அப்படிபட்ட செய்திகளுக்கு உண்மையாவே ஆதாரம் இருந்திருந்தா, மதமாற்ற குரூப் நம்மள மாதிரி பேஸ் புக்லயும், சத்திரம் சாவடிலயும் வதந்தி பரப்பிட்டு உக்காந்திருக்க மாட்டான்.
நேரா கோர்ட்டுக்கு போய், ஈஷாவ ரெட்டை தாழ்பாள் போட்டு இழுத்து பூட்டியிருப்பான்.
கோர்ட்டுக்கு போயும் ஒன்னும் வேலை ஆவலன்னு தான், நம்ம ஆளுங்கள வெச்சே ஈஷா மேல புரளி கிளப்பிட்டு திரியுறாங்க.
ஈஷா மேலான புரளிகளுக்கு, மீடியா துணை போறது கூட வழக்கமா மத்த நிறுவனங்கள் மாதிரி கவர் குடுக்கும் பழக்கம், ஈஷா கிட்ட இல்லேன்றதால தான்.
(முதன் முதலா, காலஞ்சென்ற #லட்சுமி_மில்ஸ் சேர்மன் திரு. கரிவரதன் அவர்கள் விலைக்கு குடுத்த 150 ஏக்கர் உட்பட) அத்தனையுமே விலைக்கு வாங்கப்பட்ட பட்டா நிலம் தான்.
இந்தியாவுல இருக்குற மொத்த யானைகள் வழித்தடங்களின் எண்ணிக்கை 100(முன்ன 88 சொன்னாங்க, லேட்டஸ்ட் டெக்னாலஜிய வெச்சு ஆய்வு செஞ்சதுல, இப்ப 100-ன்னு சொல்றாங்க). அதுல ஒரு சதுர இன்ச் கூட ஈஷா மையத்தினால ஆக்கிரமிக்கப்படலன்னு, மத்திய வனம் மற்றும் சுற்றுச் சூழல்துறை சான்றிதழ் குடுத்திருக்கு...
இந்த புள்ளி விபரங்கள ஏன் சொல்றேன்னா, விஷயமே தெரியாம ஈஷாவுக்கு எதிரா கம்பு சுத்துற நம்மாளுங்க தெரிஞ்சுக்கணும்றதுகாக.
ஈஷாவின் எதிரிகளுக்கு இதைவிட இன்னும் நிறைய தகவலும், ஈஷா யோகா மையத்தோட நேர்மையும் தெரியும். அதனால தான் சட்டப்பூர்வமா எதையும் செய்ய முடியாம,...
வெறும் புரளிகள கிளப்பிட்டு திரியுறாங்க. வழக்கம் போல நம்மாளுங்களும், விட்டில் பூச்சிகளா போய் விழறாங்க.
இன்னொரு விஷயம் தெரியுமா...?
எனக்கே கூட அந்த சம்பவத்துக்கு அப்புறம் தான், ஈஷா மேல முழுக்க முழுக்க நம்பிக்கை வந்தது. அந்த சம்பவம்,...
#மோடிஜி பத்தி உங்களுக்கு நல்லா தெரியும். அமித்ஷா உட்பட யாருமே மோடிஜி-ய ரொம்ப நெருங்க முடியாது. அப்படி இருக்கும்போது,...
ஒரு நேரத்துல பாபா ராம்தேவ், மோடிக்கு நெருக்கமானவரா,.. நாடு முழுவதும் பேசப்பட்டார்.
அப்படிபட்ட ராம்தேவ், பதஞ்சலி விஷயத்துல வருமான வரித்துறை தனக்கு 15 கோடி வரி விதிச்சதுக்காக மோடி கிட்ட மூஞ்சிய காட்டினார்.
மோடி சொன்ன வார்த்தை,...
"வரி, டாக்ஸ் டிபார்ட்மென்ட் சம்மந்தப்பட்டது. பதஞ்சலிய வெச்சு பிஸ்னஸ் தான பண்ற.?
அப்போ அரசாங்கம் வரிய கட்டச்சொன்னா போய் வரியக்கட்டு,
அதுக்கும், யோகா மாஸ்டர்ங்கறதுக்காக, உனக்கு நான் குடுக்குற மரியாதைக்கும் சம்மந்தமில்ல" ன்னு, அனுப்பி விட்டுட்டாரு.
எந்த ஒரு தனி நபருக்கோ, நிறுவனத்துக்கோ தன்னால் விளம்பரம் ஏற்படக் கூடாதுன்றதுல, மோடிஜி தெளிவா இருப்பார்.
அப்படி, ஒரு தனிநபர் நடத்துற ஒரு நிறுவனத்த திறந்து வெக்க மோடிஜி வர்றாருன்னா,...
அந்த தனிநபர் பிறக்கும் போது, பிரசவம் பார்த்த நர்ஸக்காவோட வரலாறக்கூட, இன்டலிஜென்ஸ் ஏஜென்சிகள் தோண்டி எடுத்து ரிப்போர்ட் சப்மிட் பண்ணிடும்...!
ஒரு ஊசி முனையளவு கரும்புள்ளி இருந்தாக்கூட, அதுக்கபுறம் அந்தநபர திரும்பிக்கூட பாக்க மாட்டாரு.
போகிற போக்கை பார்த்தால், அதிமுகவே டெபாசிட் வாங்குமா என்று தெரியவில்லை. ஆடிக்காற்றில் அம்மி பறந்தாலும் ஆச்சரியம் இல்லை. திமுகவின் பணம் சூறாவளியை போல் சுழற்றி அடிக்கிறது. எல்லா பணக்கார ஓட்டல்களிலும் சாப்பாடு காலி. எல்லா லாட்ஜிலும் ரூம் ஃபுல்.
ஒட்டு மொத்த தமிழக திமுகவும் ஈரோட்டில் தான் டெண்ட் அடித்துள்ளது.
பாஜக போட்டியிடவில்லை என்று அறிவித்து மானம் காத்தார் அண்ணாமலை. தனித்து போட்டியிட்டு 1000 வாக்குகளுக்கு கீழே சென்றிருந்தால், நிலைமை படு கேவலமாக போயிருக்கும்.
தனித்து போட்டியிட வேண்டும் என்று சொன்ன சங்கிகள் வாயடைத்து போய் உள்ளனர்.
மிகக்கேவலமான கேலிக்கூத்து நடக்கிறது. பணம் கொடுத்தால் மக்கள் மலத்தை கூட தின்பார்கள் என்று திமுக நிரூபித்துக் கொண்டிருக்கிறது. சுதந்திர இந்தியாவில் இவ்வளவு கேவலமாக மக்களை யாரும் எக்ஸ்போஸ் செய்ததில்லை.