M.SivaRajan Profile picture
Feb 28 15 tweets 4 min read
#அர்ச்சனை

*அர்ச்சனையில் வெற்றிலை, தேங்காய், வாழைப்பழம் கண்டிப்பாக பயன்படுத்துவது ஏன்?*

கோவிலுக்கு கொண்டு செல்லும் பூஜை பொருட்களில் நமது வசதிக்கு ஏற்றபடி எத்தனையோ பொருட்களை எடுத்துச் செல்கிறோம்.
இவற்றில் தேங்காய், வாழைப்பழம், வெற்றிலை - பாக்கிற்கு முக்கியமாக இடம் பெற்றிருக்கும்.

சுவாமிக்கு நைவேத்தியம் செய்வதற்கு எதுமே இல்லை என்றாலும் ஒரே ஒரு வாழைப்பழத்தை வைத்து பூஜையை நிறைவு செய்து விடலாம்.
அப்படி இந்த 3 பொருட்களுக்கு என்ன சிறப்பு உள்ளது, எதற்காக இந்த 3 பொருட்கள் கண்டிப்பாக அர்ச்சனைக்கு கொண்டு செல்கிறோம், இதற்கு பின்னால் இருக்கும் காரணம் என்ன என்பதை இங்கே பார்க்கலாம்.
*எதற்காக தேங்காய் உடைக்கிறோம்?*

*தேங்காய்*

எந்த விசேஷம் ஆனாலும் அதில் முக்கிய இடம் பிடிப்பது தேங்காய் தான்.

ஒரு செயலை துவங்குவதற்கு முன் விநாயகருக்கு சிதறு காய் விடுவதில் தொடங்கி, வாழ்க்கையின் அனைத்து விசேஷங்களிலும் இடம் பிடிப்பது தேங்காய் தான்.
இந்த தேங்காய் நமது உள்ளத்தின் அடையாளமாக பார்க்கப்படுகிறது.

தேங்காயை மனிதனின் மும்மலங்களுடன் ஒப்பிடுட்டு கூறப்படுகிறது.

தேங்காயை மூடி இருக்கும் மட்டையை மாயா மலம் என்றும், அதற்கு பிறகு இருக்கும் நாரை கன்ம மலம் என்றும்,
அதற்கு பிறகு இருக்கும் கடினமான ஓட்டினை ஆணவ மலம் என்றும் சொல்கிறோம்.

*அகற்றப்பட வேண்டிய 3 விஷயங்கள்*

மாயை, கன்மம், ஆணவம் என்ற மும்மலங்களை அகற்றி, அதற்குள் இருக்குள் வெள்ளை நிற தேங்காய் என்னும் நமது தூய்மையான மனதை இறைவனிடம் சமர்ப்பிக்க வேண்டும்.
தேங்காய்க்குள் இருக்கும் சுவையான நீர், பக்திக்கு ஒப்பாக சொல்லப்படுகிறது.

இந்த தேங்காய் சிவனின் அம்சமாகவும் சொல்லப்படுகிறது.

வேறு எந்த காய்க்கும் இல்லாத சிறப்பாக மூன்று கண் உடையது தேங்காய்.
நமக்குள் இருக்கும் மும்மலங்களை நீக்கி, இறைவனை சரணடைந்தால் நமக்குள் இருக்கும் மூன்றாவது கண்ணான அகக் கண் திறக்கும் என்பதை உணர்த்தவே அர்ச்சனையின் போது தேங்காயின் குடுமியை அர்ச்சகர் நீக்கி விடுவார்.
*வேண்டுதலை சொல்லும் வாழைப்பழம்*

*வாழைப்பழம்*

பழங்களிலேயே விதையில் இருந்து முளைத்து வராத ஒரே பழம் வாழைப்பழம்.

ஒரு விதை இருந்தால் மட்டுமே மற்ற பழங்களின் செடிகள் உருவாகும்.

ஆனால் வாழை மரம் மட்டும் தான் நாற்றில் இருந்து வரக் கூடியது.
ஒரு வாழைக்கண்டின் நாற்றினை வைத்தால் அதிலிருந்து வெடித்த பகுதிகளும் தனி கன்றாக முளைத்து வரும்.

அதுவே வாழைப்பழத்தையோ அல்லது தோளையோ தனியாக வைத்தால் வாழை கன்று வராது.
மனிதனின் வாழ்க்கையும் அடுத்தடுத்த பிறவிகள் வந்து கொண்டே இருக்கிறது.

இந்த பிறவியே போதும், இனி ஒரு பிறவி வேண்டாம் என இறைவனிடம் சரணடைவதற்காகவே வாழை பழத்தை இறைவனுக்கு சமர்ப்பிக்கிறோம்.
*வெற்றியை தரும் வெற்றிலை*

*வெற்றிலை - பாக்கு*

வெற்றிலை தரும் இலை என்பதால் இதை வெற்றிலை என்கிறோம்.

வெற்றிலை என்பது லட்சுமி, சரஸ்வதி, பராசக்தியின் அம்சமாக சொல்லப்படுகிறது.

இவற்றுடன் பாக்கு சேரும் போது அது மங்கல பொருளாக மாறுகிறது.
அது போல் நம்முடைய வாழ்க்கையிலும் வெற்றி, மங்கலம், செல்வம் ஆகியன நிறைந்து இருக்க வேண்டும்

என்பதற்காக வெற்றிலை - பாக்கினை அர்ச்சனைக்கு பயன்படுத்துகிறோம்.
*தேங்காய் அறிவின் வெளிப்பாடாகவும், வாழைப்பழம் பிறவிப் பலனின் வெளிப்பாடாகவும், வெற்றிலையை மங்கலத்தின் வெளிப்பாடாகவும் உள்ளதால் இவற்றை அர்ச்சனைக்கு பயன்படுத்துகிறோம்*

• • •

Missing some Tweet in this thread? You can try to force a refresh
 

Keep Current with M.SivaRajan

M.SivaRajan Profile picture

Stay in touch and get notified when new unrolls are available from this author!

Read all threads

This Thread may be Removed Anytime!

PDF

Twitter may remove this content at anytime! Save it as PDF for later use!

Try unrolling a thread yourself!

how to unroll video
  1. Follow @ThreadReaderApp to mention us!

  2. From a Twitter thread mention us with a keyword "unroll"
@threadreaderapp unroll

Practice here first or read more on our help page!

More from @MSivaRajan7

Feb 28
#சஸ்திர_பந்தம்

தொழில் பதவி சிறக்க சஸ்திர பந்தம், எப்படி செய்ய வேண்டும்?

ஸ்ரீ பாம்பன் ஸ்வாமிகள் அருளிய சஸ்திர பந்தம் பற்றி பாப்போம்.

தினமும் சஸ்திர பந்த ஸ்லோகத்தை சொல்லி வர வியாபாரம், தொழில், பதவி சிறக்கவும்,எதிர்மறை எண்ணங்கள் மறையவும் கவசமாக திகழ்வது சஸ்திர பந்தமாம். Image
சஸ்திர பந்தம் :

வாலவே தாந்தபா வாசம்போ கத்தன்பா
மாலைபூ ணேமதிற மால் வலர்தே – சாலவ
மாபாசம் போக மதிதேசார் மாபூதம்
வாபாதந் தாவேலவா.

அசைவம் சாப்பிடுவதை நிரந்தரமாக நிறுத்திவிட்டு, மேற்கண்ட துதியை தினமும் பாராயணம் செய்து வரவும்.
முதன் முதலில் ஆரம்பிக்கும் போது செவ்வாய் கிழமை அல்லது கிருத்திகை நட்சத்திரம் அல்லது விசாகம் நட்சத்திரம் அல்லது சஷ்டி திதி அன்று வீட்டிற்கு அருகில் உள்ள முருகன் தலத்தில் 27 முறை பாராயணம் செய்யவும்.
Read 9 tweets
Feb 27
கருட பட்சிகள் மோட்சம் பெற்ற நாச்சியார் கோவில் ஸ்ரீனிவாச பெருமாள் ஆலயம்:

கும்பகோணம் அடுத்த நாச்சியார் கோயிலில் ஸ்ரீசீனிவாச பெருமாள் கோயில் உள்ளது.
இத்தலத்தில் உறைந்துள்ள ஸ்ரீ வஞ்சுளவல்லி தாயார் சமேத நறையூர் நம்பியான ஸ்ரீனிவாச பெருமாளையும் கஷ்டங்கள் தீர்க்கும், கவலைகள் போக்கும் கல் பகவானையும் சரணடைவோர்களுக்கு மறுபிறவி இல்லை என்பது நம்பிக்கை.
ஆழ்வார்களால் மங்களாசாசனம் செய்யப்பட்டுள்ள 108 திவ்ய தேசங்களில் ஒன்றாகவும், முக்தி தரும் 12 தலங்களுள், 11-வது தலமாகவும் போற்றப்படுவது நாச்சியார் கோவில் திருத்தலம்.

இந்த கோவிலில் மஹாவிஷ்ணு ஸ்ரீநிவாச பெருமாளாகவும், மஹாலஷ்மி நாச்சியாராகவும் கோயில் கொண்டுள்ளனர்.
Read 25 tweets
Feb 27
#ஜென்ம_நட்சத்திர_வழிபாடு

ஜெயம் தரும் ஜென்ம நட்சத்திர வழிபாடு :

ஒருவரது ஜென்ம  நட்சத்திர தினத்தன்று  திருமணம், சீமந்தம், காது குத்துதல், முடி இறக்குதல்,  எண்ணை குளியல்,  மருந்து சாப்பிடுவது,  அறுவை சிகிச்சை  செய்தல், தாம்பத்திய  உறவு போன்றவற்றை  வைத்துக் கொள்ளக் கூடாது.
அதற்கு பதில் இதர சுப  காரியங்கள் செய்ய வேண்டும்.

அதாவது குல தெய்வ வழிபாடு,இஷ்ட தெய்வ வழிபாடு,  அன்னதானம், தான தர்மம் செய்தல், பதவி  ஏற்பு, சொத்துக்கள் வாங்குதல் போன்றவற்றை 
செய்யலாம்.

குறிப்பாக ஆலய வழிபாட்டுக்குமிக உகந்த தினமாக 
ஜென்ம நட்சத்திர தினம்  குறிப்பிடப்பட்டுள்ளது.
வினை காரணமாக சிவபெருமானிடம் இருந்து 
பிரிந்து மாங்காட்டில் தவம் 
இருந்த பார்வதி தேவி, 

இறுதியில் தனது ஜென்ம  நட்சத்திர தினத்தன்று மணலால் சிவலிங்கம்  செய்து வழிபட்ட பிறகே  கணவருடன் சேர்ந்து  வாழும் நிலை உண்டானது.
Read 15 tweets
Feb 26
#அஞ்சலி_வரத_ஆஞ்சநேயர்

*மார்பில் சிவலிங்கம் தாங்கிய 16 அடி உயர ஆஞ்சநேயர்- துன்பங்களை தீர்க்கும் அஞ்சலி வரத ஆஞ்சநேயர்*

சனி ராகு போன்ற கிரகங்களால் வரும் துன்பங்களைத் தீர்த்து பணி உயர்வு திருமண வாய்ப்பு குழந்தைப்பேறு வழக்குகளில் வெற்றி போன்ற பல்வேறு நற் பயன்களை அருளுகிறார்.
*திண்டுக்கல் மாவட்டம் சின்னாளபட்டி அருகிலுள்ள மேட்டுப்பட்டியில் கோவில் கொண்டிருக்கும் அஞ்சலிவரத ஆஞ்சநேயர்.*

அரசனான தசரதன் குழந்தைப்பேறு வேண்டிச் செய்த யாகத்தின் பிரசாதமான பாயாசத்தை ஒரு கருடன் கொத்திக் கொண்டு போனது.
அந்தப் பிரசாதம் அஞ்சனையின் கையில் போய் விழுந்தது.

அதைச் சாப்பிட்ட கேசரி அஞ்சனை தம்பதியினருக்கு மார்கழி மாதம் மூல நட்சத்திர நாளில் அழகான ஆண் குழந்தை ஒன்று பிறந்தது.

அவர்கள் அக்குழந்தைக்குச் சுந்தரன் என்று பெயரிட்டு வளர்த்து வந்தனர்.
Read 22 tweets
Feb 26
ராமனை காப்பாற்ற வேண்டிய ராமனை 14 ஆண்டு வனவாசம் அனுப்பிய கைகேயி.

தன் மகன் பரதன் உள்பட அனைவராலும் வெறுத்தொதுக்கப்பட்டு, தவறாக புரிந்து கொள்ளப்பட்டு பதினான்கு வருடங்கள் மனத்துயரை அனுபவித்தவள் கைகேயி.
இறுதியில் அனுமன் வாயிலாக அவளின் தியாக உள்ளம் வெளிப்படுகிறது.

இராவண வதம் முடிந்து சீதை, லக்ஷ்மணர், வானர, ராக்ஷசப் படைகளுடனும் அவர்களின் குடும்பத்தினருடனும் ஸ்ரீஇராமர் புஷ்பக விமானத்தில் அயோத்திக்குத் திரும்பும் வழியில்
பரத்வாஜ மஹாமுனியின் அழைப்பை ஏற்று அவருக்கு ஏற்கெனவே வாக்களித்தபடி இரவு அங்கு தங்கினார்.

விடிந்தால் பதினான்கு வருடங்கள் முடிந்த நிலையில் பரதனும், சத்ருக்னனும் அக்னிப்பிரவேசம் செய்யக்கூடும் என்பதால் அவர்களைத் தடுத்து நிறுத்தி,
Read 21 tweets
Feb 25
வேலையின்மைக்கு தீர்வு தரும் பரிகாரம் !!!

வேலையில்லாமல் அவதிப்படுபவர்கள் சூரிய பகவானை தினமும் துதித்து வந்தால் விரைவில் நல்ல பலனை அடையலாம்.

#பரிகாரம் :

ஒரு வளர்பிறை ஞாயிற்றுக்கிழமை சூரியோதய வேளையில் ஒரு கிண்ணம் அல்லது அகன்ற பாத்திரத்தில் சுத்தமான நீர் எடுத்துக் கொண்டு
சூரிய வெளிச்சம் தன் மேல் படும்படிக் கிழக்கு நோக்கி அமர்ந்து கொள்ளவும்.

அந்தப் பாத்திரத்தில் தெரியும் தன் முகத்தைப் பார்த்தபடியே "#ஓம்_ஹ்ரீம்_சூர்யாய_நமஹ" என்று 108 தடவை ஜெபிக்கவும்.

ஜபத்திற்கு எந்த மாலையையும் பயன்படுத்தலாம்.
அதன் பின்னர் வாழ்வில் எல்லா நிலைகளிலும் உயர அருள் செய்யுமாறு சூரிய பகவானை வேண்டிய பின் அந்த நீரை ஏதேனும் மரம் அல்லது செடியின் வேர் பாகத்தில் ஊற்றி விடவும். (அரச மர வேரில் ஊற்றினால் மிகவும் சிறப்பு).
Read 4 tweets

Did Thread Reader help you today?

Support us! We are indie developers!


This site is made by just two indie developers on a laptop doing marketing, support and development! Read more about the story.

Become a Premium Member ($3/month or $30/year) and get exclusive features!

Become Premium

Don't want to be a Premium member but still want to support us?

Make a small donation by buying us coffee ($5) or help with server cost ($10)

Donate via Paypal

Or Donate anonymously using crypto!

Ethereum

0xfe58350B80634f60Fa6Dc149a72b4DFbc17D341E copy

Bitcoin

3ATGMxNzCUFzxpMCHL5sWSt4DVtS8UqXpi copy

Thank you for your support!

Follow Us on Twitter!

:(