’ஆயிரம் ஆனாலும் மாயூரம் ஆகாது’ என்ற பிரபலமான சொல் வழக்கு உண்டு.
மயிலாடுதுறை என்றாலே ஶ்ரீமாயூரநாத சுவாமிதான் நினைவில் வருவார்.
ஆயினும், புராதனச் சிறப்புடைய வேறு சில சிவாலயங்களும் இங்குள்ளன.
அவ்வகையில் அமைந்துள்ள அற்பதமான திருத்தலங்களில் ஒன்று திருவாவடுதுறை ஆதினத்துக்குச் சொந்தமான, நாகை மாவட்டம் மயிலாடுதுறையில் அருள்பாலிக்கும் ஶ்ரீ அறம் வளர்த்த நாயகி ஸமேத ஶ்ரீ ஐயாறப்ப சுவாமி கோயிலாகும்.
துலா மாதமாகிய ஐப்பசியில் அறுபத்தாறு கோடி நதிகளும், கங்கை நதியும் தன்மீது படிந்த பாவங்களைப் போக்க மயிலாடுதுறை காவிரியில் நீராடுவதாக ஐதிகம்.
பல தலைமுறைகளாகச் செய்து வந்த பாவம், இங்கு காவிரி துலா கட்டத்தில் கடைமுழுக்கு நாளில் நீராடுவதால் கரைந்து போகும் என்பது அனைவரின் நம்பிக்கை.
திருவையாறு ஶ்ரீஐயாறப்பரின் தீவிர பக்தர்களான நாதசன்மா – அநவித்தை தம்பதிக்கு இந்தக் கடைமுழுக்கு விழாவில் கலந்து கொண்டு துலா கட்டத்தில் நீராட வேண்டும் என்பது நீண்ட நாள் ஆசை.
அவர்கள் காலை பூஜைகளை திருவையாற்றில் முடித்து விட்டு, இரவுக்குள் திரும்பிவிடலாம் என்ற எண்ணத்தோடு
மயிலாடுதுறை புறப்பட்டனர்.
ஆனால், அவர்கள் மயிலாடுதுறை வந்து சேருவதற்குள் இரவு நேரம் நெருங்கிவிட்டது.
‘நாம் நினைத்தபடி ஐப்பசி கடைசி நாள் பகலில் காவிரியில் நீராட முடியவில்லையே… இரவுக்குள் திரும்பிச்சென்று ஐயாறப்பரையும் தரிசிக்க முடியாமல் போய்விட்டதே’ என்று வேதனைப் பட்டனர்.
அப்போது ஓர் அசரீரி ஒலித்தது.
கவலை வேண்டாம்.
பொழுது விடிவதற்குள் காவிரியில் நீராடுங்கள்.
உங்களுக்கு அனைத்துப் புண்ணியங்களும் கிடைக்கும்.
தவிர, திருவையாறுக்கு வந்து என்னை தரிசிக்க முடியலையே என்ற வருத்தமும் வேண்டாம்.
மாயூரநாதர் ஆலயத்தின் மேற்கேயுள்ள ஆலயத்தில் யாம் எழுந்தருளியுள்ளோம். அங்கே வந்து தரிசிக்கலாம்’ என்றது அந்தக் குரல்.
அதன் படி இருவரும் வழிபட்டனர்.
அவர்கள் வழிபட்ட அந்த ஆலயமே தற்போது மயிலாடுதுறையிலுள்ள ஶ்ரீ ஐயாறப்பர் ஆலயம் என்பது செவி வழியாக வந்த தல வரலாறாகும்.
மேலும், ஈசன் அருளியபடி இத்தலத்து இறைவனுடன் ஐக்கியமான நாதசன்மாவின் சிவலிங்கம், ஶ்ரீ மாயூரநாதர் சுவாமி ஆலயத்தில் கணக்கடி விநாயகர் சந்நிதிக்கு அருகே அமைந்துள்ளது.
அநவித்தை ஐக்கியமான சிவலிங்கம் ஶ்ரீமாயூரநாதர் ஆலயத்திலுள்ள அன்னை அபிராமி சந்நதிக்கு தென்புறத்தில் அமைந்திருக்கிறது.
அநவித்தை ஐக்கியமான சிவலிங்கத்திற்கு வழக்கமான ஆடை அலங்காரங்கள் கிடையாது.
மாறாக இந்த சிவலிங்கத்துக்கு மட்டும் சேலையை உடுத்துகின்றனர்.
இது வேறு எந்த சிவாலயத்திலும் காண முடியாத சிறப்பம்சம் ஆகும்.
அதனையருளுபவர் இந்த ஐயாறப்பர் என மாயூர புராணப் பாடல் ஒன்று கூறுகிறது.
ஆண்டுதோறும் நடைபெறும் சித்திரை மாதத்து ‘ஏழூர்ப்பல்லக்குத் திருவிழா’ இப்பகுதியில் மிகவும் பிரபலம்.
12-ம் நாள் திருவிழாவாக ஶ்ரீஐயாறப்பர் பஞ்ச மூர்த்திகளுடன் எழுந்தருளிய பல்லக்கு,
கூறைநாடு ஶ்ரீ சாந்தநாயகி அம்பாள் ஸமேத ஶ்ரீ புனுகீஸ்வர சுவாமி கோயில்,
சித்தர்க்காடு ஶ்ரீ திரிபுரசுந்தரி அம்பாள் ஸமேத ஶ்ரீ பிரும்மபுரீஸ்வர சுவாமி கோயில்,
மூவலூர் ஶ்ரீ மங்கள சௌந்திரநாயகி ஸமேத ஶ்ரீ மார்க்கசகாய சுவாமி கோயில்,
சோழன்பேட்டை ஶ்ரீஅறம் வளர்த்த நாயகி ஸமேத ஶ்ரீ அழகியநாத சுவாமி கோயில்,
திருஇந்தளூர் ஶ்ரீ ஒப்பிலாமணி அம்மை ஸமேத ஶ்ரீ தான்தோன்றீஸ்வர சுவாமி கோயில்,
ஆகியவற்றை வலம் வந்து இறுதியாக மயிலாடுதுறை ஶ்ரீ அபயாம்பிகை ஸமேத ஶ்ரீ மாயூரநாத சுவாமி திருக்கோயிலை அடைவது வழக்கம்.
அன்றைய இரவு, அனைத்து திருக்கோயில் சுவாமிகளும் மாயூரநாதர் திருக்கோயிலில் எழுந்தருள்வதும்,
‘அருள் நால்வர்க்கு’ அளித்தருளும் திருக்காட்சி நிகழ்வும் மிக்க விசேஷமானவை.
அப்போது, திருவாவடுதுறை ஆதினகர்த்தர் குருமகா சந்நிதானம் ஶ்ரீலஶ்ரீ அம்பலவாணதேசிக பரமாசார்ய சுவாமிகள் அனைத்து சுவாமிகளுக்கும் பட்டு வஸ்திரம் அணிவித்து வழிபாடு செய்வதும்,
அருளாசி வழங்குவதும் ஐதிகமான சிறப்பு நிகழ்ச்சிகளாகும்.
இவ்வாலயத்துக் கருவறை மண்டபத்தின் பின் கோஷ்டத்தில் அமைந்துள்ள அர்த்தநாரீஸ்வரர் மிகுந்த வரபிரசாதி.
திருமணத் தடைகள் அகற்றி அருளும் இவருக்கு அமாவாசை அன்று செய்யப்பெறும் சிறப்பு வழிபாடு இங்கே விசேஷம்.
இத்திருத்தலத்தில் அருள்பாலிக்கும் அர்த்தநாரீஸ்வரருக்கு தொடர்ந்து ஐந்து வாரங்கள் அர்ச்சனை செய்து
வழிபட்டால் தடைபட்ட திருமணங்கள் நடைபெறுவதுடன், கன்னியருக்கு விரைந்து திருமணம் நடக்கும்.
1. மீனாட்சி அம்மன் விஹ்ரகம் மரகத கல்லால் ஆனது. ஏனென்றால் பொதுவாக அன்னையின் திருமேனி பச்சை நிறம்.
2. அன்னையின் வலது கால் சற்று முன் நோக்கி இருக்கும், ஏனென்றால் பக்தர்கள் அழைத்தால் உடனே ஓடி வருவதற்காக.
3. அன்னை கையில் ஏந்திய கிளி அன்னையின் காதில் பேசுவது போல் இருக்கும் ஏனென்றால் கிளி பேசுவதை திருப்பி பேசும் அதைப்போல் பக்தர்களின் வேண்டுதலை திரும்ப திரும்ப அன்னையிடம் சொல்லும் இதனால் நமது வேண்டுதல் விரைவாக நிறைவேறும்.
4. அன்னையின் விக்ரஹம் சுயம்பு ஆகும் சில ஆலயத்தில் லிங்கம் சுயம்புவாக இருக்கும் ஆனால் மதுரையில் மீனாட்சி உக்ரபாண்டியனுக்கு முடிசூட்டிய பின் சொக்கநாதர் பெருமான் அருகில் விக்ரஹமாக நின்றுவிட்டாள் அதனால் சுயம்பு அன்னை.
கோரிக்கை எது என்றாலும் உடனே நிறைவேற்றித்தர தயாராக ஆறு விரல்கள் கொண்ட பெருந்தேவித் தாயார் அருளும் அரசர் கோயில்
தலவரலாறு
பிரம்மா பாப விமோசனம் தேடிக் கொண்டிருந்த சமயம்,பல தவச் சீலர்களை கலந்தாலோசிக்கிறார்.
மண்ணாளும் வேந்தனும், விண்ணாளும் மாதவனும் சேர்ந்து எங்கு காட்சி தருகிறார்களோ அந்தத் திருத்தலத்தில் அவர்களின் தரிசனம் கிடைத்தால் தான் "பாப விமோசனம்" என்று முனிவர்கள் சொல்கிறார்கள். !
பூலோகத்துக்கு வரும் நாராயணன், பாலாற்றங்கரையில் வாசம் செய்கிறார்.
அந்த சமயம் ஜனக மகாராஜாவும் அங்கே வருகிறார்.
ஆண்டவரும் அரசரும் அங்கே சந்திக்கிறார்கள்.
இதைக் கேள்விப்பட்ட பிரம்மா விரைந்து வந்த இருவரையும் தரிசனம் செய்கிறார்.