நீங்கள் இந்த பழைய பஞ்சாங்கத்தைப் பாடுவதை விடுத்து இன்றைய நவீன யுகத்துக்குத் தக்கவாறு எதாவது உபயோகமான பதிவுகளைத் தாருங்கள் என்று சில நண்பர்கள் விமர்சனங்களை முன்வைக்கிறார்கள்.
பஞ்சாங்கம் என்றால் என்னவென்று தெரிந்தால் அவர்கள் அப்படிக் கூறியிருக்க மாட்டார்கள். பஞ்சாங்கம் என்பது நம் முன்னோர்களின் வானியல் ஞானத்தை உலகுக்கு பறை சாற்றும் விண் ஞான சாஸ்திரமாகும்.
நம் பாரத கண்டத்தைச் சேர்ந்த ரிஷிகளும், சித்தர்களும், கணித மேதைகளும் 5,000 ஆண்டுகளுக்கு முன்பே பல்வேறு விஞ்ஞானத் துறைகளில் ஞானம் பெற்றவர்களாகத் திகழ்ந்துள்ளார்கள். அதில் கணிதமும், வானியலும் அடங்கும்.
பூஜ்ஜியம் கண்டுபிடிக்கப்பட்டதே நம் இந்தியாவில்தான். 3 ஆம் நூற்றாண்டில் வாழ்ந்த போதாயனார், 4 ஆம் நூற்றாண்டில் வாழ்ந்த ஆரியப்பட்டர் போன்றவர்கள் பல அரிய கணித சூத்திரங்களைத் தங்கள் நூல்களில் தந்துள்ளார்கள்.
அவர்கள் தங்கள் நூல்களில் ஆயிரக்கணக்கான ஆண்டுகளுக்கு முன் வாழ்ந்த தங்கள் முன்னோர்களான ரிஷிகளின் ஏடுகளில் இருந்தே இத்தகைய வானியல் மற்றும் கணித முறைகளைக் கற்றுத் தெரிந்து கொண்டதாக சொல்கிறார்கள்.
ஆரியப்பட்டர்தான் ஒரு வருடம் 365 நாட்களைக் கொண்டது என்று தன் நூலில் குறிப்பிட்டுள்ளார். இவரின் கணிதம் மற்றும் வானியல் சுவடிகளைக் ஹாலந்து தேசத்திற்கு கடத்திச் சென்று விட்டனர். 1874 ஆம் ஆண்டுதான் அங்கிருந்த நடுநிலையாளர்கள் அவரின் சுவடிகளை லெயிடன் என்ற நகரில் நூலாக வெளியிட்டனர்.
பிறகு அது 1879 ஆம் ஆண்டு பிரஞ்சு மொழியில் மொழிபெயர்க்கப்பட்டு பாரிஸில் வெளியிடப்பட்டது. அதற்குப் பிறகுதான் ஆரியப்பட்டரை இந்தியர்களுக்கேத் தெரிய வந்தது.
ஆரியப்பட்டரின் கணக்குப்படி பூமியின் சுற்றளவு 3,300 யோசனை தூரம். அதாவது 26,800 மைல்கள். தற்காலிக விஞ்ஞானிகளின் கணக்கிற்கு இது ஏறக்குறைய சமமாகவே உள்ளது.
அதற்கும் முன்பாக இராமாயணம், மகாபாரதம் போன்ற புராண காலத்திலேயே நம் மக்கள் வானியல் அறிவு பெற்றவர்களாகத் திகழ்ந்துள்ளார்கள்.
கி.மு 8756 ஆம் ஆண்டு வாழ்ந்த வைவஸ்த மனு என்ற பாரத நாட்டைச் சேர்ந்த மன்னனின் அவையில் இருந்த வானியல் அறிஞர்கள் 27 நட்சத்திரக் கூட்டங்களையும் 27 மண்டலங்களாகப் பிரித்து,
ஒவ்வொரு நட்சத்திர மண்டலத்தையும் கடக்க சூரியன் எடுத்துக் கொள்ளும் கால அளவையும் துள்ளியமாகக் கணக்கிட்டு சொல்லியிருக்கிறார்கள். இப்படி எவ்வளவோ அரிய பெரிய விஷயங்கள் அடங்கிய சித்தர்கள், மற்றும் ரிஷிகளின் சுவடிகளை நாம் இழந்து விட்டோம்.
சூரியன் நிலையாக தன்னைத் தானே சுற்றுகிறது. பூமிதான் சூரியனைச் சுற்றி வருகிறது என்று சொன்னவர் கோப்பர் நிக்கஸ் என்பார்கள். ஆனால் 5,000 ஆண்டுகளுக்கு முன் இயற்றப்பட்ட சூரிய சித்தாந்தத்தில் நம் முன்னோர்கள் இந்தத் தகவலைச் சொல்லியிருக்கிறார்கள்.
மேலும் பூமி சூரினை ஒரு முறை சுற்றி வர எவ்வளவு காலம் எடுத்துக் கொள்கிறது என்பதையும் வினாடி சுத்தமாகச் சொல்லியிருக்கிறார்கள். அதில் பூமி தட்டையானதல்ல உருண்டையானது என்பதை நிரூபிக்க பல எடுத்துக்காட்டுகளையும் கூறியிருக்கிறார்கள்.
இவ்வளவு கருத்துக்களையும் ஏன் சொல்கிறேன் என்றால், பழைய பஞ்சாங்கம் என்று நீங்கள் கேவலமாகப் பேசுவது ஒன்றும் அவ்வளவு சாதாரண விஷயமல்ல. அது நம் முன்னர்களின், நம் தேசத்தின் கலாச்சாரம், பண்பாடு, நாகரிகம், அறிவாற்றல் இவற்றை உலகுக்கு உணர்த்தும் அடையாளமாகும். அது வானவியல் பொக்கிஷமாகும்.
அதை முறைப்படி கற்றுணர்ந்து பயன்படுத்துபவர்கள் வாழ்வில் மேன்மையடைவது திண்ணம். பஞ்சாங்கம் என்பது ஐந்து அங்கங்களைக் கொண்டது. வாரம், திதி, நட்சத்திரம், யோகம், கரணம் என்பவையே அந்த ஐந்து அங்கங்கள்.
திதி என்பது ஆகாயத்தில் சூரியனுக்கும், சந்திரனுக்கும் இடையே உள்ள தூரத்தைக் குறிப்பதாகும். யோகம் என்பது ஆகாயத்தில் ஒரு குறிப்பிட்ட இடத்திலிருந்து சூரியனும், சந்திரனும் செல்கின்ற மொத்த தூரமாகும். கரணம் என்பது திதியில் பாதி. வாரம் என்பது கிழமை.
நட்சத்திரம் என்பது 27 நட்சத்திரங்களைக் குறிக்கும். இவைகளையெல்லாம் கால அளவில் கணிதப்படுத்தி நமக்குத் தெரிவிப்பதே பஞ்சாங்கம். எனவே பஞ்சாங்கம் என்பது ஆகாயத்தில் உள்ள நட்சத்திர மண்டலங்கள் அவற்றில் உள்ள கிரகங்கள் ஆகியவற்றின் நிலைகளை நமக்கு உணர்த்துகிற வழிகாட்டியாகும்.
சூரியன், சந்திரன் மற்ற கிரகங்களின் காந்த சக்தியின் ஆற்றல் பூமியின் மீதும், அதில் வாழும் உயிரினங்கள் மீதும் பாதிப்பை ஏற்படுத்துகின்றன என்று இன்று விஞ்ஞானமே ஏற்றுக் கொள்கிறது.
இன்ன நாளில் இன்ன நட்சத்திரத்திற்கு இன்ன கிரகம் வருகிறது, சந்திரன் எந்த நட்சத்திரத்திற்கு வருகிறது, இன்ன நட்சத்திரம், இன்ன கிரகம் பூமியின் மீது ஆதிக்கம் செலுத்துகிறது என்பதைத் தெளிவாகத் தெரிவிப்பதே பஞ்சாங்கம்.
எனவே நீங்கள் கேவலமாகப் பேசுகிற அளவுக்கு அது ஒன்றும் சாதாரணமான விஷயம் இல்லை என்பதோடு, நான் இங்கே பதிவிடுகிற விஷயங்களும் அதைப் போலவே மனதிற்கும், அறிவிற்கும், ஆன்மாவிற்கும் நலம் பயக்கும் விஷயங்களே என்பதையும் பெருமையோடு சொல்லிக் கொள்கிறேன். தாகம் உள்ளவர்கள் அருந்திக் கொள்ளட்டும்.🙏
• • •
Missing some Tweet in this thread? You can try to
force a refresh
ஒரு மிகப்பெரிய பிசினஸ்மேன்.
சின்னதாக ஒரு மளிகைக்கடையில் ஆரம்பித்த தொழில், ஜுவல்லரி ஷாப், ஹோட்டல், துணிக்கடை, டிபார்ட்மென்ட்டல் ஸ்டோர்... என விரிந்திருந்தது.
நகரத்தில் பெரும் செல்வந்தர்,
கௌரவத்துக்குரியவர் என்ற பெயரையெல்லாம் பெற்றுவிட்டார்.
அன்பான மனைவி, இரு ஆண் மகன்கள்.
ஆனாலும்,
அவருக்கு நேரமில்லை.
யாரையும் நம்பி பிசினஸை ஒப்படைக்க மனமில்லை.
விடிவதற்கு முன் தொடங்கிவிடும் ஒரு நாள் பொழுது, நள்ளிரவில்தான் அவருக்கு முடிகிறது.
மனைவி, பிள்ளைகளுடன் உரையாடவோ, பல நேரங்களில் சேர்ந்து சாப்பிடவோகூட நேரமில்லாமல் தான் அவர் `பிசினஸ், பிசினஸ்...’ என்று அலைந்துகொண்டிருந்தார்.
இன்று தமிழின் தொன்மை என்று நாம் பெருமிதம் கொள்ளும் பல நூல்களை ஓலைச்சுவடிகளில் இருந்து மக்கி மண்ணுக்குப் போகாமல் அச்சுக்கு மாற்றி அவற்றை அழியாமல் காத்தவர் உ.வே. சுவாமிநாதையர் அவர்கள்.
அதற்காக அவர் செலவழித்த நேரம், பொருள், பயணம் , உழைப்பு இவற்றுக்கு ஈடாக எதைக் கொடுத்தாலும் நிறைவு செய்ய முடியாது. அதை எதிர்பார்த்தும் அவர்
உழைக்கவில்லை. தமிழ் மீது கொண்ட ஆர்வம்.... காதல்....
ஒரு காலகட்டத்தின் தேவையை ஒரு மனிதரைக்கொண்டு காலம் நிறைவேற்றிக்கொண்டது. ஒரு பல்கலைக்கழகம் கூட அந்த தனி மனித உழைப்புக்கு ஈடாக பணியாற்றமுடியுமா என்பது சந்தேகமே.
தமிழ்நாட்டில் சிவகங்கை மாவட்டத்தில் உள்ள சிவன் கோயிலாகும்.
1
இக்கோயில் சிவகங்கை மாவட்டத்தில் வைரவன்பட்டி என்னுமிடத்தில் அமைந்துள்ளது. இத்தலம் முன்னர் வடுகநாதபுரம் என்றழைக்கப்பட்டது. கடல் மட்டத்திலிருந்து சுமார் 128 மீட்டர் உயரத்தில் அமைந்துள்ளது..
2
*இறைவன், இறைவி:*
இக்கோயிலின் மூலவராக வைரவன் சுவாமி உள்ளார். அவர் வளரொளிநாதர் என்றும் அழைக்கப்படுகிறார். இறைவி வடிவுடை அம்பாள் ஆவார். கோயிலின் தல மரங்கள் ஏர் மற்றும் அளிஞ்சி ஆகியவை ஆகும். கோயிலில் தல தீர்த்தமாக வைரவர் தீர்த்தம் உள்ளது.
1000 ஆண்டுக்கும் மேல் பழமையான வரலாற்று சிறப்பு மிகு குமரி சிவாலய ஆன்மிக திருத்தல தரிசன ஓட்டம். கன்னியாகுமரி மாவட்ட ஆலய விழாக்களில் எத்தனையோ சிறப்புகள். அவற்றில் குறிப்பிடத்தக்கது, சிவாலய ஓட்டம்.
மகாசிவ ராத்திரி அன்று பன்னிரண்டு சிவாலயங்களை ஓட்டமாக ஓடிச் சென்றே தரிசிப்பதுதான் இந்த வழிபாட்டின் தனிச் சிறப்பு. அதாவது 24 மணி நேரத்தில், சுமார் 90 கி.மீ. தொலைவுக்குட்பட்ட பன்னிரண்டு சிவாலயப் பெருமான்களை தரிசிப்பது.
இந்தக் கோயில்கள் அனைத்தையும் உரிய நேரத்தில் தரிசிக்க வேண்டிய காலம் கருதியே ஓட்டம்!
மகா சிவராத்திரி அன்று இறைவனுக்கு நான்கு ஜாம பூஜைகள் செய்யப்படும். ஒவ்வொரு ஜாமத்தின் போதும் அபிஷேக, ஆராதனைகள் செய்யப்படுவது வழக்கம்.
மகா சிவராத்திரி அன்று நாம் செய்ய கூடாத சில நடைமுறை பழக்கத்தை பற்றி தெரிந்து கொள்ள ஒரு பதிவு..
கடந்த முறை சிவராத்திரி அன்று பெருமானை தரிசிக்க கோவில் சென்ற பொழுது ஒரு புரம் உணவு வழங்கப்பட்டு கொண்டு இருந்தது, மக்கள் உணவுகளை உண்டு விட்டு கோவிலில் இலைகளை சிதறி கோவிலை அசுத்தப்படுத்தி கொண்டு இருந்தார்கள்.