#சமித்து
வேத விற்பன்னர்கள் மந்திரம் சொல்லி அக்னி குண்டத்தில் இடும் குச்சிகளுக்கு சமித்து என்று பெயர். ஒவ்வொரு சமித்து குச்சிக்கும் ஒவ்வொரு பலன் உள்ளது.
வில்வம் : சிவனுக்கும் மஹாலட்சுமிக்கும் பிடித்தமானது
துளசி சமித்து: நாராயணனுக்குப் பிடித்தது
அத்தி சமித்து: சுக்கிரனுக்குப்
பிடித்தது
நாயுருவி சமித்து: புதனுக்குப் பிடித்தது
பலாமர சமித்து: சந்திரனுக்குப் பிடித்தது
அரசரமர சமித்து: குருவிற்குப் பிடித்தது
வன்னிமர சமித்து: சனீஸ்வரனுக்குப் பிடித்தது
அருகம் புல் : விநாயகருகும், ராகுவுக்கும் பிடித்தது
மாமர சமித்து: சர்வமங்களமும் சித்திக்கும்
பாலுள்ள மர
சமித்து: வியாதி நாசினி
தாமரை புஷ்பம்: லஷ்மிக்கும் சரஸ்வதிக்கும் பிடித்தமானது
மாதுளை மரம்: அழகான் வடிவமும், வசீகரமும் கிடைக்கும்.
அத்திக் குச்சி: மக்கட்பேறு.
நாயுருவி குச்சி: மகாலட்சுமி கடாட்சம்
எருக்கன் குச்சி: எதிரிகள் இல்லாத நிலை
அரசங் குச்சி: அரசாங்க நன்மை
கருங்காலிக் கட்டை:
ஏவல் பில்லி சூனியம் அகலும் .
வன்னிக் குச்சி: கிரகக் கோளாறுகள் நீங்கிவிடும்.
புரசங் குச்சி: குழந்தைகளின் கல்வி வளர்ச்சி
வில்வக் குச்சி: செல்வம் சேரும்
அருகம்புல்: விஷபயம் நீங்கும்.
ஆலங் குச்சி: புகழைச் சேர்க்கும்.
நொச்சி: காரியத்தடை விலகும்.
வில்வம்: ராஜ யோகம் கிட்டும்.
வில்வப்பழ
ஹோமத்தால் சக்தி செல்வங்களையும் பெறலாம்.
சிவசக்தி சம்பந்தமான சண்டி ஹோமம் போன்ற யாகங்களில் வில்வம் சமித்தாகப் பயன்படுத்தினால் பலன்கள் நிறைய உண்டு.
துளசி: துளசி சமித்தினால் ஹோமம் செய்தால் நீண்ட காலமாக திருமணம் ஆகாதவர்களுக்கு திருமணம் கைகூடி நடைபெறும். எண்ணிய காரியம் கைகூடும்.
சோமவல்லிக் கொடி: கொடிக்கள்ளி எனப்படும் இதன் ரசத்தைப் பிழிந்து 'சோமாம்ருதம்' ம்ருத்யுஜய மந்திரத்தினால் ஹோமம் செய்தால் சகல நோய்களும் நீங்கி, தேகத்தில் அமிர்தம் உண்டாகி பிரம்மதேஜஸ் பெறலாம். கொடியை கணுக்கள் தோறும் ஒடித்து பாலில் தோய்த்து சூர்ய மந்திரம் கூறி அக்னியிடம் இட வேண்டும்.
இதனால் காச நோய் அகலும்.
பலாசு சமித்து: இது சந்திர கிரக சமித்தாகும். இதனால் சந்திரகிரக பிரீதியாகும். பலாசு புஷ்பத்தால் எல்லா இஷ்ட காரியங்களும், பலாசு ரஸத்தால் ஞான விருத்தியும், சிறந்த புத்தியும் பெறலாம். பலாசு குச்சிகளை அக்னி ஹோத்திரம் செய்து அதனால் ஸ்நாபானம் செய்யின் ப்ரம்ம ஞானம்
அடைந்து பரப்பிரம்ம சொரூபம் அடையலாம்.
அரசு சமித்து: தலைமைப் பதவி வரும். போரில் ஜெயம் அடைந்து அரச தன்மை கிடைக்கும்.
வெள்ளை எருக்கு: இது சூரிய கிரகத்தின் சமித்தாகும். இம்மூலிகை சர்வசக்தி பொருந்தியது. வசியம், மோகனம் ஆகிய அஷ்டாமித்துகளை அடையலாம். இச்சமித்துகளால் ராஜ வசியம், ஸ்திரீ
வசியம், மிருக வசியம், சர்ப்ப வசியம், லோக வசியம், சத்ரு வசியம், தேவ வசியம் ஆக சர்வ வசியங்களையும் அடையலாம். எடுத்த வேலை இனிதே முடியும்.
செம்மர சமித்து: இது அங்காரக கிரக சமித்தாகும். இதனால் ரண ரோகங்கள் நீங்கும். தைரியம் பெருகும்.
நாயுருவி சமித்து: இது புத கிரக சமித்தாகும். இதனால்
லட்சுமி கடாட்சம் ஏற்படும். சுதர்சன ஹோமத்திற்கு இதுவே சிறந்தது.
அத்தி சமித்து: இது சுக்கிர கிரகத்தின் சமித்தாகும். பித்ரு ப்ரீதி பெற்று விரும்பிய பொருள் கைகூடும்.
பில்லி, சூனியம், பிசாசு பயத்தை விடுவித்து சத்ருக்களை வெல்லும்.
பைத்தியமும் மேக ரோகங்களும் அகலும். வாக்கு சித்தியும்
ஏற்படும். பசு, யானை, குதிரை நோய் நீங்கும்.
வன்னி சமித்து: வன்னி சமித்து சனிக் கிரகத்தின் சமித்தாகும்.இதில் அக்னிப் பகவான் இருப்பதாகப் புராணங்கள் கூறுகின்றன. வன்னி சமித்து யாக பஸ்மாவைத் தரித்தால் அது நெற்றியில் எழுதியிருக்கும் யம சம்பந்தமான எழுத்தைத் தொலைத்து விடும்.
இந்த சமித்து
பஸ்பம் பிரம்மா, விஷ்ணு, சிவன் ஆகிய மூவரையும் மூவுலகினையும் மூன்று அக்னிகளையும் முக்குணங்களையும் குறிப்பதாக இருக்கிறது. சகல தெய்வ, தேவாதிகளும் இச்சமித்தால் மகிழ்ச்சி அடைகிறார்கள். பூகம்பங்களால் உண்டாகிற பயங்கள் நீங்கும். சகல தோஷங்களும் நிவர்த்தியாகும்.
தர்ப்பை சமித்து: கேதுவிற்கு
மிகவும் பிடித்தமானதாகும். இது ஞான விருத்தியைத் தரும்.
அருகம்புல்: ராகு பகவானுக்குப் பிடித்தமானது. இதனால் பூர்வ ஜென்ம வினைகளும் சர்வ இடையூறுகளும் நீங்கி காரியம் சித்தியடையும். கீர்த்தியும், புகழும் பெறலாம்.
அறிவும், அழகும், வசீகரமும் உண்டாகும். கணபதி ஹோமத்தில் இதைப் பயன்படுத்துவர்
கரும்பு: கரும்புத் துண்டுகளையாவது அல்லது கருப்பஞ்சாறையாவது கொண்டு ஹோமம் செய்தால் வரனுக்கு விரும்பிய கன்னிகையும், கன்னிகைக்கு விரும்பிய வரனும் கிடைப்பர். இதையும் கணபதி ஹோமத்தில் பயன்படுத்துவார்கள்.
ஆலசமித்து: இது ம்ருத்யஞ்சய வேள்வியின் முக்கிய சமித்து. யமனுக்குப் பிடித்தமானது.
இதனால் நோய்கள் நீங்கும். ஆயுள் நீடிக்கும்.
எள்: ஹோமத்தில் எள் போட்டு யாகம் செய்ய பல ஜென்மங்களில் செய்த பாவங்கள் நீங்கும். தீராத கடன் தொல்லை தீரும்.
புங்க மரம்: இதன் சமித்து வெற்றியைத் தரும்.
இலந்தை: இந்த சமித்தினால் ஹோமம் செய்ய குடும்பம் இனிது வாழ வழி உண்டாகும்.
தேவதாரு: இந்த
சமித்தினால் ஹோமம் செய்தால் சகல தெய்வங்களும் வேண்டிய வரங்களைக் கொடுப்பார்கள்.
வல்லாரைக் கொடி: இதை ஆகுதி செய்தால் கல்வி சிறப்பாக வரும். ஞாபக சக்தி அதிகரிக்கும் சரஸ்வதி கடாட்சமும் ஏற்படுத்தும்.
சந்தன மரம்: இதன் சமித்தால் ஹேமம் செய்தால் மூதேவி முதலிய சகல பீடைகளையும் விலக்கி லட்சுமி
கடாட்சம் ஏற்படும். சகல சம்பத்துடன் வாழ்வார்கள்.
வேங்கை மரம்: இந்த சமித்தினால் ஹோமம் செய்தால் பில்லி சூன்யம், ஏவல், பிசாசு, பயம் ஓழியும்.
மகிழம்பூ: இந்த சமித்தினால் ஹோமம் செய்தால் சகல துக்கங்களும் நிவர்த்தியடைந்து சிக்கல்கள் அனைத்தும் தீரும். மனம் அமைதி பெறும்.
பூவரசு: இந்த
சமித்து பூலோக அரச மரம் என்று வழங்கப்படுகிறது. அரசு சமித்து இல்லாத குறையை இந்த சமித் அரசு சமித்தினால் செய்யப்படும் ஹோமம் தரும் பலன் இதற்கும் உண்டு.
அறிவோம் நம் இந்து அரத்தி உள்ள அரிய, வாழ்க்கைக்கு தேவையான தகவல்களை.
சர்வம் ஶ்ரீ கிருஷ்ணார்ப்பணம்🙏🏻

• • •

Missing some Tweet in this thread? You can try to force a refresh
 

Keep Current with அன்பெழில்

அன்பெழில் Profile picture

Stay in touch and get notified when new unrolls are available from this author!

Read all threads

This Thread may be Removed Anytime!

PDF

Twitter may remove this content at anytime! Save it as PDF for later use!

Try unrolling a thread yourself!

how to unroll video
  1. Follow @ThreadReaderApp to mention us!

  2. From a Twitter thread mention us with a keyword "unroll"
@threadreaderapp unroll

Practice here first or read more on our help page!

More from @anbezhil12

Feb 23
#திருநீறு_குங்குமம்_சந்தனம்_அணிவது_ஏன் #அறிவியல்உண்மை
அருகம்புல்லை உண்ணுகின்ற பசுமாட்டின் சாணத்தை எடுத்து உருண்டையாக்கி வெயிலில் காயவைக்க வேண்டும். பின் இதனை உமியினால் மூடி புடம் போட்டு எடுக்க வேண்டும். இப்போது இந்த உருண்டைகள் வெந்து நீறாகி இருக்கும். இதுவே உண்மையான திருநீறாகும். ImageImageImage
இது நல்ல அதிர்வுகளை மட்டும் உள்வாங்கும் திறன் கொண்டது. நம்மைச் சுற்றி அதிர்வுகள் இருக்கின்றன என்பது யாவரும் அறிந்ததே. நம்மை அறியாமலே அதிர்வுகளின் மத்தியில் தான் நாம் வாழ்ந்து கொண்டிருக்கின்றோம். நம் உடலானது இவ் அதிர்வுகளை ஏற்றுக் கொள்ளுகிறது. திருநீறானது நல்ல அதிர்வுகளை ஏற்றுக்
கொள்ளும் தன்மை வாய்ந்தது. உடலின் முக்கிய பாகங்களில் திருநீறு இட்டுக் கொள்ளும் வழக்கம் இந்துகள் வழக்கம். வைணவர்கள் திருமண் காப்பாக இட்டுக் கொள்கிறார்கள். அதுவும் விசேஷமான மண் வகை. மனித உடலிலே நெற்றி முக்கிய பாகம். நெற்றியிலேயே வெப்பம் அதிகமாக வெளியிடப்படுகிறது, உள்ளிழுக்கவும் ImageImage
Read 14 tweets
Feb 23
#HowToAcceptThePrasadGivenInTheTemple
Prasad is a variety of pure food, leaves, flowers given to the Lord as an offering. They are then distributed to the devotees. Different types of offerings are offered in each temple. In Siva temple Vilva leaves and sacred ash is given as Image
Prasad. In Vishnu temples Besil (Thulasi) and sacred water are given as Prasad. When Prasad is distributed, we have to stand in a proper line and placing our right hand over the left hand accept the sacred water or ash or vilva leaves or kumkum. Water should be consumed Image
immediately with the right hand in which we received. You cannot pour the water received in your hand to another person's hand. But for your child or an elderly person who is incapable of taking the prasad himself, you can give it in his/her mouth yourself. In a similar fashion Image
Read 6 tweets
Feb 23
#மகாபெரியவா
கட்டுரையாளர்-ஸ்ரீமடம் பாலு.-
புத்தகம்-காஞ்சி மகான் தரிசனம்.
தட்டச்சு-வரகூரான் நாராயணன்.
கவியரசர் கண்ணதாசன், தான் எழுதிய #அர்த்தமுள்ள_இந்துமதம் என்ற புத்தகத்தை ஒரு தட்டில் வைத்து, பெரியவாளிடம் சமர்ப்பித்தார். பெரியவாள், புத்தகத்தை எடுத்துப் பிரித்துப் பார்த்தார்கள். Image
"பெரிய விஷயங்களையெல்லாம், எளிமையா எழுதியிருக்கே போலிருக்கு" -பெரியவா
கவிஞரின் இதயம் ஆனந்தத்தில், திளைத்துக் கொண்டிருந்தது. பெரியவாள் தொடர்ந்தார்கள். "பாரத தேசத்திலே, எத்தனையோ மஹான்கள் இருந்திருக்கா. ஒவ்வொருத்தர் கிட்டேயும் ஒரு விசேஷம் இருக்கும். சில சந்யாஸிகள், பால் மட்டுமே
உட்கொண்டு வாழ்ந்திருக்கா. ஒருத்தர் கங்காஜலம் மட்டும்தான் சாப்பிடுவாராம்! ஸித்தர்கள் எல்லாம் ரொம்ப ஆஸ்சர்யமான பழக்க வழக்கங்கள் கடைப்பிடிச்சிருக்கா. சில ஸித்தர்கள், பச்சையாகக் கருணைக் கிழங்கை மட்டும் சாப்பிடுவா. ஓருத்தர் மரத்திலேயே தங்கியிருந்தார். இன்னொருத்தர் யமுனை நதி நடுவில்
Read 6 tweets
Feb 21
#மேல்மலையனூர்_அங்காளம்மன் திருக்கோவில்
மலையனூர் அங்காளம்மன் கோவில் சுமார் 2 ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்பு உருவான சிறப்பு வாய்ந்தது. அம்பாளுக்கு தாண்டேஸ்வரி என்ற பெயரும் உண்டு. மலையனூரில் புற்றில் குடியேறிய அம்பிகையே ஆதிசக்தி என்று போற்றப்படுகிறார். அனைத்து யுகங்களுக்கும் முன்பே
அவள் இத்தலத்துக்கு வந்து விட்டதாக ஆன்மீக பெரியோர் கருதுகின்றனர். தட்சனின் யாகத்தை அழிக்க யாகத் தீயில் விழுந்து தன் உடலை அழித்துக் கொண்ட தாட்சாயினியன் அம்சமே அங்காளி என்பதால், மலையனூர் அங்காளம்மன் தலத்தில் சாம்பலைத் தான் பிரசாதமாக தருகிறார்கள். மலையனூரில் அங்காளம்மன் வடக்கு நோக்கி
இருந்து அருள்பாலித்து வருகிறார். இதனால் அம்மனின் அருள் பக்தர்களுக்கு அதிகமாக கிடைப்பதாக கூறப்படுகிறது. மலையனூர் கருவறையில் வீற்றிருக்கும் அங்காளம்மனைஉன்னிப்பாக கவனித்தால் அவள் மூதாட்டி வடிவத்தில் இருப்பது தெரிய வரும்.
மேல்மலையனூரில் அகோர உருவத்தில் ஆவேசம் அடைந்த அவள் திருவண்ணாமலை
Read 18 tweets
Feb 21
#நற்சிந்தனை நம் மனித ஆத்மா கீழ்நிலை உயிரினத்திலிருந்து தொடங்குகிறது. நீர்வாழ் உயிரினத்தில் தொடங்கி, தாவரம், கிருமி, பறவை, மனிதன் என பரிணமித்து, இறுதியில் மனித வாழ்வை அடைகிறது. நாம் மனித வாழ்வை அடைந்திருப்பது நம் அதிர்ஷ்டம். இந்த மனித வாழ்வில் நாம் என்ன செய்கிறோம்? உணவு, உறக்கம்,
தற்காத்தல், மற்றும் இன விருத்திக்காக மட்டும் இந்த கிடைத்தற்கரிய வாழ்க்கையை பயன்படுத்தி, தன்னை பிறப்பு இறப்பு சுழற்சியில் இருந்து விடுவித்துக் கொள்வதற்கான வாய்ப்பைக் கொடுத்துள்ளதை உணர மறந்து விடுகிறோம். ஆன்மீகப் பக்கத்திற்கு முக்கியத்துவம் கொடுப்பதில்லை. பள்ளியில் மாணவர்கள் கீழ்
வகுப்புகளிலிருந்து உயர் வகுப்புகளுக்கு உயர்ந்து, இறுதி வகுப்பிற்கு வரும்போது, அதில் தேர்ச்சி பெறாவிடில் அந்த வகுப்பு நெரிசல் மிக்கதாகி விடும். அது போலவே, மக்கள் மேன்மையான வாழ்விற்கு உயர்த்தப்படாத காரணத்தினால், தற்போதைய நாகரிகத்தில் அவ்வப்போது மக்கள் பெருக்கம் அதிகமாக உள்ளது.
Read 7 tweets
Feb 20
#மயானக்கொள்ளை
மாசி மாத அமாவாசை நாளில் (20.02.23) அனைத்து அங்காள பரமேஸ்வரி ஆலயங்களிலும் மயானக் கொள்ளை விழா நடைபெறும். இவ்விழாவின் அடிப்படை சிவபெருமான் பிரம்மதேவனின் சிரம் கொய்த நிகழ்வு. அப்போது பிரம்மாவுக்கும் ஈசனைப் போல ஐந்து தலைகள் இருந்தன. எனவே, சிவனை நாம் ஏன் வணங்க வேண்டும் Image
என்று ஆணவம் கொண்டார் பிரம்மா. அவரது ஆணவத்தை அழிக்க, பிரம்மாவின் ஒரு தலையைக் கொய்து விட்டார் சிவபெருமான். அதன் காரணமாக சிவனை பிரம்மஹத்தி தோஷம் பற்றிக் கொண்டதுடன், கொய்யப்பட்ட பிரம்மனின் தலை சிவபெருமானின் கரத்தில் வந்து அமர்ந்தது. அதை அவர் கீழே போட்டாலும் மீண்டும் அவர் கரத்துக்கே Image
வந்தது. இவ்வாறு 99 முறை நடந்த நிலையில், "அதைக் கீழே போடாமல் சிறிது நேரம் கையிலேயே வைத்திருங்கள்” என்று பார்வதி தேவி சிவனிடம் கூறினாள். அவர் அவ்வாறே செய்ய, பிரம்மாவின் தலை கபாலமாக மாறி அவர் கரத்திலேயே ஒட்டிக் கொண்டது. அதையே பிச்சைப் பாத்திரமாக ஏந்தி ஈசன் பிச்சையெடுக்கும் நிலை
Read 8 tweets

Did Thread Reader help you today?

Support us! We are indie developers!


This site is made by just two indie developers on a laptop doing marketing, support and development! Read more about the story.

Become a Premium Member ($3/month or $30/year) and get exclusive features!

Become Premium

Don't want to be a Premium member but still want to support us?

Make a small donation by buying us coffee ($5) or help with server cost ($10)

Donate via Paypal

Or Donate anonymously using crypto!

Ethereum

0xfe58350B80634f60Fa6Dc149a72b4DFbc17D341E copy

Bitcoin

3ATGMxNzCUFzxpMCHL5sWSt4DVtS8UqXpi copy

Thank you for your support!

Follow Us on Twitter!

:(