Thread
பிராமணர் களாகிய நாங்களே ஆங்கிலேயர்கள் பள்ளிக்குப் போகாத போது சூத்திரனாகிய நீ உன் பையனைப் படிக்க அனுப்புவது தப்பு என்று தோன்றவே இல் லையா?” என்று உரத்த குரலில் கேட்டார்.
(1/1)
திலகர் பெருமானின் வழிகாட்டுதலில் நிச்சயமாக நாம் சுயராஜ்யம் பெற்றுவிடுவோம்” என்று உற்சாக மாகத் தன் நண்பர்களிடம் கூறிக்கொண்டு இருந்த இளைஞனாகிய வாசுதேவஹரி, திலகரிடம் பணி யாற்றும் சேடக் வருத்தம் தோய்ந்த முகத்துடன் சென்று கொண்டிருப்பதைக் கண்டு, அவரை அழைத்து விசாரித்தார்.(1/2)
தன் குடும்பச் செலவை ஈடுகட்ட, தனக் குத் தரப்படும் சம்பளம் போதவில்லை என்பதால் சம்பள உயர்வு கேட்டதாகவும், அதற்கு, நான் அளிக்கும் சம்பளம் அல்லாது, ஆங்கிலேயர்கள் தரும் சன்மானமும் கிடைத்துக் கொண்டிருக்க, சம்பள உயர்வுக்கு என்ன காரணம் என்று திலகர் பெருமான் கேட்டுவிட்டதாகவும்,(1/3)
எவ்வளவு அயோக்கியனானாலும் இந்த விரதத்தை கொண்டாடினால் மோட்சம் கிடைக்கும் என்று மக்கள் கருதி இந்த விரதம் அனுஷ்டிக்கப்பட வேண்டும் என்பதேயாகும். (1/2)
ஒரு வேடன். அவன் தன் உணவுக்குத் தினமும் பல பிராணிகளை வேட்டையாடி கொன்று தின்பது வழக்கம், அந்தப்படி ஒரு நாள் காட்டில் வேட்டையாடி இரை தேட சென்றதில் அவனுக்குக் கொல்ல ஒரு பிராணியும் கிடைக்கவில்லை. அவன் மனக் கலக்கமடைந்து சோர்ந்து திரிந்தான். அந்நேரத்தில் அந்தக் காட்டில் ஒரு புலி,(1/2)
அவன் கண்ணுக்குத் தென்பட்டது. நேரமும் சற்று இருட்டி விட்டது. என்றாலும் வேடன் புலியைக் கண்டு ஓடினான். புலி விரட்டிற்று. வேடன் உடனே அங்கு இருந்த ஒரு மரத்தின்மீது அவசரமாக ஏறிக் கொண்டான்
புலி அவனைப் பார்த்த வண்ணமே மரத்தடியில் சிறிது நின்று கொண்டிருந்து படுத்துக் கொண்டது(1/3)
ஏன் இந்தப் புத்தகம் என்று கேட்டால், பெண்களுக்கு எதிரான வன்கொடுமைகள் குறித்த செய்திகள் இல்லாத நாளே இப்போது இல்லை. 90 ஆண்டுகளுக்கு முன்பே பாலின சமத்துவத்தைப் பேசிய புத்தகம் இது. உலகிலேயே முதல்முறையாக பெண் விடுதலை பற்றிப் பேசியது #பெரியார் தான்.(1/2)
இந்தப் புத்தகத்திற்கு பின்பு 20 ஆண்டுகள் கழித்துதான் 'The Second Sex' என்ற புத்தகம் வருகிறது. இந்தப் புத்தகத்தை பதின்பருவத்தில் உள்ள மாணவர் ஒருவர் தன் தாய்க்குப் பரிசாக அளித்துள்ளார். கணவனை இழந்த அவரது தாயார், "இந்தப் புத்தகத்தை காலம் கடந்து படித்திருக்கிறேன்.(1/2)
முன்பே படித்திருக்க வேண்டும்" என்றார். "அவர் முன்பே படித்திருந்தால், ஒருவேளை அவர் மறுமணம் செய்திருக்கக்கூடும்" என்கிறார் தம்பி. கணவனை இழந்த பெண்கள், மறுமணம் செய்யக்கூடாது என்று சொல்வது, உடன்கட்டை ஏறுதலைவிட கொடுமையானது என, நூற்றாண்டுக்கு முன்பே சொல்லிய பெரியார்,(1/3)
பெண் ஏன் அடிமையானாள்?' நூலுக்கு அரசுப் பள்ளி மாணவர்களின் விமர்சனம்!
திருவண்ணாமலை, ஜவ்வாதுமலை உண்டு உறைவிடப் பள்ளியில் பெண் ஏன் அடிமையானாள் நூல் 200 பிரதிகள், சிலரின் நன்கொடையில் வாங்கப்பட்டிருக்கின்றன. இதுகுறித்து, அப்பள்ளியின் ஆசிரியை மகாலட்சுமியின் கருத்தைக் கேட்டபோது, (1/1)
என்னை விட, இந்தப் புத்தகத்தைப் படித்த மாணவர்கள் சிலர் பேசுவதைக் கேளுங்க" என்றார். ஆர்வத்துடன் பேசிய மாணவர்களிலிருந்து ஒரு சிலரின் கருத்துகள்:
(1/2)
7ம் வகுப்புப் படிக்கும் சிநேகா: ``பெரியார் எழுதின பெண் ஏன் அடிமையானாள்னு ஒரு புத்தகம் இருக்கு. அதை நீங்கல்லாம் படிக்கணும்னு டீச்சர் சொல்லிட்டே இருப்பாங்க. இப்போ, கரிகாலன் மற்றும் சிவகுருநாதன் ஆகியோரின் உதவியால் எங்களுக்கு இந்தப் புத்தகம் கிடைச்சுது. அதுக்காக, 2 பேருக்கும் நன்றி.
1921 ஆம் ஆண்டு கள்ளுக்கடைகளை மூட வலியுறுத்தி போராட்டத்தில் ஈடுபட்ட அவர், தன்னுடைய தோட்டத்திலிருந்த 500 தென்னை மரங்களை வெட்டிச் சாய்த்தார். இப்போராட்டத்தில், கைது செய்யப்பட்டு சிறைத் தண்டனையும் பெற்றார். 1921-1922-ல் (1/1)
ஒத்துழையாமை மற்றும் மிதமாக மது குடித்தல் சட்டங்களை எதிர்த்து மறியலில் ஈடுபட்ட அவர், மீண்டும் கைது செய்யப்பட்டார்.
1922-ல் சென்னை மாகாண காங்கிரஸ் கட்சி தலைவராக தேர்தெடுக்கப்பட்டார். துவக்கத்தில் இருந்தே வகுப்பு வாரிப் பிரதிநிதித்துவக் கொள்கையை ஆதரித்து வந்த தந்தை பெரியார் அவர்கள்
காங்கிரஸின் பல்வேறு மாநாடுகளில் கட்சிக்குள் வகுப்புவாரி பிரதிநிதித்துவத்தை கொண்டு வர வேண்டும் என்பதற்காக பல்வேறு மாநாடுகளில் “வகுப்பு வாரித் தீர்மானம்” கொண்டு வந்து நிறைவேற்ற முயற்சித்தார். இறுதி கட்ட முயற்சியாக 1925 காஞ்சிபுரம் மாநில மாநாட்டிலும்(1/3)
அறிஞர் அண்ணாவை அரசியல் களத்தில் முழுக்க முழுக்க இழுத்துவிட்ட பெருமை இராஜாஜி அவர்களையே சாரும். சென்னை மாகாண முதலமைச்சராக பதவியேற்றிருந்த இராஜாஜி, 1937-ம் ஆண்டு தமிழ்நாட்டில் கட்டாய இந்தித் திணிப்பை நடைமுறைப்படுத்தியதுதான் இதற்குக் காரணம்.(1/1)
இந்தித் திணிப்பை எதிர்த்து, பெரியாரின் சுயமரியாதை இயக்கம் சார்பில் காஞ்சி மாநகரில் மாநாடு கூட்டப்பட்டது. பெரியார் பெரும்படையின் தளபதியாய் விளங்கிய அண்ணா தலைமையில், எண்ணற்ற இளைஞர்கள் பொழிப்போரில் இறங்கினர்.(1/2)
பெரியாருடன் பிணக்குற்று சிறிது காலம் விலகியிருந்த நீதிக்கட்சியும் மொழிப் போரில் ஈடுபட்டது. பெரியாரை, தங்கள் கட்சியின் தலைவராகவும் நியமித்தது. இப்போராட்டத்தில், பெரியார், அண்ணா உட்பட 1,200 பேர் கைது செய்யப்பட்டனர்.சிறைக்குச் செல்வது குறித்து,(1/3)