பயன்பெறுபவை: 1. Battery electric vehicles (BEV), 2. Plug-in electric vehicles (PEV), 3. Plug-in hybrid electric vehicles (PHEV), 4. Strong hybrid electric vehicles (SHEV)
யாருக்காக: 1. OEM நிறுவனங்கள் - FAME II வழிமுறைப்படி, வாகனம் மற்றும் உதிரிபாகங்கள் உற்பத்தி செய்பவர்கள்.
2. உபயோகித்த பாட்டரிகளை மறுசுழற்சி செய்யும் நிறுவனங்கள். 3. சார்ஜிங் நிலையங்கள் - Public, Private, Fast & Slow charging stations. 4. பாட்டரி மாற்று நிலையங்கள் - Battery Swapping Stations. 5. மின்சார வாகன நிறுவனங்கள்/நிலையங்களின் அசையாச் சொத்துக்கள்.
எதற்காக: 1. தென்கிழக்கு ஆசியாவில், தமிழ்நாட்டை EV நிறுவனங்களின் தொழிற்சாலைகளுக்கும், R&D க்கும் விருப்பமான (preferred) இடமாக மாற்ற. 2. தமிழ்நாட்டில் EV பயன்பாட்டினை அதிகரித்தல். 3. ஆராய்ச்சி -> வடிவமைப்பு -> தயாரிப்பு -> விற்பனை -> மறுசுழற்சி உள்ளிட்ட ecosystem நிறுவுதல்.
4. சென்னை, கோவை, திருச்சி, மதுரை, சேலம் மற்றும் திருநெல்வேலி நகரங்களை பைலட் முறையில் EV நகரங்களாக மாற்றுதல். 5. பொதுப் போக்குவரத்து வாகனங்களை படிப்படியாக EV க்களாக மாற்றுதல்.
என்னென்ன: 1. EV Special Manufacturing Package 1.1 ஆராய்ச்சிக்காக வாங்கும் உபகரணங்கள் மற்றும் தொழில்நுட்ப
செலவுகள் அனைத்தையும் EFA, அதாவது equipment finance agreement ல் சேர்ப்பது.
1.2 முதலீடு சார்ந்த மானியங்கள்:
1.2.1 - SGST திரும்ப வழங்குதல் (அ)
1.2.2 - Turnover-based Subsidy (அ)
1.2.3 - 15% முதலீட்டு மானியம் (அ)
1.2.4 - Special ACC (Advanced Chemistry Cells) முதலீட்டு மானியம்
2. TANGEDCO மின் வரியிலிருந்து, முதல் 5 வருடங்களுக்கு 100% விலக்கு 3. Stamp Duty யிலிருந்து 100% விலக்கு - EV நிறுவனங்கள் அசையாச் சொத்துக்கள் வாங்கும்பொழுது. 4. SIPCOT/TIDCO/ELCOT தொழிற்பேட்டைகளில் நிலம் வாங்கும்பொழுது அரசின் மானியம் (10%/50% - மாவட்டத்திற்க்கேற்ப)
5. வேலைவாய்ப்பு மானியம் - தமிழர்களை (residents) பணியமர்த்தும்போது, அவர்களது EPF (நிறுவனங்களின் contribution) வருடத்திற்கு ₹48,000 வரை அரசே செலுத்தும். இது ஒரு வருடத்திற்கு மட்டுமே 6. Sustainable manufacturing practices பின்பற்றும் நிறுவனங்களுக்கு ₹1 கோடி ஊக்கத்தொகை வழங்கப்படும்
7. ARAI, ICAT போன்ற சான்றிதழ்கள் வாங்கும் செலவினங்களுக்கு ₹50 லட்சம் வரை மானியம். 8. patents, copyrights, and trademarks போன்ற செலவினங்களுக்கு ₹50 லட்சம் வரை மானியம். 9. தொழிற்சாலைகளை நிறுவ கடன் வாங்கினால், வட்டியில் 5% அரசே ஏற்றுக்கொள்ளும். அதிகபட்ச தொகைகள் படத்தில் காண்க.
10. MSME க்களுக்கு முதலீட்டில் 20% மானியமும், TIIC யில் வாங்கும் கடன்களுக்கு 6% வரி குறைப்பும் அளிக்கப்படும். 11. பயிற்சி செலவினங்கள் - 11.1 பொது : மாதம் ₹4,000xஆறு மாதங்கள். 11.2 பெண்கள், திருநங்கைகள், உடல் ஊனமுற்றோர் மற்றும் SC/ST பிரிவினருக்கு: மாதம் ₹6,000xஆறு மாதங்கள்
EV பயனாளர்களுக்கான பயன்கள்/சலுகைகள்:
1. பொதுப் போக்குவரத்தை மின்மயமாக்குதல் - 1.1 - 2030 ஆண்டிற்குள், அரசு போக்குவரத்துப் பேருந்துகளில் 30% த்தை EV க்களாக மாற்றுதல். 1.2 - தனியார் வாகனங்களை - பள்ளி/கல்லூரி/தொழிற்சாலை (25% மானியம்) பேருந்துகளை EV க்களாக மாற்ற ஊக்குவித்தல்.
ஒழுங்குமுறைப் படுத்துதல் முயற்சிகள்:
1. City Building Codes ல் தேவையான மாற்றங்கள் (கட்டாய சார்ஜிங் point களை அமைத்தல்) கொண்டு வருதல். 2. வாகன பதிவு எண் plate களில் EV க்களை தனித்துக் காண்பித்தல்.
தனியார் வாகனம் - பச்சை பின்னணி்யில் வெள்ளை
பொது வாகனம் - பச்சை பின்னணி்யில் மஞ்சள்
3. மோட்டார் வாகன/சாலை வரியில் விலக்கு 3.1 - சாலை வரி - 31.12.2025 வரை 100% விலக்கு. 3.2 - பதிவுத் தொகை - 31.12.2025 வரை 100% விலக்கு 3.3 - பெர்மிட் கட்டணம் - 31.12.2025 வரை 100% விலக்கு
மேற்சொன்னவை மட்டுமல்லாமல், EV சார்ஜிங் infrastructure, சார்ஜிங் நிலையங்கள் மற்றும் அந்த
நிலையங்களுக்கான மின்சாரக் கணக்கீடு (LT Tariff - I-A), பொது மற்றும் தனியார் சார்ஜிங்/பேட்டரி மாற்று நிலையங்களுக்கான ஊக்கத்தொகை/மானியம் வழங்குதல், Start-Up நிறுவனங்களை ஊக்குவித்தல், EV Ecosystem முழுமையாக தமிழ்நாட்டில் இருக்குமாறு அமைத்தல், முதலீடுகளை ஈர்த்தல்/வழங்குதல்,
EV சார்ந்த Safety & Awareness உருவாக்குதல், கல்விச்சாலைகளில் அதற்கேற்ற படிப்புகளை உருவாக்குதல் போன்ற பல சலுகைகளும், திட்டங்களும் உள்ளன.
1. வருமானம் வேணும்ன்னு GST வரியை ஏத்துறாங்க. 2. Input costs கூடிப்போச்சுன்னு விலையை ஏத்துறான். 3. என்ன விலை ஏறினாலும் வாங்கியே ஆகனும்ங்கிற நிலைமைக்கு மிடில் கிளாஸ் மக்கள் தள்ளப் படுகிறார்கள். 4. விலைவாசி ஏறினா பணவீக்கம் ஏறிடும். 5. பணவீக்கம் ஏறுதுன்னு வட்டியை ஏத்துறானுங்க.
6. வட்டி ஏறிட்டா, எல்லா வங்கிகளும் கடன் வட்டியை உடனே ஏத்துறாங்க. 7. கடன் வட்டி ஏறிட்டா EMI ஏறிடுது. 8. EMI ஏறுற அளவுக்கு மிடில் கிளாஸ்சுக்கு சம்பளம் எற மாட்டேங்கிது. 9. சம்பளம் பத்தலைன்னு மேலும் கடன் வாங்க நேறிடுது.
மூத்த குடிமக்களுக்கான சேமிப்பு மற்றும் நிலையான வருமானம் தரும் வழிகள்.
இவை அனைத்துமே, ஒன்றிய அரசால் guarantee செய்யப்பட்டவை. முதலீடுகளுக்கு 100% பாதுகாப்பு.
உங்களுக்கு அருகிலுள்ள தபால் நிலையங்களில் இதைப் பற்றி மேலும் தெரிந்துகொள்ளலாம்.
மேலும் படிக்க: ...
Senior Citizen Savings Scheme (SCSS)
முதலீடுகளின் உச்ச வரம்பு ₹30 லட்சம். ஒரு குடும்பத்தில் (கணவனும், மனைவியும்) சேர்ந்து அதிகபட்சமாக ₹60 லட்சம் முதலீடு செய்யலாம்.
5+3 வருடங்கள் வரை முதலீடு செய்யலாம். காலாண்டுக்கு ஒருமுறை வட்டி வருமானம் கிடைக்கும்.
Post Office Monthly Income Scheme (POMIS)
முதலீடுகளின் உச்ச வரம்பு ₹9 லட்சம். ஒரு குடும்பத்தில் (கணவனும், மனைவியும்) சேர்ந்து அதிகபட்சமாக ₹18 லட்சம் முதலீடு செய்யலாம்.
5 வருடங்கள் வரை முதலீடு செய்யலாம். மாதத்திற்கு ஒருமுறை வட்டி வருமானம் கிடைக்கும்.
பெரும்பாலான முதலீட்டாளர்கள் அதிக வருமானம் பெறுவதில்தான் கவனம் செலுத்துகின்றனர். ஆனால் 40 வயதிற்கு மேலே நீங்கள் தொடங்கும் போது, அதிக வருமானத்தை விட 'அதிகமாக சேமிப்பதில்' தான் நீங்கள் கவனம் செலுத்த வேண்டும். அவ்வளவே. என்ன இவ்வளவு சுலபமா என்கிற ஐயம் எழுகிறதா? தொடர்ந்து படியுங்கள்.
நம்மில் பலர் 40 வயதை எட்டும் வரை முதலீடுகளையும் சேமிப்பையும் தள்ளிப்போடுகிறோம். அதற்கு வெவ்வேறு காரணங்கள் இருக்கும். அது அவரவர் குடும்ப சூழ்நிலையைப் பொறுத்தது. 40 வயதை அடையும்போது கொஞ்சம் பயமும் சேர்ந்து விடுகிறது. ஐயையோ, நாம் நமது வாழ்க்கைக்கு தேவையான அளவு சேமிக்கவில்லையே என்று.
e-Rupee - Digital Currency - என்ன? எதற்கு? எப்படி?
டிசம்பர் 1 ஆம் முதல், ரிசர்வ் வாங்கி, இந்தியாவில் டிஜிட்டல் currency யை பொதுமக்களின் பயன்பாட்டிற்காக அனுமதித்தது. இதை CBDC என்று அழைக்கின்றனர். அதாவது, Central Bank Digital Currency. நமது வசதிக்காக e-Rupee என்றே அழைப்போம்.
இந்த பயன்பாட்டை பைலட் முறையில் மக்கள் மத்தியில் எடுத்துச் செல்ல, ரிசர்வ் வாங்கி நான்கு வங்கிகளை தேர்வு செய்துள்ளது. அவை: 1) State Bank of India 2) ICICI Bank
3)Yes Bank 4) IDFC Bank
இந்த வங்கிகள், தங்களிடம் கணக்கு வைத்திருக்கும் ஒரு சில தனிநபர்கள் மற்றும் வியாபார நிறுவனங்களை
தேர்வு செய்து அவர்களுக்கு SMS மற்றும் ஈமெயில் மூலம் தகவல் அனுப்பப்படும். தேர்ந்தெடுக்கப் பட்டவர்கள் விருப்பப்பட்டால், அவர்கள் Google Playstore க்கு சென்று e-Rupee app ஐ தரவிறக்கம் செய்யவேண்டும். அவ்வாறு செய்கையில், அந்த app, அவர்களது SIMஐ வெரிஃபிகேஷன் செய்யும்.
SIP என்றால் என்ன? SIP யில் எப்படி முதலீடு செய்வது? ஏன் இதனை ஒரு சிறந்த முதலீட்டு முறையென சொல்கிறார்கள்? பார்ப்போமா?
SIP என்றால் "Systematic Investment Plan".
அதாவது...
ஒவ்வொரு மாதமும்,
ஒரு குறிப்பிட்ட தொகையினை,
ஒரு குறிப்பிட்ட காலத்திற்கு,
தவறாமல் முதலீடு செய்து வருவது.
சரி. முதலீட்டு வழிகளில், இதைத்தான் சிறந்ததொரு வழியென்று சொல்கிறார்களே. ஏன்?
பொதுவாக, முதலீடு செய்யும்போது, consistency மற்றும் discipline, இவை இரண்டும் மிக மிக முக்கியமானது. இதனை பின்பற்ற பெரும்பான்மையான முதலீட்டாளர்களால் முடியாது.
இந்த இரண்டையும், SIP முறை முதலீடு, முதலீட்டாளர்களை தவறாமல் பின்பற்ற வைக்கிறது. Automated Debit மூலம் Discipline மற்றும் consistency யை கொடுக்கிறது.
சரி. SIP மூலம் எதிலெல்லாம் முதலீடு செய்யலாம்? 1) Mutual Funds (பரஸ்பர நிதி) 2) Shares (பங்குகள்)