றனர்.
இத்தலத்தில் என்னென்ன நேர்த்திக்கடன்கள் செலுத்தப்படுகிறது?

இக்கோயிலில் வேண்டுதல்கள் நிறைவேறியவுடன் சுவாமிக்கு பச்சைநிற வஸ்திரம் சாற்றியும், துளசி அர்ச்சனை செய்தும், விசேஷ திருமஞ்சனம் செய்தும் நேர்த்திக்கடனை செலுத்துகின்றனர்.

• • •

Missing some Tweet in this thread? You can try to force a refresh
 

Keep Current with M.SivaRajan

M.SivaRajan Profile picture

Stay in touch and get notified when new unrolls are available from this author!

Read all threads

This Thread may be Removed Anytime!

PDF

Twitter may remove this content at anytime! Save it as PDF for later use!

Try unrolling a thread yourself!

how to unroll video
  1. Follow @ThreadReaderApp to mention us!

  2. From a Twitter thread mention us with a keyword "unroll"
@threadreaderapp unroll

Practice here first or read more on our help page!

More from @MSivaRajan7

Feb 18
#பஞ்சமுக_அர்ச்சனை

சிவனின் முக்கண்கள், முக்குணங்கள் மற்றும் மும்முனை கொண்ட திரிசூலத்தினையும் குறிக்கும் சிவனுக்குகந்த பஞ்ச பத்திரங்கள் (இலைகள்).

1. வில்வம்

2. நொச்சி

3. முட்கிளுவை

4. விளா

5. மாவிலங்கை

(6) மஹாவில்வம். Image
இவை அனைத்தும் சிவனின் முக்கண்கள், முக்குணங்கள் மற்றும் மும்முனை கொண்ட திரிசூலத்தினையும் குறிக்கும் பத்திரங்கள்(இலைகள்)

பொதுவாக " வில்வம் ' இருக்கும் இடத்தில் செல்வம்
செழிக்கும்.
ஒரே ஒரு வில்வத்தை
உள்ளன்புடன் சிவபெருமானுக்குச்
சமர்ப்பித்தால் மூன்று பிறவிகளில் செய்த பாவம் தீரும் என்கிறது வில்வாஷ்டகம்.

கூவிளம் என்று இலக்கியங்களில் குறிக்கப் பெறுவது வில்வம்.
Read 13 tweets
Feb 18
#ஓம்_நமசிவாய

சிவபெருமானால் உபதேசிக்கபட்ட இந்ந அதியத்புதமான எட்டு நாமக்களை சொல்வதால் சிவபெருமானின் 1008 திருநாமங்களை சொன்ன பலன் கிட்டும் :

அது என்ன எட்டு நாமக்கள்????

மந்திரம் :

ஷிவோ மகேஷ்வரச்சைவ

ருத்ரோ விஷ்ணு பிதாமஹா :|

ஸம்ஸாரவைத்ய ஸர்வேஷ

பரமாத்மா ஸதாசிவ ll Image
பொருள்:

(1)சிவ : அனைத்து வித மங்களங்களையும் அளிப்பவன்.

(2)மகேஷ்வர : முடிவில்லா மஹா அண்டத்தை உடையவன்.

(3)ருத்ர : ருத்ரன் (சிவபெருமானின் வடிவங்களிள் ஒன்று).

(4)விஷ்ணு : எங்கும் நிறைந்து இருப்பவர்.
(5)பிதாமஹா : ப்ரஹம்மனின் வடிவாக இருப்பவரர்.

(6)ஸம்ஸாரவைத்ய : ஸம்ஸாரம் எனும் கொடிய நிலையிலிருந்து காப்பாற்றும் ஒரே வைத்தியர்.

(7)ஸர்வேஷ பரமாத்மா : அனைத்து கடவுள்களினுள் இருக்கும் பரமாத்மா.

(8)ஸதாசிவ : தென்னகச் சிவநெறியின் பரம்பொருளாகப் போற்றப்படுகின்ற சிவனின் வடிவம்.
Read 4 tweets
Feb 17
#ராமநாத_சுவாமி

தசரத சக்ரவர்த்தி தன் நோய் தீர, இத்தலத்து புண்ணிய தீர்த்தத்தில் நீராடி சனிபகவானை வழிபட்டிருக்கிறார்.

ராமபிரான் ராவணனை வதம் செய்து அயோத்தி திரும்புகையில் தந்தை வழிபட்ட இத்தலத்திற்கு வந்து புண்ணிய நீராடி,

மண்ணால் லிங்கம் செய்து வழிபட்டிருக்கிறார். Image
கூடவே இவ்வாலய சிறப்புணர்ந்து அனுமனும் சிவ வழிபாடு செய்திருக்கிறார்.

அதற்கு சான்றாக இவ்வாலயத்தின் பிரகாரத்தில் அமைந்திருக்கிறது அனுமந்த லிங்கம்.

இவையெல்லாம் இவ்வாலயம் குறித்த புராணகாலச் சிறப்புகள்.
ராமநாத சுவாமியாய் சிவபெருமானும், பர்வதவர்த்தினியார் அம்பாளும் அலங்கரிக்கும் திருநரையூர் ஆலயத்தில் முக்கிய சிறப்புடன் விளங்குகிறார் சனீஸ்வரர். 

சனீஸ்வரர் தனது இரு மனைவிகள் மந்தா தேவி, ஜேஷ்டாதேவி ஆகியோருடன் இவ்வாயலத்தில் அருள்பாலிக்கிறார்.
Read 4 tweets
Feb 17
#மூன்று_முக_லிங்கம்

மூன்று முகங்களோடு காட்சி தரும் சிவலிங்கம்

சிவன் கோவில்களில் இருக்கும் சிவலிங்கம் ‘அருவுருவ’ வடிவம் ஆகும்.

அது தவிர ஆலயத்தில் நடராஜர், பிட்சாடனர் என பல்வேறு தோற்றத்தில் இறைவன் உருவ வடிவமாக திகழ்வார். Image
ஆனால் திருவக்கரையில் உள்ள சந்திரமௌலீஸ்வரர் கோவிலில் உள்ள சிவலிங்கம், மூன்று முகங்களோடு கூடிய சிவலிங்கத் திருமேனியாக காட்சி தருகிறது.

இது எந்த தலத்திலும் இல்லாத அபூர்வமான அமைப்பாகும்.
இதில் கிழக்கு முகமாக இருப்பது தத்புருஷ முகமாகவும்,

வடக்கு முகமாக இருப்பது வாமதேவ முகம் என்றும்,

தெற்கு நோக்கி இருப்பதை அகோர மூர்த்தியாகவும் பக்தர்கள் வணங்குகின்றனர்.

இந்த ஆலயத்தில் மேலும் ஒரு சிறப்புமிக்க சன்னிதி உள்ளது.
Read 6 tweets
Feb 17
#மஹா_சிவராத்திரி_பூஜை_பொருட்கள்

*#மஹா_சிவராத்திரி* (18.02.2023) அன்று சிவபெருமானின் பூஜைக்கு தேவைப்படும் பொருட்கள்..

இவற்றில் உங்களால் முடிந்த ஏதாவதொரு பொருளை சிவன் கோவிலுக்கு வாங்கி கொடுத்து சிவபெருமானின் அருள் பெறுக.. Image
1. திரவிய பொடி

2. மஞ்சள் தூள்

3. அரிசி மாவு

4. நெல்லிமுல்லை பொடி

5. வில்வ பொடி

6. சந்தனம்

7. சந்தன பொடி

8. பன்னீர்

9. தேன்

10. பால்

11. திருநீறு
12. பத்தி

13. சூடம்

14 பழச்சாறு 5 வகை

15. பஞ்சாமிர்தம்

16. தேங்காய்

17. வாழைப்பழம்

18. வெற்றிலை, பாக்கு

19. ஸ்வாமிக்கு வஸ்திரம்

20. ஸ்வாமிக்கு மாலை

21. உதிரி பூக்கள்

22. வில்வ இலை
Read 4 tweets
Feb 17
#மஹா_சிவராத்திரி_சிறப்பு

மஹா சிவராத்திரியன்று சிவபெருமானுக்கு நான்கு ஜாம பூஜைகள் செய்யப்படும்.

ஒவ்வொரு ஜாமத்தின் போதும் வெவ்வேறு விதமான அர்ச்சனைகள், அபிஷேகங்கள், ஆராதனைகள் செய்யப்படும்.

அதைப் பற்றி இங்கு காண்போம்.
💥முதல் கால பூஜை🌺 (6pm-9pm) :

முதல் கால பூஜை பிரம்மன், சிவபெருமானுக்கு செய்யும் பூஜையாகும்.

இந்த காலத்தில் விரதமிருந்து பூஜிப்பதால் உடலில் இருந்த பிரச்சனைகள் பூரணமாக குணமாகும்.
இந்தக்கால பூஜையில் சிவபெருமானுக்கு பஞ்ச கவ்வியத்தால் (பசும்பால், பசுந்தயிர், பசுநெய், கோமயம், கோசாணம்) அபிஷேகம் செய்து, சந்தனம் பூசி, மஞ்சள் நிற பொன்னாடை அணிவித்தும்,
Read 15 tweets

Did Thread Reader help you today?

Support us! We are indie developers!


This site is made by just two indie developers on a laptop doing marketing, support and development! Read more about the story.

Become a Premium Member ($3/month or $30/year) and get exclusive features!

Become Premium

Don't want to be a Premium member but still want to support us?

Make a small donation by buying us coffee ($5) or help with server cost ($10)

Donate via Paypal

Or Donate anonymously using crypto!

Ethereum

0xfe58350B80634f60Fa6Dc149a72b4DFbc17D341E copy

Bitcoin

3ATGMxNzCUFzxpMCHL5sWSt4DVtS8UqXpi copy

Thank you for your support!

Follow Us on Twitter!

:(