ஏகாதசி விரதத்தை அம்பரீசன் என்ற மன்னன் பல ஆண்டுகளாக கடைப்பிடித்து வந்தார்.
இவர் ஏகாதசி விரதத்தை ஒரு முறை கூட தவர விட்டதில்லை.
ஸ்ரீமந் நாராயணனிடம் சுயநலமற்ற அபரிமிதமான பக்தி வைத்து இருந்தார்.
ஸ்ரீமந் நாராயணன் அம்பரீச ராஜாவிற்கு காட்சி தருகிறார்.
என்ன வரம் வேண்டும் என்று கேட்க அதற்கு அம்பரீஷ ராஜாவோ தனக்கு தங்கள் தரிசனம் கிடைத்ததே போதும் பிரபு தன்யனானேன் என்றார்.
இவரின் பக்தியை மெச்சி பரந்தாமனே தன்னுடைய சுதர்சன சக்கரத்தை கொடுத்து விட்டார்.
அதை அனுதினமும் பக்தியுடன் பூஜை செய்து வந்தார் அம்பரீஷ மஹாராஜா.
இவர் ஒவ்வொரு முறையும் ஏகாதசியில் விரதமிருந்து மறுநாள் துவாதசி நல்ல நேரத்தில் பிரசாதம் உண்டு விரதம் முடிப்பார்.
இவரது நூறாவது விரத நாளில் சிறப்பான ஏற்பாடுகள் செய்யப்பட்டு இருந்தது.
நாட்டு மக்கள் அனைவரும் மிகவும் சந்தோஷமாக இருந்தனர்.
ஆனால் தேவலோகத்தில் அனைவரும் கலக்கமாக இருந்தனர்.
நூறாவது விரதம் முடிந்துவிட்டால் தேவலோக பதவி கூட கிடைத்துவிடும்,
மானுடனுக்கு இப்பதவி கிடைத்துவிட்டால் தேவர்களின் மரியாதை குறைந்து விடும் என பயந்தனர்.
இதனால் தேவர்கள் துர்வாச முனிவரிடம் சென்றனர்.
துர்வாசரும் தேவர்களுக்கு உதவுவதாக தெரிவித்துவிட்டு, மன்னனின் விரதத்தை தடுக்க பூமிக்கு வந்தார்.
அவர் வருவதற்குள் மன்னன் விரதத்தை முடித்து இருந்தார்.
அவர் ஏகாதசி விரதம் முடித்து துவாதசி நேரம் முடிவதற்குள் அவர் உணவு அருந்தி இருக்கவேண்டும்,
அப்போதுதான் ஏகாதசியின் முழுப்பயனும் அவருக்கு கிடைக்கும்.
துவாதசி நேரம் முடிந்து விட்டால் பயனில்லை துவாதசி ஆரம்பிக்க மன்னன் உணவு உண்ண தயாராக இருந்தார்.
அதற்குள் துர்வாசர் வந்து விட்டார்.
தன் விரதத்தை தடுக்கத்தான் இவர் வந்துள்ளார் என்பது மன்னனுக்கு தெரியாது.
துர்வாச முனிவரை வரவேற்று மன்னன் தாங்களும் என்னுடன் உணவருந்தினால் எனக்கு மிகுந்த சந்தோஷம் உண்டாகும் என்றார்.
துர்வாச முனிவரும் சம்மதித்துவிட்டு நதியில் நீராடிவிட்டு வருகிறேன், அதன்பின் உணவருந்தலாம் எனக்கூறிச் சென்றார்.
முனிவரின் திட்டம் என்னவென்றால் தான் நீராடிவிட்டு தாமதமாக வந்தால் அதற்குள் துவாதசி நேரம் முடிந்து விடும் மன்னன் நமக்காக காத்திருந்தால் அவனது விரதம் தடை படும் என்பது தான்.
துவாதசி முடிய இன்னும் சில மணி நேரங்களே இருந்தது.
கோபக்கார துர்வாசர் வருவதற்குள் சாப்பிட்டு விட்டால் விரதத்தின் பலன் கிடைக்காமல் செய்துவிடுவார்.
இன்னும் சில நிமிடங்களே இருந்தது வேதியர்களிடமும், அந்தணர்களிடமும் என்ன செய்யலாம் என ஆலோசனை செய்தார் அம்பரீஷ மஹாராஜா.
உடனே தலைமை பண்டிதர் உள்ளங்கை அளவு தீர்த்தத்தை மூன்று முறை குடித்தால் விரதம் முடிந்து ஏகாதசியின் முழுப்பயனும் கிடைத்துவிடும் என்று கூறினார்.
அதேபோல் பெருமாளை நினைத்து உள்ளங்கை அளவு தீர்த்தத்தை மூன்று முறை குடித்து தன் விரதத்தை பூர்த்தி செய்து விட்டு
முனிவருடன் சேர்ந்து சாப்பிடுவதற்காக காத்திருந்தார்.
இதனை தன் ஞான திருஷ்டியால் அறிந்த துர்வாசர், மிகுந்த கோபமடைந்தார்
உடனே துர்வாசர் தனது ஜடா முடியில் ஒரு பூதத்தை வரவழைத்து அம்பரீஷனை கொல்லுமாறு ஆணையிட்டார்.
பக்தனுக்கு ஒரு துன்பம் என்றால் பகவான் சும்மா விடுவாரா
அம்பரீஷ ராஜாவோ தனது பூஜை அறையில் நித்ய பூஜை செய்யும் இடத்தில் பெருமாளை நினைத்து தியானம் செய்தார்.
அவ்வளவு தான் உடனே சுழன்றது சுதர்சன சக்கரம்.
புயலேன அந்த பூதத்தின் தலையை கொய்தது.
அதன் பின்னரும் தொடர்ந்து ஏவிவிட்ட துர்வாசரையும் துரத்தியது.
முதலில் பிரம்ம தேவரிடம் சரணடைந்தார் துர்வாசர் அவரோ சிவபெருமானிடம் தஞ்சமடையுங்கள் என்றார்.
சிவபெருமானோ ஸ்ரீமந் நாராயணரிடம் செல்லுங்கள் என்றார்.
மஹா விஷ்ணுவும் தன்னாலும் எதுவும் செய்ய முடியாது ஒரே உபாயம் அம்பரீஷ மஹாராஜாவிடம் தஞ்சமடையுங்கள் என்றார்.
துர்வாசர் கடைசியாக அம்பரீஷ மஹாராஜாவிடம் தஞ்சமடைந்தார்.
1. மீனாட்சி அம்மன் விஹ்ரகம் மரகத கல்லால் ஆனது. ஏனென்றால் பொதுவாக அன்னையின் திருமேனி பச்சை நிறம்.
2. அன்னையின் வலது கால் சற்று முன் நோக்கி இருக்கும், ஏனென்றால் பக்தர்கள் அழைத்தால் உடனே ஓடி வருவதற்காக.
3. அன்னை கையில் ஏந்திய கிளி அன்னையின் காதில் பேசுவது போல் இருக்கும் ஏனென்றால் கிளி பேசுவதை திருப்பி பேசும் அதைப்போல் பக்தர்களின் வேண்டுதலை திரும்ப திரும்ப அன்னையிடம் சொல்லும் இதனால் நமது வேண்டுதல் விரைவாக நிறைவேறும்.
4. அன்னையின் விக்ரஹம் சுயம்பு ஆகும் சில ஆலயத்தில் லிங்கம் சுயம்புவாக இருக்கும் ஆனால் மதுரையில் மீனாட்சி உக்ரபாண்டியனுக்கு முடிசூட்டிய பின் சொக்கநாதர் பெருமான் அருகில் விக்ரஹமாக நின்றுவிட்டாள் அதனால் சுயம்பு அன்னை.
கோரிக்கை எது என்றாலும் உடனே நிறைவேற்றித்தர தயாராக ஆறு விரல்கள் கொண்ட பெருந்தேவித் தாயார் அருளும் அரசர் கோயில்
தலவரலாறு
பிரம்மா பாப விமோசனம் தேடிக் கொண்டிருந்த சமயம்,பல தவச் சீலர்களை கலந்தாலோசிக்கிறார்.
மண்ணாளும் வேந்தனும், விண்ணாளும் மாதவனும் சேர்ந்து எங்கு காட்சி தருகிறார்களோ அந்தத் திருத்தலத்தில் அவர்களின் தரிசனம் கிடைத்தால் தான் "பாப விமோசனம்" என்று முனிவர்கள் சொல்கிறார்கள். !
பூலோகத்துக்கு வரும் நாராயணன், பாலாற்றங்கரையில் வாசம் செய்கிறார்.
அந்த சமயம் ஜனக மகாராஜாவும் அங்கே வருகிறார்.
ஆண்டவரும் அரசரும் அங்கே சந்திக்கிறார்கள்.
இதைக் கேள்விப்பட்ட பிரம்மா விரைந்து வந்த இருவரையும் தரிசனம் செய்கிறார்.