#விஷ்ணுசஹரநாமம் விஷ்ணு சஹஸ்ரநாமத்தில் சில நாமங்கள் குறிப்பிட்ட சில பிணிகளை நீக்க வல்லன. அவற்றை மட்டும் நாம் திரும்பத் திரும்ப உச்சாடனம் செய்ய அந்நோய்/அத்துன்பம் விலகும்.
படிப்பில் வல்லவனாக:
வேதோ வேதவிதவ்யங்கோ
வேதாங்கோ வேதவித் கவி
2023 மார்ச் 6/7 #மாசிபௌர்ணமி
கஜேந்திர மோக்ஷம் மாசி பௌர்ணமியுடன் தொடர்புடையது. மதுரை மாநகருக்கு அருகில் உள்ள திருமோகூர் 108 திவ்ய தேசங்களில் ஒன்றாகும். மாசிப் பெளர்ணமி அன்று இத்திருக்கோயிலில் கஜேந்திர மோக்ஷம் விழாவாகக் கொண்டாடப் படுகிறது. கஜேந்திர மோக்ஷம் நிகழ்வைக் கதையாகக்
கேட்டால், பகவான் மோக்ஷ சித்தியை அளிப்பார் என்பது ஐதீகம். கம்பீரமும் வீரமும் மிகுந்த யானைகளின் அரசனான கஜேந்திரன் தன் பிடிகள், குட்டிகளுடனும் காட்டில் மரங்களை உடைத்தும் மூங்கிலை உண்டும் உலாவி கொண்டிருந்தது. அதன் அந்த சப்தத்தை கேட்டதுமே சிங்கம் புலி முதலிய பலம் மிகுந்த மிருகங்கள்
பயந்து ஓட, மற்ற சிறிய மிருகங்களான மான், முயல் முதலியவை பயமில்லாமல் அதனுடன் ஒட்டி வந்து கொண்டு இருந்தன. அப்போது எங்கிருந்தோ தாமரை மலரின் நறுமணம் அவனது துதிக்கையை எட்டியது. உடனே தனது பரிவாரங்கள் சூழ அந்த பொய்கையை நோக்கி ஓடத் தொடங்கினான். வழியில் உள்ளவற்றையெல்லாம் துவம்சம் செய்து
#மகாபெரியவா
“நம் சரீரத்துக்கு எந்த வியாதி வந்தாலும், எந்தக் கஷ்டம் வந்தாலும், நிரம்ப வறுமையினாலே சிரமப்பட்டாலும், இவையெல்லாம் நமக்கு வைராக்கியத்தைக் கொடுப்பதற்கு ஸ்வாமியினாலே கொடுக்கப்பட்டவை; இவை எல்லாம் தபஸே என்று நினைத்துக் கொள்ள வேண்டும்.” - மகா பெரியவா
பொருள்: பரமாத்மாவாக எங்கும் நிறைந்திருக்கும் ஸ்ரீகுருவாயூரப்பா! பாத்ம கல்பத்தில் பிரம்மதேவனைத் தோற்றுவித்தவனும், அளவற்ற மகிமையுடையவனுமான நீ, எனது எல்லா வியாதிகளையும்
நீக்கி ஆரோக்கியம் அருள வேண்டும்.
ஒரு சமயம் பக்தர் ஒருவர், காஞ்சி ஸ்ரீமகாபெரியவாளை நமஸ்கரித்து கண்ணீர் பெருக நின்றார். பெரியவா அவரைப் பார்த்து, “என்ன ரொம்ப வலிக்கிறதா?” என்று கருணையுடன் கேட்டார். பிறகு, மேற்கண்ட ஸ்லோகத்தை எழுதிக் கொள்ளச் சொல்லி, “தினமும் நூற்றி எட்டு தடவை இதைச்
#மகாபெரியவா
மஹா பெரியவாளிடம் கைங்கரியம் செய்யும் பாக்கியம் பெற்றவர் ஏகாம்பரம் என்கிற அன்பர். மகாகாவ் என்னும் இடத்தில் (குல்பர்கா அருகில்) முகாமிட்டிருந்தபோது, மகா பெரியவா, “பேப்பர் பேனா எடுத்து வந்து, நான் சொல்வதை எழுதிக்கொள்” என்று ஏகாம்பரத்திடம் சொன்ன விஷயம் இது.
மஹா பெரியவா
தன் பதின்மூன்றாவது வயதில் பட்டத்துக்கு வந்த புதிதில், அவருக்கு முன் காஞ்சி காமகோடி பீடாதிபதியாக இருந்த பெரியவாளிடம் கைங்கரியம் செய்தவர்களை வரிசையாக அறிமுகப் படுத்தினார்களாம். அந்த வரிசையில் ஒருவரைக் காண்பித்து, ‘இவர்தான் முந்தைய குருவுக்கு மடிவஸ்திரம் தோய்த்துக் கொடுத்தவர்’ என்று
பெரியவாளிடம் சொல்லிவிட்டு. அவர் பக்கம் திரும்பி, “இனிமேல் இவர்தான் நமக்குப் பெரியவா, உன்னோட வஸ்திர கைங்கரியத்தை தொடர்ந்து பண்ணு” என்று சொன்னார். ஆனால், அந்த அன்பரிடமிருந்து பதில் வேறுவிதமாக வந்தது. “நான் முந்தைய பெரியவாளுக்குக் கைங்கரியம் செய்த கைகளால் வேறு எவருக்கும் செய்ய
நொந்துடலும் கிழமாகி தளர்ந்து பின் நோயில் நடுங்கிடும் போது
ஜீவ நாடிகள் நைந்திடும்போது மனம் எண்ணிடுமோ தெரியாது தெரியாது தெரியாது
இன்று சிந்தை கசிந்துனைக் கூவுகிறேன் அருள் செய்திடுவாய்
நீடு கபம் கோழை ஈழை நெருக்கி என் நெஞ்சை அடைத்திடும் போது
விக்கி நாவும் குழறிடும் போது மனம் எண்ணிடுமோ தெரியாது தெரியாது தெரியாது
அன்றுனைக் கூவிட இன்றழைத்தேன் எனை ஆண்டருள்வாய்
ஐம்பொறியும் கரணங்களும் வாயுவும் ஆடியடங்கிடும் போது
எந்தன் ஆவி பிறிந்திடும் போது மனம் எண்ணிடுமோ தெரியாது தெரியாது தெரியாது
நம்பியுனைத் தொழுதேன் அழைத்தேன் ஜகன் நாயகனே
#சமயபுரம்_மாரியம்மன்
தமிழ்நாட்டில் உள்ள மாரியம்மன் கோவில்களில் முக்கியமானது சமயபுரம் மாரியம்மன் கோயில். திருச்சிக்கு வடக்கே காவிரியின் வடகரையிலிருந்து சுமார் 15கிமீ தூரத்திலுள்ளது. சமயபுரம் மாரியம்மன் கோவில் இதிகாச, புராண காலத்தில் உருவானதாக கூறப்பட்டாலும் கடந்த 300 ஆண்டுகளுக்கு
முன்பாக தோற்றுவிக்கப்பட்டு இருக்கலாம் என வரலாற்று தகவல்கள் கூறுகின்றன. இதன் மூல கோவிலான ஆதி மாரியம்மன் கோவில் விக்கிரமாதித்த மகாராஜா வழிபட்ட திருத்தலம் என்ற பெருமைக்குரியது. தற்போது உள்ள சமயபுரம் மாரியம்மன் கோவில் விஜயநகர மன்னர்கள் காலத்தில் தோற்றுவிக்கப் பட்டது. சமயபுரம்
மாரியம்மன் கோயில் இருக்குமிடம் கண்ணனூர் என அழைக்கப் படுகிறது. இவ்விடம் கண்ணபுரம், விக்ரமபுரம், மாகாளிபுரம் என்றும் அழைக்கப்படுகிறது. இது ஒரு சோழ மன்னர் தன் தங்கைக்கு சீதனமாக ஒரு நகரையும் கோட்டையையும் உண்டாக்கிக் கொடுத்த இடம். பிற்காலத்தில், பாண்டிய மன்னர்களின் படையெடுப்பால் அவை
#மதுரை_மீனாட்சி_அம்மன்
அன்னையின் விக்ரகம் சுயம்பு ஆகும். சில ஆலயங்களில் லிங்கம் சுயம்புவாக இருக்கும். ஆனால் மதுரையில் மீனாட்சி உக்ரபாண்டியனுக்கு முடிசூட்டிய பின் சொக்கநாதர் பெருமான் அருகில் விக்ரகமாக நின்றுவிட்டாள். அதனால் சுயம்பு அன்னை. இவள் பச்சை நிறத்தவள். அதனால் மீனாக்ஷி
அம்மன் மரகத கல்லால் ஆனது என்கின்றனர் ஆய்வாளர்கள். அன்னையின் வலது கால் சற்று முன் நோக்கி இருக்கும், பக்தர்கள் அழைத்தால் உடனே ஓடி வருவதற்காக. அன்னை கையில் ஏந்திய கிளி அன்னையின் காதில் பேசுவது போல் இருக்கும். நம் பிரார்த்தனைகளை மறு ஒலிபரப்பு செய்து அன்னைக்கு நினைவூட்ட! அன்னை
மதுரையில் யாகசாலையில் அக்னியில் அவதரித்தாள். இவளின் இயர்பெயர் தடாதகை அங்கயற்கண்ணி ஆகும்.
பாண்டிய மஹாராஜாவுக்கும் மஹாராணி காஞ்சனமாலைக்கும் ஒரே மகள். அதனால் பாண்டிய நாட்டின் பேரரசி ஆவாள். இங்கு கற்பகிரகத்தில் அன்னையின் விக்ரகம் உயிருடன் இருக்கும் ஒரு நளினமான பெண்ணை பார்ப்பது போல்