K. RAJESH Profile picture
Economist. Helping People get Rich. Authorized Mutual Fund Distributor. Founder - Skyman Investments
Mar 26, 2023 12 tweets 3 min read
Finance Bill 2023 - உங்கள் முதலீடுகளுக்கு ஏற்படப்போகும் மாற்றங்கள் என்னென்ன?

இதனால் முதலீட்டாளர்களுக்கு ஏப்ரல் 1 முதல் ஏற்படப்போகும் மாற்றங்கள் என்னென்ன?

மேலும் விபரங்களுக்கு: TL அல்லது DM அல்லது வாட்ஸாப் மூலம் தொடர்பு கொள்ளவும்.

வாட்ஸாப் லிங்க்: bit.ly/skymanwp New Regime - ₹7 லட்ச வருமான வரி விதிப்பில் ஒரு சிறிய மாற்றம்.

தற்பொழுது, ₹7 லட்சம் வரை வருமான வரி = ₹0. உங்களது சம்பளம், ₹7,00,100 ஆக ஆனால், அதற்கான வருமான வரி = ₹25,010. அதாவது ₹100 சம்பள உயர்விற்கு வருமான வரி, ₹25,010 செலுத்த வேண்டியதாகிறது.
Mar 22, 2023 15 tweets 3 min read
வங்கிகள் எப்படியெல்லாம் வாடிக்கையாளர்களை ஏமாற்றுகின்றன?

ஒரு சிறிய இழை. படித்து, பயன்பெறவும்.

1. லோன் எடுக்கையில் இன்சூரன்ஸ் "கட்டாயம்" என்று சொல்லுவது.

வாகன இன்சூரன்ஸ் தவிர, மற்ற எந்த இன்சூரன்சுமே இந்தியாவில் கட்டாயம் கிடையாது.

மேலும் விபரங்களுக்கு: bit.ly/skymanwp Insurance is a subject matter of solicitation.
இன்சூரன்ஸ் எடுப்பது தனிநபர் விருப்பத்தை பொறுத்தது. வங்கிகள், பெரும்பாலும், லோன் எடுப்பவர்களைத்தான் குறி வைக்கின்றன. அவர்களுடைய ரிஸ்க்கை குறைக்க, மற்றும் upselling மூலம் தங்களுக்கு அதிக லாபம் தரக்கூடிய பொருட்களை விற்க, இந்த வழியை
Mar 20, 2023 6 tweets 2 min read
#TNBudget2023#PTRPalanivelThiagarajan சொல்லுறது ஒண்ணே ஒன்னுதான்...

படிங்கப்பா, படிங்கம்மா. பள்ளிக்கூடத்துக்கு வாங்க பிள்ளைகளா. மத்ததை எல்லாம் நாங்க பார்த்துக்குறோம்.

Fiscal Deficit ஐ 50% குறைச்சதெல்லாம் ஒன்னும் பெரிய விஷயமில்லை. அது நிதியமைச்சரோட goals ல ஒன்னு.

ஆனா... கல்விக்கான ஒதுக்கீடுகள் தான் இந்த பட்ஜெட் ல கவனிக்க வேண்டிய விஷயம். மேம்போக்கா நிதி ஒதுக்கீட்டு போகாம, அடிப்படை கல்விக்கான challenges என்னென்ன என்பதை நன்றாக ஆராய்ந்து, அதற்கேற்றவாறு பட்ஜெட் allocation கல்வி, மற்றும் கல்வி நிலையங்களின் மேம்பாட்டிற்காக செய்யப் பட்டுள்ளது.
Mar 15, 2023 16 tweets 3 min read
#SVB Silicon Valley Bank பிரச்சனை - பயந்து ஓடலாமா? துணிந்து இறங்கலாமா? ஒரு சிறப்புப் பார்வை.

மார்ச் 8, 2023 அன்று அந்த வங்கி, தனது balance ஷீட் அட்ஜஸ்ட்மென்ட் க்காக $2.25 பில்லியன் கடன் வாங்கப் போவதாக சொன்னது. இந்த அறிவிப்பு சந்தை மற்றும் வங்கி வட்டாரங்களில் தீயைப் போல பரவியது. 2008 வீழ்ச்சி போல் இது ஆகி விடுமோ என்கிற பயத்தில் பீதியடைந்த முதலீட்டாளர்கள், அடுத்த 48 மணி நேரத்தில் $42 பில்லியன் தொகையை withdraw செய்தனர்.

SVB, அமெரிக்காவின் 16 ஆவது பெரிய வங்கி. 40 வருட பாரம்பரியம் கொண்டது. $175 பில்லியன் அளவுக்கு வாடிக்கையாளர்களின் டெபாசிட்ஸ் வைத்திருந்தது
Mar 13, 2023 9 tweets 5 min read
#NPS - #NationalPensionSystem

Voluntary #retirement scheme.
Managed by #PFRDA (Pension Fund Regulatory and Development Authority).
Anyone from 18 to 65 yrs of age can invest.

For New NPS Registration: dynm.in/F2147
For NPS Contribution: dynm.in/93AC2 Type of Accounts:
Tier I : Retirement A/c. Mandatory. Cannot withdraw until retirement. Initial Contr - ₹500
Tier II : No restrictions. Anytime withdrawal. Tier II can be opened only if you have a Tier I account. Initial Contr - ₹1000

Annual Min Contr : I - ₹1000, II - ₹250
Feb 28, 2023 12 tweets 3 min read
EPF - அதிக பென்ஷன் பெரும் தேர்வு.

செப்டம்பர் 1, 2014 தேதியன்று நீங்கள் சம்பளம் பெறும் ஊழியராக இருந்திருந்தால், ஊழியர்களின் ஓய்வூதியத் திட்டத்தின் (EPS) கீழ் அதிக ஓய்வூதியம் (ஓய்வு பெற்ற பிறகு) பெறுவதற்கு உங்கள் நிறுவனம் உங்களுக்கு அதற்கான தெரிவை தெரிவிக்க சொல்லியிருப்பார்கள். சரி. அப்படீன்னா என்னன்னு குழப்பமா இருக்கா? சொல்றேன்.

மாதா மாதம் உங்களுக்கு PF தொகை (நிறுவனத்தின் contribution - 12% of Basic) உங்கள் நிறுவனம் செலுத்தும் அல்லவா? நிறுவனம் செலுத்தும் தொகையை நீங்கள் கவனித்து இருந்தீர்களானால், அது உங்களின் contribution ஐ விட சற்றே குறைவாக இருக்கும்
Feb 24, 2023 6 tweets 2 min read
Asset க்கும் Liability க்கும் உள்ள வித்தியாசத்தை பற்றி தெரிந்துகொள்ளுங்கள்.

எந்தவொரு பொருள் உங்களின் முதலீட்டிற்கு பணமீட்டித் தருகிறதோ, அதுதான் Asset.

நீங்கள் கடனில் வாங்கிய வீடு (தற்பொழுது குடியிருப்பது), Asset அல்ல. கடனில் வாங்கும் எதுவும் Asset கிடையாது. வங்கிகளுக்குத் தான் அது asset. ஏனென்றால், அவர்கள் கொடுத்த கடனுக்கு வட்டி வருமானம் ஈட்டிக் கொடுப்பதினால்.

₹50 லட்சம் வீட்டுக் கடன் எடுத்து ஒருவர் வீடு வாங்கியிருக்கிறேன் என்று சொன்னால் அது சரியல்ல.

அவர் வீடு வாங்கவில்லை. கடன் வாங்கியிருக்கிறார். அவ்வளவே.
Feb 23, 2023 8 tweets 2 min read
வீட்டுக்கடன் வட்டி அதிகரிப்பு - என்ன செய்யலாம்? என்ன செய்யக்கூடாது?

தற்போதுள்ள 6.5% ரெபோ வட்டி விகிதத்தால், அனைத்து வீட்டுக் கடன்களின் வட்டிகளையும் வங்கிகள் அதிகரித்து விட்டன. அதன் பெருஞ்சுமை மக்களை வாட்டி வதைக்கிறது.

இந்த நேரத்தில் என்ன செய்யக் கூடாது?

bit.ly/skymanwp 1. கடனை வேறொரு வங்கிக்கு மாற்றுதல்.
கூடவே கூடாது... ஏன்?

உதாரணமாக, ஒருவர், ₹40 லட்சம் கடனுக்காக ஒரு வங்கியிடம் ₹40,000 EMI செலுத்துகிறார் என்று வைத்துக் கொள்வோம். முதல் ஐந்து வருடங்களில் அவர் செலுத்திய EMI எதில் போய் சேர்ந்திருக்கும்?

வட்டி: ₹21,36,000 (89%)
அசல்: ₹2,64,000
Feb 18, 2023 15 tweets 4 min read
தமிழ்நாடு மின்சார வாகனக் கொள்கை - 2023

தமிழ்நாடு முதலமைச்சர் திரு மு.க.ஸ்டாலின் அவர்களால் 14 Feb 2023 அன்று வெளியப்பட்டது.

அதைப் பற்றிய ஒரு சிறிய இழை. படித்து, பகிரவும்.

#TNEVPolicy2023 #மின்சார_வாகனம் #மின்சார_வாகன_கொள்கை_2023 பயன்பெறுபவை:
1. Battery electric vehicles (BEV),
2. Plug-in electric vehicles (PEV),
3. Plug-in hybrid electric vehicles (PHEV),
4. Strong hybrid electric vehicles (SHEV)

யாருக்காக:
1. OEM நிறுவனங்கள் - FAME II வழிமுறைப்படி, வாகனம் மற்றும் உதிரிபாகங்கள் உற்பத்தி செய்பவர்கள்.
Feb 8, 2023 5 tweets 1 min read
1. வருமானம் வேணும்ன்னு GST வரியை ஏத்துறாங்க.
2. Input costs கூடிப்போச்சுன்னு விலையை ஏத்துறான்.
3. என்ன விலை ஏறினாலும் வாங்கியே ஆகனும்ங்கிற நிலைமைக்கு மிடில் கிளாஸ் மக்கள் தள்ளப் படுகிறார்கள்.
4. விலைவாசி ஏறினா பணவீக்கம் ஏறிடும்.
5. பணவீக்கம் ஏறுதுன்னு வட்டியை ஏத்துறானுங்க. 6. வட்டி ஏறிட்டா, எல்லா வங்கிகளும் கடன் வட்டியை உடனே ஏத்துறாங்க.
7. கடன் வட்டி ஏறிட்டா EMI ஏறிடுது.
8. EMI ஏறுற அளவுக்கு மிடில் கிளாஸ்சுக்கு சம்பளம் எற மாட்டேங்கிது.
9. சம்பளம் பத்தலைன்னு மேலும் கடன் வாங்க நேறிடுது.
Feb 7, 2023 5 tweets 1 min read
மூத்த குடிமக்களுக்கான சேமிப்பு மற்றும் நிலையான வருமானம் தரும் வழிகள்.

இவை அனைத்துமே, ஒன்றிய அரசால் guarantee செய்யப்பட்டவை. முதலீடுகளுக்கு 100% பாதுகாப்பு.

உங்களுக்கு அருகிலுள்ள தபால் நிலையங்களில் இதைப் பற்றி மேலும் தெரிந்துகொள்ளலாம்.

மேலும் படிக்க: ... Senior Citizen Savings Scheme (SCSS)
முதலீடுகளின் உச்ச வரம்பு ₹30 லட்சம். ஒரு குடும்பத்தில் (கணவனும், மனைவியும்) சேர்ந்து அதிகபட்சமாக ₹60 லட்சம் முதலீடு செய்யலாம்.

5+3 வருடங்கள் வரை முதலீடு செய்யலாம். காலாண்டுக்கு ஒருமுறை வட்டி வருமானம் கிடைக்கும்.
Dec 17, 2022 21 tweets 6 min read
உங்கள் வயது 40+ ஆ?
போதுமான அளவு சேமிக்கவில்லை என்கிற அச்சம் உங்களை வாட்டுகிறதா? எதிர்காலத்தை பற்றிய பயமுள்ளதா?

சற்றே பயப்படுத்தலில் இருந்து கொஞ்சம் பிரேக் எடுத்துக் கொள்ளுங்கள். நீங்கள் பயப்படுவது போல் இந்த வயது ஒன்றும் தாமதமான வயதல்ல.

மேலும் விபரமறிய: wa.me/message/GCVBKT… பெரும்பாலான முதலீட்டாளர்கள் அதிக வருமானம் பெறுவதில்தான் கவனம் செலுத்துகின்றனர். ஆனால் 40 வயதிற்கு மேலே நீங்கள் தொடங்கும் போது, அதிக வருமானத்தை விட 'அதிகமாக சேமிப்பதில்' தான் நீங்கள் கவனம் செலுத்த வேண்டும். அவ்வளவே. என்ன இவ்வளவு சுலபமா என்கிற ஐயம் எழுகிறதா? தொடர்ந்து படியுங்கள்.
Dec 14, 2022 5 tweets 2 min read
😍😍😍😍😍😍😍😍😍😍😍😍😍

Mechanical Watches are THE MOST BEAUTIFUL of all!!! Image TISSOT DOUBLE SAVONNETTE MECHANICAL

tissotwatches.com/en-in/t8654059…
Dec 2, 2022 13 tweets 4 min read
e-Rupee - Digital Currency - என்ன? எதற்கு? எப்படி?

டிசம்பர் 1 ஆம் முதல், ரிசர்வ் வாங்கி, இந்தியாவில் டிஜிட்டல் currency யை பொதுமக்களின் பயன்பாட்டிற்காக அனுமதித்தது. இதை CBDC என்று அழைக்கின்றனர். அதாவது, Central Bank Digital Currency. நமது வசதிக்காக e-Rupee என்றே அழைப்போம். இந்த பயன்பாட்டை பைலட் முறையில் மக்கள் மத்தியில் எடுத்துச் செல்ல, ரிசர்வ் வாங்கி நான்கு வங்கிகளை தேர்வு செய்துள்ளது. அவை:
1) State Bank of India
2) ICICI Bank
3)Yes Bank
4) IDFC Bank

இந்த வங்கிகள், தங்களிடம் கணக்கு வைத்திருக்கும் ஒரு சில தனிநபர்கள் மற்றும் வியாபார நிறுவனங்களை
Nov 23, 2022 22 tweets 5 min read
முதல் முறையாக வீட்டுக்கடன் வாங்கப் போறீங்களா? இந்த இழையைப் படித்துவிட்டு பின்னர் தொடங்குங்கள்.

இழையை படிக்கும் முன், எனது வீட்டுக்கடன் தொடர்பான முந்தைய இழையை படித்துவிட்டு வரவும்.



மேலதிக விபரங்களுக்கு: wa.me/message/GCVBKT… Image ஒவ்வொருவருக்கும் சொந்த வீடு இருக்க வேண்டும் என்கிற எண்ணம் நமது சிறு வயதிலிருந்தே நம் எல்லோருடைய மனத்திலும் ஆழமாக பதிய வைக்கப்பட்டுள்ளது. வாழ்க்கையில் பெரும்பாலான மக்கள் விரும்பும் மிக முக்கியமான விஷயங்களில் இதுவும் ஒன்றாகும். Image
Nov 6, 2022 11 tweets 3 min read
SIP என்றால் என்ன? SIP யில் எப்படி முதலீடு செய்வது? ஏன் இதனை ஒரு சிறந்த முதலீட்டு முறையென சொல்கிறார்கள்? பார்ப்போமா?

SIP என்றால் "Systematic Investment Plan".

அதாவது...
ஒவ்வொரு மாதமும்,
ஒரு குறிப்பிட்ட தொகையினை,
ஒரு குறிப்பிட்ட காலத்திற்கு,
தவறாமல் முதலீடு செய்து வருவது. சரி. முதலீட்டு வழிகளில், இதைத்தான் சிறந்ததொரு வழியென்று சொல்கிறார்களே. ஏன்?

பொதுவாக, முதலீடு செய்யும்போது, consistency மற்றும் discipline, இவை இரண்டும் மிக மிக முக்கியமானது. இதனை பின்பற்ற பெரும்பான்மையான முதலீட்டாளர்களால் முடியாது.
Nov 4, 2022 6 tweets 2 min read
வீட்டுக் கடன்கள் - An Alternative Approach

ரொம்ப மாசங்களா, வீட்டுக் கடன் பத்தியும், அதை கடன் மாதிரி பாக்காம, முதலீடு மாதிரி consider பண்ணினா, என்னவெல்லாம் செய்யணும்ன்னு ஒரு திரட்டு போடணும்ன்னு பிளான் பண்ணி, இப்போதான் பண்ண முடிஞ்சிது. முழுக்க படிங்க. உங்களுக்கு/உங்க குடும்பத்துக்கு இந்த முறை சரியாக தோன்றினால், அதை செய்யுங்க. போதும்.

இந்த திரட்டுக்கு நாம எடுக்கப் போற கடன் விபரங்கள்:
தொகை: ₹60,00,000 (60 லட்சம்)
EMI தொகை: ₹50,186
கடன் காலம்: 20 ஆண்டுகள்
நீங்கள் செலுத்தும் மொத்த தொகை: ₹1,20,44,737
Oct 28, 2022 10 tweets 2 min read
குரங்குகளின் கையில் பூமாலை

RBI’s MPC வரும் நவம்பர் 3ஆம் தேதி கூடவிருக்கிறது. இது, வழக்கமான quarterly review அல்ல.

ரிசர்வ் வங்கி, தனது பணவீக்க கட்டுப்பாட்டு விகித (4% +/-2%) இலக்கை எட்டாததால், தங்களது விளக்கத்தை அரசுக்கு சமர்ப்பிக்கவே இந்த கூட்டம். கடந்த 9 மாதங்களாக ரிசர்வ் வங்கி எடுத்த வரி அதிகரிப்பு முயற்சியினால் பணவீக்க கட்டுப்பாட்டு இலக்கை எட்ட முடியவில்லை. செப்டம்பர் மாத பணவீக்க விகிதம் 7.41% ஆக இருந்தது.

இந்த நேரங்களில், கூட்டம் கூட்டி, ஏன் இலக்கை எட்ட முடியவில்லை? அதற்காக என்னவெல்லாம் நடவடிக்கை எடுக்கப்பட்டது?
Sep 18, 2022 16 tweets 4 min read
பணத்தை எவ்வாறு கையாள்வது என்பதை நமது குழந்தைகளுக்கு எவ்வாறு சொல்லித் தருவது?

வேகமாக வளர்ந்துவரும் காலத்தின் கட்டாயத்தினால், நம்முடைய குழந்தைகள் பல விஷயங்களை சுலபமாக கற்றுக் கொள்கிறார்கள். இந்த சமயத்தில், நமக்கு 30+ வயதினிலே தெரிந்த பணத்தை கையாளும் விதங்களை இப்பொழுதே பிள்ளைகளுக்கு சொல்லித் தருவது நல்லது என்றே கருதுகிறேன்.

சரி. முடிவு செய்தாகிவிட்டது. எப்படி கற்றுக் கொடுப்பது?

கற்றுக்கொள்ள இரண்டு வழிகள் உள்ளன:
• விளையாட்டின் மூலம்
• நிஜ வாழ்க்கை அனுபவங்கள் மூலம்.

நிஜ உலகில் கற்றலை எங்கு தொடங்குவது என்று உங்களுக்குத் தெரியாவிட்டால்?
Sep 14, 2022 13 tweets 4 min read
Byju's - A disaster waiting to happen.

#Byju's revenue fell 14% YoY to Rs 2,428 crore on a consolidated basis, down from Rs 2,704 crore the previous year, according to the FY21 results. Byju's reported a Rs 4,500 crore loss in FY21, nearly 17 times the Rs 262 crore loss in FY20. According to Byju, due to a change in accounting practices, a significant increase in business was not reflected in the revenue figure, and nearly 40% of the revenue was deferred to subsequent years.
Mar 27, 2022 13 tweets 3 min read
சம்பள உயர, சேமிப்பும் உயரட்டும்.

வருடாந்திர appraisals இந்நேரம் முடிவடைந்து சம்பள உயர்வு கடிதங்கள் இந்நேரம் உங்கள் கையில் கிடைத்திருக்கும் இல்லையா? சம்பள உயர்விலிருந்து கூடுதல் பணத்தை எவ்வாறு செலவிடுவது என்று உங்களில் பெரும்பாலோர் ஏற்கனவே திட்டமிட்டிருப்பீர்கள் இல்லையா? என்னென்ன பொருட்கள் வாங்கலாம், எதில் EMI கட்டி வாகனங்கள்/எலக்ட்ரானிக்ஸ் பொருட்கள் வாங்கலாம், எங்கெங்கு வெளிநாட்டு சுற்றுலா செல்லலாம் போன்றவற்றை திட்டமிட தொடங்கி இருப்பீர்கள்.

கொஞ்சம் பொறுங்கள்.

நான் சொல்வதை கேட்ட பிறகு, உங்கள் பிளானிங்கை தொடருங்கள் (உங்கள் மனது மாறாவிட்டால்).