கடவுள் எங்கு உள்ளார், எப்படி உள்ளார், என்ன செய்கிறார்?
#1 கடவுள் எங்கே இருக்கிறார்?
#2 எப்படி இருக்கிறார்?
#3 என்ன செய்து கொண்டு இருக்கிறார்?
கிருஷ்ண தேவராயர் கேட்ட கேள்விக்கு யாராலேயும் பதில் சொல்ல முடியவில்லை.
அப்போ தெனாலி ராமன் முன் வந்து, அரசே இதுக்கு நான் விடையளிக்கிறேன்ன்னு சொல்லிட்டு,
ஒரு மெழுகு வர்த்தியை ஏத்தி, அரசே இந்த மெழுகு வர்த்தியின் தீபம் எந்த திசையைக் காட்டுகிறதுன்னு கேட்டான்..?
அவர் அது மேல் நோக்கி காட்டுகிறது. எந்த திசையையும் குறிப்பிட்டுக் காட்டவில்லைன்னு சொன்னார். சரின்னு சொல்லிட்டு மெழுகுவர்த்தியை திருப்பி திருப்பி மேலும் கீழும், குறுக்கும் நெடுக்குமாக வைத்தான். அப்போதும் தீபம் மேல் நோக்கியே நின்றது.
அரசே நாம் தீபத்தை சாட்சியாக ஏற்றுக் கொண்டு, கடவுள் நமக்கு மேலே இருக்கிறார் என்பதை அறிவோமாக. அவர் வேறு எந்த திசையிலும் இல்லை.
அடுத்து நீங்கள் கேட்ட கேள்வி... கடவுள் எப்படி இருக்கிறார்?
இதுக்கு பதில் சொல்லணும்னா எனக்கு ஒரு கிண்ணத்தில் கொஞ்சம் பால் வேணும்னு கேட்டு வாங்கிவந்து அரசே இந்தக் கிண்ணத்திலுள்ள பாலில் கொஞ்சம் தயிர் சேர்த்தால் என்னவாகும்?
அது தயிராகும் என அரசர் பதிலளித்தார். ஆமாம் அந்த்த் தயிரைக் கடைந்தால் வெண்ணெய் ஆகும். அந்த வெண்ணெய்யை உருக்கினால் அது நெய் ஆகும். சரிதானே என்று அவன் கேட்க அரசர் ஆமோதித்தார்.
அப்படியானால் இந்தக் கிண்ணத்திலுள்ள பாலுக்குள் தயிர், மோர், வெண்ணெய், நெய் எல்லாம் இருக்குன்னு ஒத்துக்கறீங்களான்னு கேட்ட்தும் அரசர் ஆமாம் ஒத்துக்கறேன்னு சொன்னார்.
சரி அரசே..இந்தப் பாலில் எந்த பாகத்தில் தயிரும், எந்த பாகத்தில் மோரும், எந்த பாகத்தில் வெண்ணெயும், எந்த பாகத்தில் நெய்யும் இருக்குன்னு பிரிச்சுக் காட்ட முடியுமா?ன்னு கேட்க அரசர் அது எப்படி முடியும்..எல்லாம் ஒன்றுக்குள் ஒன்று அடக்கம் என்றார்.
அது போல்தால் கடவுள் நம் எல்லோருக்கும் அடக்கமாக இருக்கிறார். அவர் எங்கும் நீக்கமற எல்லாமாயும் வியாபித்திருக்கிறார். அவர் இல்லாத பொருள் உலகில் எதுவும் இல்லை என்றான் தெனாலி.
சரி இரண்டு கேள்விகளுக்கு சரியான விடையளித்தாய். என் மூன்றாவது கேள்விக்கு பதில்…
கடவுள் என்ன செய்துகொண்டிருக்கார்?
அரசே நான் உங்கள் இரண்டு கேள்விக்கு சரியாக விடை அளித்து விட்டதால், நான் உங்களுக்கு குருவாகிறேன். நீங்கள் சிஷ்யன் ஆகிறீர்கள். எனவே குரு கீழேயும் சிஷ்யன் மேலேயும் இருப்பது சரியல்ல.
நீங்கள் சிம்மாசனத்தை விட்டு இறங்கி வந்து கீழே நில்லுங்கள். நான் அங்கே அமர்ந்து உங்கள் கேள்விக்கு பதில் சொல்கிறேன்னு தெனாலி சொன்னதும், அரசர் அவனை அரியணையில் உட்கார வைத்துவிட்டு கீழே இறங்கி நின்றார்.
உடனே தெனாலி ராமன்,”யாரங்கே இந்த மதிகெட்ட மன்னனை சிறையிலடைத்து சித்தரவதை செய்யுங்கள்”ன்னு கட்டளை யிட்டான். அரசனும் அவையோரும் திகைத்துப் போய் நிற்கவே…
தெனாலி சிரித்துக் கொண்டே, “அரசே பயப் படவேண்டாம். நான் அரசனாக நடித்தேன். அவ்வளவுதான். சற்று முன்னர் தாங்கள் அமர்ந்திருந்த அரியணையில் இப்போது இறைவன் என்னை அமர வைத்து உங்களை என் ஆணைக்கு அடிபணிய வைக்கும் சாதாரண மனிதனாக மாற்றி விட்டார். இதைத்தான் இறைவன் இப்போது செய்தார்..
ஆண்டியை அரசனாக்கவும், அரசனை ஆண்டியாக்கவும் ஆண்டவன் ஒருவனாலேயே முடியும்.
கிருஷ்ணதேவராயர் உண்மை உணர்ந்து இறைவனுக்கும் தெனாலிராமனுக்கும் நன்றி கூறினார். 🙏
சகல தோஷங்களுக்கும் பரிகாரம் செய்ய சிறந்த பரிகாலத்தலம்.
தமிழகத்தின் சிறந்த பரிகாரத்தலங்களில் இதுவும் ஒன்று. இக்கோவில் அருகே பரிகார பூஜைகள் தினந்தோறும் நடந்தபடி இருப்பதைக் காணலாம்.
1
தென் திரிவேணி சங்கமம் என்று அழைக்கப்படுகின்ற இத்தலம் ஈரோடு மாவட்டம் பவானியில், நான்கு மலைகளுக்கு இடையில், பவானி, காவேரி மற்றும் கண்ணுக்குப் புலப்படாத அமிர்த நதி என்ற மூன்று நதிகளும் கூடும் இடமான கூடுதுறையில் இத்தலம் உள்ளது.
2
காவிரி, பவானி நதிகள் கூடும் சங்கமத் துறையில் அமைந்துள்ளதால் சிவனுக்கு சங்கமேஸ்வரர் என்று பெயர் ஏற்பட்டது. முனிவர் விஸ்வாமித்திரரால் காயத்ரி மந்திரம் சொல்லி பிரதிஷ்டை செய்யப்பட்டதால் காயத்ரி லிங்கேஸ்வரர் என்றும் அழைக்கபடுகிறார்.தமிழகத்தின் சிறந்த பரிகாரத்தலங்களில் இதுவும் ஒன்று. 3
ஒருவர் எத்தனை ஆண்டுகளில் இறப்பார் ! என துல்லியமாக தெரியவேண்டு மெனில் ? அவரை கீழே உட்கார்ந்து எழுந்திருக்க சொல்லுங்கள் என்பது !
கீழே உட்கார்ந்து எந்த பிடிமானமும் இல்லாமல் தரையில் ! கையோ ! காலோ ! ஊன்றாமல் ? எழுந்திருக்க முடிந்தால் ? அவருக்கு ஆயுசு நூறு !!*
*தரையில் இரண்டு கைகளையும் ஊன்றி அப்போதும் எழுந்திருக்க முடியாமல் உதவிக்கு ஒருவரோ (?) இருவரோ(?) வந்து கையை பிடித்து எழுப்பி விடும் நிலையில் இருந்தால் ? உடனே வக்கீலை வரவழைத்து உயிலை எழுதிவிடலாம் !!*
*ஜெரென்டாலஜி துறை ஆய்வு ஒன்றில் முதியவர்களை கீழே அமரவைத்து ! எழ வைத்து ! ஆய்வு செய்தார்கள் !!*
*கை ! முட்டி ! என எதுவும் தரையில் படாமல் எழுந்தால் 0 பாயிண்டு !!*
*அருள்மிகு
பஞ்சமுக ஸ்ரீ ஆஞ்சநேயர்
திருக்கோவில்*
பஞ்சவடி,
புதுச்சேரி.
எங்கெல்லாம் ராம நாமம் ஒலிக்கிறதோ அங்கெல்லாம் அருள் புரிவேன்’ என்பது அஞ்சனை மைந்தன் ஆஞ்சநேயரின் வாக்கு. ஆஞ்சநேயர் பல தோற்றங்களில் காட்சி தந்து, தன் பக்தர்களுக்கு அருள் பாலிக்கிறார்.
1
அத்தகைய தோற்றங் களில் தனிச்சிறப்பு கொண்டது, பஞ்சமுக ஆஞ்சநேயர் திருவடிவம்.
ஆஞ்ச நேயருக்கு பஞ்சமுகங்கள் அமைந்ததன் பின்னணியில் ஒரு புராண வரலாறு உண்டு. பஞ்சவடி என்றால் ஐந்துவித மரங்கள் சூழ்ந்த வனம் என்பது பொருளாகும்.
2
முன்னொரு யுகத்தில் அரசு, ஆல், வில்வம், நெல்லி, அசோகம் ஆகிய ஐந்து வித மரங்கள் அடர்ந்த வனமாக இந்தப் பகுதி விளங்கியிருக்கிறது. ரிஷிகளும் முனிவர்களும் இந்தப் பிரதேசத்தில் குடில்கள் அமைத்துத் தங்கி, தவமும் யாகங்களும் நடத்தி
வந்துள்ளார்கள்.
சிறையில் இருந்தபோது ஸ்மட்ஸ் என்ற மகா கொடியவன் ஜெயிலராக இருந்தான்.எல்லாக் கைதிகளையும் எலும்பு ஒடிய அடிப்பவன்.
காந்தியையும் கீழே தள்ளி, பூட்ஸ் காலால் பலமுறை மிதித்தான், அடித்தான்.
அடிக்கும்போது எல்லோரும் ஐயோ!என்று அலறினார்கள்.
ஆனால், காந்தி மட்டும் "ராம்!ராம்!!" என்று சொன்னது, அவனை மிகவே யோசிக்க வைத்தது. அன்று முதல் காந்தியை அடிப்பதை நிறுத்தினான். ஆனால், காந்தியை அவ்வப்போது
உற்றுப் பார்த்தான்.
இலேசாகப் புன்முறுவல் காட்டினான்.
ஒரு நாள் "மிஸ்டர் காந்தி"!என்று கனிவாக அழைத்து
நான் உங்களுக்கு ஏதாவது உதவ நினைக்கின்றேன்;
என்ன வேண்டும் என்றான்? ஏதாவது புத்தகம் கொடுங்கள் என்றார் காந்தி. அவன் "பைபிள்" சார்ந்த இரு நூல்களைப் பரிசாக கொடுத்தான்.
*கரு தந்து உரு தந்து காத்திடுவாள் கர்ப்பரட்சாம்பிகை!*
தலைமுறை தலைமுறையாகத் தமது குலம் செழித்து விளங்க வேண்டும் என்பதே எல்லோரின் ஆசையும். அதற்கு வேண்டியது மகப்பேறு பாக்கியம். ‘மழைப்பேறும் மகப்பேறும் மகேசனுக்கே தெரியாது’ என்றொரு பழமொழி உண்டு.
1
திருமணமான எல்லாத் தம்பதிகளுக்கும் பிள்ளைப்பேறு கிடைத்துவிடுவதில்லை. அதிலும் தற்போது குழந்தைப்பேறின்மை பலருக்கும் இருந்துவரும் கவலை.
2
மருத்துவம், கோயில்கள், சோதிடம், பரிகாரம் என அனைத்து நம்பிக்கைகளும் பொய்த்துப் போனவர்களுக்குக்கூட நம்பிக்கைப் பேரொளியாக விளங்குபவள் திருக்கருகாவூர் அன்னை கர்ப்பரட்சாம்பிகை.