வீட்டிலோ அல்லது வெளியிலோ நடக்கும் நிகழ்ச்சிகளில் வீட்டு பெரியோர்களின் கால்களில் விழுந்து ஆசி வாங்குவது,
வழக்கமாக முன்பு ஒரு காலத்தில் இருந்தது.
இன்று சில வீடுகளில் மட்டும் தான் நிகழ்கிறது.
நம் முன்னோர்கள் ஆசி பெற காலில் விழ வேண்டும் என கூறியதற்கு ஒரு முக்கிய நோக்கம் இருந்தது.
அதனை அடுத்தடுத்த தலைமுறைக்கு போகும் போது மூட நம்பிக்கை என வகைப்படுத்தி விட்டோம்.
உண்மையில் நம் அசைவுகள் அனைத்திற்கும் ஒரு காலத்தில் அர்த்தங்கள் இருந்தன.
இன்று போதிய விழிப்புணர்வு இல்லாததே அந்த அர்த்தங்களை நாம் இழந்ததற்கான காரணம்.
அந்த அடிப்படையில் குருமார்களை மற்றும் மிக முக்கியமான ஆன்மிக விருந்தினர்களை வரவேற்கிற போது பாத பூஜை செய்வது, மரியாதையையும், வணக்கத்தையும், நன்றியையும் செலுத்தும் முறை என்றாலும் இதற்கு பின் சொல்லப்படும் காரணம் என்ன?
ஆசிர்வாதம் எனும் மிகப்பெரிய சக்தி நமக்கு பெரும் பலத்தை கொடுக்கிறது.
ஆசிர்வாதம் பெறுவது மட்டுமல்ல..
ஆசிர்வாதம் செய்வதும் கூட உங்களுக்கு சக்தியை கொடுக்கும்.
நாம் ஏன் காலில் விழுகிறோம் என்பதற்கு அறிவியல் ரீதியான காரணம் உண்டு.
ஆய்வின் படி மனிதனின் காலில் தான் சக்தி ஓட்டம் அதிகமாக இருக்கிறது.
ஒரு ஞானியையோ அல்லது மகானையோ பார்க்கும் போது வாய்ப்பு கிடைத்தால் அவர்களின் காலைத் தொட்டு ஆசி பெறுங்கள்.
இதனால் அவர்களின் சக்தி நமக்கும் கிடைக்கிறது.
காலை தொடுதலின் மூலம் சக்தி பரிமாற்றம் நடக்கிறது. மேலும் சொல்லும் வார்த்தைகளில் அதிக சக்தி இருக்கிறது.
மனப்பூர்வமாக ஒருவர் ஆசி வழங்கும் போது அதன் சக்தி அளவிட முடியாதது.
பல பாவங்களையும், தோஷங்களையும் கூட அது போக்குகிறது.
பெரியோர் காலில் விழுந்து ஆசி பெறுவதை பழக்கப்படுத்திக் கொள்ளுங்கள்.
எப்படி ஆசி வழங்கலாம்..!!
நல்ல வார்த்தைகளை தேர்ந்தெடுத்து சொல்வதில் தான் விஷயம் இருக்கிறது. தமிழில் அழகான வார்த்தைகளில் ஆசி கொடுங்கள்.
சிலர் காலில் விழுந்தால் இருக்கட்டும் எந்திரிங்க என்பார்கள்.
சிலர் அய்யோ என் காலில் போய் விழுந்து விட்டாய் என்று பதறுவார்கள்.
இதெல்லாம் தவறு.
ஆசி வழங்காமல் புறக்கணிப்பது பாவம் ஆகும்.
புது மணமக்கள் காலில் விழுந்தால் தீர்க்காயுஸ்மான் பவ என ஆணுக்கும், தீர்க்க சுமங்கலி பவ என பெண்ணுக்கும் ஆசி வழங்கலாம்.
வயதானவர்கள், சகல தோஷங்களும் நீங்கப்பெற்று சகல செல்வங்களும் பெற்று,
குடும்ப ஒற்றுமையுடன், நீண்ட ஆயுளுடன் வாழுங்க... என்று ஆசிர்வதிக்கலாம்...
வீட்டுப் பெரியோர்கள் எப்படி வேண்டுமானாலும் இருந்து கொள்ளட்டும்.
உங்கள் பரிசுத்தமான அன்பை அவர்களுக்கு பரிசாகக் கொடுத்துப் பாருங்கள்.
ஒரே வாரத்தில் அவர்களின் இதயத்தில் சிம்மாசனம் போட்டு உட்கார்ந்து கொள்வீர்கள்.
1. மீனாட்சி அம்மன் விஹ்ரகம் மரகத கல்லால் ஆனது. ஏனென்றால் பொதுவாக அன்னையின் திருமேனி பச்சை நிறம்.
2. அன்னையின் வலது கால் சற்று முன் நோக்கி இருக்கும், ஏனென்றால் பக்தர்கள் அழைத்தால் உடனே ஓடி வருவதற்காக.
3. அன்னை கையில் ஏந்திய கிளி அன்னையின் காதில் பேசுவது போல் இருக்கும் ஏனென்றால் கிளி பேசுவதை திருப்பி பேசும் அதைப்போல் பக்தர்களின் வேண்டுதலை திரும்ப திரும்ப அன்னையிடம் சொல்லும் இதனால் நமது வேண்டுதல் விரைவாக நிறைவேறும்.
4. அன்னையின் விக்ரஹம் சுயம்பு ஆகும் சில ஆலயத்தில் லிங்கம் சுயம்புவாக இருக்கும் ஆனால் மதுரையில் மீனாட்சி உக்ரபாண்டியனுக்கு முடிசூட்டிய பின் சொக்கநாதர் பெருமான் அருகில் விக்ரஹமாக நின்றுவிட்டாள் அதனால் சுயம்பு அன்னை.
கோரிக்கை எது என்றாலும் உடனே நிறைவேற்றித்தர தயாராக ஆறு விரல்கள் கொண்ட பெருந்தேவித் தாயார் அருளும் அரசர் கோயில்
தலவரலாறு
பிரம்மா பாப விமோசனம் தேடிக் கொண்டிருந்த சமயம்,பல தவச் சீலர்களை கலந்தாலோசிக்கிறார்.
மண்ணாளும் வேந்தனும், விண்ணாளும் மாதவனும் சேர்ந்து எங்கு காட்சி தருகிறார்களோ அந்தத் திருத்தலத்தில் அவர்களின் தரிசனம் கிடைத்தால் தான் "பாப விமோசனம்" என்று முனிவர்கள் சொல்கிறார்கள். !
பூலோகத்துக்கு வரும் நாராயணன், பாலாற்றங்கரையில் வாசம் செய்கிறார்.
அந்த சமயம் ஜனக மகாராஜாவும் அங்கே வருகிறார்.
ஆண்டவரும் அரசரும் அங்கே சந்திக்கிறார்கள்.
இதைக் கேள்விப்பட்ட பிரம்மா விரைந்து வந்த இருவரையும் தரிசனம் செய்கிறார்.