#மேல்மலையனூர்_அங்காளம்மன் திருக்கோவில்
மலையனூர் அங்காளம்மன் கோவில் சுமார் 2 ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்பு உருவான சிறப்பு வாய்ந்தது. அம்பாளுக்கு தாண்டேஸ்வரி என்ற பெயரும் உண்டு. மலையனூரில் புற்றில் குடியேறிய அம்பிகையே ஆதிசக்தி என்று போற்றப்படுகிறார். அனைத்து யுகங்களுக்கும் முன்பே
அவள் இத்தலத்துக்கு வந்து விட்டதாக ஆன்மீக பெரியோர் கருதுகின்றனர். தட்சனின் யாகத்தை அழிக்க யாகத் தீயில் விழுந்து தன் உடலை அழித்துக் கொண்ட தாட்சாயினியன் அம்சமே அங்காளி என்பதால், மலையனூர் அங்காளம்மன் தலத்தில் சாம்பலைத் தான் பிரசாதமாக தருகிறார்கள். மலையனூரில் அங்காளம்மன் வடக்கு நோக்கி
இருந்து அருள்பாலித்து வருகிறார். இதனால் அம்மனின் அருள் பக்தர்களுக்கு அதிகமாக கிடைப்பதாக கூறப்படுகிறது. மலையனூர் கருவறையில் வீற்றிருக்கும் அங்காளம்மனைஉன்னிப்பாக கவனித்தால் அவள் மூதாட்டி வடிவத்தில் இருப்பது தெரிய வரும்.
மேல்மலையனூரில் அகோர உருவத்தில் ஆவேசம் அடைந்த அவள் திருவண்ணாமலை
சென்று பிரம்ம தீர்த்தத்தில் நீராடி சாபம் பெற்று, பிறகு மீண்டும் மலையனூர் வந்து அமர்ந்ததாகவும் தல வரலாற்றில் குறிப்பிடப்பட்டுள்ளது. எனவே திருவண்ணாமலை செல்லும் பக்தர்கள் மலையனூர் வந்து செல்வது நல்லது என்று கூறப்படுகிறது. ஆதி காலத்தில் மலையனூர் பகுதி ருத்ர ஆரண்யம் என்று அழைக்கப்
பட்டது. அது சக்தி பீடமானதும், ருத்ர சக்தி பீடம் என்று மாறியது. அதனால் அங்காளம்மனுக்கு #பூங்காவனத்தாள் என்ற பெயரும் உண்டு.
அங்+காளம்+அம்மன் =அங்காளம்மன் எனப்படுகிறது.
அங் என்றால் உள்ளே. காளம் என்றால் விஷம் என்று அர்த்தமாகும். உள்ளே விஷம் கொண்ட நாகம். நாக வடிவில் அம்மன்
புற்றுக்குள் இருப்பதால் இத்தலத்து அம்மன் அங்காளம்மன் என்று அழைக்கப்படுகிறாள். மேல் மலையனூரில் மலையே கிடையாது என்றாலும் மலையரசியான பார்வதி இத்தலத்தில் உறைந்ததால் மலையனூர் என்ற பெயர் வந்ததாக சொல்கிறார்கள். அங்காள பரமேஸ்வரி என்ற பெயர் உருவானதற்கு பலவித காரணங்கள் சொல்லப்படுகின்றன.
பரமேசுவரனின் அங்கத்தின் இடது பாகத்தை ஆள வரம் கேட்டதால் பரமேஸ்வரிக்கு அங்காளபரமேஸ்வரி என்ற பெயர் ஏற்பட்டதாகவும் ஒரு வரலாறு உண்டு. இத்தலத்தில் இரட்டை விநாயகர்கள் உள்ளனர். அவர்களை தரிசித்தால் இரட்டிப்பு பலன்கள் கிடைக்கும் என்பது ஐதீகம். ஆலயத்தின் பின்புறம் அம்மன் பாதம் உள்ளது. நிறைய
பக்தர்களுக்கு அதன் விவரம் தெரியாமல் உள்ளது. அங்கு சென்று வழிபட்டால் அம்மனின் கருணை பார்வை உடனடியாக கிடைக்கும் என்கிறார்கள். ஆலயத்தின் முன் பகுதியில் அம்மனின் படுத்துக் கிடக்கும் சிலை உள்ளது. அந்த அம்மனுக்கு பெரியாயி என்று பெயர். தட்சனின் யாகத்துக்குள் பார்வதி தேவி விழுந்ததாக
புராணங்களில் கூறப்பட்டுள்ளது. அதை பிரதிபலிக்கும் வகையில் இந்த அமைப்பு அமைந்துள்ளது. பெரியாயி மல்லாந்து படுத்து இருக்கும் மண்டபத்தை சுற்றி 108 விநாயகர் சிலைகள் அமைக்கப்பட்டுள்ளது.
ஆலயத்தின் ஒரு பகுதியில் காவல் தெய்வமான பாவாடைராயன் சன்னதி உள்ளது. அங்கு அசைவ படையல் போட்டு
வணங்குகிறார்கள். அங்காளம்மன் ஆலயங்களில் மயானக் கொள்ளை நடக்கும் தினத்தில் அம்மனுக்கு பொங்கலிட்டு பூஜைகள் செய்வது மிகவும் நல்லதாக கருதப்படுகிறது. அன்னையின் அருள் பெற்ற #வால்மீகி_முனிவர் மலையனூரில் மோட்ச பதவி அடைந்தார். தல விருட்சமாக மயில் கொன்றை என்று அழைக்கப்படும் வாகை மரம் உள்ளது
இந்த மரத்தில் குழந்தை இல்லாதவர்கள் தொட்டில் காட்டினால் குழந்தை பாக்கியம் கிடைக்கிறது. திருமணமாகாத ஆண்கள், பெண்கள் தாலிக்கயிறை இந்த மரத்தில் கட்டினால் உடனடியாக அந்த பாக்கியம் கிடைக்கும் என்பது இன்றளவும் ஐதீகமாக உள்ளது. கணவனை பிரிந்து வாழும் பெண்கள், கணவனால் துன்புறுத்தப்படும்
பெண்அள் இந்து வந்து வழிபட்டால் உரிய பலன் கிடைக்கும். ஆடி வெள்ளிக்கிழமை அங்காளம்மனுக்கு எலுமிச்சை பழ மாலை சாத்தி வழிபட்டால் அம்மன் மனம் குளிர்ந்து நம்மை ஆசீர்வதிப்பாள். மலையனூர் புற்று மண்ணை 48 நாட்கள் நெற்றியில் பூசி வந்தால் சகல நன்மைகளும் தேடி வரும் என்பது ஐதீகம். மலையனூர்
மண்ணில் காலடி எடுத்து வைத்தாலே போதும். கிரக தோஷங்கள் நிவர்த்தி ஆகிவிடும் என்று முன்னோர்கள் கூறியுள்ளனர். அங்காளம்மனை ஆடி மாதம் ஒரு தடவையாவது சென்று வழிபட்டால், பக்தர்களை பிடித்த பீடை, தோஷம், பில்லி, சூனியம், காட்டேரி சேட்டை, ஏவல் போன்றவை தானாக விலகும். இங்கு 3 அமாவாசை தொடர்ந்து
வந்து அங்காளம்மனை வழிபட்டு ஊஞ்சல் ஊற்சவத்தை கண்டு வந்தால் குழந்தைப்பேறு, நோய் நிவர்த்தி, திருமண யோகம் ஆகியவை வந்து சேரும். அங்காளம்மனை குல தெய்வமாக கொண்டவர்கள் ஆடி மாதத்தில் ஒரு நாள் சிறப்பு பூஜைகள் செய்து வழிபட்டால் கூடுதல் பலன்கள் கிடைக்கும். அங்காளம்மனை தொடர்ந்து வழிபட்டால்
ராகு-கேது தோஷ பாதிப்பு நெருங்கவே நெருங்காது. இங்கு
தினமும் 2 கால பூஜை நடத்தப் படுகிறது. காலை 5.30 மணிக்கு மாலை 4.30 மணிக்கும் அபிஷேக ஆராதனையுடன் இந்த பூஜை நடைபெறும். வெள்ளி, சனி, ஞாயிறு மற்றும் பவுர்ணமி நாட்களில் அம்மனுக்கு அபிஷேகங்கள் செய்யப் படுவதில்லை. மேல்மலையனூருக்கு வரும்
பக்தர்களில் பெரும்பாலனோர் தங்கள் மற்றும் தங்கள் குடும்பத்தினர் மீதான தோஷங்களை நிவர்த்தி செய்து கொள்ளவே வருகிறார்கள்.
மேல்மலையனூர் தலத்தில் மதியம் நடை மூடப்படுவதில்லை. காலை 6 மணிக்கு தொடங்கி இரவு 9 மணி வரை பக்தர்கள் வழிபடலாம். அமாவாசை தினத்தன்று இரவிலும் நடை திறந்திருக்கும். விடிய
விடிய பக்தர்கள் அங்காள பரமேஸ்வரியை தரிசனம் செய்யலாம்.
எலுமிச்சை பழத்தை இத்தலத்தில் நிறைய பக்தர்கள் காலில் மிதித்து அவமரியாதை செய்கிறார்கள். அது புண்ணியத்தை சேர்ப்பதில்லை. பாவத்தைத் தான் தரும். எலுமிச்சை பழத்தை கோவில் வாசலில் வைத்து தலையை சுற்றி போட வேண்டும் என்று எந்த வித
ஐதீகமும் கிடையாது. ஆனால் பக்தர்கள் ஒருவரை பார்த்து ஒருவர் செய்கிறார்கள். கோவிலுக்கும் இந்த பழக்கத்துக்கும் எந்த தொடர்பும் கிடையாது.
ஓம் சக்தி பராசக்தி
சர்வம் ஶ்ரீ கிருஷ்ணார்ப்பணம்🙏🏻
• • •
Missing some Tweet in this thread? You can try to
force a refresh
#திருநீறு_குங்குமம்_சந்தனம்_அணிவது_ஏன்#அறிவியல்உண்மை
அருகம்புல்லை உண்ணுகின்ற பசுமாட்டின் சாணத்தை எடுத்து உருண்டையாக்கி வெயிலில் காயவைக்க வேண்டும். பின் இதனை உமியினால் மூடி புடம் போட்டு எடுக்க வேண்டும். இப்போது இந்த உருண்டைகள் வெந்து நீறாகி இருக்கும். இதுவே உண்மையான திருநீறாகும்.
இது நல்ல அதிர்வுகளை மட்டும் உள்வாங்கும் திறன் கொண்டது. நம்மைச் சுற்றி அதிர்வுகள் இருக்கின்றன என்பது யாவரும் அறிந்ததே. நம்மை அறியாமலே அதிர்வுகளின் மத்தியில் தான் நாம் வாழ்ந்து கொண்டிருக்கின்றோம். நம் உடலானது இவ் அதிர்வுகளை ஏற்றுக் கொள்ளுகிறது. திருநீறானது நல்ல அதிர்வுகளை ஏற்றுக்
கொள்ளும் தன்மை வாய்ந்தது. உடலின் முக்கிய பாகங்களில் திருநீறு இட்டுக் கொள்ளும் வழக்கம் இந்துகள் வழக்கம். வைணவர்கள் திருமண் காப்பாக இட்டுக் கொள்கிறார்கள். அதுவும் விசேஷமான மண் வகை. மனித உடலிலே நெற்றி முக்கிய பாகம். நெற்றியிலேயே வெப்பம் அதிகமாக வெளியிடப்படுகிறது, உள்ளிழுக்கவும்
#HowToAcceptThePrasadGivenInTheTemple
Prasad is a variety of pure food, leaves, flowers given to the Lord as an offering. They are then distributed to the devotees. Different types of offerings are offered in each temple. In Siva temple Vilva leaves and sacred ash is given as
Prasad. In Vishnu temples Besil (Thulasi) and sacred water are given as Prasad. When Prasad is distributed, we have to stand in a proper line and placing our right hand over the left hand accept the sacred water or ash or vilva leaves or kumkum. Water should be consumed
immediately with the right hand in which we received. You cannot pour the water received in your hand to another person's hand. But for your child or an elderly person who is incapable of taking the prasad himself, you can give it in his/her mouth yourself. In a similar fashion
#மகாபெரியவா
கட்டுரையாளர்-ஸ்ரீமடம் பாலு.-
புத்தகம்-காஞ்சி மகான் தரிசனம்.
தட்டச்சு-வரகூரான் நாராயணன்.
கவியரசர் கண்ணதாசன், தான் எழுதிய #அர்த்தமுள்ள_இந்துமதம் என்ற புத்தகத்தை ஒரு தட்டில் வைத்து, பெரியவாளிடம் சமர்ப்பித்தார். பெரியவாள், புத்தகத்தை எடுத்துப் பிரித்துப் பார்த்தார்கள்.
"பெரிய விஷயங்களையெல்லாம், எளிமையா எழுதியிருக்கே போலிருக்கு" -பெரியவா
கவிஞரின் இதயம் ஆனந்தத்தில், திளைத்துக் கொண்டிருந்தது. பெரியவாள் தொடர்ந்தார்கள். "பாரத தேசத்திலே, எத்தனையோ மஹான்கள் இருந்திருக்கா. ஒவ்வொருத்தர் கிட்டேயும் ஒரு விசேஷம் இருக்கும். சில சந்யாஸிகள், பால் மட்டுமே
உட்கொண்டு வாழ்ந்திருக்கா. ஒருத்தர் கங்காஜலம் மட்டும்தான் சாப்பிடுவாராம்! ஸித்தர்கள் எல்லாம் ரொம்ப ஆஸ்சர்யமான பழக்க வழக்கங்கள் கடைப்பிடிச்சிருக்கா. சில ஸித்தர்கள், பச்சையாகக் கருணைக் கிழங்கை மட்டும் சாப்பிடுவா. ஓருத்தர் மரத்திலேயே தங்கியிருந்தார். இன்னொருத்தர் யமுனை நதி நடுவில்
#சமித்து
வேத விற்பன்னர்கள் மந்திரம் சொல்லி அக்னி குண்டத்தில் இடும் குச்சிகளுக்கு சமித்து என்று பெயர். ஒவ்வொரு சமித்து குச்சிக்கும் ஒவ்வொரு பலன் உள்ளது.
வில்வம் : சிவனுக்கும் மஹாலட்சுமிக்கும் பிடித்தமானது
துளசி சமித்து: நாராயணனுக்குப் பிடித்தது
அத்தி சமித்து: சுக்கிரனுக்குப்
#நற்சிந்தனை நம் மனித ஆத்மா கீழ்நிலை உயிரினத்திலிருந்து தொடங்குகிறது. நீர்வாழ் உயிரினத்தில் தொடங்கி, தாவரம், கிருமி, பறவை, மனிதன் என பரிணமித்து, இறுதியில் மனித வாழ்வை அடைகிறது. நாம் மனித வாழ்வை அடைந்திருப்பது நம் அதிர்ஷ்டம். இந்த மனித வாழ்வில் நாம் என்ன செய்கிறோம்? உணவு, உறக்கம்,
தற்காத்தல், மற்றும் இன விருத்திக்காக மட்டும் இந்த கிடைத்தற்கரிய வாழ்க்கையை பயன்படுத்தி, தன்னை பிறப்பு இறப்பு சுழற்சியில் இருந்து விடுவித்துக் கொள்வதற்கான வாய்ப்பைக் கொடுத்துள்ளதை உணர மறந்து விடுகிறோம். ஆன்மீகப் பக்கத்திற்கு முக்கியத்துவம் கொடுப்பதில்லை. பள்ளியில் மாணவர்கள் கீழ்
வகுப்புகளிலிருந்து உயர் வகுப்புகளுக்கு உயர்ந்து, இறுதி வகுப்பிற்கு வரும்போது, அதில் தேர்ச்சி பெறாவிடில் அந்த வகுப்பு நெரிசல் மிக்கதாகி விடும். அது போலவே, மக்கள் மேன்மையான வாழ்விற்கு உயர்த்தப்படாத காரணத்தினால், தற்போதைய நாகரிகத்தில் அவ்வப்போது மக்கள் பெருக்கம் அதிகமாக உள்ளது.
#மயானக்கொள்ளை
மாசி மாத அமாவாசை நாளில் (20.02.23) அனைத்து அங்காள பரமேஸ்வரி ஆலயங்களிலும் மயானக் கொள்ளை விழா நடைபெறும். இவ்விழாவின் அடிப்படை சிவபெருமான் பிரம்மதேவனின் சிரம் கொய்த நிகழ்வு. அப்போது பிரம்மாவுக்கும் ஈசனைப் போல ஐந்து தலைகள் இருந்தன. எனவே, சிவனை நாம் ஏன் வணங்க வேண்டும்
என்று ஆணவம் கொண்டார் பிரம்மா. அவரது ஆணவத்தை அழிக்க, பிரம்மாவின் ஒரு தலையைக் கொய்து விட்டார் சிவபெருமான். அதன் காரணமாக சிவனை பிரம்மஹத்தி தோஷம் பற்றிக் கொண்டதுடன், கொய்யப்பட்ட பிரம்மனின் தலை சிவபெருமானின் கரத்தில் வந்து அமர்ந்தது. அதை அவர் கீழே போட்டாலும் மீண்டும் அவர் கரத்துக்கே
வந்தது. இவ்வாறு 99 முறை நடந்த நிலையில், "அதைக் கீழே போடாமல் சிறிது நேரம் கையிலேயே வைத்திருங்கள்” என்று பார்வதி தேவி சிவனிடம் கூறினாள். அவர் அவ்வாறே செய்ய, பிரம்மாவின் தலை கபாலமாக மாறி அவர் கரத்திலேயே ஒட்டிக் கொண்டது. அதையே பிச்சைப் பாத்திரமாக ஏந்தி ஈசன் பிச்சையெடுக்கும் நிலை