கோரிக்கை எது என்றாலும் உடனே நிறைவேற்றித்தர தயாராக ஆறு விரல்கள் கொண்ட பெருந்தேவித் தாயார் அருளும் அரசர் கோயில்
தலவரலாறு
பிரம்மா பாப விமோசனம் தேடிக் கொண்டிருந்த சமயம்,பல தவச் சீலர்களை கலந்தாலோசிக்கிறார்.
மண்ணாளும் வேந்தனும், விண்ணாளும் மாதவனும் சேர்ந்து எங்கு காட்சி தருகிறார்களோ அந்தத் திருத்தலத்தில் அவர்களின் தரிசனம் கிடைத்தால் தான் "பாப விமோசனம்" என்று முனிவர்கள் சொல்கிறார்கள். !
பூலோகத்துக்கு வரும் நாராயணன், பாலாற்றங்கரையில் வாசம் செய்கிறார்.
அந்த சமயம் ஜனக மகாராஜாவும் அங்கே வருகிறார்.
ஆண்டவரும் அரசரும் அங்கே சந்திக்கிறார்கள்.
இதைக் கேள்விப்பட்ட பிரம்மா விரைந்து வந்த இருவரையும் தரிசனம் செய்கிறார்.
நாராயணர் அவருக்கு பாபவிமோசனம் கொடுத்து, பாலாற்றிலிருந்து மண் எடுத்துச் சென்று யாக குண்டம் கட்டி வேள்வி செய்யச் சொல்கிறார்.
பிரம்மா மண்ணை எடுத்துக் கொண்டு போய் காஞ்சிபுரத்தில் வேள்வியைத் துவக்குகிறார்.
இந்த நிலையில் பாற்கடல்வாசனைக் கண்ட ஜனகர் தினசரி அவருக்கு பூஜை செய்து வருகிறார்.
ஒரு நாள் ஜனகர் ஏதோ வேலையாகச் சென்றவர் பூஜை நேரம் முடிந்ததும் திரும்புகிறார்.
வந்து பார்த்தால் பூஜை நடந்து முடிந்ததற்கான தடயங்கள் தெரிகின்றன.
பெருமாளே வந்து தனக்குத் தானே பூஜை செய்துவிட்டு போனதாக சொல்கிறார் காவலாளி.
அதிர்ச்சியடையும் ஜனகர், ‘இப்படி நடந்து விட்டதே’ என்று மனம் கலங்குகிறார்
இதற்கிடையில் பெருமாள் ஜனகர் இருந்த இடத்துக்குப் போய் தனக்குத் தானே பூஜை செய்து கொண்டதைக் கேள்விப்பட்ட மகாலட்சுமி கோபப்படுகிறார்.
அவரை சமாதானப்படுத்தும் விதமாக இங்கே வந்து என்னை தரிசிப்பவர்களைவிட உன்னை தரிசிப்பவர்களுக்கே, ஐஸ்வரியங்கள் சேரும்" என்று பெருமாள் சொல்கிறார்.
தன் தவறுக்கு பரிகாரமாக ஜனகர் பெருமாளுக்கு தேவ சிற்பி விஸ்வகர்மா மூலம் கோயில் கட்ட,
அது அரசர் கோயிலென அழைக்கப்பட்டது.
அங்கே ‘கமல’ வரதராஜரும் சுந்தர மகாலட்சுமியும் எழுந்தருளி காலம் காலமாக மக்களுக்கு தரிசனம் கொடுத்து வருகிறார்கள்.
ஆறுவிரல் தாயார்
இந்தக் கோயிலில் முதலில் தாயாரைத்தான் வணங்க வேண்டும்.
இந்த தாயார் சந்நிதிதான் அத்தனை விசேஷங்களையும் கொண்டது.
பத்மாசனத்தில் அமர்ந்திருக்கும் இந்த தாயாருக்கு வலது காலில் ஆறு விரல்கள்.
ஆறு என்பது சுக்கிரனின் எண்.
இந்த தாயாரிடம் சுக்கிரன் ஐக்கியமானதாக ஐதீகம்.
இப்போதும் வெள்ளிக்கிழமைகளில் காலை சுக்கிர ஹோரையில் சுக்கிர பகவான் இத்தலத்திற்கு வந்து வழிபடுவதாக சொல்கின்றனர்.
ஜாதகத்தில் போகத்திற்கு அதிபதியான சுக்கிரன் நீசம் அடைந்தோர் சுக்கிர பலம் வேண்டி வழிபட வேண்டிய முக்கியமான கோயில் இது.
உங்கள் வேண்டுதல்களை எண்ணி ஐந்து வெள்ளிகிழமைக்குள் சுந்தரமகாலக்ஷ்மி தாயார் நிறைவேற்றி விடுவார்
வெள்ளிக் கிழமையன்று சுக்கிர ஹோரையில் தரிசனம் செய்தால் எல்லா ஐஸ்வர்யங்களையும் கொடுப்பாள் மகாலட்சுமி.
தாயார் சன்னிதி சடாரியில் மேல் உள்ள பாதத்திலும் ஆறு விரல்கள்.
தாயாருக்கு பலாச்சுளை நைவேத்தியம் சிறப்பு.
இப்படி பலாச்சுளைகளை கொடுத்த சித்தரின் சிற்பம் மண்டபத்தில் இருக்கிறது.
குபேர கோமுகம் :
தாயார் சந்நிதியில் இருந்து அபிஷேக தீர்த்தம் வெளியே வரும் கோமுகம் கூட குபேரகோமுகம் என்றழைக்கப் படுகிறது.
நம்ம மக்கள் அதற்கும் மஞ்சள் பூசி குங்குமம் வைத்து வழிபடுகிறார்கள்.
இங்கு செல்லும்போது நாம் கொண்டு செல்ல வேண்டிய பொருட்கள் செவ்வாழை பழம், தாமரைப்பூ, கல்கண்டு, ஏலக்காய்,கிராம்பு ஜாதிபத்திரி ,போன்றவை.
ஆலய அமைவிடம்
காஞ்சிபுரம் மாவட்டம், மதுராந்தகம் வட்டத்தில், படாளம் அருகே பலாற்றங்கரையில் அரசர் கோவில் அமைந்துள்ளது.
சென்னைக்கு தென் மேற்கே 67 கி.மீ,
செங்கல்பட்டிற்குத் தென்மேற்கே 27 கி.மீ,
காஞ்சிபுரத்திற்குக் கிழக்கே 60 கி.மீ. தொலைவிலும்,
படாளம் கூட்டுச் சாலையின் கிழக்கே 7 கி.மீ. தொலைவிலும்,
தாம்பரம் – திண்டிவனம் ரெயில் மார்க்கத்தில் படாளம் ரெயில் நிலையத்திற்குத் தெற்கே 4 கி.மீ. தொலைவிலும் அரசர் கோவில் இருக்கிறது.
1. மீனாட்சி அம்மன் விஹ்ரகம் மரகத கல்லால் ஆனது. ஏனென்றால் பொதுவாக அன்னையின் திருமேனி பச்சை நிறம்.
2. அன்னையின் வலது கால் சற்று முன் நோக்கி இருக்கும், ஏனென்றால் பக்தர்கள் அழைத்தால் உடனே ஓடி வருவதற்காக.
3. அன்னை கையில் ஏந்திய கிளி அன்னையின் காதில் பேசுவது போல் இருக்கும் ஏனென்றால் கிளி பேசுவதை திருப்பி பேசும் அதைப்போல் பக்தர்களின் வேண்டுதலை திரும்ப திரும்ப அன்னையிடம் சொல்லும் இதனால் நமது வேண்டுதல் விரைவாக நிறைவேறும்.
4. அன்னையின் விக்ரஹம் சுயம்பு ஆகும் சில ஆலயத்தில் லிங்கம் சுயம்புவாக இருக்கும் ஆனால் மதுரையில் மீனாட்சி உக்ரபாண்டியனுக்கு முடிசூட்டிய பின் சொக்கநாதர் பெருமான் அருகில் விக்ரஹமாக நின்றுவிட்டாள் அதனால் சுயம்பு அன்னை.